kk-4
4
ஆதி விடுப்பு முடிந்து சென்னைக்கு திரும்பினான். ஆனந்தியின் நினைவுகளுடனும் திருவிழாவின் சந்தோஷங்களுடனும் வீட்டை வந்தடைந்தான்.
வித்யாவும் அன்று விடுப்பு முடிந்து கல்லூரிக்கு புறப்பட, “வா உன்னை காலேஜில் விட்டுட்டு ட்யூட்டி போறேன்” என்று அவளை விட்டுட்டு வரும் வழியில் ரேணுகாவை அவன் பார்த்துவிட,
“ஹாய் ரேணு” என்றான்.
‘ஐயோ இவனா?’ என்று மனதில் நினைத்துக்கொண்டாலும்,
“ம்ம்ம் ஹாய் ஹாய்… இன்ஸ் என்ன சொல்லுங்க?” என்று சாதாரணமாக அவள் உரையாட துவங்கினாள்.
“சும்மா தான் உங்கள பார்த்தேன் அதான் பேசலாமே”
“நீங்க பிஸியாக இருந்தா வேண்டாம்”
“ஃப்ரீயா இருந்தா கொஞ்ச நேரம் பேசலாம்” என்று ஆதி அவளிடம் இயல்பாக கூறிவிட்டு அவள் என்ன சொல்ல முற்படுகிறாள் என்று அவளிடம் எதிர்ப்பார்க்க,
அவளோ, “எனக்கு வேலை இருக்கு நான் போறேன் இன்ஸ்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒரடி எடுத்து வைக்க, அவள் தன்னிடம் பழக ஏனோ தயக்கம் கொள்கிறாள் என்பதை உணர்ந்தவன், அவளை தடுத்தான்.
“ஏய் நில்லு… என்கிட்ட ஏன் பேசுறதுக்கு தயங்குற? நான் என்ன உன்னை விழுங்கிவிடுவேனா?” என்று புருவத்தை உயர்த்தி கேள்வி எழுப்ப,
“பின்ன என்ன… குறுகுறுனு எப்பப்பாரு போலிஸ் புத்தியை காட்டிட்டு இருந்தால் எப்படி உங்ககிட்ட நட்பாக பழகத்தோணும்? கொஞ்சம் நட்புணர்வோடு பேசினா தான் என்ன?” என்று அவள் வெடுக்கென்று அவன் கண்களை பார்த்து கேட்டுவிட, அவனுக்கு அவள் கேட்ட விதம் சிரிப்பை வரவழைத்தது.
“ஹாஹா…. சரி வா நான் உன்னை பைக்கில் ட்ராப் பன்றேன் எங்க போகனும் னு சொல்லு ரேணு” என்று வினவ,
“ப்பா ஆதி சார் இப்பதான் நீங்க சராசரி ஒரு நண்பனா என் கண்களுக்கு தென்படுறீங்க இனிமேல் நீங்களும் நானும் ஒரு நல்ல ப்ரண்ட்ஸ் ஓகேவா” என்றதும் அவனும் சரியென்று அவனுடைய கட்டை விரலை உயர்த்தி காட்ட,
அவளும் தன்னுடைய கட்டைவிரலை உயர்த்தி காட்டிவிட்டு அவனுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
“.இப்பொழுதாவது எங்க போகனும் னு சொல்லுவியா ரேணு” என்று அவன் கேட்க,
“ஆர்ட் அகாடமி போகணும்” என்றாள்.
“ம்ம்ம் வழி சொல்லு… நான் இதுவரை உங்கள் ஆர்ட் அகாடமிக்கு வந்ததே இல்லை”
“வண்டியை எடுங்க பாஸ் வழி தானா தெரியும்” என்று அவன் தோளை தோழமையோடு அவள் தட்ட இருசக்கரவாகனத்தை கிளப்பி, அவள் சொன்ன இடத்துக்கு பறந்தான்.
அவள் இறங்கும் இடம் வந்தது. அவளை இறக்கி விட்டவன் அங்கேயே வெளியில் நின்று காத்துக்கொண்டு இருந்தான். இதுவரை முன்பின் தெரியாத யாரையும் தோழமை ஆக்கியது இல்லை. அது என்னமோ ரேணுகாவிடம் பழகிவிட அவனுக்கு எளிமையாக இருந்தது.
ரொம்ப நேரம் ஆகியும் அவள் வெளியே வரவில்லை. இவனே கதவை திறந்து உள்ளே போனான். அங்கு வரவேற்பில் இருந்த பெண்,
“சார் இங்க யாரும் உள்ள எல்லாம் வரக்கூடாது அனுமதி இல்லாமல்” என்று கூற,
“மேடம் என் ப்ரெண்ட் ரேணுகா ஒரு ஆர்டிஸ்ட் இங்கதான் வேலை செய்கிறாள்” என்று கூற,
“ஓ அவங்களா அவங்க வருவாங்க நீங்க வெளியே காத்துட்டு இருங்க சார்” என்றாள் அந்த பெண்.
“மேடம் இப்ப அவங்கள பார்க்க முடியாத என்ன?” என்று சந்தேகத்துடன் கேட்க,
“சார் அவங்க அங்க இன்னொரு ஆர்டிஸ்ட்க்கு மாடலா நின்னுட்டு இருக்காங்க இப்ப நீங்க பார்க்க முடியாது” என்று கூறியும் அவள் பேச்சை மீறி கதவை தட்டினான். கதவை திறப்பதற்கு முன் ரேணுகா அங்கிருந்த ஒரு போர்வையை தன் உடலை சுற்றி போர்த்திக்கொண்டு கதவை திறக்க அவன் அதிர்ந்து போனான். ஒருபக்கம் அவள் அணிந்திருந்த உடை ஒரு ஓரமாக மடித்து வைத்திருந்த நிலையில் அங்கிருந்த ஒரு பெண் ஓவியர் கையில் ப்ரஷ்ஷுடனும் அங்கிருந்த வரைப்படத்தில் ரேணுகாவின் சாயலும் இருக்க,
“என்ன ரேணு இது ? நீ இங்க” என்று பேச்சை தடுமாற்றத்துடன் ஆரம்பிக்க அவளோ “அ..ஆமாம் ஆதி நான் இங்கே நிர்வாண படத்திற்கு மாடலா நின்னுட்டு இருக்கேன்” என்று தலை குனிந்து நிற்க,
ஆதிக்கு ஆத்திரம் தாங்கவில்லை… அவள் கண்ணத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டான். அந்த அடி உச்சி மண்டை வரைக்கும் வலித்திருக்கும் அவளுக்கு.
“ஏய் என்ன ரேணு இதெல்லாம்? என்று கொதித்தெழ”
“ஆதி இது ஜஸ்ட் ஒரு மாடல் காக நான் இப்படி நிக்கிறேன் அவ்வளவு தான்… இங்க இருக்கிறது அத்தனை ஓவியர்களும் பெண்கள் தான் அதனால் நீ நினைக்கிற மாதிரி எதுவும் பிரச்சினை இல்லை… இங்க பாருங்க ஆதி….நாங்க ஒரு ஓவிய கலைஞர்… எங்களுக்கு மாடலா யார் வருவா சொல்லு? நாங்களே எங்களுக்கு மாடலா நின்னுப்போம்… அதுவும் நிர்வாண ஓவியம்க்கு நிர்வாணமா தானே நிக்கனும் ம்ம்ம்?” என்று தலையசைத்து கேட்க
“என்னமோ சொல்ற ஆனால் எனக்கு இது கொஞ்சம் கூட பிடிக்கல” என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.
“ஆனால் இது எனக்கு ப்ரொபஷன் ஆதி இதுல தவறு என்று குறிப்பிட எதுவும் இல்லை. எங்களை மாதிரி ஓவியக்கலைஞர்களுக்கு உடலமைப்பே ஒரு ஓவியமா தான் தெரியும்”. என்று ஆர்டிஸ்ட் என்ற கர்வத்துடன் கூறிவிட்டு
“உனக்கு ஒன்னு தெரியுமா? இன்ஸ்” இதெல்லாம் நான் விருப்பம் பட்டு பன்னுறேனு நினைக்கிறியா? எல்லாம் என் தங்கச்சி யை படிக்க வைக்கனும் னு தான். ஓவியம் தான் என்னோட துறை… இதை தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது. இது மூலமாக நான் வருமானம் ஈட்டினால் தான் உண்டு” என்று அவனுக்கு தெளிவுபடுத்தினாள்.
“ரேணு ப்ளிஸ்…. நீ இப்படியெல்லாம் செய்யாத… இதெல்லாம் என்னால பார்க்க முடியல” என்று உரிமையோடு கூறினான்.
“என் மேல ஏன் இவ்வளவு கரிசனம்? காதலா?” என்றவள் கேட்ட அடுத்த நொடி அவன் முறைப்பான பார்வையை பார்த்துவிட்டு “இ..ல்லை சும்மா தான் கேட்டேன்” என்று தன் தோளை குலுக்கினான்.
“ஹாஹா இல்லை”
“பின்ன?”
“நண்பன்.ஒரு நல்ல நண்பனா இருக்க ஆசை படுறேன் ரேணு”
“ஓ… அப்படினா சரி…. வெயிட் பன்னு வரேன் ..உனக்கு தான் மாடலா இருக்கிறது பிடிக்கல ல… இனி நான் மாடல் பொம்மை யா நிக்கவே மாட்டேன் இது உன்மேல சத்தியம் போதுமா”
“ம்ம்ம்…. உனக்கு ஒரு வேலை நானே பார்த்து தரேன் ஓகே….ஓவியம் பகுதி நேர கலையா வச்சிக்க. சரியா?”
“சரி டா சாமி….கொஞ்சம் வெயிட் பன்னு நான் வரேன்”.
“ஐய்யயோ ….ட்யூட்டி க்கு நேரம் ஆச்சு,உன்கிட்ட பேசிட்டு இருந்ததுல நான் என் ட்யூட்டி மறந்துட்டேன் நான் கிளம்புறன்” என்று அவளிடம் விடைபெற்று சென்றான்.
‘செம்ம கேரக்டர் டா நீ….உன்னை கட்டிக்க போறவ கொடுத்து வச்சிருக்கனும். அந்த ஏழாவது மாடி ராகவா என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பன்னப்போ….ச்ச ஆம்பள பசங்கள வெறுக்க ஆரம்பிச்சன். ஆனால் முதல் முறை ஒரு நல்ல ஆண்மகனை நான் வாழ்க்கை ல பார்க்கிறேன்….என்னமோ தெரியவில்லை அழுகையா வருது’ என்று தன் மனதுக்குள் கூறிக்கொண்டு சுவரில் சாய்ந்து அழுதுகொண்டே இருந்தாள்.
ஆதி தான் பணியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தான். இன்று அவனுக்கு வேலை பலு எதுவும் இல்லாததால் பழைய கோப்புகளை எல்லாம் தூசி தட்டிக்கொண்டு இருந்தான்.
“எங்க என்னோட நாய் குட்டி காணும்…ம்ம் அச்சோ பப்பிமா நீ எங்கே?” என்று வினவிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தடைந்தாள் அந்த சிறுமி…
“ஹாஹா என்ன வேணும் செல்லம் உனக்கு?” என்று அவளை தூக்கியபடி ஆதி கேட்க,
“மாமா… என் பப்பி மா காணும் தேடி கண்டு பிடிச்சு தாங்க” என்றாள் அந்த சிறுமி.
“அப்படியா குட்டி பாப்பா.. சரி சரி நீ ஏன் தனியாவா வந்த?வீட்டில் யாரும் இல்லையா?”
“மாமா எனக்கு வீட்டில் யாரும் இல்லை…. நானும் பப்பி மட்டும் தான் எங்க தாய்மாமா தான் என்னை வளர்க்கிறாங்க… மாமா இரண்டு நாளக்கு ஒரு முறை தான் வரும். எனக்கு சாப்பாடு ல தினமும் ஸ்விகி ல தான் வாங்கி தராங்க மாமா”
“ஓ…..ஸ்விகி ல ஆர்டர் பன்னி சாப்பிடுற அளவு பெரிய ஆளா நீ?”
“என் பப்பி எனக்கு வேணும் கண்டு பிடிச்சு தாங்க” என்றவள், “என்னை கீழ விடுங்க நான் போகணும்” என்று அடம் பிடித்தாள்.
“ம்ம்ம் சரி நான் உன்னை விட்டுரேன் ….தனியாக எப்படி போவ நீ”
“ஏய் லூசு மாமா…தினமும் நான் ஸ்கூலுக்கு நடந்தே தனியாக தான் போறேன்”
“ஹாஹா ரொம்ப தைரியமான பொண்ணு தான்… சரி வா நான் உன்னை வீட்டில் விட்டுடுறேன்” என்றவன் அவளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றான். கதவை திறந்து அவள் ஆதியை சோபாவில் அமர சொல்லி தண்ணீர் எடுத்து வந்து தந்தாள்
“மாமா தண்ணீர்”
“போதும் டா செல்லம் நீ குடி.”
“மாமா… என்னோட பப்பி எனக்கு கிடைக்கும்ல?”
“கண்டிப்பா கிடைக்கும்… சரி வா மாமாக்கு உன் வீட்டை சுத்தி காட்டு”
“ம்ம்ம் ஓகே..”.
“மாமா இதான் என்னோட பெட்ரூம் அங்க பாருங்க நான் பப்பி அப்புறம் என் மாமா.”
அந்த புகைப்படத்தை உற்று நோக்கியபடி பார்த்து கொண்டிருந்தான்…..அதில் இருக்கும் அவளுடைய மாமா?
“அ…..செல்லம் அது உன் மாமா வா?”
“பின்ன உங்க மாமா வா?” என்று சொல்லி கொல்லென்று சிரித்தாள்.
“ஏய் வாயாடி” என்று அவளை தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான்…பிறகு நேரம் ஆகிவிட்ட நிலையில் அவன் கிளம்பிவிட்டான்.
வீட்டுக்கு வந்தடைந்ததும் ரேணுகா வீட்டில் அமர்ந்து தன் தங்கையின் தோளில் சாய்ந்தபடி, “மல்லி….ஏய் மல்லி…..உனக்கு மாப்பிள்ளை பார்க்கவா டி?” என்று வினவ
“அக்கா….என்ன திடீருன்னு இப்படி கேட்குற?” என்று தன் கண்களை உருட்ட
“இல்லை எனக்கு என்னமோ வயித்துல நெருப்பு கட்டிட்டு இருக்கிற மாதிரி இருக்கு… உனக்கு கல்யாணம் பன்னிட்டு அப்புறம் நான் பன்னிக்கிறேன். தயவுசெய்து சீக்கிரம் கல்யாணம் பன்னிக்கோ டி ,என் பாரமும் குறையும்.”
“ம்ம்ம் அக்கா உன் விருப்பம்… இங்க பாரு நீ எனக்கு அம்மா மாதிரி நீ என்ன சொன்னாலும் நான் கேப்பேன்”
“ஹாஹா… அப்போ மாப்பிள்ளை பாத்துற வேண்டியது தான்…”
“பாரு பாரு…” என்று தன் அக்காவை கட்டிக்கொள்ள
திடீரென மழை பொழியும் சத்தம்… என்னடா இது இப்படி மழை பெய்து, என்று ரேணுகா வெளியே வந்து எட்டி பார்க்க….ஒரு சின்ன தூரல் கூட இல்லை….
“இது என்ன…. சத்தம் மட்டும் எப்படி?” என்று அவள் யோசிக்கும் நேரத்திற்குள்…..வலது பக்கம் வந்து அவளுடைய வாயை பொத்தி கண்கள் இரண்டையும் கட்டி போட்டு அவளை காரில் அமர்த்தி கூட்டிச் சென்றான் அந்த ஆசாமி. “அய்யோ அக்கா” என்று பதறினாள் மல்லிகா.