You don't have javascript enabled
Bhagya novelsRomantic thrillerThriller

Kavalum kadhalum-5

5

காரில் அமர்த்தி நெடுந்தூரம் அழைத்து வந்து அவளது கண்களை திறக்க செய்தான் அந்த ஆசாமி…மெதுவாக தன்கண்களை திறந்த அவளுக்கு மகிழ்ச்சி எல்லை மீறியது. ஏனெனில் அவளுடன் ஓவியக்கல்லூரியில் ஒன்றாக படித்த பூவரசன் தான் அந்த ஆசாமி.

“டேய் நீயா பக்கி… எதுக்கு இந்த திகில்?உன்னை…. ராஸ்கல்” என்று செல்லமாக அடிக்க… அடியை வாங்கிய அவன் “ரேணு விடு டி… நான் மென்மையானவன் அப்படிங்கறது னால எங்க அப்பா எனக்கு பூவரசனு பேரு வச்சாரு நீ இந்த பூவை இப்படி அடிக்கிற அப்புறம் பூ வாடிபோகாதா” என்று புன்முறுவலுடன் கூற 

“ம்ம்ம் பின்ன என்ன ?லூசு இப்படியா பன்னுவ?நான் கொஞ்சம் நேரத்தில் பயந்தே போயிட்டேன் ப்பா….இன்னொரு வாட்டி இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம்”

“ஹாஹா…. சும்மா ஒரு ஷாக் தரலாம்னு வேற ஒன்னுமில்லை சரி எப்படி போது டி உன் வாழ்க்கை?”

“ம்ம்ம் அது எங்க டா போது நானே தள்ளிட்டு போறேன்…”

“ஓ….ரொம்ப தள்ளாத விழுந்துற போது” என்று நக்கலடிக்க

“அதான் தாங்கி பிடிக்க நீ வந்துட்டியே இனி எனக்கு என்ன கவலை?”

“ஹாஹா….. சரி வா ஒரு காபி சாப்பிடலாம் என்று அவன் எதார்த்தமாக கூற

“டேய் டைம் 8.30 ஆகுது வீட்டில் தங்கச்சி தனியா இருக்கா ….இப்ப நான் உன் கூட காப்பி குடிக்கிறது ரொம்ப முக்கியமா சொல்லு?”

“முக்கியம் தான் டி எனக்கு ஏன்னா ரொம்ப நாள் கழித்து உன்னை பார்க்கிறேன்ல அப்படியே காபி குடிச்சிட்டே உன்கூட கொஞ்சம் நேரம். பேசாலானு தான்.சரி வா உன் கையால நீயே உன் வீட்டில் போட்டு கொடு என்று மறுகணமே தன் எண்ணத்தை மாற்றியவன் அவளது பதிலுக்கு காத்திருக்க…

அவளோ கண் சிமிட்டியபடி, “ம்ம் அது ஓகே” என்று பதிலளிக்க இருவரும் அவனது காரில் பயணித்தனர்.

தங்களது கடந்த கால கல்லூரி காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டபடி. அந்த இரவு நேர கார் பயணம் அதுவும் பழைய கல்லூரி நட்புடன் என்கிற போது இருவருக்கும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.

நட்பு என்றாலே ஒரு சுகம் தானே, எனினும் பூவரசனுக்கு நட்பை தாண்டிய ஒரு காதல் உணர்வு மனதினுள் இருந்தாலும் வெளிப்படையாக கேட்க சற்று தயக்கமும் பயமும் இருந்தாலும் வீட்டில் வைத்து நேரடியாக கேட்க எண்ணினான்.

வீட்டினுள் நுழைந்த அந்த நொடி மல்லிகா தன் தமக்கை ரேணுகாவை பார்த்து கட்டி அணைத்து அழத்துவங்கினாள்

“அக்கா நீ எங்கே போயிருந்த நான் பயந்தே போயிட்டன்”என்று,உடனே அவளை மெல்ல தேற்றிவிட்டு

“இதோ இவர் தான் பூவரசன் என் கல்லூரி நண்பர்” என்று அறிமுகம் செய்துவைக்க,

 “வணக்கம் அண்ணே” என்று அவனுக்கு வணக்கம் வைக்க அவனும் “ஐயோ மச்சினிச்சி நம்பளை அண்ணன் சொல்றாலே” என்று பெருமூச்சு விட..

அவனை வீட்டு முகப்பறையில் அமர வைத்து காபி பறிமாறினாள் ரேணுகா. காப்பி கப்புடன் பேச்சை துவங்கினான் பூவரசன்

“ரேணு உன் கிட்ட நேரடியாவே கேக்குறன் ….நம்ப இரண்டு பேரும் கல்யாணம் பன்னிக்கலாமா?” என்று பளிச்சென்று கேட்க, அவளால் பதில் எதுவும் கூற இயலாது தடுமாறி கையில் இருந்த காபி கப்பை அவள் தவற விட,

 “ஐயோ ஐயம் சாரி டி நீ ஏன் இவ்வளவு பதற்றம் ஆகுற? ரிலாக்ஸ் ஆகு முதலில் அப்றம் பேசிக்கலாம்” என்றவுடன் சுதாரித்து கொண்டு அவனிடம் பேச்சை துவங்கினாள்

“ஏய் என்னடா தீடீர்னு இப்படி கேட்டா நான் என்ன சொல்றது சொல்லு”

“ஆமா இல்லை… இரண்டுல எதாவது சொல்லு”

“என்ன நக்கலா?”

“இல்லை விக்கல் இங்க பாரு…எனக்கு கர்மம் இந்த லவ் ப்ரொபோஸல்…இதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது .ஆனால் காலேஜ் ல இருந்தே உன்னை ரொம்ப பிடிக்கும்… நீ அழகா இருக்க அப்படினு இல்லை… உன்னோட பொறுப்புணர்வு உன்னோட தனியாக வாழ்ற தன்னம்பிக்கை இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.”

“ஸோ?” என்று புருவத்தை உயர்த்தினாள் ரேணுகா

“ஸோ….ஐ” என்று வார்த்தையை விழுங்கினான்.

“ம்ம்ம்???என்ன டா முழுங்குற ?”

“ஒன்னுல அதான் சொன்ன ல…எனக்கு வராதுனு..”

“ஹாஹா… இங்க பாரு டா நீ சொல்றது புரியுது ஆனால் என் தங்கச்சி க்கு கல்யாணம் பன்னிட்டு தான்.”

“ம்ம்ம் க்கும் சரியா போச்சு போ… இங்க பாரு டி….உன் தங்கச்சி க்கு மாப்பிள்ளை பாக்குறது என் வேலை ஆனால் அதுக்கு முன்பு நீ நானும் புருஷன் பொண்டாட்டி ஆகனும் ஆயிட்டா…இரண்டு பேரும் சேர்த்து மாப்பிள்ளை தேடுவோம்….டீலா ?”

“மாம்ஸ் எனக்கு ஓகே” என்று மல்லிகா குரல் கொடுக்க….

“தாங்க்ஸ் மச்சினிச்சி முதல்ல நீ அண்ணே னு கூப்பிட்ட உடனே மனசு கஷ்டமா போயிடுச்சு இப்ப நீயே புரிஞ்சிக்கிட்ட” என்று சிரித்து விட்டு… ரேணுவை பார்த்தபடி அவளது மூக்கை சீண்டிவிட்டு….நான் கிளம்புறன் நல்ல பதிலாக யோசித்து சொல்லு என்று விடைப்பெற்று சென்றான்.

மறுநாள் காலை …..சூரியனின் வெளிச்சம் நேரே ஆதியின் முகத்தில் வீச….தூக்கம் களைந்து உடம்பை முறுக்கியபடி எழுந்தான்.

வித்யா அவனை கூப்பிடும் சத்தம் கேட்க ….பால்கனியில் நின்றிருந்த அவளை காண வந்தான்..

“வித்யா…என்ன காலங்காத்தால இப்படி சத்தம் போட்டு கூப்பிடுற?”

“அண்ணன் நான் சொன்னேன் ல ஒருத்தன் செக்ஸ் டார்ச்சர் தந்தானு அவன் அந்த பைக்கில் போறான்… அங்க பாரு அந்த பல்ஸர்” என்று பதற்றத்துடன் கூற,

உடனே…..அவள் அடையாளம் காட்டிய பைக்கை துரத்த வீட்டிற்கு வெளியே வந்து தன் பைக்கை கிளப்பினான்….மேடு பள்ளம் அங்கும் இங்கும் ஆள் நடமாட்டம் அதையும் மீறி விரைந்து சென்றான்..”

***

பூவரசன் அவகிட்ட அப்படி கேட்டதிலிருந்து  ரேணுகா குழப்பமாவே இருந்தாள். அவனை மணம் புரிந்து கொள்ளலாமா வேண்டாமா என்று!

அப்போது மல்லிகா அவளருகே வந்து,

 “அக்கா… நீ இப்படியே யோசனை பன்னிட்டே இருந்தா அவ்வையார் ஆயிடுவ…இங்க பாரு பூவரசன் மாதிரி ஒரு நண்பன் புருஷனா அமைய நீ கொடுத்து வச்சிருக்கனும் சீக்கிரம் கல்யாணம் பன்ற வழிய பாரு”

“அதுக்கு இல்லை டி… முதலில்.உனக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா நல்லாயிருகக்கும் னு தோணுது”

“ம்ம்ம் எனக்கு இப்ப தான் 19 ஆனால்.. உனக்கு ???என்னை விட பெரியவ நீ தான் ……ஸோ…..நீ தான் முதல்ல கல்யாணம் பன்னிக்கனும்.”

“சரி சரி….எப்பவோ என்கூட படிச்ச பூவரசன் திடிரென்று ஏன் என்னை தேடி வரனும்?” என்று அவள் கேள்வி எழுப்ப அதை கேட்டு நகைத்துவிட்டு

“ஹலோ ஹலோ நீ காலேஜ் முடிச்சு இரண்டு வருஷம் தான் ஆகுது சிஸ்டர்”இரண்டு வருஷமா லவ் எப்படி டா சொல்றது னு யோசிச்சிட்டு இருந்துருப்பான் அதான் வர வச்சிட்டேன்.

“என்ன???வர வச்சியா???”என்று குழம்பியபடி கேட்க

“அ…ச்சி ச்சி…வந்தானு சொன்னேன் கா..டங் ஸ்லிப்”

“ஓ…எப்படியோ அந்த பூவரசன் ஒருவழியா என் வாழ்க்கை ல வந்துட்டான் வாழ்ந்து தான் பார்ப்போம்” என்று அவனது முகத்தை தன் கண் முன்னே கொண்டு வந்தவள் எதையோ நினைத்து வெட்கத்தில் சிரிக்க,

“ஹாஹா அப்படி போடு” என்று தங்கச்சி விசில் அடிக்க

“என்ன நொப்பிடி போடு… எங்க நான் உன்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பிருவேனு பயம் அதான் அவசர அவசரமாக என்னை அவனுக்கு கட்டி வைக்க முயற்சி பன்ற ம்ம்…”

“நான் கண்டிப்பா மாமியார் வீட்டுக்கு போகதான் போறேன் அக்கா ஆனால் அதுக்கு முன்பு நீ மாமியார் வீட்டுக்கு போய் சந்தோஷமா இரு சரியா ஓகேவா மை சிஸ்டர்.”

“ம்ம்ம்… ஏய் மல்லி நீ என் பொன்னு மாதிரி டி…உன் ஆசை தான் என் ஆசையும் நான் கண்டிப்பாக பூவரசனை கட்டிக்கிறேன். “

“ரொம்ப ஹாப்பி கா நானு….வா…இந்த சந்தோஷத்தை கொண்டாட நம்ப இன்னைக்கு ரெஸ்டாரன்ட் போவோமா என்று பாவமான முகப்பாவனை காட்ட” 

“போச்சி… செலவு வச்சிட்டியா….?”

“ஐயோ அக்கா…ரொம்ப தான்…. அதான் கடுகு டப்பா ல 500ரூபாய் வச்சிருக்க ல அப்புறம் என்ன?” நான் ஒரு ப்ரைடு ரைஸ் நீ ஒரு சீரா ரைஸ் அவ்வளவு தானே திங்க போறோம் .

“ஹாஹா நல்லா புரிஞ்சி வச்சிருக்க டி…”

“பின்ன….நம்ப என்ன அவ்வளவு பெரிய சோத்து மூட்டை யா? நமக்கு ஐந்நூறு அதிகம் தான்…”

“சரி சரி கிளம்பு……போலாம்”

இரண்டு பேரும் உணவகம் போக, அங்கே ஆதியை எதேச்சையாக அவர்கள் சந்திக்க நேரந்தது. அவன் பக்கத்து டேபிளில் உட்கார்ந்து உணவருந்தி கொண்டிருந்தான்.

“ஹாய் ஆதி அண்ணன் செம்ம கட்டு கட்டுறீங்க போல” என்று மல்லிகா கலாய்க்க..

ரேணுகா அவளை சீண்டிவிட்டு “சும்மா இரு டி” என்று முணுமுணுத்தாள்.

ஆதி சற்றும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல்,

“பேசட்டும் விடு ரேணு…. என் தங்கச்சி ப்ரண்டு தானே ஸோ வித்யாவும் ஒன்னுதான் மல்லிகாவும் ஒன்னு தான் எனக்கு.”

மல்லிகா அவனை பார்த்து, “அண்ணா… அப்போ எனக்கு என்ன பிரச்சனை னாலும் காப்பாத்துவியா அண்ணன்?” என்று ஆச்சரிய பார்வை பார்க்க

“மல்லி….உனக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க,

“ஒன்னுல ஆதி அண்ணா சும்மா தான் கேட்டேன்…நீங்க சாப்பிடுங்க” என்று கூற

ஆதி அவளை பார்த்து, “ஓய் வாலு …நீயும் ரேணுகாவும் என்ன வேணுமோ சாப்பிடுங்க நானே பில் பே பண்ணிடுறேன்” என்று செல்லமாக கூற

ரேணு அவனிடம், “அய்யோ ஆதி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”என்று நிராகரிக்க

“ஏன் நாங்க பில் பே பன்னா கல்லாவில் இருக்கிறவரு கோச்சிப்பாரா?” என்று சிரிக்க,

“ஹாஹா சரி ஆதி” என்று அவளும் சிரித்துவிட,

“அப்பாடா… ஐந்நூறு மிச்சம்….. தாங்க்ஸ் ஆதி அண்ணா என்று அவனிடம் கிண்டலுடன் சொல்லிவிட்டு சிரிக்க,

ரேணு அவளிடம், “ஏய் லூசு சில்லியா பிகேவ் பன்னாதே” என்று கடிந்துக்கொள்ள,

மல்லிகா, “ச்சி பே அவரு நம்ம ப்ரண்டு தானே” என்று எதார்த்தமான தோரணையில் கூற, சாப்பிட்டபடி பேசிக்கொண்டு இருக்கையில் அந்த ராகவா கேஸ் பத்தி பேச்சு ஆரம்பிக்க மல்லிகாவிற்கு புரையேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content