AA-8
பிரேதபரிசோதனை பிறகு ஆனந்தனின் உடல் கொண்டுவரப்பட்டது. என்ன நடந்திருக்கும் அந்த ரிப்போர்ட்டில் சொல்ல போகும் விஷயம் என்ன என்பது பற்றி எல்லாரும் ஆர்வமாக இருக்க… முதலில் திவ்யா ஓடிச்சென்று,
“சார் சார் எங்க சித்தப்பா எப்படி இறந்தாரு ரிப்போர்ட் ல என்ன சொல்லிருக்காங்க டாக்டர் சொல்லுங்க ப்ளீஸ்” என்று கதற ஆரம்பிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்று சுதாரித்து கொண்டு பேச்சை துவங்கினார்.
“மேடம் ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க… உங்க சித்தப்பா இறந்தது வெறும் சாதாரண இறப்பு அல்ல அது ஒரு கொலை அதை யாரு செஞ்சாங்க னு கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிருவோம் அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க மேடம் பதற்றம் ஆகம இருங்க கூடிய சீக்கிரம் எல்லாமே தெளிவா உங்களுக்கு புரியும்”
“சார் அப்படினா இதோட முதல் கட்ட விசாரணை எப்போ துவங்க போறீங்க?” என்று அவளுடைய நண்பன் விஜய் குறுக்கிட இன்ஸ்பெக்டர் பதில் அளித்தார்.
“சார் முதல் விசாரணை குடும்ப உறுப்பினர்கள் வெச்சுதான் துவங்கனும் சடங்கு முடிஞ்சா உடனாய் ஆனந்தன் மனைவி தேவி ஆஹ் விசாரிக்க போறோம் அதுக்கப்புறம் தான் மத்தவங்கள விசாரிக்க முடியும்” என்று கூற..சடங்குகளும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பிறகு அறிவித்தது போல் விசாரணையும் துவங்கியது
பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆனந்தியை அழைத்து ஸ்டஸ்ட்டின் வரை உடன் செல்ல அங்கு விசாரணை துவங்கியது
“ஏன் மா உனக்கும் உங்க வீட்டுக்கருக்கும் ஏதாவது பிரச்சனை ஆஹ்?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க பயந்து கொண்டவாறு இல்லை என்று அவள் பதில் அளிக்க….
“சரி இல்லனு வேசிப்போம் வெளியிலே ஏதாவது அவருக்கு எதிரி இருக்காங்களா அப்படி இல்லனா குடும்பத்துல யாராவது எதிரி இருக்காங்களா?” என்று கேட்க, அவளோ இல்லை என்றபடி தலை அசைக்க,
“சரி நீங்க போகலாம் அனால் ஒன்னு உங்களுக்கு ஏதாவது யாரு மேலயாவது சந்தேகம் இருந்தா உடனாய் எனக்கு தெரியப்படுத்தனும்” என்று கூறிவிட்டு அவளை அனுப்பி வைக்க…
இதற்கிடையில் ராகுல் தேவியின் மீது கோபிந்த கரிசனத்தை பார்த்து ஏற்கனவே திடுக்கிட்டு போன சிவாவும் லதா உம எதுவும் புரியாமல் யோசித்தனர்.
“இவன் எதற்காக நம்ப கூட இருக்கான்? கார் ல வரும் போது அந்த பொண்ணோட சேர்ந்து நாடகம் ஆட்டுனது எதுக்கு இப்போ தேவி மேல கரிசனம் காட்றது எதற்கு?” என்று எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ள இதை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு இருக்க தேவியும் வீடு வந்து சேர்ந்தார்.
ஏற்கனவே மனவேதனையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்ய மனம் இல்லாமல் அனைவரும் அவருக்கு தனிமையை தந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க துவங்கினர்
ராகுலிடம் நெருங்கி பழகவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்து போனாள் லதா. இந்த தவிப்பும் வேதனையும் சிவாவிற்கும் மற்ற நண்பர்களுக்கும் புரிந்தது. ஆனாலும் பாவம் என்ன செய்ய முடியும் அவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் லதாவின் வாழ்க்கையே பாழாகி விடும் அல்லவா. அப்படி அனுமதிக்க எப்படி நண்பர்களால் முடியும். எனவே லதாவிற்கு ஆறுதல் சொல்வதை தவிர வேறு வழியும் தெரியவில்லை…
நாட்கள் உருண்டோடின..
நண்பர்கள் அவரவர் இல்லத்திற்கு வந்தடைய அன்றாட வேலையை துவங்களானார்கள். அனால் திவ்யாவால் அப்படி தன்னுடைய வீட்டில் இயல்பாக இருக்க முடியவில்லை.
சித்தப்பாவின் சாவிற்கு வந்து சென்றபோது ராகுல் இந்த மொபைலை பார்த்தபோது அந்த பெண்ணின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனாள் அதை பற்றிய சிந்தனை அவள் மனதில் ஓடிக்கொண்டாய் தான் இருந்தது..
ஆனால் இதை எப்படி மற்றவர்களிடம் கூறுவது என்று அவளுக்கு தெரியவில்லை என்ற போதிலும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால் சரியாக வருமா என்று தோன்ற.. இப்போதைக்கு இதை பற்றி பேசாமல் இருப்பது நல்லது ஏனென்றால் பாவம் நண்பர்கள் எப்போதும் தன்னை பற்றியும் தான் குடும்பத்தை பற்றியும் யோசித்து கொண்டே இருக்க முடியுமா… அவரவருக்கு குடும்பம் இருக்கிறது சரி கணவனிடம் சொல்லலாம் என்றால் அதை எப்படி எடுத்து கொள்வார் எனவும் தெரியவில்லை..
இதட்கிடையில் அனுவின் பூ முடிக்கும் விழா வந்தது..அதாவது மாசமா இருக்கும் பெண்ணிட்கு ஐந்தாவது மதம் செய்யும் சடங்காகும் இதற்கு திவ்யாவும் வந்தாள்.
ஆனால் இந்த விழாவிற்கு ராகுலை அழைக்க வில்லை. அவனை பற்றி தெரிந்தும் அழைக்க மனம் வருமா சிவாவிட்கு. இந்த சூழ்நிலையில் திவ்யா அந்த பெண்ணின் புகைப்படத்தை பற்றி முதலில் விஜயிடம் கூறினாள்.
விஜய் என்னை கொள்ள வந்த பொண்ணு அவதான் பாத்ரூம் ல ஒருவாட்டி மயங்கி விழுந்தேன் ல அப்போ என்ன கொள்ள வந்த பொண்ணு அவ தான்…
ஆனால் இந்த பொண்ணுக்கும் ராகுல் கு என்ன சம்மந்தம் என்று கேட்க… அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று கூறியதும் அதிர்ந்தெய் போனாள்.
“என்ன கணவன் மனைவியா?” என்று அவள் கேட்டதற்கு ஆம் என்று பதில் அளித்தவன், இதை பற்றி மற்ற நண்பர்களிடமும் கலந்துரையாட அப்போது தான் எல்லாருக்கும் புரிந்தது..
“அப்போ திவ்யா வா கொல்ல தான் ராகுல் லதா கூட நெருங்கி பழகுறான்” என்று..
“இப்படி பட்ட ஒருவனையே நான் காதலித்தேன்” என்று மனம் வருந்திய லதா இனி அவனை திரும்பிக்கூட பார்க்க மாட்டேன் என்று தீர்மானம் கொண்டு வர,
“சரி எப்படி பார்த்தாலும் திவ்யா வை கொல்ல ராகுலிற்கு என்ன என்ன காரணம் இருக்க போகுது” என்று யோசித்தனர். இதற்கான விடை அவர்களால் யூகிக்க முடியவில்லை என்ற போதிலும் திவ்யாவை எதற்கும் ஜாக்கிரதையா இருக்க சொல்லி அறிவுறுத்தினர்.
இதற்கிடையில் திவ்யாவும் கர்ப்பமானாள். இந்த நல்ல செய்தி கேட்டு அவளை தலை மேல் தூக்கி வைத்தனர் குடும்பத்தினர்.. தலை பிரசவம் என்பதால் அவள் அம்மா வீட்டிற்கு செல்ல நேர்ந்தாலும்… பாதுகாப்பு காரணமாக கணவன் வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
ஆனால் கணவன் வீட்டில் அவளை அப்படி கவனித்து கொல்ல துவங்கினர். மாமியாரின் அன்பும் ஆதரவும் அவளுக்கு கிடைத்தது அந்த அன்பில் அவள் அனைத்தையும் மறந்தாள். ஒவ்வொரு மதமும் தவறாமல் செக்கப் போய்விட்டு மருத்துவர் ஆலோசனை படி நன்றாக ஒய்வு எடுக்க செய்தவள் குழந்தையின் சிந்தனை தவிர எதிலும் அவள் கவனம் செல்லவில்லை.
தொடரும்…