You don't have javascript enabled
Bhagya novelsRomanceRomantic thrillerThriller

AA-1

1

 
காரைக்குடி பக்கத்தில் இருக்கும் அழகிய சிற்றூர் அது. அங்கு இருக்கும் வீடுகள் அனைத்தும் பாரம்பரியம் மிக்க அழகிய வேலைபாடுகள் கொண்டதாகும். முன்னே வாசல் கதவை திறந்தால் சுமார் 400 மீட்டர் வரை சென்றால் தான் பின் வாசலே வந்தடையும் அந்த அளவுக்கு பெரிய வீடுகளாகும். அங்கு ஒரு காலத்தில் பாரம்பரியமாக கூட்டுக்குடும்பமாக தான் எல்லோரும் வாழ்ந்து வந்தனர்.
 
 நாளடைவில் இளைய தலைமுறையினர் வெளியூர் சென்றுவிடவே ஆங்காங்கே குடும்பங்கள் தனித்து காணப்பட்டது ஆனால் இன்னும் நம் துரைராஜ் குடும்பம் அவ்வாறு கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். துரைராஜ் க்கு ஒரே மகள் திருமணமாகி சென்றுவிட்டாள் துரைராஜின் தங்கைகளும் திருமணம் ஆகி வேறு ஊர்களுக்கு சென்றுவிட அங்கு துரைராஜின் மனைவி கலாவும் துரைராஜின் தம்பி ஆனந்தனும் அவரது மனைவியுமான தேவியும் இருந்தனர்.
 
ஆனந்தன் மற்றும் தேவிக்கு குழந்தை பாக்யம் இல்லை இவர்களுக்கு இன்னொரு தம்பியும் இருக்க அவரும் அவரது மனைவியும் பல வருடங்கள் முன்பே இறந்துவிட. இவர்கள் நால்வர் மட்டுமே அவ்வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.இவர்களது தாயார் போனவருடம் தான் காலமானார். அவ்வப்போது துரைராஜ் மகளும் மருமகனும் வத்துபோவதும் உண்டு.
 
விசேஷ நாட்களில் துரைராஜின் தங்கைகளும் அவர்களது கணவன் மற்றும் குழந்தைகளும் வீட்டுக்கு வந்து செல்வர். அங்கிருக்கும் பலர் இவர்களது வாழ்க்கை யை பார்த்து பொறாமை கொள்வதும் உண்டு. பலர் அவ்வகையான பலங்கால வீடுகளை விட்டு நகரத்துக்கு குடிபெயர இவர்கள் மட்டும் இன்னும் அப்படியே மெயிண்டென் பன்னுகிறார்களே என்று. இவர்களுக்கு குடும்பத்தொழில் என்று ஒன்று இருந்தது.
 
டெக்ஸ்டைல் தொழிலில் இவர்கள் அந்த ஊரிலேயே மிகவும் பிரபலம். முதலிடமும் கூட.  வரும் வருமானத்தை துரைராஜும் ஆனந்தனும் பங்குப்போட்டு கொள்வர். இவர்களுக்கு அவ்வப்போது மனஸ்தாபம் வந்தாலும் பிரியும் அளவுக்கு எல்லாம் பிரச்சினை எதுவும் இல்லை..
 
துரைராஜின் கைப்பேசி அழைக்க,
 
“அப்பா நான் திவ்யா பேசுறன். சென்னை ல இருக்கிற என்னோட காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லாருமே நம்ப வீட்டுக்கு வருவாங்க இன்னைக்கு கொஞ்சம் நல்லா கவனிச்சு அனுப்பிடுங்க பா,இரண்டு நாள் நம்ப வீட்டில் தான் தங்குறாங்க. இவங்களே சமைத்து சாப்பிட்டுபாங்க அவங்களுக்கு வேண்டியதை நீங்க வாங்கி தந்தாலே போதும் . என்னால இப்ப வரமுடியாது வீட்டுக்கு போனவாரம் தானே வந்தேன் மறுபடியும் வந்தா மாமியார் திட்டுவாங்க அதான் நீங்க என் ப்ரண்ட்ஸ பார்த்துக்கங்க பா….”
 
“அதுக்கு என்னத்தா தாராளமா வரட்டும் ஆமா எத்தனை பேரு. என்று அவர் கேட்க,
 
“ஐந்து பேர் சிவா,விஜய்,ஜெய், லதா அப்றம் அனு”. 
 
“ஹாஹா ஏன்த்தா அந்த மூனு ஆம்பள பசங்களுமா உன் ப்ரண்டு?”என்று சிரித்துக்கொள்ள,
 
“பா நட்புல என்ன ஆம்பள பொம்பள னு போங்கப்பா நாங்கெல்லாம் குட் ப்ரண்ட்ஸ். அதுலயும் சிவாக்கு கல்யாணம் ஆகிடுச்சு அவன் மனைவி தான் அனு”. 
 
“ஓ… சரி சரி வரட்டும்.”
 
“அப்பா அப்றம் இன்னொரு விஷயம்”
 
“என்னம்மா?”
 
“இல்லை அதுவந்து நம்ப வீட்ல இருக்கிற அந்த அறையில மட்டும் யாரையும் அனுப்பிடாதிங்க, அந்த அறையின் ரகசியம் யாருக்கும் தெரியாது. என்றவுடன் முகத்தில் வழிந்த அந்த வியர்வையை துடைத்த துரைராஜ்.
 
“சரிமா”என்று போனை துண்டித்து விட்டார்.
 
பின் அந்த இடத்தை விட்டு நகர்ந்து அந்த அறையை கடந்து செல்ல, பல வருடங்கள் முன்பு நடந்த நிகழ்வு எல்லாம் நினைவுக்கு வர முகம் மறுபடியும் வியர்த்தது. 
 
“என்னங்க சாப்பிட வாங்க என்று மனைவியின் குரலில் டைனிங் டேபிளில் அமர்ந்தார்.
 
“இரண்டு இட்லி போதும் டி “
 
“ஏங்க இப்படி கோழி மாதிரி கொத்தி சாப்பிடுறிங்க நல்லா தான் இட்லியை பிட்டு சாப்பிடுங்க”
 
“சரி டி அது இருக்கட்டும் எங்க ஆனந்தனும் தேவியும்?”
 
“அதுவா அவங்க இரண்டு பேரும் கோவிலுக்கு போயிருக்காங்க என்ன பன்றது அவங்களுக்கு இருக்கிற ஒரே நிம்மதி கோவிலும் தெய்வமும் தான் அந்த தெய்வம் இவங்களுக்கு ஒரு குழந்தை பாக்யம் குடுத்துருக்க கூடாதா?”
 
“விடு டி எல்லாம் விதி…..”
 
“என்னங்க ஒரு சந்தேகம்? இறந்து போன உங்க இன்னொரு தம்பியோட மகன் இப்ப எங்க இருக்கான்?”
 
“எனக்கு என்னடி தெரியும்?”
 
“சரி சாப்பிடுங்கள்… என்று தானும் தட்டை வைத்து சாப்பிட அங்கு திடீரென்று கதவு தட்டும் சத்தம்…. தட் தட் தட்.என்று .
“ஏங்க வாசக்கதவை யாரோ தட்டுறாங்க இருங்க நான் போய் பார்க்கிறேன்” என்று எழ,
 
“ஏய் கலா அது அந்த அறையின் கதவா..இருக்குமோ” என்று அவர் பீதி கலந்த பார்வை பார்த்தார்.  
 
“ஏங்க சும்மா அதையே நினைச்சிட்டு பயந்துகிட்டு போங்க”
 
“சரி சரி.வாசக்கதவை திறந்து பாரு. கலாவும் கையை அலம்பிட்டு வாசக்கதவை திறக்க “ஹாய் ஆண்டி நாங்க திவ்யா ப்ரண்ட்ஸ்…உள்ள வரலாமா?”
 
“வாங்க வாங்க ஏங்க யார் வந்திருக்காங்க பாருங்க” என்று புன்னகைக்க அவரும் இவர்களை வரவேற்க வந்தவர்கள் அனைவரும் அறிமுகம் செய்து கொண்டு அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி நடந்தனர்.
 
சிவா மற்றும் அனுவிற்கு மட்டும் தனியாக அறை கொடுக்கப்பட்டது. 
 
சிவாவிடம் அனு, “ஏங்க உங்கள் ப்ரண்டு. திவ்யா வீடு அரண்மனை மாதிரில இருக்கிறது என்று கூற,
 
“ஹாஹா. ஆமா ஒரு காலத்துல எங்கத்தாத்தா வீடும் இப்படி தான் ஆனால் எல்லாம் வித்தாச்சு”
 
“ஓ… சரி நான் ரெப்ரஷ் ஆகிட்டு வரேன் வந்து காபி கலந்து எடுத்துட்டு வரேன். என்று செல்ல அவளை பின்னாலிருந்து இருகி அணைத்தவன்,
 
“ஏய் லூசு வீட்டில் வேலை செய்ற மாதிரி இங்கயும் பன்னாத நம்ம இங்க ஹனிமூன் என்ஜாய் பன்ன வந்திருக்கோம் ஓகே. எல்லாம் வேலையும் லதா பாத்துப்பா. “
 
“ஏங்க ஹனிமூன் இங்கயா? ஏதோ ஊட்டி கூட்டிட்டு வந்தமாதிரி சொல்றீங்க” என்று கேலி செய்ய,
 
“என்ன பன்றது எல்லாம் என் நேரம் இங்க பாரு உனக்கு தேவை ஊட்டி தானே இங்கே பாரு ஏசி ல 20டிகிரி ல வச்சாச்சு ஓகேவா ஊட்டி க்ளைமேட் இங்கேயே வந்தாச்சு . இப்ப இந்த ரூமுக்குள் நீயும் நானும் தான் வேற யாரும் வரவே முடியாது.”
 
“வந்தாலும் துரத்திடலாம்” என்று இருவரும் சிரிக்க இவர்களது அறைக்கதவை யாரோ தட்ட இருங்க போய் பார்க்கலாம் என்று கதவை திறக்க லதா காபியுடன் வந்து நின்றாள். ஹலோ நியுலி மேரிட் கபுல்ஸ் எப்ப பாரு ரூம்லயே இருந்தா போர் அடிக்கும் ஸோ ரெடி ஆகிட்டு வாங்க வெளியே போலாம்.
 
“என்னது வெளியே வா முதல்ல இந்த வீட்டை சுற்றி பார்க்கணும்” என்று அனு கூற,
 
“அதுவும் சரி தான்” என்று ஆமோதிக்க, அனைவரும் குளித்து முடித்து தயார் ஆகி அவ்வீட்டை சுற்றி பார்க்க துவங்கினர். 
 
லதாவும் அனுவும் முதலில் சமையலறையை நோட்டமிட சென்றனர்.
 
“ஆண்டி உள்ள வரலாமா “என்று கேட்க,
 
“அட உள்ள வாங்க பசங்களா என்று இன்முகத்துடன் கூப்பிட இவர்கள் உள்ளே நுழைந்தனர். இன்னுமும் மண்செட்டிகளும் கல்ச்செட்டிகளும் விரகடுப்பும் இருக்க பழங்கால உபரகரணங்களான அம்மி முதல் ஆட்டுக்கல் வரை அனைத்தும் இருந்தது.
 
“ஆண்டி இட்ஸ் ஸோ நைஸ்” என்றதும்,
 
“ஏம்மா என்னமோ காட்சிப்பொருள் மாதிரி பாக்குறிங்க இது என்ன அவ்வளவு பெரிய அதிசயமா?” என்று சிரித்தவாறே வினவ,
 
“ஆமா ஆண்டி நாங்க எல்லாம் மிக்ஸி க்ரைண்டர்னு பயன்படுத்தி எங்க ஆரோக்கியத்தை நாங்களே கெடுத்துக்கிறோம். இதெல்லாம் பார்க்கிறப்ப சிட்டி ல இருக்கிற நாங்க எவ்வளவு தப்பு பன்றோம்னு தோணுது”
 
அதற்குள் கலாவின் ஓர்ப்புடியார் தேவி உள்ளே நுழைய,
 
“அக்கா யார் இவங்க எல்லாம்” என்று கேட்க,
 
“இவங்க நம்ப திவ்யா கூட சென்னை ல படிச்சவங்க சும்மா ஊரை பார்க்கலானு வந்துருக்காங்க.”
 
“ஓ அப்படியா என்று முடிப்பதற்குள்,
 
“அம்மா நீங்க திவ்யாவின் சித்தி தானே?” என்று லதா கேட்க,
 
“எ..என்னமா சொன்ன திரும்பி சொல்லு… “
 
“அம்மா னு சொன்னேன்.”
 
“இத்தனை வருஷம் இந்த வார்த்தை காக தான் நான் ஏங்குனேன் யார் பெத்த புள்ளையோ என்ன வாய்நிறைய அம்மானு கூப்பிடுற நீ நல்லாருக்கணும்” என்று அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட,
 
“அம்மா நீங்க ஏன் குழந்தை இல்லை னு வருத்தப்படுறீங்க இன்னைல இருந்து நான் அனு சிவா எல்லாரும் உங்கள் பசங்க தான் ஓகேவா?”
 
“ஓகே மா நீங்க இங்கே தங்குற வரைக்கும் இந்த அம்மா கையால தான் சாப்பாடு சரியா?”
 
“சரிங்க மா”
 
“இன்னும் சமையலறைல  இவளுங்க என்ன தான் பன்றாங்க என்று சிவா உள்ளே நுழைய அவன் பின்னாலே விஜய் ஜெய் இருவரும் நுழைய அந்த பாரம்பரிய மிக்க கிச்சனை இவர்களும் ரசித்துவிட்டு அனைவரும் அந்த வீட்டில் மற்ற அறைகளை காண சென்றனர் . 
 
“அய்யோ கால் எல்லாம் வலிக்குது மச்சான்ஸ் என்று சிவா கூற ..
“நல்லது இன்னைக்கு நைட் நல்லா தூக்கம் வரும் அசதியில் என்று ஜெய் கூற 
“டேய் அப்ப இவன் இன்னைக்கு நைட் பர்பார்மென்ஸ் பன்ன முடியாது ல அதை நினைச்சு வருத்தப்படுறான் டா” என்று விஜய் கூறினான். 
 
சிவா முறைத்தபடி, “ஏண்டா பக்கத்தில் நிக்கிற என் பொண்டாட்டி என்னடா நினைப்பா கம்முனு வாங்க டா” என்று கூற,
 
“அதெல்லாம் ஒன்னும் நினைக்கமாட்டோம் “என்று அனு கூற “ஆமா ஆமா அனு தான் எங்கள் எல்லார்கூடவும் ப்ரண்டு ஆயிட்டாளே கண்டிப்பாக எதுவும் நினைக்கவும் மாட்ட துவைத்து காயப்போடவும் மாட்ட வாங்க பேசாம.”என்று லதா கூற,
 
“ஆமா இந்த வீடு பார்த்தா ஏதோ பெரிய பேய் வீடு மாதிரி இருக்கு இம்புட்டு பெருசா ச்ச ஒவ்வொரு ரூமா நடந்து போறதுக்கு கால் எல்லாம் சம்ம வலி” என்று அனு உரைத்தாள்.
 
“அது எப்படி புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி சொல்றீங்க என்று அனைவரும் கோரஸ் நக்கல் அடிக்க அந்த அறையை நெருங்கினர்.
 
“அம்மாடி இந்த ரூமுக்கு மட்டும் யாரும் போகாதீங்க” என்று குரல் கொடுத்தார் துரைராஜ். 
 
“ஏன்? அந்த ரூமுக்கு போக கூடாது அங்கிள்” என்று விஜய் கேட்க.
 
“போககூடாது னா போககூடாது அவ்வளவு தான். நாங்களே அந்த அறையை பயன்படுத்துரது இல்லை . சரி சரி மத்த ரூமெல்லாம் பார்க்கலாம் வாங்க” என்று ஜெய் கூற,
 
அப்படியே நடந்து நடந்து பின்வாசல் வரை வந்தனர். அனு அங்கிருந்த தண்ணீர் குவளையை எடுத்து  தண்ணீர் மொண்டு குடிக்கும் போது அவள் தோளை பின்னாடியிருந்து யாரோ தட்டினர். 
 
யார்?
 
தொடரும்.

You cannot copy content