AA-2
2
தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி பார்க்க அவள் தோளை தட்டியது வேறு யாருமில்லை அவளுடைய கணவன் சிவா.
“ஏய் என்ன ஆச்சு ஏன் முகமெல்லாம் வியர்க்குது? எதாவது பயந்துட்டியா என்றதும் உதட்டை சுளித்தாள்.
“எல்லாம் உங்களால தான் தோளை தட்டியது யாரோ என்னமோ னு ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் நடுக்கி போயிடுச்சு ஏங்க இப்படி எல்லாம் பன்றீங்க ஒரு வார்த்தை அனு என்று கூப்பிட்டால் தான் என்னவான்?” என்றதும்,
“ப்ச் இங்க பாரு அனு நம்ம திவ்யா அறையில் நிறைய ஓவியங்கள் எல்லாம் இருக்கிறது அதை உனக்கு காட்டலாமேனு கூப்பிட வந்தேன்”
“சரி வாங்க போவோம்” திவ்யாவின் அறையில் இருந்த ஓவியங்களை அனைவரும் நோட்டமிட, அங்கு அழகான ஒரு ஆண்குழந்தையின் உருவம் ஓவியமாக வரையபட்டிருக்க அது யார் என்றபடி ஆச்சரியமாக பார்க்க துவங்கினர்.
“மச்சி எனக்கு என்னமோ இது இவங்க குடும்பத்து ஆளு மாதிரி தான் தோன்றுகிறது .நீங்களே பாருங்கள் இது நம்ப திவ்யா முகத்தோட சாயல் ஓரளவு தெரியும்.” என்றான் விஜய்.
“அட ஆமாம் ,இந்த குழந்தைக்கு இந்நேரம் குறைந்தபட்சம் 25 வயதாவது இருக்கும் நினைக்கிறேன் என்றான் சிவா.
“லதாவும் அனுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இவர்கள் இதையெல்லாம் ரசித்தபடி இருக்க திவ்யாவின் அறைக்கதவு தானாக மூடிக்கொண்டது
“படார்” என்ற சத்தம், அனைவரும் திரும்பி பார்க்க கதவு மூடியிருப்பதை பார்த்து முதலில் காற்றில் கதவு தானாக மூடிக்கொண்டு இருக்கலாம் என்று நினைத்தாலும் பிறகு ஏதோ ஒரு பயம் அவர்களை தொற்றிக்கொள்ள,
“டேய் என்னவென்று போய் பாருங்களேன் டா” என்று லதா கூற,
“ஆத்தி நாங்க போகல இரு இரு” என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று பயத்துடன் இருக்க…
“அட அதுக்காக இப்படியே இங்கேயே இருக்கமுடியுமா என்ன? இருங்க நானே முயற்சி பன்றேன்” என்று லதா கதவருகே சென்று கதவு பிடியை பதற்றத்துடன் பிடித்து திறக்க முயன்றபோது லேசாக திறந்துகொண்டது.
“அட கதவு திறந்தாச்சு வாங்க போலாம், நம்ம சொன்ன மாதிரி காற்றில் கதவு போய் டம்முனு சாத்திருக்கும்” என்று லதா கூற பின் தொடர்ந்து அனைவரும் வர பின்னால் வந்துக்கொண்டிருந்த சிவாவை பின்னே வந்து யாரோ தங்களது கைகளால் கண்களை பொத்த,
“யார் இது” என்று குரல் கொடுக்க அனைவரும் திரும்பி பார்த்து விட்டு,
“ஏய் திவ்யா நீ எப்படி வந்த?” என்று கேள்வி எழுப்ப அவள் முதலில் பலத்த சிரிப்பினை தந்துவிட்டு,
“அடபாவிகளா இப்படியாட பயப்படுவீங்க என் அறையில் நீங்க இருக்கிறப்ப பின்னாடி வந்து கதவை சட்டென்று சாத்தியது நான் தான் அய்யோ அய்யோ நீங்க இப்படி பயப்படுவீங்க னு நான் நினைச்சு கூட பார்க்கவில்லை”.
“அது சரி நீ வரமாட்டனு தானே டி சொன்ன திடிருனு எப்படி வந்த?” என்று லதா வினவ,
“முதல்ல என் மாமியார் விடவில்லை அப்றம் என் கணவர் தான் அவங்க அம்மாவை சமாதானம் பன்னி என்னை அனுப்பி வைச்சாரு” என்றாள்.
“உங்கள் எல்லாரையும் விட்டுட்டு என்னால் எப்படி இருக்க முடியும் சொல்லுங்க?”
“உண்மை தான் திவ்யா நீ இல்லாமல் உன் வீட்டில் வந்து இருக்க எங்களுக்கும் சங்கடமாக தான் இருக்கு.நீ வந்திருந்தா நல்லாருக்கும்னு நானும் சொல்லிட்டே தான் இருந்தேன்” என்று அனு கூற இவர்கள் உரையாடல் நீண்டுகொண்டே போனது.
“ஆமாம் அந்த வரைப்படத்தில் ஏதோ ஒரு ஆண்குழந்தை உருவம் இருக்கே அது யார்?” என்று அனைவரும் திவ்யாவிடம் கேட்க,
“அது வந்து.. என்னோட சித்தப்பா மகன். என்னோட இரண்டாவது சித்தப்பா சித்தி இரண்டு பேருமே இல்லை இறந்துட்டாங்க” என்று திவ்யா கூற ஆர்வமுடன் பார்த்தனர்.
“அப்படி என்றால் அந்த குழந்தை இப்ப எங்கே?” என்று ஜெய் கேட்க, அவளுக்கே அதற்கான விடை தெரியவில்லை.
“எனக்கு இப்ப அந்த குழந்தை எங்க இருக்கும் னு தெரியாது” என்று பதிலளிக்க,
திவ்யாவின் சித்தி தேவி (ஆனந்தன் மனைவி) அழைக்க அனைவரும் சாப்பிட சென்றனர்.
அனைவரையும் கீழே பாய் விரித்து அமரவைத்து அவர்களுக்கு வாழைஇலையை விரித்து முதலில் அதில் சிறிது உப்பு வைக்க அதற்கு காரணம் புரியாது லதா அவர்களிடம்,
“அம்மா இது என்ன முதலில் உப்பு வைக்கிறிங்க இதற்கு பின்னாடி எதாவது அர்த்தம் இருக்கிறதா?” என்று வினவ.
“ஹாஹா உப்பு இல்லா பண்டம் குப்பையிலே னு சொல்லி கேள்விபட்டுருப்பிங்க நினைக்கிறேன். ஒரு உணவோட சுவையை கூட்டுவது உப்பு தான்.. நான் சமைத்து வைத்த உணவில் உப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் இதை நீங்கள் சேர்த்துக்கொள்ளவே முதலில் உப்பு வைத்துள்ளேன்.” என்று கூற,
“அம்மாடியோ நான் கூட எதற்கு டா காரணமே இல்லாமல் உப்பு இலையில் வைக்கிறீர்கள் என்று யோசித்தேன்” என்று லதா கூற அடுத்து இலையில் கேசரி, வடை, உருளை வறுவல் என அடுக்கடுக்காக பதார்த்தங்கள் வைக்கப்பட்டன.
எல்லாவற்றையும் விரும்பி சாப்பிட்டு முடித்துவிட்டு கை அலம்ப சென்றனர். சமையலறையின் பக்கத்தில் ஒரு அண்டாவில் நிறைய தண்ணீர் நிரப்பி வைத்திருந்த நிலையில் அதிலிருந்து தண்ணீர் மொண்டு அனைவரும் கை அலம்ப கடைசியில் திவ்யாவும் கையலம்ப சென்றபோது அண்டாவில் இருந்த நீர் வெதுவெதுப்பாக தெரிந்தது.
“என்ன இது தண்ணீர் எப்பவுமே இந்த க்ளைமேட் க்கு குளிரா தானே இருக்கனும் அது எப்படி வெதுவெதுப்பான தண்ணீரா இருக்கிறது என்று யோசித்தவள் தன் தாய் கலாவிடம் “மா…தண்ணீர்” என்று ஆரம்பித்தபோது அதற்குள் அனு அவளை கூப்பிட.
“என்ன அனு என்று ஓடிச்சென்று பார்க்க அங்கு லதாவின் கால் கட்டைவிரலில் இருந்து ரத்தம் வழிந்துக்கொண்டிருக்க,
“ஏய் என்னடி எங்கயாவது இடிச்சிட்டு ரத்தம் வருதா என்று பதட்டத்தோடு கேட்க,
“இல்லைடி என்னனு தெரியல கட்டைவிரல் வலிக்ககூட இல்லை ஏதோ சுருக்குனு ஓர் உணர்வு என்னனு பார்க்க ரத்தம் வழியுது” என்று கூற, திவ்யாவிற்கு குழப்பமாக இருந்தது.
தன் தோழமைகள் விட்டு சற்று இரண்டடி நகர்ந்தாள்.
‘அந்த அறைக்குள் .எதாவது மாற்றம் நடக்கிறதா?அந்த சாமியார் சொன்ன மாதிரி அந்த அறைக்கதவை பூட்டி தானே வைக்கிறோம் அப்படி இருந்தும் ஏன் இப்படி?’
அவளால் யோசிக்கமட்டுமே முடிந்ததே தவிர வேறு எதுவும் பதில் கிடைக்கவில்லை.
“ஏய் திவ்யா இங்க வாயேன் ரத்தம் வழியுரத உடனே போட்டோ எடுத்து அவளோட ஆளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிட்டா பாரேன். உடனே தொடைச்சுபோட்டு வேலையை பாக்குறத விட்டுட்டு இவ பன்ற வேலையை பாரேன்” என்று ஜெய் கலாய்க்க..
அவளுடைய யோசனையிலிருந்து மீண்ட திவ்யா “ஆமாம் நான் கூட கேக்கனும் நினைச்சன். ஆமா உன் ஆளு எங்க இருக்காரு என்ன பன்றாரு எதுவுமே நீ சொல்லவேயில்லை ,சொல்லுடி உன் காதல் கதையை கொஞ்சம் கேட்போம்” என்று திவ்யா ஆர்வமுடன் கேட்க முதலில் வெட்கப்பட பிறகு பேச்சை துவங்கினாள்.
“அவர் பெயர் ராகுல் நம்மை விட ஒருவயது சின்னவன் தான் ஆனாலும் எனக்கு அவரோட ஸ்டைல் அழகு எல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்க அவர் என்னிடம் கைப்பேசியில் காதலை சொன்ன அடுத்த கணமே நானும் சரின்னு சொல்லிட்டேன்.”
“ஓ…வெரி இன்ட்ரஸ்டிங்” என்று கன்னத்தில் கைவைத்தபடி அனுவும் ஆர்வமாக கேட்க மீண்டும் லதா தொடங்கினாள்.
“அவர் இப்போது மும்பைல இருக்காரு . அவருடைய அப்பா ஒரு பிரபல எழுத்தாளர் மும்பையில். நான் அவருடைய கதைகளை எல்லாம் படித்து ஒரு வாசகியா ரிவ்வியூ தரும்போது அதில் ராகுலின் கமெண்ட் இருக்க அப்போது தான் முதன்முதலில் தெரியும் அந்த எழுத்தாளரின் மகன் தான் ராகுல் என்று.
அப்புறம் கமெண்ட் ல துவங்கிய எங்களுடைய உரையாடல் ப்ரைவேட் சேட்டாக தொடர்ந்து அப்படியே எங்களுடைய காதல் மலர்ந்தது. நான் இதுவரை ராகுலை நேரில் பார்த்ததே இல்லை பார்க்கணும் என்று ஆசையா இருக்கு ஆனால் எங்கே எப்போது என்று தான் தெரியவில்லை என்று சலித்துகொள்ள .
“கவலையே வேண்டாம் நாங்க எல்லாம் இங்க இருக்கும் போதே அவரை இங்க வரவழைத்து பார்த்துவிடு” என்று விஜய் ஆலோசனை கூற,
“அதுவும் சரிதானே” என்று அனைவரும் ஆமோதிக்க.
“சரி கூப்பிடுறன்” என்று கூறிவிட்டு அவனுடைய எண்களுக்கு தொடர்பு கொண்டாள்.
“ராகுல் நான் ஏற்கனவே சொன்னேன்ல இங்கே காரைக்குடி ல ஒரு சின்ன ஊரில் என் ப்ரண்டு திவ்யா வீட்டில் இருக்கிறோம் என்று. நீங்க நாளைக்கு ப்ளைட் பிடித்து இங்க வரமுடியுமா? நான் இப்பதான் உங்களை முதன் முதல்ல பார்க்க போறேன் ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு” என்று கூற,
“ஹாஹா சரி வரேன் நானும் உன்னை இதுவரை பார்த்ததே இல்லை… நம்ம இரண்டு பேரும் புகைப்படங்களிலும் வீடியோ காலிலும் பார்த்தோமே தவிர நேரில் பாராக்கவில்லை இது தான் நம்முடைய முதல் சந்திப்பு” என்று அவனும் கூற,
“நீங்க நேரில் வாங்க மற்றவை பேசிக்கலாம்” என்று கைப்பேசியை வைத்துவிட்டு,
“ஐ ஜாலி என் ராகுல் வரேனு சொல்லிட்டாரு சரி சொல்லுங்கள் அவரை எங்க வைத்து பார்க்கலாம்.?” என்று லதா கேட்க
சிறிது நேரம் யோசித்த திவ்யா ….”ஆங் ஒரு ஐடியா அவரை நம்ம வீட்டுக்கே வரசொல்லிடு. நாளைக்கு எங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரையும் எங்கயாவது அனுப்பிடலாம். நம்ம அவரோட பேசபழக வீடு தான் சரி. அவரும் நம்ம வீட்டில் என்ஜாய் பன்ன மாதிரி இருக்கும்” என்று திவ்யா கூற.
“ஆமாம் ஆமாம் உங்கள் வீட்டில் நல்லா பேய் விளையாட்டு விளையாடலாம் என்று விஜய் நக்கலடிக்க அனைவரும் சிரித்துவிட்டனர்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அந்த அண்டாவில் இருந்த நீர் சூடு ஏறியப்படி ஆவிப்பறக்க இதை எதர்ச்சையாக கண்ட திவ்யா “என்ன இது ? அண்டாவில் இருக்கும் தண்ணீர் எப்படி சூடாகிட்டு இருக்கிறது?” என்று யோசித்தபடி நின்றாள்.
பேச்சை ஒருபக்கம் நிருத்தியபடி அந்த அண்டாவை நோக்கி நடக்க
“அய்யய்யோ மறந்தே போயிட்டன்” என்று தாயின் குரலை கேட்டு திரும்பியவள்.,
“என்ன மா?” என்று வினவ.
“திவ்யா ,அந்த அண்டாவுக்கு பக்கத்தில் இருக்கும் விரகுஅடுப்பை அணைக்கவே இல்லை அது பாட்டு நெருப்பு புகைந்து கொண்டு இருக்கிறது அதை கொஞ்சம் அணைத்துவிடு” என்று கூற பெருமூச்சு விட்ட திவ்யா,
“அட கடவுளே இது தான் அண்டாவில் இருக்கும் தண்ணீர் சூடேர காரணமா?” என்று தலையில் கைவைத்தபடி நமட்டு சிரிப்பு சிரித்தாள்