Antha Araikul – 7
7
திவ்யா தன் சித்தப்பா இறந்த செய்தியை பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு தன் சோகத்தை வெளிக்காட்டியபடி கண்ணீருடன் கலங்கி நிற்க..விஜய் அவளருகேவந்து,
“ஆமாம் உன் சித்தப்பா நல்லா தானே டி இருந்தாரு திடீரென இப்படி இறந்ததுக்கு காரணம் என்ன?” என்று வினவினான்.
“தெரியலையே டா. ஆனால் இந்த திடீர் மரணம் ல சந்தேகம் இருக்குனு எங்கள் வீட்டில் பேசிக்கிறாங்க அதான். இதைப்பற்றி போலிஸ் கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கு.”
“அப்போ போலிஸ் விசாரணை பன்ற வரைக்கும் என்ன உண்மை னு தெரியாது .அப்படிதானே?
“ஆமாம்”
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராகுலின் முகம் வியர்த்தது. “அட வியர்வை துடைச்சிக்கங்க தம்பி” என்று துரைராஜ் தன் தோள் மீதுள்ள துண்டினை எடுத்து அவனிடம் நீட்ட அதை வாங்கி துடைக்கும் போது துண்டினை தவறவிட்டான்.
அதை எடுத்து நீட்டிய விஜய், “ஒரு துண்டை ஒழுங்காக பிடிக்கிறிங்களா நீங்க” என்று ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திவ்யாவின் அருகில் சென்று நின்றுகொண்டு இருக்க, ராகுலின் பார்வை திவ்யா மீதே இருந்தது.
“ராகுல் நீ ஆரம்பத்திலிருந்து ஒரு மாதிரியாக இருக்கிறாய் உன்னை மாற்றிக்கொள்” என்று அவனுடைய மனசாட்சி சொல்ல..
“அட ஆமாம் பன்னாத தப்புக்கு ஏன் நான் பயந்து போகனும்.” என்றபடி சற்று சுதாரித்து இயல்பான நிலைக்கு வந்தான். அப்போது வரும் வழியில் சிவா அவளிடம் சொன்னதை நினைத்து லதாவிற்கு ராகுலுடன் நெருங்கவே பயமாக இருந்தது.
“ஏய் லதா.. என்ன ஒரு மாதரி.ஆயிட்ட என்கிட்ட விலகி போகுற மாதிரி தெரியுதே?” என்று ராகுல் வினவ,
“அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளிக்க. சிவா எல்லாவற்றையும் சொல்லிருப்பானோ என்று ராகுல் யோசிக்க,
“ஐயோ இவனுக்கு சந்தேகம் வராத மாதிரி நாம நடக்கனுமே” என்று யோசித்து விட்டு லதா அவனிடம் இயல்பாக இருக்க முயன்றாள்.
இதற்கிடையில் சிவாவிற்கு மனைவியின் ஞாபகம் வந்துவிடவே அவளது அலைப்பேசிக்கு அழைத்தான்,
“ஏய் அனு என்னாச்சு ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பன்னியா என்ன சொன்னாங்க” என்று ஆவலுடன் கேட்க,
“எல்லாம் கன்பார்ம் தாங்க நீங்க அப்பா ஆகிட்டிங்க” என்ற தகவலை கூறுகிறோமே என்ற கவலையை தவிர அவளது பேச்சில் ஒரு அளவில்லா ஆனந்தம் தெரிந்ததும்.. அவன் உள்ளம் பூரிக்க சந்தோஷத்தில் துள்ளி குதித்தான்.
“மச்சி இது எழவு வீடு.டா நீ என்ன ஏதோ கல்யாணம் வீட்டுக்கு வந்த மாதிரி ஏதோ சிரிச்சிட்டு வெக்கப்பட்டு நிக்கிற”?என்று ஜெய் கேட்க “மச்சி எல்லாம் நல்ல விஷயம் தான் டா அனு முழுகாம இருக்கா டா”
“ஓ…..குட் மச்சி நல்லா வேலைபாத்துருக்க போல. எப்படியோ நம்ப செட்டுல சீக்கிரம் கல்யாணம் பன்னி லைப்ல செட்டில் ஆனது நீ தான்.” என்று வாழ்த்து கூற..
…..
திவ்யாவின் ஞாபகம் தன் வாழ்க்கை மீது சென்றது.
“ச்ச நமக்கும் கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகுது இன்னும் நல்லது எதுவும் நடக்கலையே” என்று வருந்த…இதற்கிடையில் போலிஸ் இவர்கள் வீட்டை வந்தடைந்தனர்.
அங்கு என்ன சூழ்நிலை நிலவப்போகிறது என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. இறந்த ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. சுற்றி இருந்த சொந்கள் எல்லாம் வேடிக்கை பார்த்தப்படி இருந்தன.ஆனந்தனின் மனைவி தேவி, கணவன் இறந்த துயரம் ஒருபக்கம், அவரது பிரேதபரிசோதனை ஒருபக்கம் நினைத்து வேதனைப்பட அவளுடைய ஓர்ப்புடியார் கலா அவளருகே அமர்ந்து,
“தேவி நீ எதுவும் நினைச்சு கவலைபடாத நாங்க எல்லாரும் இருக்கோம்” என்று ஆறுதல் உரைக்க,
“அக்கா… பார்த்தீங்களா என் வீட்டுக்காருக்கு கொல்லி போட கூட ஒரு புள்ள இல்லாம போயிடுச்சு. இந்த ஆண்டவன் என்னை இப்படி தண்டிக்கனுமா?” என்று கதறி அழும் காட்சி அனைவரையும் உறைய வைத்தது.
இந்த காட்சியை பார்த்த ராகுலிற்கு மனது ஏதோ செய்தது. அவனுடைய மனதிலிருக்கும் சஞ்சலங்கள் எல்லாம் கரைய ஆரம்பித்ததோ என்னவோ தேவியின் அருகில் சென்று,
“ஆண்டி ஒரு வகையில் நானும் உங்கள் மகன் மாதிரி தான் நீங்க எதுக்கும் கவலைபடாதிங்க இனிமே என்னை உங்கள் மகனா நினைச்சிக்கங்க சரியா?”
“தம்பி…நீ சொல்ற இந்த வார்த்தை வெறும் ஆறுதல் மட்டுமல்ல எனக்கு ஏதோ கடவுளே நேரில் வந்து இது தான் உன் பிள்ளை என்று சொல்லிவிட்டு போன மாதிரி தெரியுது”. என்று ராகுலை கைபிடித்து அழத் துவங்கினாள். இந்த காட்சியை பார்க்க மனசு ஏதோ போல் ஆனது சுற்றி இருந்த அனைவருக்கும்.
“ஆமா இவன் நல்லவனா கெட்டவனா?”,என்று யோசித்த லதா. சிவாவிடம் கேட்க”ஆமா சிவா அவனை பற்றி நீ சொன்னது உண்மையா இல்லை என்றால் எதாவது நாடகமாடுறியா..ஒழுங்கா சொல்லிடு என்று வினவ அவள் தலை மீது கைவைத்தபடி “சத்தியமா அவன் நல்லவன் இல்லை டி. இப்ப திடிரென என்ன ஆச்சு அவனுக்கு தெரியல லதா”
“ப்ச்ச் போடா எனக்கு எதை நம்புறது நம்பாம இருக்கிறதுனு தெரியல”
“நீ எதையும் நம்ப வேண்டாம். நீயே புரிஞ்சிப்ப” என்று கூறிவிட்டு அவன் இடத்தை விட்டு நகர. அங்கு திவ்யா அழுதுக்கொண்டு இருப்பதை கண்டவன் “திவி..ஏன் இப்படி அழுதுட்டு இருக்க போன சித்தப்பா வரபோவதும் இல்லை அப்புறம் ஏன்?”
“என்னோட அழுகைக்கு காரணம் உனக்கு புரியாது சிவா”
“சொல்லு புரிஞ்சிக்க முயற்சி பன்றேன்”
“தேவி சித்தி அங்க புருஷனை பரிகொடுத்துட்டு. உக்கார்ந்திருக்கிறத பார்க்க ரொம்ப பாவமா இருக்கு. இவ்வளவு காலம் குழந்தை இல்லையே அப்படிங்கிற போராட்டம் இனி தனி ஆளா வாழனும் அப்படிங்கிற கட்டாயம் இதற்கிடையில் பாவம் அவங்க எதை நினைச்சு தான் வருந்துவாங்க.
இதோ இப்ப என்னோட வாழ்க்கையும் பார்த்தியா இம்புட்டு நாள் குழந்தை உண்டாகாமல் மாமியார் வீட்டில் ஏச்சுக்கள் வாங்கி எவ்வளவு கஷ்டபடுறன்…நாளைக்கு என் நிலமையும் அநாதை தானா?” என்று தன் துயரத்தை இதைவிட எப்படி வார்த்தைகளை போட்டு சொல்வது என்று தெரியாமல் அவனிடம் குமுற…
“அனு கன்சிவ் ஆகிட்டு அப்படிங்கிற விஷயம் உனக்கு கொஞ்சம் ஹர்ட் ஆகிறுச்சு தானே. ஐயம் சாரி திவ்யா”என்று அவள் தோளை பற்ற அவன் கையை பிடித்தவள்,
“அனு கன்சிவ் ஆனதுல எனக்கு சந்தோஷம் தான் சிவா. ஏதோ எனக்கு இன்னும் ஆகலையே அப்படிங்கிற வருத்தம் மட்டும் தான் வேற ஒன்றுமில்லை”
“அப்படினா நான் சொல்றத கேப்பியா” என்று பின்னிருந்து ஏதோ ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்தாள் திவ்யா.
என்ன ஆச்சரியம் அங்கு அவளுடைய கணவன் நின்றிருக்க..”என்னங்க நீங்க எப்போ வந்திங்க?”
“இப்பதான் வந்தேன். உங்கள் வீடே துக் கத்தில் இருக்கும் போது நான் எப்படி வராமல் இருக்கமுடியும். இது என் மாமியார் வீடு இல்லையா திவ்யா?”
இதுவரை எந்த ஒரு நல்லது கெட்டது நிகழ்ச்சிகள் க்கு வராத தனது கணவன் இன்று ஆனந்தனின் இறப்புக்கு வந்திருப்பதை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கிய அவளை உற்று நோக்கியபடி, “திவ்யா உன் மனசுலையும் இவ்வளவு கஷ்டம் இருக்கா?”என்று வினவ
“ம்ம்ம் நான் பேசினது எல்லாம் கேட்டுட்டிங்க போல”
“ம்ம்ம்.. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டல”
“என்னது?”
“ஐலவ்யூ” கண்கலங்கியபடி நின்ற அவள் கண்களை துடைத்துக்கொண்டு நீங்க என்ன சொன்னாலும் செய்வேன் சொல்லுங்கள் என்ன செய்யனும்?” என்று வினவ
“இனி குழந்தை இல்லை னு நீ வருத்தப்பட கூடாது. உனக்கு பிரச்சினை இருக்கா இல்லை எனக்கு பிரச்சினை இருக்கா அப்படிங்கிறத தாண்டி நம்ப இரண்டு பேரும் ஹாப்பியா இருக்கனும்”.
“ம்ம்ம்”.
எல்லோருடைய உணர்வு வெளிபாடும் தெளிவாக தெரிய அடுத்து என்ன சூழ்நிலை. பிரேதபரிசோதனை யில் என்ன ரிப்போர்ட் வரும் இதையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.