Antha Araikul-9
திவ்யாவின் தலைபிரசவக்காலம் இனிதே நடந்துக்கொண்டிருக்க இதற்கிடையில் அனுவிற்கும் பிரசவநாள் நெருங்கியது. இருவரும் ஓரிரு மாதங்கள் வித்தியாசத்தில் தான் கர்பம் தரித்தனர்,இதிலும் இத்தனை ஒற்றுமையா என்றபடி நண்பர்களின் ஒற்றுமையை மற்றவர் பாராட்டினர்.
ஒன்பதாம் மாதம் இவளுடைய சீமந்தத்திற்கு அனு கையில் சிலதினங்களே ஆன பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு சந்தோஷமாக வந்தடைந்தாள். சீமந்தம் நல்லபடியா நடந்து முடிந்தது அனைவரும் சாப்பிட அமர்ந்தபோது தான்…திடிரென போலிஸ் ஜீப் வந்து நின்றது அனைவருக்கும் அங்கு என்ன நடக்கப்போகிறது என்ற ஆவல் தொற்றிக்கொள்ள எல்லோரும் போலிஸ் வரும் திசையை நோக்கி தங்களது பார்வையை செலுத்த போலிஸ் இன்ஸ்பெக்டர் அங்கு நுழைந்து “மிஸ்டர் துரைராஜ் யு.ஆர் அன்டர் அரஸ்ட்”என்றபடி அரஸ்ட்வாரண்ட் எடுத்து நீட்ட அனைவருக்கும் குழம்பிபோனது மனது.
“சார் எங்க அப்பாவை ஏன் அரஸ்ட் பன்றீங்க”?என்று ஆதங்கபட்டாள் திவ்யா. “மா உங்கள் சித்தப்பா சாவிற்கு யார் காரணம் னு கேட்டுட்டு இருந்தீங்களே அதற்கு காரணமே இதோ இங்க நிக்கிறாரே உங்கள் அப்பா மிஸ்டர் துரைராஜ் தான். எல்லாம் ஆதாரத்தோடு தான் இவரை அரஸ்ட் பன்ன வந்துருக்கேன் “யோவ் 403 அவரு கையில் வெலங்கு மாட்டி கூட்டிட்டு வா” என்று உத்தரவிட்டார். எல்லோரும் அதிர்ந்து போனர்.
அந்த இடத்தில் திவ்யாவின் நட்பு என்ற பெயரில் சிவாவும் அனுவும் மட்டுமே இருந்த நிலையில் அவர்களால் என்ன செய்வதென்று தெரியாது திவ்யாவை மனம் தேற்றுவதிலே கவனம் செலுத்தினர்.
“திவ்யா ஒன்னும் ஆகாது கவலைபடாத அப்பா எந்த தப்பும் பன்னிருக்க மாட்டாரு”என்று அனு ஒருபக்கம் ஆறுதல் சொன்னாலும். திவ்யாவால் மனது தேற்றிக்கவே முடியவில்லை.
ஆனால் இந்த கொலை துரைராஜ் தான் பன்னியிருக்கின்றார் என்பதற்கான ஆதாரம் இருக்கவே அவர் கொலை செய்ததற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தபோது தான் பல திடிக்கிடும் தகவல்கள் கிடைத்தன….
சிவாவிற்கு ஒரு சந்தேகம் எழுந்தது ஒருவேளை ராகுல் கொலை செய்துவிட்டு அந்த பழியை துரைராஜ் மீது போட்டுவிட்டானோ..இதற்கும் ராகுலிற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ என்ற கேள்வி அவன் மனதில் இருக்கவே…..ஊரிற்கு சென்று முதல்வேலையாக ராகுலை சந்தித்தான்.
“ஏய் ராகுல்…நில்லு மரியாதையா உண்மையை சொல்லு..என்ன பன்ன? ஆனந்தன் அங்கிளை நீ தானே கொலை பன்ன”?
“சிவா..நீ என்ன லூசா எனக்கு என்ன காரணம் இருக்கப்போது சொல்லு ஆனந்தன் அங்கிளை கொலை பன்னி அந்த பழியை துரைராஜ் அங்கிள் மேல போடுறதுக்கு?”
“அப்போ நீ எதுவும் பன்னல அப்படி தானே”
“இங்கப்பாரு லதாவை காதலிச்ச மாதிரி நடிச்சது உண்மை தான். நான் வேற ஒரு காரணமா திவ்யாவை…… என்று எதையோ பேச ஆரம்பிக்கும் போது தடுத்தது வார்த்தைகள்…உடனே சுதாரித்தவன்..இங்க பாருங்க மிஸ்டர் சிவா இப்ப நடந்த கொலைக்கு நான் காரணம் இல்லை அதே போல பழியும் துரைராஜ் மேல போடலை”
இதைக்கேட்ட சிவா அவன் ஷர்ட் காலரை பிடித்து “டேய் அப்படினா திவ்யா? என்னடா செய்ய நினைச்ச எங்க ப்ரண்டு திவ்யாவை அப்படினா ஊரில் அவளை கிணற்றில் தள்ளிவிட்டு அப்றம் அந்த பாத்ரூம் ல அவளை கொல்ல நினைச்சது நீ தானே”
“ஆமா….ஆமா….ஆமா… நான் தான் போதுமா”என்று ஆக்ரோஷத்தில் கத்தினான் அவன் குரலில் ஆக்ரோஷத்துடன் கலந்த வலியும் இருக்கத்தான் செய்தது. அவன் என்ன சொல்கிறான் என்பதை காதுகொடுத்து கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
“மிஸ்டர் சிவா….நான் மும்பை ல இருக்கிறது உங்களுக்கு தெரியும் எங்க அப்பா ஒரு எழுத்தாளர் னு தெரியும் இதை தவிர வேற எதாவது தெரியுமா?”
“எ…..என்ன சொல்ற”
“ஆமா..முதல்ல அவங்க என் சொந்த அப்பா அம்மாவே இல்லை என்னை எடுத்து வளர்த்தாங்க. நான் அவங்களுக்கு ஒரு வளர்ப்பு மகன்..என்னை பெத்தவங்க யார் அப்படிங்கிற தேடல் வரும்போது தான் என் அப்பா அம்மா…என்று பேச்சை நிப்பாட்டினான்…
“ராகுல்…..ப்ளீஸ் சொல்லு”என்று பதற்றத்துடன் சிவா கேட்க…
“என் அப்பா அம்மா வேற யாருமில்லை ரொம்ப வருஷம் முன்னாடி இறந்து போன தம்பி தம்பி மனைவி னு சொல்லிட்டு இருக்கிற அந்த துரைராஜ் ஓட தம்பி மகன் தான் நான்.”எங்கள் அப்பா பேரு மாறன்…அம்மா காலியம்மா…அவங்க எப்படி இறந்தாங்க தெரியுமா??”என்று சொல்லியபடி கண்ணீர் விட்ட ராகுல் “அவங்க அவங்களை அந்த துரைராஜ் தான் கொன்னுருக்கான்”அதுமட்டும் இல்லை என்னை ஒன்றரை வயது குழந்தையா இருந்த என்னை அநாதை ஆஷ்ரமம் ல விட்டதும் அந்த ஆளுதான்.
“எ….என்ன சொல்ற”
“அட ஆமாம்… ஆனந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் பன்னதும் அந்த ராஸ்கல் தான்”
“இ….இதெல்லாம் உனக்கு எப்படி”என்று வினவியபோது “அவன் கையில் கிடைத்த அந்த டைரியை பற்றி விவரித்தான். தன்னுடைய தாய்மாமன் எல்லாவற்றையும் ஒரு டைரியில் எழுதிவைத்திருந்தும் அதை வளர்ந்தவுடன் அவன் கையில் ஒப்படைக்க கூறியும் ஆஷ்ரமத்தில் இருப்பவரிடம் சொல்லியிருக்கவே அந்த டைரி அவனுக்கு கிடைத்தது என்பதை கூறினான்”
“சரி…உங்கள் தாய்மாமனுக்கு இதெல்லாம் எப்படி தெரிஞ்சிருக்கும்”என்று சிவாவின் கேள்விக்கு கண்ணீரையே பதிலாக தந்தான். இதுவரை அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்த சிவா அவன் தோள்களை பற்றியபடி “ராகுல் ப்ளீஸ்…ரிலாக்ஸ்”என்று கூறவே அவனுக்கு அந்த ஆறுதல் தெம்பூட்டியது. அப்படி என்றால் தற்போது நடந்த ஆனந்தன் கொலைக்கும் துரைராஜ் தான் காரணம் என்பதை புரிந்து கொண்ட சிவா….
“ராகுல் இதற்கெல்லாம் என்ன காரணம் இருக்கமுடியும்?” என்று வினவ.
“வேற என்ன இருக்கிற மொத்த சொத்தையும் அவனும் அவன் வாரிசு திவ்யா மட்டுமே அனுபவிக்கனும் அப்படிங்கிற வெறிதான்”என்று சொல்லி முடிக்க…
“ராகுல் உன் கோபம் நியாயமானது தான் ஆனால் அதுக்காக அப்பாவி திவ்யாவை கொல்றது தீர்வாகாது. ஒருவகையில் திவ்யா உன்னோட அக்கா ஸ்தானம்”
“அதான் ..அந்த ஒரே காரணம் தான் இன்னுமும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்”
“ஆனால் ராகுல் இதுல நீ லதாவை பகுடுகாயா பயன்படுத்துனது தான் ரொம்ப தப்பு பாவம் அவ உன்னை எவ்வளவு நேசிச்சா தெரியுமா”?
“நான் லதா கிட்ட கண்டிப்பாக மன்னிப்பு கேட்கனும்..நான் அவங்களுக்கு பன்ன த்ரோகத்துக்கு தான் மன்னிப்பே கிடையாது”
“உங்களோட மனைவினு சொல்ற அந்த பொண்ணு…என்று அந்த பெண்ணை பற்றி விசாரிக்க..”அவள் தற்செயலாக அறிமுகம் ஆகி மூன்று வருடங்கள் முன்பு திருமணம் செய்து கொண்டனர் என்பது சிவாவிற்கு தெரியவந்தது. ராகுலிற்கு உதவியாக தான் அந்த பெண் செயல்பட்டாள் என்பதை அவன் தெரிவித்தான்.