மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Thooramillai vidiyalThooramillai Vidiyal - Episode 2Post ReplyPost Reply: Thooramillai Vidiyal - Episode 2

Quote from monisha on October 24, 2024, 10:23 PM

2

பதினொன்றாம் வகுப்புத் தேர்வுத் தாள் கட்டினைத் திருத்த கையில் எடுத்தான் ஜீவானந்தம். வேதியியல் ஆசிரியர். எல்லோரும் அவனை ஜீவா என்று அழைப்பார்கள்.

எளிமையான தோற்றம். மெல்லிய தாடி மீசை. சற்றே வெளுத்திருந்த சட்டை. கைகளை மடித்து விட்டிருந்தான். கரத்தில் கொஞ்சமா பழைய ரக கடிகாரம்.

கச்சிதமான உடல் வாகு என்றாலும் அதற்காக அவன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இதெல்லாம் தாண்டி அவனின் அடர்ந்த கேசமும் நீண்டிருந்த கூரிய மூக்கும் அவன் முகத்தைக் கொஞ்சம் கவர்ச்சியாகக் கூட்டியது.

மாணவர்களுக்கு பிடித்தமான மற்றும் விருப்பமான ஆசரியர் ஜீவா. ஆனால் அவன் திருத்திய முதல் தாளே அமோகமாக இருந்தது. பத்து மதிப்பெண்.

‘விளங்கிடும்’ கடுப்புடன் முகத்தைச் சுருக்கியவன் அடுத்தடுத்த தாள்களைத் திருத்த, அது பன்னிரண்டு எட்டு என்று போய்க் கொண்டிருந்தது.

‘டேய் என்னங்கடா... ஒரு மார்க்கு க்விஸினை கூட ஒழுங்கா எழுதத் தொலைய மாட்டீங்களா?’ என்று முனங்கிக் கொண்டே ஜீவா அந்த மொத்தத் தாள்களையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டான்.

பின்னிருந்து மாணவிகளின் தாள்களிலிருந்து மீண்டும் திருத்தத் துவங்கினான்.

அவ்வளவு மோசம் இல்லை. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாணவிகளும் மதிப்பெண்கள் வாங்கவில்லை என்று தோன்றியது.

குனிந்து கொண்டே தாள்களைத் திருத்தியதில் கழுத்துப்புறத்தில் அழுத்தியது. கொஞ்சம் நிமிர்ந்து கழுத்தை சுற்றியவன் ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டு கைகளை நெட்டி பின்னே சாயப் போக, நாற்காலி ஆட்டம் கண்டது.

‘யம்மா’ பதறியவன் பட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான். அந்தப் பழைய நாற்காலி ஆபத்தான நிலையில் இருக்கிறது என்று தெரிந்தும் அவ்வப்போது மறந்து அதன் மீது சாய்ந்து விடுகிறான்.

என்றாவது ஒரு நாள் இந்த நாற்காலியிலிருந்து விழுந்து தான் மண்டையை உடைத்துக் கொள்ளப் போகிறோம். அப்படி யோசித்த மறுகணமேஅவன் மனசாட்சி,

‘இன்னும் கல்யாணம் கூட ஆகலயேடா நமக்கு’ என்று புலம்பிக் கொண்ட போது மனதில் தென்றலாக வீசினாள் ஹிந்தி ஆசிரியர் அக்ஷரா.

‘ஹ்ம்ம்’ பெருமூச்சுடன் தனக்கு எல்லாம் அந்த வாய்ப்பு கிட்டாது என்று எண்ணிக் கொண்டே அக்ஷுவின் அழகான முகத்தையும் பளிச்சென்ற நிறத்தையும் தள்ளி வைத்து விட்டு மீண்டும் தேர்வுத் தாளின் மீது கவனத்தைச் செலுத்தினான்.

மடமடவென்று முக்கால் வாசி தாள்களைத் திருத்திவிட்டவனுக்கு ஃபெயிலின் எண்ணிக்கை இம்முறை அதிகமாக இருக்கும் என்று தோன்ற மேஜையில் கையை ஊன்றி தலையைப் பிடித்துக் கொண்டான்.

அவன் செயலை கவனித்த தமிழ் வாத்தியார், “என்ன ஜீவா... என்னாச்சு தலையில் கை வைச்சுட்டா” என்று விசாரித்தார்.

“இருபது பேருக்கு மேல ஃபெயிலு... இதுவரைக்கும் இவ்வளவு மோசமா எவனும் என் கிளாஸ்ல மார்க் எடுத்தது இல்ல

இந்த பேட்ச் ரொம்ப மோசமா இருக்கானுங்க ஐயா... காட்டு கத்தலா கத்தி கிளாஸ்ல பாடம் எடுத்தது எல்லாம் வேஸ்ட்?” என்று அவன் ஆதங்கத்தைக் கொட்ட,

“இந்த வயசுல பசங்க அப்படித்தான் இருப்பாங்க... நம்ம ஒன்னு நடத்திட்டு இருந்தா அவனுங்க அங்க தனி உலகத்துல மிதந்திட்டு இருப்பானுங்க... இதுக்கு எல்லாம் ஒன்னும் பண்ண முடியாத” என்று அவர் தன் கருத்தைக் கூறவும் அவன் முகம் சோர்வாக மாறியது.

“உங்களுக்கு என்ன... நீங்க தமிழ் எடுக்குறீங்க... உங்க கிளாஸ்ல பசங்க கவனிச்சாலும் கவனிக்காட்டியும் ஏதாவது கதையை விட்டுடுவானுங்க... நீங்களும் மார்க் போட்டுவிடுவீங்க...

ஆனா என் சப்ஜெக்ட் அப்படியா... கெமிக்கல் பார்முலா... சம்ஸ்... டீடையில்னு கீ வார்ட் கரெக்டா இருந்தாதான் மார்கே போட முடியும்” என்று பேசிக் கொண்டே அவன் திருத்திய தாள்களை எல்லாம் அடுக்கினான்.

“எது கதை எழுதுறானுங்களா... அட நீங்க வேற... தப்பில் லாம அவனுங்க ஒரே ஒரு வரியை எழுதுட்டா பெரிய விஷயம்”என்றவர் மேலும்,

“வேணா நீங்க ஒரு நாள் தமிழ் பேப்பரை திருத்தி பாருங்க... அப்போ தெரியும் என் கஷ்டம் என்னனு” என்றதும் ஜீவா தலையை உலுக்கி,

“ஐயய்யோ அந்த விஷ பரீட்சை எல்லாம் வேண்டாம்... இதை திருத்துறதுக்கே நொந்து போயிட்டேன்” என்று கூறும் போது அவன் செல்பேசி பாக்கெட்டில் சிணுங்கியது.

வகுப்பறையில் இருந்ததால் வைப்ரேட்டிங் நிலையில் போட்டிருந்தான். எடுத்து யாரென்று பார்த்தவன், “என்ன அம்மா... இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்கீங்க” என்று கேட்க,

“உங்க பாட்டிக்கு ரொம்ப முடியலடா... மூச்சை விட ரொம்ப திணறாங்க” என்று பதற்றத்துடன் கூற அவன் முகம் கவலையாக மாறுவதற்குப் பதிலாகக் கடுப்பாக மாறியது.

அவன் நெற்றியை தேய்த்து கொண்டே, “காலைல நல்லாதானேமா இருந்தாங்க” என்று கேட்க,

“தெரியல ஜீவா... திடீர்னுதான் இப்படி... வீட்டுக்கு வர்றியா?” என்று இழுத்தார்.

“ஒன்னு இருக்காது பயப்படாத... சரியாகிடுவாங்க”

“எனக்கு அப்படி தோணல... நீ கிளம்பி வா” என்றதும் அவன் முகம் இறுகியது.

“ம்மா அதான் சொல்றேன் இல்ல... ஒன்னு இருக்காதுனு”

“இல்லடா”

“ம்மா எனக்கு டுவ்லத் கிளாஸ் இருக்குமா?” என்றவன் அழுத்திச் சொல்ல,

“உன் பாட்டியை விட கிளாஸ் முக்கியமாடா?” என்று சொல்லியபடி அவர் அழ ஆரம்பித்துவிட, அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

“உண்மையில் அவங்களுக்கு ரொம்ப முடியலடா ஜீவா”அவர் மீண்டும் சொல்ல,

“சரிமா... சரி... அழாத நான் வரேன்” என்று அழைப்பைத் துண்டித்தவன் அப்படியே கைகளால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

“என்னாச்சு ஜீவா?” என்று தமிழ் வாத்தியார் கேட்கப் பெருமூச்சுடன் அம்மா சொன்னதை எல்லாம் அவன் கூற,

“நீங்க முதல கிளம்புங்க” என்றார்.

“இந்த மாதிரி நடக்கிறது இது அஞ்சாவது தடவ... இப்படிதான் ஒவ்வொரு தடவையும் என்னவோ ஏதோனு பதறி அடிச்சுட்டு ஓடுனா அங்க ஒன்னுமே இருக்காது”என்றவன் சலித்துக் கொண்டான்.

“புரியுது... இருந்தாலும் அம்மா இவ்வளவு பதற்றப்பட்டுப் பேசும் போது நீங்க போறதுதான் நல்லது” என்றார்.

ஜீவா யோசித்தபடி அமர்ந்திருக்க,

“வீட்டுல வயசானவங்க இருந்தாலே இப்படிதான்... போங்க ஜீவா... போய் பார்த்துட்டு வாங்க... அப்புறம் புலி வருது புலி வருது கதையாகிட போகுது” என்றவர் சொல்ல அவன் தேர்வுத் தாள்கள் மற்றும் புத்தகங்களை எல்லாம் தன் தோள் பையில் நுழைத்தான். பின் தயக்கத்துடன் பள்ளி முதல்வர் அறையில் சென்று நின்றான்.

அவன் அனுமதி கேட்டு உள்ளே நுழைய,

“என்ன ஜீவா சொல்லுங்க” என்றார்.

அவன் விவரத்தைக் கூறவும் அவர் முகம் மாறியது.

“பாட்டி ரொம்ப உடம்பு முடியாம இருக்கிறதாலதான்... அதுவும் இல்லாம வீட்டுல அம்மாவுக்கு யாரும் சப்போர்ட்டுக்கு இல்ல... அவங்களும் கொஞ்சம் பிபி பேஷன்ட்” என்று தன் நிலையை விளக்க,

“எனக்கு உங்க நிலைமை புரியுது... ஆனா இப்படியே போயிட்டு இருந்தா போஷன்ஸ் எல்லாம் எப்படி முடிப்பீங்க”என்று கேட்டவர் பார்வையில் கண்டிப்பு இருந்தது.

“இல்ல சார்... அதெல்லாம் நான் டைமுக்கு முடிச்சுருவேன்”என்று அவன் உறுதி கூற அவர் பார்வையில் நம்பிக்கை இல்லை. சில நொடிகள் தீவிர யோசனைக்கு பின்,

“போயிட்டு வாங்க” என்று வேண்டா வெறுப்புடன் அனுமதி வழங்கினார். உடனடியாகப் புறப்பட்டவன் அம்மாவிற்கு அழைத்து, “பயப்படாதம்மா... கிளம்பிட்டேன் வந்துடுறேன்... ஆனா இந்த தடவ எதுவும் சீரியஸா இல்லாம இருந்துது” என்று எரிச்சலுடன் மொழிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அழைப்பு துண்டித்த பிறகுதான் தான் என்ன பேசினோம் என்று அவனுக்கே உரைத்தது. பாட்டிக்கு ஏதாவது ஆக வேண்டுமென்று தான் விரும்புகிறோமா?

ஒரு வகையில் வீட்டு சூழ்நிலை அவனை அந்த மனநிலைக்குத் தள்ளிவிட்டது என்பதுதான் உண்மை. அதுவும் அவர் படுத்த படுக்கையாகி இரண்டு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.

அம்மாதான் அவரை முழுவதுமாக கவனித்துக் கொள்கிறார். ஒரு பக்கம் அம்மாவை நினைத்தாலும் அவனுக்குப் பாவமாக இருந்தது. அவரிடமும் தான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது.

ஆனால் அவனும் என்ன செய்வான். ஒவ்வொரு முறை வேலை எல்லாம் விட்டு விட்டு அவன் ஓடிச் சென்று அவரை மருத்துவமனையில் சேர்ப்பதும் மருத்துவர்களும் ஏதோ சிகிச்சை செய்கிறேன் என்ற பெயரில் பில்லை தீட்டி விடுவதும் வழக்கமாக நடக்கிற விஷயமாகிவிட்டது.

இதில் அவரை தூக்கிக் கொண்டு செல்வதும் திருப்பிக் கொண்டு வந்து பழைய மாதிரி படுக்கையில் கிடத்துவதும் தனித் தலைவலிகள்.

இதை எல்லாம் யோசித்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாகப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தான். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. வியர்வை பாட்டுக்கு ஆறாக ஓடிக் கொண்டிருக்க ஒரு பேருந்து கூட கண்ணில் தென்படவில்லை.

காத்திருந்து காத்திருந்து இறுதியாக ஒரே ஒரு பேருந்து வந்தது. அதில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்தப் பேருந்தையும் விட்டு விட்டால் இன்னும் தாமதமாகிவிடும். இன்னொரு பேருந்து வரும் என்று நம்ப முடியாது.

ஆனாலும் இதில் எப்படி ஏறுவது என்று அவன் விழித்துக் கொண்டு நிற்கையில் ஓர் இளம் பெண் சாமர்த்தியமாக அந்தப் பேருந்தில் நின்ற கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஏறினாள். அதுதான் சமயம் என்று அவளைப் பின்தொடர்ந்து அவனும் ஏறிவிட்டான்.

ஆனால் ஒரு நிலைக்கு மேல் ஏற முடியாமல் அந்தக் கூட்டத்திற்குள்ளே சிக்கி படிக்கட்டில் மாட்டிக் கொண்டான். பேருந்து கிளம்பிவிட்டது.

“படிக்கட்டுல நிற்காத... மேல வா மேல வா” என்று நடத்துநர் வேறு கத்திக் கொண்டிருந்தார்.

‘எங்கடா தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்’ என்று வடிவேல் பாணியில் அவன் மனம் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டிருக்க அந்த ஒல்லியான பெண்ணோ மேலே ஏறி நின்றிருந்தாள்.

அவள் பிடித்திருந்த கம்பிக்கும் அவளுக்குமே வித்தியாசம் தெரியவில்லை. அவள் உடலுக்கு ஏற்ற சாகசம்தான் என்று எண்ணியவன் தன்னுடைய திறமைக்கு அந்த இரண்டாவது படிக்கட்டில் இடம் கிடைத்தே பெரிய விஷயம் என்று நினைத்து அங்கேயே ஓரத்தில் ஒதுங்கி நின்றான்.

அப்போதைக்கு அவனுக்கு வேறு வழியும் இல்லை. அப்படியே நின்று கொண்டு பயணச்சீட்டுக்குக் காசை எடுத்து நீட்ட, அந்த ஒல்லியான பெண்தான் வாங்கி நடத்துநரிடம் கொடுத்தாள்.

அவர் கொடுத்த பயணச்சீட்டையும் சில்லறைகளையும் அவள் கை மாற்றி கொடுக்கும் போது அது தவறி கீழே விழுந்துவிட்டது.

‘நமக்குத்தான் இப்படி எல்லாம் நடக்கும் போல’ ஜீவாவின் மனசாட்சியின் புலம்பலை தாண்டி,

“அய்யய்யோ சாரி சாரி” என்று அப்பெண் மிதமான குரலில் பேசினாள். அதோடு குனிந்து அதனை எடுத்து கொடுக்கவும் முயன்றாள். ஆனால் அந்தக் கூட்டத்தில் அவளால் குனியவே முடியவில்லை.

அவனாலும் ஏறி வர இயலவில்லை. “டிக்கெட் கீழே விழுந்திருச்சு கொஞ்சம் பாருங்களேன்” என்று மற்ற பயணிகளிடம் சொல்ல அவர்களும் கடமைக்கு என்று கீழே பார்த்தார்கள். அவ்வளவுதான்.

அதற்குள் நடத்துநர் அந்தப் பக்கமாக வர, அவரிடம் நடந்ததை அவன் தெரிவிக்க, “எது டிக்கெட் மிஸ் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டு ஏதோ பகையாளியைப் பார்ப்பது போல முறைத்தார்.

சரி போய் தொலைக்கிறது அவன் மீண்டும் காசை எடுத்து மற்றொன்றை வாங்க எத்தனிப்பதற்குள் அந்த பெண் அவனுக்காகப் பணத்தைக் கொடுத்து பயணச்சீட்டை வாங்கினாள்.

“இல்ல இல்ல நான் கொடுக்கிறேன்”

“பரவாயில்ல... என் மிஸ்டேக்தான்” என்று சொன்னவள் அந்தப் பயணச்சீட்டை அவனிடம் தந்தாள். அவன் காசை கொடுத்த போது பிடிவாதமாக வாங்க மறுத்துவிட்டாள்.

மெது மெதுவாக அந்தப் பேருந்தில் கூட்டம் குறைந்தது. அவனுடைய பயணச்சீட்டுக் கீழே மிதிப்பட்டுக் கிடந்தது. இனி அதற்குத் தேவை இருக்காது. பின் இருக்கை காலியாகவும் அதில் சென்று அமர்ந்தான்.

வியர்வையில் நனைந்திருந்த அவன் சட்டை ஜன்னல் பக்கத்திலிருந்து வந்த காற்றில் பட்டு குளுமையாக உணரச் செய்தது.

வீட்டிலிருந்து ஏதாவது செல்பேசி அழைப்பு வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் இல்லை.

அவன் இறங்க வேண்டிய இடம் வந்ததைக் கவனித்து எழுந்து நிற்க, அந்த ஒல்லியான பெண்ணும் எழுந்து நின்றாள். அவன் இறங்கிய இடத்தில் அவளும் இறங்கினாள்.

அவன் மீண்டும் பணத்தை எடுத்து தனது, “வாங்கிக்கோங்க” என்று நீட்ட,

“இட்ஸ் ஓகே” என்றவள் செல்பேசியைத் திறந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ வழியைத் தேடுகிறாள் என்று புரிந்தது.

“என்ன ஏதாவது அட்ரஸ் தேடுறீங்களா” என்று அவனே வலியக் கேட்க, “இல்ல... மேப்ல ரூட் காட்டுது... ஆனா க்ராஸ் பண்ணி போகணுமா என்னனு குழப்பமா இருக்கு” என்றவள் சொல்ல,

“எங்க காட்டுங்க” என்றவன் அவள் செல்பேசியிலிருந்த இடத்தின் பெயரை கண்டான். அந்த நொடியே அவன் முகம் களையிழந்து போனது.

ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டவன் இடத்திற்கான வழியை அவளுக்கு காட்ட, “தேங்க் யூ” என்று விட்டு அடுத்த நொடியே வேக வேகமாக நடந்த அவன் கண்களை விட்டு மறைந்துவிட்டாள்.

ஏதோ அவசர வேலை போல என்று நினைத்துக் கொண்டவன் தன் வீட்டிற்குச் செல்லும் திருப்பத்தைப் பார்த்தான். மெதுவாக நடந்தான்.

வீட்டை நெருங்க நெருங்க மனதின் சோர்வு அதிகமானது. சில மாதங்களாகவே இப்படிதான் அவன் உணர்கிறான். தன் சொந்த வீடே அவனுக்கு அதிக மனவுளைச்சலைத் தருவதை போல. காற்று கூட புக முடியாத ஓர் இரும்பு பெட்டகத்திற்குள் மாட்டியது போல.

மூச்சு முட்டியது. புழுங்கியது. எங்கேயாவது ஓடி விட வேண்டும் போலிருந்தது. ஆனால் எங்கே ஓடுவது?

வீட்டை நோக்கி நடந்தான் ஜீவானந்தம். அவன் முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளிலும் அவன் வாழ்க்கை, கனவு, சந்தோஷம் எல்லாம் பின்னே நகர்ந்தன.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா