You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

அணிலாடும் முன்றில் - நா முத்துகுமார்

Quote

பாடலாசிரியர்களின் பெயர் அறியா பருவத்தில் நான் கேட்ட சில பாடல்களின் வரிகள் மட்டும் என்னை விடாது துரத்திக் கொண்டே வந்தது. துரத்தியது பாடலின் இசையா? வரிகளா? என்று அறியேன். சில பாடல்களை ஒருமுறை கேட்டால் போதும் ஏனோ மனதில், கல்வெட்டுகளின் எழுத்துக்களை போல் பதிந்துவிடும். அப்படி பதியப் பெற்ற சில பாடல் வரிகளை பின்னாளில் நான் தேடி அலைந்தேன். என் தேடலின் விடையாக அறிமுகமானவர் தான் கவிஞர் நா.முத்துக்குமார்.

பரிட்சயமான முகம், தாடி வைத்த எளிமையான தோற்றம் என அவரால் ஈர்க்கப்பட்ட நான் அவரின் இரசிகை ஆனேன். அவரைப் போலவே அவரது எழுத்துக்களும் எளிமையின் முகவரியாய் இருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது‌. அவர் பாடல்களின் பட்டியலோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன். விதவிதமான வரிகளில் விந்தை புரிந்தவரை பற்றி தெரிந்து கொள்ள எனக்குள் ஓர் ஆவல். அவரைப் பற்றி இணையத்தளத்தில் தேடத் தொடங்கினேன்.

எத்தனை பாடல்கள்! எத்தனை கவிதைகள்! எத்தனை எத்தனை இலக்குகள்! அத்தனையும் அடைந்தவர் அவர். அவரின் புத்தக உலகத்தில் மெல்ல மெல்ல தொலைய ஆரம்பித்தேன். அவர் எழுத்துக்களின் எதார்த்தங்கள் என் இரவு நேர உறக்கங்களை களவாடிச் சென்று என்னை எழுத்துக்களை காதல் செய்ய வைத்தது. உண்ணும் போது உறங்கு போது என எல்லா நேரங்களிலும் என் கைகளில் தவழ்ந்தது அவரின் முத்தான எழுத்துக்கள் தான். அப்படி நான் கரம் பிடித்து நடந்த முதல் புத்தகம் அவர் எழுதிய "அணில் ஆடும் முன்றில்".

கூட்டுக் குடும்பத்தில் பிறந்த எனக்கு உண்மையில் அந்த புத்தகம் ஒரு பொக்கிஷம் தான். உறவுகளின் உன்னதங்களை மனதோடு உரையாடும் அது ஓர் அழகிய வரம். "அம்மா"வில் தொடங்கி "மகனில்” முடியும் அது தலைமுறைகளின் கால் தடம். அணில் ஆடும் முன்றிலில் சிறுது நேரம் அமர்ந்து என் உறவுகளின் பசுமையான நினைவுகளை மனதுக்குள் புரட்டிப் பார்த்து, ஒரு துளி கண்ணீர் விட்டு எழுந்து நடந்த என் பாதையில் நான் கண்டது என் முந்தைய தலைமுறையின் பாதச்சுவடுகள்.

REVIEW BY VAISHNAVI

jamunarani has reacted to this post.
jamunarani

You cannot copy content