You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

அன்புள்ள அப்பாவிற்கு..

Quote

துயில் கொள்ள செய்ய
என்னை
தூக்கி சுமந்தீர்கள்...

கண்மூடி தூங்குகையில்
எனக்காக
கனவு கண்டீர்கள்...

முடிவு எடுக்க கற்று கொடுத்து
முடிவான
முடிவில் முந்தியடித்து கொண்டீர்கள்..

தோல்விகளால் துவண்ட போது
என் தோள் வலிக்க
போதனைகளை தூக்கி வைத்தீர்கள்...

நீங்கள் அடித்தாலும் தாங்கிக் கொள்கிறேன்
ஆட்டிவிக்கும் போது
' நான் ' என்பதே அர்த்தமற்று போகிறேன்..

என்னை இறக்கி விட்டுவிடுங்கள்
இல்லையெனில்
உங்கள் தோள்கள் வளைந்துவிடும்

இறக்கிவிடாமல் போனால்
சுயமாய் நிற்க
எனது கால்கள் மறந்(த்)து விடும்

இனி வரும் அத்தியாயங்களாவது
என் பெயர் சொல்லட்டுமே...
நிச்சயம்
என் மகனின் பெயரல்ல...

You cannot copy content