மோனிஷா நாவல்கள்
அப்பா எனும் வில்லன் - பாரதி பாஸ்கர்
Quote from monisha on September 4, 2021, 5:48 PMஅப்பா என்னும் வில்லன்
தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களும் சிக்கல்களும் தான் எத்தனை. நேற்று யாரோ ஒருவருக்கு நடந்த ஒரு சம்பவம் இன்று நமக்கு நடக்கையில் தான் அந்த சம்பவத்தின் அடர்த்தியை நம்மால் உணர முடிகிறது. உலகில் நடக்கும் அனைத்துமே வெறும் நிகழ்வு தான் நமக்கு நடக்கும் வரையில் என்று யாரோ ஒருவர் சொன்னது தான் என் நினைவுக்கு வருகிறது. ஆண்கள் சந்திக்கும் சவால்கள் ஒரு விதமாக இருந்தால் பெண்கள் சந்திக்கும் சவால்கள் வேறு விதமாக இருக்கிறது. அதுவும் நடுத்தர வர்க்கத்தில் உள்ள பெண்களின் பாடு பெரும்பாடு தான். ஒவ்வொரு பெண்ணின் உணர்வுகளும் அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் அவர்கள் அதை எதிர்க்கொள்ளும் விதம் சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது.
பெண்களின் அன்றாட பிரச்சினைகளையும் அதை அவர்கள் கையாளும் விதத்தை பற்றியும் தான் இந்த "அப்பா என்னும் வில்லன்" புத்தகம் அமைந்துள்ளது. காதல், திருமணம், குடும்பம், அலுவலக வாழ்க்கை, தாய்மை, சமூதாயம் போன்ற எல்லாவற்றிலும் பெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். இவற்றில் ஏதாவது ஒன்றில் அவர்கள் சற்று குறைவான கவனத்தோடு இருந்தால் அவர்கள் மேல் சுமத்தப்படும் வீண் பழிக்கு கணக்கில்லை. எல்லா இடங்களிலும் எல்லா பெண்களும் ஒரே மாதிரியாக நடந்துக் கொள்வது இல்லை. இப்படி ஒவ்வொரு பெண்ணும் எந்தெந்த இடத்தில் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதை சிறுகதைகளாக நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர்.
பல குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அதை ஒரு தொகுப்பாக்கி நமக்கு வழங்கியிருக்கிறார் திருமதி. பாரதி பாஸ்கர். சிறுவயதில் இருந்தே இவரின் கோர்வையான பேச்சுக்கும், தெளிவான சிந்தனைக்கும் நான் ரசிகை. சோர்வுற்று தளர்ந்த நேரங்களிலும் சரி, அறிவுப்பசி எடுத்த நேரங்களிலும் சரி நான் அதிகம் விரும்பி கேட்பது இவரது பேச்சை தான். நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததும் இவரால் தான். பன்முக திறமையும் ஆளுமையும் கொண்ட இவரால் நான் நிறைய நாட்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். பட்டிமன்றங்களில் இவர் குறிப்பிடும் புத்தகங்களை நான் தேடி தேடி படித்திருக்கிறேன். இன்று இவரது புத்தகத்தையே பின்னூட்டம் செய்வதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு பின்புலத்தைக் கொண்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில் "அப்பா என்னும் வில்லன்", "ஒரு கடிதம் இன்னொரு கடிதம்", "நரிகள்", "துரத்தும் ஆசைகள்", "மெய்த் திறப்பதம் மேவு" முதலிய கதைகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. அன்றாடம் பெண்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அந்த கதைகள் தெளிவுற கூறுகிறது. எதேச்சையாக நடக்கும் சம்பவங்களில் இருக்கும் வாழ்வியல் போராட்டங்களை எழுத்துக்களால் செதுக்கி, உணர்வுகளால் மெருகேற்றி, இந்த புத்தகம் உயிரப்பித்துள்ளது.
Review By VaishNavi
அப்பா என்னும் வில்லன்