மோனிஷா நாவல்கள்
Forum breadcrumbs - You are here:ForumTamil katooraigal: Book Reviewsஇமோஷனல் இன்டலிஜன்ஸ் - இட்லியாக இர …
இமோஷனல் இன்டலிஜன்ஸ் - இட்லியாக இருங்கள்
Quote from monisha on November 4, 2021, 2:14 PM இமோஷனல் இன்டலிஜன்ஸ் - இட்லியாக இருங்கள் புத்தகத்தின் தலைப்பை படித்ததும் என் மனதில் பல எண்ணங்கள் வரிசைகட்டி நின்றது. அதில் முதலில் நிற்பது இமோஷனல் இன்டலிஜன்ஸ், இதயம் சம்பந்தப்பட்டதா இல்லை மூளை சம்பந்தப்பட்டதா என்பது தான். சூழ்நிலைக்கேற்ப உணர்வுகளின் வெளிப்பாடும், அதை கையாளும் யுக்திகளும் மாறும். மனிதனை இன்னும் மனிதனாக வைத்திருப்பது உணர்வுகள் தான். அந்த உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஒரு கலை.ஆனால் அதில் அனைவரும் கைத்தேர்ந்தவர்களாக இருப்பதில்லை. பிரபலமானவர்களின் வாழ்க்கையில் கூட இந்த மாதிரியான உணர்ச்சிப் பெருக்குகள் இருந்திருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கை திசை மாறியிருக்கிறது. குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் வாழ்க்கையிலும் கூட இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து நம்மை புத்தகத்துக்குள் இழுத்துச் செல்கிறது இந்த எழுத்துக்கள். ஆத்திரப்பட வேண்டிய இடத்தில் நிதானம் அவசியம், கோபப்பட வேண்டிய இடத்தில் பொறுமை அவசியம். உணர்ச்சி பெருக்கு என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். கோபத்தில் உதிர்ந்த வார்த்தைகளால் குடும்பத்திலும், அலுவலகத்திலும் ஏற்பட்ட சர்ச்சைகளை தான் அலசுகிறது இந்த புத்தகத்தின் ஒரு பாதி. இமோஷனல் இன்டலிஜன்ஸை ஒரு இட்லியோடு தொடர்புபடுத்தி கூறியிருப்பது இந்த புத்தகத்தோடு நம்மை ஒன்றி நகர வைக்கிறது.உணர்வுகளை கையாள தெரியாமல் முழிப்பவர்களையும், முக்கியமான சூழ்நிலைகளில் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக முடிவெடுப்பவர்களையும் ஒரு இட்லியோடு தொடர்புபடுத்தி கூறியிருப்பது வேடிக்கையாக அதே நேரத்தில் எளிதாகவும் இருக்கிறது. உணர்ச்சிவசப்படாமல் எப்படி நிதானமாக ஒரு சூழ்நிலையை புத்திசாலித்தனமாக கையாள்வது என்பது பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய நிறுவனங்களில் இமோஷனல் இன்டலிஜன்ஸ் ஒரு தனி தகுதியாக கருதப்பட்டு வரும் நிலையில் இந்த புத்தகம் அதற்கான ஒரு தொடக்கமாக அமையும். தமிழில் இமோஷனல் இன்டலிஜன்ஸ் பற்றி வரும் முதல் புத்தகம் இந்த "இட்லியாக இருங்கள்".இதன் ஆசிரியரான சோம.வள்ளியப்பனின் ஆளுமையை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். எத்தனை சிக்கலான ஒரு தலைப்பை இவ்வளவு எளிதாக கையாண்டிருப்பது என்பது வியப்பிற்குரிய ஒன்று. இதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய இன்னொரு புத்தகம் தான் "இமோஷனல் இன்டலிஜன்ஸ் 2.0". அதை பற்றிய விமர்சனத்தையும் விரைவில் பதிவிடுகிறேன். இமோஷன்சை பற்றிய புரிதலும், அதை அடக்கியாளும் யுக்திகளையும் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த புத்தகத்தின் பக்கங்களை நிச்சயமாக புரட்ட வேண்டும்.REVIEW BY VAISHNAVI
இமோஷனல் இன்டலிஜன்ஸ் - இட்லியாக இருங்கள் புத்தகத்தின் தலைப்பை படித்ததும் என் மனதில் பல எண்ணங்கள் வரிசைகட்டி நின்றது. அதில் முதலில் நிற்பது இமோஷனல் இன்டலிஜன்ஸ், இதயம் சம்பந்தப்பட்டதா இல்லை மூளை சம்பந்தப்பட்டதா என்பது தான். சூழ்நிலைக்கேற்ப உணர்வுகளின் வெளிப்பாடும், அதை கையாளும் யுக்திகளும் மாறும். மனிதனை இன்னும் மனிதனாக வைத்திருப்பது உணர்வுகள் தான். அந்த உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது ஒரு கலை.
ஆனால் அதில் அனைவரும் கைத்தேர்ந்தவர்களாக இருப்பதில்லை. பிரபலமானவர்களின் வாழ்க்கையில் கூட இந்த மாதிரியான உணர்ச்சிப் பெருக்குகள் இருந்திருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கை திசை மாறியிருக்கிறது. குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் வாழ்க்கையிலும் கூட இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே இது போன்ற சுவாரசியமான நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து நம்மை புத்தகத்துக்குள் இழுத்துச் செல்கிறது இந்த எழுத்துக்கள். ஆத்திரப்பட வேண்டிய இடத்தில் நிதானம் அவசியம், கோபப்பட வேண்டிய இடத்தில் பொறுமை அவசியம். உணர்ச்சி பெருக்கு என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். கோபத்தில் உதிர்ந்த வார்த்தைகளால் குடும்பத்திலும், அலுவலகத்திலும் ஏற்பட்ட சர்ச்சைகளை தான் அலசுகிறது இந்த புத்தகத்தின் ஒரு பாதி. இமோஷனல் இன்டலிஜன்ஸை ஒரு இட்லியோடு தொடர்புபடுத்தி கூறியிருப்பது இந்த புத்தகத்தோடு நம்மை ஒன்றி நகர வைக்கிறது.
உணர்வுகளை கையாள தெரியாமல் முழிப்பவர்களையும், முக்கியமான சூழ்நிலைகளில் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாக முடிவெடுப்பவர்களையும் ஒரு இட்லியோடு தொடர்புபடுத்தி கூறியிருப்பது வேடிக்கையாக அதே நேரத்தில் எளிதாகவும் இருக்கிறது. உணர்ச்சிவசப்படாமல் எப்படி நிதானமாக ஒரு சூழ்நிலையை புத்திசாலித்தனமாக கையாள்வது என்பது பற்றிய குறிப்புகளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய நிறுவனங்களில் இமோஷனல் இன்டலிஜன்ஸ் ஒரு தனி தகுதியாக கருதப்பட்டு வரும் நிலையில் இந்த புத்தகம் அதற்கான ஒரு தொடக்கமாக அமையும். தமிழில் இமோஷனல் இன்டலிஜன்ஸ் பற்றி வரும் முதல் புத்தகம் இந்த "இட்லியாக இருங்கள்".
இதன் ஆசிரியரான சோம.வள்ளியப்பனின் ஆளுமையை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். எத்தனை சிக்கலான ஒரு தலைப்பை இவ்வளவு எளிதாக கையாண்டிருப்பது என்பது வியப்பிற்குரிய ஒன்று. இதன் தொடர்ச்சியாக அவர் எழுதிய இன்னொரு புத்தகம் தான் "இமோஷனல் இன்டலிஜன்ஸ் 2.0". அதை பற்றிய விமர்சனத்தையும் விரைவில் பதிவிடுகிறேன். இமோஷன்சை பற்றிய புரிதலும், அதை அடக்கியாளும் யுக்திகளையும் பற்றி தெரிந்துக் கொள்ள இந்த புத்தகத்தின் பக்கங்களை நிச்சயமாக புரட்ட வேண்டும்.
REVIEW BY VAISHNAVI
Click for thumbs down.0Click for thumbs up.0