You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

இரு துருவங்கள் - சுபா

Quote

சூடு பறக்க வாதங்கள் செய்றத கேக்கும்போதோ பாக்கும்போதோ இல்ல படிக்கும்போதோ ஒரு ஆர்வம் வரும்.
அந்ததில இருதுருவங்கள் சுபா தன் பயம் படபடப்பு மற்றும் தயக்கம் அனைத்தையும் உடைத்தெடுத்து வக்கீலாய் தன் திறமைய வெளிக்காட்டி வாதிடுவது நம்ம கண் முன்னாடி நடக்கிற மாதிரியே இருக்கும்.
சாக்லேட் சாப்பிடும் குழந்தை முகமாய் சிரிக்கும் வெகுளியாய் அறிமுகமாகும் சுபா படித்திருப்பது பி.ஏ.பி.எல்.
படித்து பிராக்டீஸ் கூட செய்யாமல் ஆணாதிக்க சமுத்திரனுக்கு மனைவியாகி இரு பிள்ளைகளுக்கும் தாயாகிறாள்.
அவள் கணவனின் தோழனும் தன் உடன்பிறவா சகோதரனுமானவன் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்க நேரும் போது அண்ணனின் மனைவி மற்றும் அவளுடய தோழனுடனும் சேர்ந்து அலை கடலாய் பொங்கி எதிர்தரப்பு வக்கீலான தன் கணவனுக்கு எதிராக வாதாடி , தன் கணவனின் போலி முகமூடியை கழற்றி உண்மை முகத்தை தோலுரித்து ,
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளூத்துவோம் -என்பதற்குன்டான விளக்கத்தை அவன் சிறைச்சாலையில் சென்று படித்து தெரிந்து கொள்ள தண்டனை வாங்கி கொடுத்து சிறைக்கு அனுப்புகிறாள்....

monisha has reacted to this post.
monisha
Quote

Super... நாயகிகளை விட சுபா இந்தளவு தாக்கத்தை வாசகர் மனதில் உருவாக்கி இருப்பது அந்த படைப்பின் படைப்பாளியாக மனதிற்கு நிறைவாக இருக்கு.

உண்மையிலேயே நீங்க சொன்னது சரிதான். ரொம்பவும் சாதாரணமாக உருவாகி சரித்திரம் படைத்த பாத்திரம் அது.

நன்றி விஜயா😊

vijayasanthi has reacted to this post.
vijayasanthi

You cannot copy content