You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி

Quote
  • Jதயா மாமா      அவர பத்தி தான் சொல்லணும் மாமா மச்சான் அப்படிங்கிறது சொல்லமுடியாத ஒரு ஆழமான  அழகான உறவு "நான் ஊருக்கு போயிட்டு வரேன் மாப்ள "அப்படின்னு  அவர் சொல்லும்போது எவ்வளவு க்ளோசா இருந்தால் சிவகுரு பீல் பண்ணி இருப்பாரு...  நானும் அதே மாதிரி அவ்ளோ மிஸ் பண்னேன்.  எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு... எனக்கும் இதே மாதிரி க்ளோஸா ஒரு மச்சான் வேணும்னு  நான் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்..

 

வேதா கேரக்டர் புருஷனுக்காக அம்மா அப்பாவ விட்டுக் கொடுக்கிற பாவப்பட்ட ஜென்மம்.. மனசுக்குள்ள எவ்வளவு ஆசை வச்சிருந்தாங்க நா அவங்க அம்மாகிட்ட அம்மா எனக்கு கோழி  குழம்பு வச்சு தரியா?  அப்படின்னு கேட்டு இருப்பாங்க... நிறைய இடங்கள்ல அவங்களோட தவிப்பை உணர்ந்தேன் வீட்டுக்காரரு முன்னாடி இருக்கும் போது அம்மா கிட்ட தனியா பேசணும் னு ஆசை படும் போதும்,  சொந்த தம்பியையே நமக்கு அடையாளம் தெரியல அப்படினு  வருத்தப் படும் போதும் அவங்க எவ்ளோ ஃபீல் பண்ணி இருப்பாங்க.... அவங்களோட ஆசை எல்லாம் ஒரு கட்டத்துல குறைந்துபோய் வெறுத்துப்போன மன நிலைக்குப் போய் இருக்காங்க....  கடைசில அவர் இனிமேல் நான் பாத்துக்குறேன் ன்னு சொல்லும்போது இனியா அப்படினு அவங்க கேட்க போது அவங்க மனநிலை எப்படி இருந்திருக்கும்..  இதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டமான நிலைமை எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது... நம்மள புரிஞ்சுக்கிற வாழ்க்கைத்துணை வேண்டும்.... அந்த துணையில்லாமல் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும்...இதில அவங்க லவ் marriage வேற... கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க காதல் காணாமலே போச்சு ....

 

சபரி கேரக்டர்   அப்பாநாஎப்படி இருக்கணும் அப்படிங்கறது சிறந்த உதாரணம்.. ரொம்ப ரொம்ப நல்ல அப்பா சார் நீங்க.. உங்க பொண்ணு ஆசைப்பட்டது எல்லாத்தையும் நிறைவேற்றுவதாக இருக்கட்டும்,  அவங்க செஞ்ச  கேவலமான சூப்ப குடிக்கிறது ஆகட்டும், அவங்க ஆசைப்பட்டாங்க அப்படிங்கிறதற்காக பிடிக்காத மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வச்சிருக்கதகட்டும், கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க சந்தோஷமா இருப்பாங்களோ இல்லையோ அப்படின்னு தவிக்கிற தவிப்பு ஆகட்டும்,  பூட்டிய கதவுக்கு பின்னாடி சண்டை போடுறாங்களே நீங்க பயப்படறதா  இருக்கட்டும், அவங்க பொண்ணுக்கு தோசை ஊத்தி  கொடுக்கறதை  பார்த்த சந்தோஷத்துல கண்கலங்கரதா இருக்கட்டும்,  எல்லாத்துலையும் விட்டுக் கொடுக்கவே இல்லை சார்.. நீங்க நான் உங்களை பாராட்டுறேன்....  இவ்லோ அண்டர்ஸ்டாண்டிங்ல இருக்க  நீங்க அந்த முட்டாள் பையன் மோகன் சொன்னான்னு லவ் பண்ரியா அப்டினு  எப்படி சார் உங்க பொண்ண பாத்து அந்த கேள்வி கேட்டீங்க அந்த இடத்துல நீங்க கொஞ்சம் இறங்கிட்டீங்க சார்.. உங்க பொண்ணுக்காக பார்த்து பார்த்து செஞ்ச நீங்க உங்கள நம்பி வந்த உங்க பொண்டாட்டிய தவிக்க விட்டது நியாயமா?? இந்த இடத்துல நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கீழே இறங்கிட்டீங்க என் மனசுல இருந்து.. பொண்ண புரிஞ்சுக்க தெரிஞ்ச உங்களுக்கு அந்த பொண்ண  பெற்றுக் கொடுத்த பொண்டாட்டிய  புரிஞ்சுக்க தெரியலையே??  இது எந்த விதத்தில் நியாயம்..  அவ்ளோதான் sis இவங்க 3 பேர் பத்தியும் சொல்ல ஆசைப்பட்டேன்... சொல்லிட்டேன்

admin has reacted to this post.
admin
Quote

நன்றி அருணா

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி கதையில் உங்களை கவர்ந்த  மூன்று கதாபாத்திரங்களை பற்றியும் ரொம்ப சூப்பரா சொல்லி இருக்கீங்க... இதுவரை யாரும் சொல்லாத பாத்திரங்களை பற்றி நீங்கள் தந்திருப்பது தனிசிறப்பு

You cannot copy content