மோனிஷா நாவல்கள்
கிறிஸ்டோபர் ❤ செல்லா (அவனின்றி ஓரணுவும் நாவல்)

Quote from monisha on January 9, 2026, 12:24 PMநான் இப்படியொரு மனநிலையில் இருக்க, அந்தப் பெண் மட்டும் என்னைச் சுற்றியே வந்து கொண்டிருந்தாள். அவள் என்னை விட வயதில் ரொம்பவும் சிறியவள் என்பதாலும் அதேநேரம் காதல், திருமணம் போன்றவற்றின் மீது எனக்கு அதிகம் ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் அவளிடமிருந்து நான் விலகி இருக்க முயன்றேன். இருப்பினும் என் மனம் அவளிடம் அலைப்பாய்ந்து கொண்டிருந்ததும் உண்மை. அவளைப் பார்க்க நான் தவிர்த்த போதும் தினம் தினம் அவள் வருகைக்காகக் காத்திருந்ததும் உண்மை!
இந்த இயற்கை எழில் கொஞ்சம் மலைகளில் அவளுடன் சுற்றித் திரிய வேண்டுமென்று மனிதினோரம் ஒரு ஆசைத் துடித்து கொண்டிருந்ததும் உண்மை.
இப்படி இருவேறு மனநிலையில் நான் சிக்கிக் தவித்துக் கொண்டிருக்க, நான் அறியாமலே அப்படியொரு வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.
அன்றொரு நாள் மாலை வேளை, நான் என் டைரியில் குறிப்பெழுதிக் கொண்டிருக்கும் போது நான் வசித்திருந்த குடிலுக்குள் அந்தப் பெண் நுழைந்தாள்.
அவளை நான் திகைப்போடுப் பார்க்க அவள் புன்னகை முகத்தோடு செய்கையால் என்னை அவளுடன் வர சொல்லி அழைத்தாள். முதலில் தயக்கமாக இருந்தாலும் பின்னர் நான் அவள் பின்னோடு சென்றேன்.
மலைகளின் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு அவள் என்னை அழைத்து சென்றாள். நாங்கள் செல்லும் பாதைகளில் நீரோடைகள் சலசலத்து ஓடிக் கொண்டிருக்க, அருகே ஒரு அருவியூற்றின் சத்தம் என் செவிகளை நெருங்கி வந்தது.
அவள் என்னை அந்த அருவிக்குத்தான் அழைத்து செல்கிறாள் என்று எனக்கு புரிந்தது. எதுவும் பேச்சுக் கொடுக்காமல் அவள் பின்னோடு நடந்தேன். அவளுடனான அந்தக் காட்டுப் பயணம் மிகவும் ரசனையாகவும் அழகாகவும் இருந்தது.
நான் அந்த உணர்வை மனதார ரசிக்கத் தொடங்கிய சமயம் அருவியின் இரைச்சல் என்னை மிகவும் நெருங்கி வந்தது. என் மனம் அவள் பின்னோடு பயணிக்க, என் முளை அது தப்பு என்று எனக்கு அறிவுறுத்தியது.
அவள் என் எண்ணவோட்டங்களை அறியாதவளாக அங்கிருந்த செடிகளையும் புதர்களையும் விலக்கிக் கொண்டு என்னை உள்ளே அழைத்து சென்றாள்.
அந்தக் காட்சியைப் பார்த்து நான் வியந்து நின்றுவிட்டேன். காண கிடைக்காத ஓர் அரிதான காட்சிதான் அது. மலையின் உச்சிப் பகுதியிலிருந்து பேரிரைச்சலோடுக் கொட்டிக் கொண்டிருந்தது அந்த அருவி.
அதன் சாரலோ பாறை மீது பட்டு என் மீது தெறிக்கையில் என் தேகமெங்கும் குளிர் பரப்பியது. சிலிர்ப்பு உண்டானது.
அப்போது இன்னொரு வியப்புக்குரிய விஷயம் அரங்கேறியது. செந்தூரம் பூசி கொண்ட வானத்தில் அஸ்தமிக்க காத்திருந்த சூரியக்கதிர்கள் பட்ட நொடி, அந்த இடமே வானவில்லின் வண்ணங்ளால் பிரதிபலிக்க தொடங்கின.
இயற்கையின் ஆச்சரியங்களை வெறும் வார்த்தைகள் கொண்டு விவரிக்க முடியுமா என்ன? இயற்கையானது இறைவன் தீட்டிய வண்ண ஓவியம்!
பேச்சிழந்து என்னை மறந்த நிலையில் அந்தக் காட்சியை நான் பார்த்திருக்கும்போது அந்தப் பெண் என் முன்னே வந்து வண்ண மலர்களாலான ஓர் அழகிய மாலையை என் கழுத்தில் சூட்டினாள்.
நான் அதிர்ந்து அவளைப் பார்க்க, இந்த இயற்கையின் சாட்சியாக அவள் என்னை மணக்க விரும்புவதாகச் செய்கை மொழியில் உரைத்தாள்.
எனக்கு அந்த நொடி என்ன செய்வதென்றே புரியவில்லை. அதன் பிறகு அவள் அதே போல் ஒரு அழகிய பூமாலையை அணிவித்துவிட சொல்லி என்னிடத்தில் நீட்டினாள். அவள் யோசித்துதான் செய்கிறாளா? என்னைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு. நான் அந்த மாலையை வாங்காமல் திரும்பி நடக்க, அவள் முகம் சுருங்கி போனது. என் முன்னே வந்து வழிமறித்தவள் வேறு எந்தப் பெண்ணையாவது விரும்புகிறேனா என்று செய்கை மொழியில் கேட்டாள்.
நான் இல்லையென்று தலையசைத்தேன். உடனடியாக அடுத்த கேள்வியாக என்னைப் பிடிக்கவில்லையா? என்று கேட்டாள். அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்.
அவள் கண்களைப் பார்த்து என்னால் பொய்யுரைக்க முடியவில்லை. மெளனமாக அங்கிருந்த மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டேன். மொழிகள் புரியாவிட்டாலும் அவள் மனம் எனக்கு புரிந்தது. என் மனம் அவளுக்குப் புரிந்தது.
ஆனால் என் உலகம் வேறு. அவள் உலகம் வேறு. என் வாழ்க்கை வேறு. அவள் வாழ்க்கை வேறு. இதை எப்படி அவளுக்கு நான் புரிய வைப்பேன். மெளனமாக யோசனையில் ஆழ்ந்தேன்.
அருவி கொட்டும் சத்தம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த சமயம், திடீரென்று தண்ணீரில் ஏதோ தவறி வீழ்வது போன்ற ஒலி என் மனதை உலுக்கியது. திரும்பி பார்த்த போது அவள் அந்த அருவி கொட்டி கொண்டிருந்த ஆழமான தண்ணீர் குளத்தில் குதித்துவிட்டிருந்தாள்.
பதறி போய் நான் அவளைக் காப்பாற்றும் நோக்கில் அந்த நீரின் ஆழமும் வேகமும் தெரியாமல் குதித்துவிட்டேன். அவளுக்கு எதுவும் நேர்ந்துவிட கூடாதே என்ற பதட்டம் மட்டுமே என் மனதில் இருந்தது.
ஆனால் விஷக்கடியால் பாதிக்கப்பட்ட காரணத்தால் என் உடலின் சக்தி மொத்தமும் வற்றியிருந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்த என் ஆற்றலை மீட்டு கொண்டிருந்தேன். அந்த நிலையில் வீரியமாக பாய்ந்து ஓடும் நீர் வீழ்ச்சியில் எதிர் நீச்சலடிப்பது எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது.
அந்தத் தண்ணீரின் அழுத்தம் என்னை உள்ளிழுத்து கொண்டு செல்ல, ஒரு பெண்ணின் மரணத்திற்கு நான் காரணமாகிவிட கூடாதே என்ற குற்றவுணர்வோடு தத்தளித்தேன்.
அப்போது ஒரு கரம் என்னை வலிந்து இழுத்து ஒரு பாறையின் அருகே தள்ளியது. அந்தப் பாறையைக் கெட்டியாக நான் பிடித்து ஏறி வந்த போது அவள் என் முன்னே நின்றிருந்தாள்.
என்னைக் காப்பாற்றியதும் அவள்தான் என்று அறிந்த போது ஒருவித அவமானமான உணர்வு. அவள் என்னை பார்த்து நக்கலாக சிரித்தாள்.
அந்தப் பார்வையிலும் புன்னகையிலும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது. அப்போதுதான் என் முட்டாள்தனமே புரிந்தது. அவள் அந்த மலைகளிலேயே பிறந்து வளர்ந்த பெண்.
அவளுக்கு நீச்சல் தெரியாமல் இருக்காது. இந்த அருவி வீழ்ச்சியின் ஆழம் தெரியாமலும் இருக்காது. தான்தான் அறிவீனமாக ஆழம் தெரியாமல் உள்ளே குதித்துவிட்டோம் என்று புரிந்தது. மூளையிலிருந்து சிந்தித்திருந்தால் அந்த விஷயம் எனக்கு பிடிப்பட்டிருக்கும். ஆனால் நான் மனதிலிருந்து சிந்தித்துவிட்டேன். அதுவும் அவளுக்காக!
அதன் மூலமாக என் மனதையும் எனக்குள் குடிக்கொண்டிருக்கும் அவளுக்கான தவிப்பையும் நானே அவளுக்கு காட்டியும் கொடுத்துவிட்டேன். வினாடி நேரத்தில் அவள் என்னை முட்டாளாக்கிவிட்டாளே!
அதுவும் அவள் கேலியான பார்வையோடு என்னைப் பார்த்த விதத்தில் எனக்குள் கோபத் தீ மூள, அவளை அந்த நொடி ஏதாவது செய்ய வேண்டுமென்று எல்லைகளை மீறி சிந்தித்தது என் மனம்.
அதேநேரம் அவள் தேக வளைவுகளைத் தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்த நீரில் நனைந்திருந்த அவளின் உடை என் மோக உணர்வுகளைத் தூண்டிவிட்டிருக்க,
பனியில் நனைந்த ரோஜா இதழ்களைப் போல ஈரம் சொட்டிக் கொண்டிருந்த அவள் இதழ்களின் மீதே என் பார்வை வீழ்ந்தது.
அவள் மீதான கோபத் தீ மோகத் தீயாக உருவெடுக்க, அவளை நெருங்கி அணைத்து அவள் இதழ்களில் முத்தம் பதித்தேன். இயற்கையின் சாட்சியாக அவள் எனக்கு மாலை சூட்டினாள். நான் அதே இயற்கையின் சாட்சியாக அவளையே எனக்கு மாலையாகச் சூட்டிக் கொண்டேன்.
சூரியன் அஸ்தமித்த அதே நேரத்தில் எங்கள் உறவு உதயமாகியிருந்தது. இயற்கையோடு இயற்கையாக… எந்த ஆதாரமும் இல்லாமல் மொழி பெயரென்று எதுவும் அறியாமல் மனதால் இணைந்து நாங்கள் இருவரும் உடல்களைப் பரிமாறி கொண்ட தருணம்.
அவளின் பெயர் ‘செல்லா’ என்பதை கூட பின்னாளில்தான் நான் அறிந்து கொண்டேன். செல்லா மீதான தீராத காமும் தெவிட்டாத காதலும் என் வாழ்க்கையே தடம் புரண்டு திசை மாற்றியது. அவளே என் உலகமாகி மாறிப் போனாள்.
நான் இப்படியொரு மனநிலையில் இருக்க, அந்தப் பெண் மட்டும் என்னைச் சுற்றியே வந்து கொண்டிருந்தாள். அவள் என்னை விட வயதில் ரொம்பவும் சிறியவள் என்பதாலும் அதேநேரம் காதல், திருமணம் போன்றவற்றின் மீது எனக்கு அதிகம் ஈடுபாடு இல்லாத காரணத்தாலும் அவளிடமிருந்து நான் விலகி இருக்க முயன்றேன். இருப்பினும் என் மனம் அவளிடம் அலைப்பாய்ந்து கொண்டிருந்ததும் உண்மை. அவளைப் பார்க்க நான் தவிர்த்த போதும் தினம் தினம் அவள் வருகைக்காகக் காத்திருந்ததும் உண்மை!