You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

Quote

சில நேரங்களில் சில மனிதர்கள்

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தி செல்கின்றனர். கங்காவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு நபர் இருந்தார். அந்த நாள் மட்டும் வராமல், அவனை மட்டும் சந்திக்காமல், அந்த சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் அவள் வாழ்க்கை இப்படி தடம் புரண்ட ரயில் பயணம் ஆகி இருக்காது.

உறவுகளிடம் இருந்து விலகி தனிமையை காதலித்தவள் மீண்டும் அந்த "அவனை" சந்தித்து உறவு வட்டத்துக்குள் சிக்கினாள். அவள் ஒன்றை எதிர்பார்த்து சில முடிவுகள் எடுத்தால், வாழ்க்கை அவளுக்கு வேறு ஒன்றை வைத்திருந்தது. அவளின் தனிமைக்கும், மனிதர்கள் மீதான வெறுப்புகளுக்கும் ஒரே ஆறுதலாய் இருந்தது அந்த ஆர்.கே.வியின் எழுத்துக்கள் தான். அவள் படித்த "அக்னி பிரவேசத்தில" அவள் ஏற்கனவே பயணித்திருக்கிறாள் என்பது அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. அவள் தேடிப்பிடித்தது என்னவோ அவனை தான் ஆனால் அவள் உறவானது என்னவோ மஞ்சுவோடு.

வெறுப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் இடையில் பயணித்த கொண்டிருந்த அவள் வாழ்க்கையில் திருப்பம் ஆர்.கே.வி மூலமாக வந்தது. உறவுகள் மீதும் சமூகத்தின் பார்வை மீதும் அவளுக்கு இருந்த அலட்சியம் அவளை வேறு விதமாக மாற்றியது. சமூகத்தில் இருக்கும் நரிகளிடமும், ஓநாய்களிடமும் இருந்து தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள தான் அவள் அந்த தேடலை தொடர்ந்தாள். ஆனால் அந்த தேடலே அவளை கடைசியில் திசை மாற்றும் என்பதை அவள் உணரவில்லை.

உண்மையில் அவள் வாழ்க்கை நதி போன்றது. எங்கோ தொடங்கி, எங்கோ பயணித்து, எங்கெங்கோ திசை மாறி போனாள் கங்கா. அவள் மீது விழந்த விமர்சனங்களையும், அதனால் அவளுக்குள் எழும் எண்ணவோட்டங்களையும் மிக ஆழமாகவும், ஆணித்தனமாகவும் கூறி இருக்கிறார் ஜெயகாந்தன். இந்த கதையின் முடிவை பல பேர் விமர்சித்த போதும் கதையின் முடிவை மாற்றுவதில் அவருக்கு விருப்பமில்லை. இந்த கதை இப்படி முடிவதை தான் அவர் விரும்பி இருக்கிறார். பெரும்பாலும் வாசகர்கள் எதிர்மறை முடிவுகளை ஊக்குவிப்பது இல்லை. ஆனால் எதிர்மறையான முடிவுகளில் தான் எழுத்தாளர்களின் ஆளுமையும், கூற விழையும் கருத்தின் ஆழமும் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் - தடம் புரண்ட ரயிலில் பயணிக்கும் கங்காவின் கதை..

Review By Vaishnavi

Miya dev has reacted to this post.
Miya dev

You cannot copy content