You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

டேவிட் 💛 ஜெனிபர் (நான் அவள் இல்லை)

Quote

தாமஸ் மேலும், "ஜென்னிக்கும் டேவிடுக்கும் மேரேஜ் பண்றதைப் பத்தி நீ என்ன நினைக்கிற விக்டர்?" என்று பளிச்சென்று கேட்க விக்டரும் ஜென்னியும் அதிர்ந்து பார்த்துக் கொண்டனர். ஆனால் டேவிட் ஒருவாறு தன் தந்தையின் எண்ணத்தை யூகித்துவிட்டதால் அதிர்ச்சியுறாமல் நிற்க,

ஜென்னி டேவிடின் புறம் திரும்பி, 'இதெல்லாம் உங்க வேலையா?!' என்று கனலாய் பார்த்தாள். அவன் சமிஞ்சையால் இல்லை என்று மறுத்தான்.

விக்டர் மௌன நிலையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்த தாமஸ், "என்ன விக்டர் ? இதுல உனக்கு சம்மதம் இல்லையா?!" என்று கேட்க,

அவர் சுதாரித்துக் கொண்டு, "இல்ல தாமஸ்... என் சம்மதத்தை பத்தி இல்ல... இது அவங்க இரண்டு பேரும் டிசைட் பண்ண வேண்டிய விஷயம்... அவங்க இரண்டு பேரும் சம்மதம் சொல்லிட்டா எனக்கு இதுல அப்ஜக்ஷன் இல்லை" என்றபடி ஜென்னியையும் டேவிடையும் பார்த்தார்.

தாமஸின் முகம் பிரகாசித்தது. ஜென்னி தன் விருப்பமின்மையை எப்படி தெரிவிப்பது என்று தீவரமாய் யோசித்திருக்க, டேவிட் அவளின் நிலையை ஒற்றைப் பார்வையாலயே புரிந்து கொண்டான்.

தாமஸ் மகனை நோக்கி, "நீ என்ன சொல்ற டேவிட்?" என்று கேட்க, விக்டர் ஆவலாய் அவன் பதிலை எதிர்பார்த்திருக்க, ஜென்னி அவனைச் சம்மதிக்க கூடாதென பார்வையாலேயே மிரட்டினாள்.

அவன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் ஜென்னி கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றதும் விக்டரும் தாமஸும் வியப்போடு பார்த்துக் கொண்டனர்.

ஜென்னி டேவிடை கோபமாய் முறைத்திருக்க விக்டர் புன்னகையோடு, "நோ ப்ராப்ளம் டேவிட்... பேசுங்களேன்" என்றார்.

டேவிட் புன்னகையோடு, "வா ஜென்னி... நம்ம வீட்டை சுத்திப் பார்த்துகிட்டே பேசுவோமே" என்றவன் அழைக்க, அவளும் மறுக்க முடியாமல் விக்டரைப் பார்த்துவிட்டு, டேவிட் பின்னோடு சென்றாள்.

அவர்கள் அகன்ற பின் நண்பர்கள் இருவரும் அவர்களின் நட்புக்கால கதைகளைப் பேச ஆரம்பித்தனர்.

டேவிட் அவளை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாய் சுற்றி காண்பித்தபடி வந்தான். அவன் எதற்கு தன்னை அழைத்தான் என்ற கோபத்தில் இருந்தவள் எதன் மீதும் தன் பார்வையைச் செலுத்தாமல் வர, ஒரு கட்டத்தில் தன் பொறுமை உடைந்து பேச தொடங்கினாள்.

"உங்க கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல டேவிட்... என்னையும் என் உணர்வுகளையும் புரிஞ்சிக்கிட்டவர் நீங்கதான்னு நம்பிட்டிருக்கேன்.. ஆனா அதெல்லாம் இல்லன்ற மாதிரி செஞ்சிட்டீங்க... என்னை தேவையில்லாத ஒரு இக்கட்டில மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குறீங்க" என்று உணர்ச்சி பொங்க அவள் கேட்டுக் கொண்டிருக்க,

டேவிட் தன் கரத்தைக் கட்டியபடி அவள் பேசுவதைத் தடை செய்யாமல் பார்த்திருந்தான்.

அவளே மேலும், "எனக்கு புரியல... நான் என்ன தப்பு செஞ்சேன்... ஒரு ஃப்ரெண்ட்டா உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும் நினைச்சேன்... எல்லோரையும் போல உங்க வாழ்க்கை சந்தோஷமா அமையணும்.. அப்படி நீங்க அமைச்சிக்கணும்னு விரும்பினேன்

 ஆனா அதை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க... அந்த அக்கறைக்கும் அன்புக்கு பதில் உபகாரமாய் எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை என் மேல திணிக்க நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்?" என்றவள் அவன் பதிலுக்காக காத்திருக்க,

அவன் நிதானித்த பார்வையோடு, "முதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோ... எங்க அப்பா விக்டர் அங்கிள்கிட்ட பேசினதுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல... இன்னும் கேட்டா அவர் வரப் போற விஷயம் கூட எனக்குத் தெரியாது" என்று சற்று இறுக்கத்தோடு சொல்லி முடித்தான்.

"சரி சம்பந்தம் இல்ல... ஆனா நீங்க அவங்க கான்வர்சேஷனை ஸ்டாப் பண்றதை விட்டுவிட்டு... என்கிட்ட பேசணும்னு என்னைத் தனியா கூட்டிட்டு வந்தா என்ன அர்த்தம் டேவிட்" என்று படபடப்பாய் கேட்டவள்,

மேலும் அவனைப் பேசவிடாமல் தொடர்ந்தாள்.

"என்னை கன்வின்ஸ் பண்ணனும்னு உங்க கனவில கூட நினைக்காதீங்க.. யூ கான்ட்" என்று தீர்க்கமாய் உரைத்துவிட்டு அவள் விலக யத்தனிக்க,

அவன் ஆவேசமாக, "ஓரு குற்றவாளிக்குக் கூட அவன் பக்கம் இருக்கிற நியாயத்தை பேசிறதுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க ஜென்னி... நீ  அந்த வாய்ப்பைக் கூட எனக்கு கொடுக்க மாட்டியா?!"   அந்த வார்த்தையைக் கேட்ட பின் அவள் நகர்ந்து போக முடியாமல் நின்றவள்,

"டேவிட் ப்ளீஸ்...  என்னை புரிஞ்சுக்கோங்க... என்னால உங்க நட்பையும் விட்டுக்கொடுக்க முடியல... உங்க காதலையும் ஏத்துக்க முடியல" என்றாள்.

"நட்புங்கிற எல்லையை நான் எப்போவோ கடந்து வந்துட்டேன் ஜென்னி...  நீ எனக்கு மனைவியா வரணும்... ஒரு ஃபேமிலி மாதிரியான சர்கமஸ்டென்ஸஸ்குள்ள நான் வாழ ஆசைப்படுறேன்"

"அதை வேறொரு பொண்ணாலயும் கொடுக்க முடியும் டேவிட்" என்றாள்.

"உன்கிட்ட பேசுறமாதிரி எல்லா பொண்ணுங்ககிட்டயும் என்னால இயல்பா பேசி பழக முடியல ஜென்னி...  ஒரு விஷயத்தை நீ தெரிஞ்சுக்கணும்...  அன்னைக்கு நீ என்கிட்ட காதலைப் பத்தி பேசினதுனால ஒண்ணும் நான் உன்னை லவ்வை  பண்ணல

நீ என் மேல காட்டின அக்கறையிலதான் நான் அதை உணர்ந்தேன்... ஏன்னா அது என் வாழ்க்கையில கிடைக்கல ... எனக்கு அந்த ஃபீல் புதுசா இருந்துச்சு...ரொம்ப பிடிச்சு இருந்துச்சு... அதனாலயே இந்த கொஞ்ச நாளா உன் கூட இருக்குற  மொமன்ட்காக நான் ஏங்குறேன்" என்க, அவள் மனம் தளர்ந்தது.

"யூ நோ... நான் அதிகமா பேசினதெல்லாம் என்னோட இந்த அறையில இருக்கிற சுவற்றுகள் கிட்டதான்...

பார்ன் வித் சில்வர் ஸ்பூன்... ஆனா எனக்கு கிடைச்சதெல்லாம் தனிமைதான்... எல்லோரும் இருந்தும் நான் அனாதை... எங்க அப்பாவுக்கு என்கிட்ட பேச நேரமில்ல... எங்க அம்மாவுக்கு நான் தேவைப்படல" என்ற போதே அவன் விழிகளில் நீர் சூழ,

ஜென்னி மனமிறங்கி அவன் கரங்களைப் பற்றியவள்,

"வருத்தப்படாதீங்க டேவிட்... நான் ஒரு நல்ல ஃப்ரெண்டா வாழ்க்கை பூரா உங்ககூட இருப்பேன்" என்றவளை ஏமாற்றமாய் பார்த்து அவள் கரத்தை அவன் தன் கரத்தோடு இறுக்கிக் கொண்டு,

"இதே போலதான் நீ முதல் முதல்ல என் கையைப் பிடிச்சிருந்த... ஜென்னி" என்றதும் அவள்  புரியாமல் பார்த்தாள். அவனின் தொடுகை அவளின் இறுகிய உணர்வுகளைத் தளர்த்தப் பார்க்க, அவன் பார்வையோ அவன் வார்த்தைகளை விட அதிகமாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தது.

அவன் மேலும் அவளின் கரத்தைப் பற்றியபடி நெருக்கமாய் வந்தவன்,

 "கண்ணை மூடி யோசிச்சு பாரு... அந்த மொமென்ட் உனக்கு ஞாபகத்துக்கு வரலாம்" என்றான்.

"எனக்கு ஞாபகத்தில இல்ல டேவிட்"

"ஜஸ்ட் ட்ரை"

அவன் அத்தனை தூரம் அழுத்தமாய் கேட்கும் போது நிராகரிக்க மனமின்றி அவள் விழிகளை மூடிக் கொள்ள, அவளை இருள் கவ்விக் கொண்டது.

அவன் நினைவுபடுத்திக் கொள்ளச் சொல்வது எது என்று புரியாமல் அவள் யோசித்தவண்ணம் இருக்க, அவன் கரத்தின் பிடி எந்த வித சஞ்சலத்தையும் அவளுக்குள் ஏற்படுத்தாமல் ரொம்பவும் கண்ணியமாகவே பற்றிக் கொண்டிருந்தது.

"உனக்கு ஞாபகம் வருமான்னு தெரியல... பட் நீ இப்படிதான் என் கையைப் பிடிச்சுகிட்டு... ஐ வான்ட் டூ லிவ்னு சொன்ன" என்க, வேதனையோடு கடந்து வந்த நொடிகள் அவளை ஆட்கொள்ள,

சட்டென்று விழிகளைத் திறந்து அவனை நோக்கினாள். அவன் விழிகள் அவளைச் சிறு சலனமுமின்றி பார்த்திருந்தது.

"அன்னைக்கு நீ என்கிட்ட ஒண்ணு டிமேன்ட் பண்ண ஜென்னி... அதை நான் செஞ்சுட்டேன்... அதே போல இன்னைக்கு நான் உன்கிட்ட ஒண்ணு  கேட்பேன்... நீ செய்வியா?!" என்றவனை அவள் பதட்டமாய் பார்க்க,

அவன் அவள் விழிகளை மட்டும் பார்த்தபடி பேசினான்.

"ஐ வான்ட் டூ லிவ் வித் யூ" என்று அழுத்தமாய் சொல்லியவனின் பிடி அவள் கரத்தில் இறுகி அவளை சஞ்சலப்படுத்தவும், வேகமாய் தன் கரத்தை விடுவித்துக் கொண்டு பின்னோடு வந்தாள்.

அவன் இயல்பான பார்வையோடு, "நீ இப்பவே பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஜென்னி... பொறுமையா யோசிச்சு நிதானமா பதில் சொல்லு" என்றான்.

You cannot copy content