மோனிஷா நாவல்கள்
திரௌபதி
Quote from admin on October 22, 2019, 3:51 PMதர்மம் தலைகவிழ்ந்தபடி நிற்க
அதர்மம் தலைவிரித்தாடியது
அரங்கில்...தர்மம் என்ற பெயர்கொண்டவன்
தன் தர்மப்பத்தினியை
பந்தயமாக்கிவிட்டான்...
இல்லை பந்தாடிவிட்டான்...ஐவரின் மனைவியாய் இருந்தும் அவளுக்கு அறம் வழங்கப்படவில்லை..
ஐவரின் மனைவி என்பதாலோ!பாரத போருக்கான பட்டாபிஷேகம் அது.
பதிகள் எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க
அவள் பந்தயப் பொருளானால்..மானத்திற்காக மன்னனை வேண்டினால்,
தர்மத்தின் காவலர்களை சாடினால்
அங்கே தலைகவிழ்ந்த தர்மம்
தரைமட்டமானதுகணவன்கள் எல்லாம் கைகட்டி நிற்க
கண்ணபிரான் மட்டுமே கைகொடுத்தான்
அதுவும் கடைசி நொடியில்...அங்கே கண்கண்ட தெய்வமான
கணவன்மார்கள் கண்ணிருந்தும் குருடர்கள்பஞ்சபாண்டவர்களான ஒரே பத்தினிக்கே
பாதுகாப்பில்லை எனில்
பெண்களின் பாதுகாவலர்கள் என பறைசாற்றும் பரமவீரர்கள் யாரோ? !அக்னியிலிருந்து பிரவேசித்தவள் அகிலத்தை அக்னி பிழம்பாக்கினாள்.
இது திரௌபதியின் விதியல்ல
இந்த புவியில் இன்னும் பல பெண்களுக்கு இழைக்கப்படும் சதி
*********************************
பவித்தரமானவள் என்று புரியவைக்க
ஒருத்தி அக்னிக்குள் பிரவேசித்தாள் - சீதைபவித்திரமற்றதன்மையை அடையவே ஒருத்தி அக்னியிலிருந்து பிரவேசிக்கிறாள் - திரௌபதி
தர்மம் தலைகவிழ்ந்தபடி நிற்க
அதர்மம் தலைவிரித்தாடியது
அரங்கில்...
தர்மம் என்ற பெயர்கொண்டவன்
தன் தர்மப்பத்தினியை
பந்தயமாக்கிவிட்டான்...
இல்லை பந்தாடிவிட்டான்...
ஐவரின் மனைவியாய் இருந்தும் அவளுக்கு அறம் வழங்கப்படவில்லை..
ஐவரின் மனைவி என்பதாலோ!
பாரத போருக்கான பட்டாபிஷேகம் அது.
பதிகள் எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்க
அவள் பந்தயப் பொருளானால்..
மானத்திற்காக மன்னனை வேண்டினால்,
தர்மத்தின் காவலர்களை சாடினால்
அங்கே தலைகவிழ்ந்த தர்மம்
தரைமட்டமானது
கணவன்கள் எல்லாம் கைகட்டி நிற்க
கண்ணபிரான் மட்டுமே கைகொடுத்தான்
அதுவும் கடைசி நொடியில்...
அங்கே கண்கண்ட தெய்வமான
கணவன்மார்கள் கண்ணிருந்தும் குருடர்கள்
பஞ்சபாண்டவர்களான ஒரே பத்தினிக்கே
பாதுகாப்பில்லை எனில்
பெண்களின் பாதுகாவலர்கள் என பறைசாற்றும் பரமவீரர்கள் யாரோ? !
அக்னியிலிருந்து பிரவேசித்தவள் அகிலத்தை அக்னி பிழம்பாக்கினாள்.
இது திரௌபதியின் விதியல்ல
இந்த புவியில் இன்னும் பல பெண்களுக்கு இழைக்கப்படும் சதி
*********************************
பவித்தரமானவள் என்று புரியவைக்க
ஒருத்தி அக்னிக்குள் பிரவேசித்தாள் - சீதை
பவித்திரமற்றதன்மையை அடையவே ஒருத்தி அக்னியிலிருந்து பிரவேசிக்கிறாள் - திரௌபதி