மோனிஷா நாவல்கள்
துமி - நானும் நாவலும்
Quote from monisha on October 24, 2020, 9:08 PMவாழ்த்துக்கள் துமி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள் துமி
உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்.
உங்கள் அனுபவங்களை கீழே உள்ள Reply பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Uploaded files:Quote from Dhumi on November 3, 2020, 10:15 PMநானும் நாவலும்… இல்லை இல்லை… நானும் வாசிப்பும்! இப்படி ஆரம்பிச்சா தான் அது சரியா இருக்கும்.
அரசு பேருந்து சரியான நேரத்துக்கு வந்தா வாயை பிளக்கம் அளவுக்கு சரியான கிராமம் அது. வாசிப்புனா என்னனு கேக்குற ஊர் அது! அங்க எல்லாம் கதை படிக்கறேன்னு சொன்னா, "கதையெல்லாமா படிப்பாங்க?? என்ன அதிசயம் இது!!" என வியக்கும் மக்கள் வாழும் இடம். அங்க தான் நான் வளர்ந்தேன்.
வாசிக்கற பழக்கம் எப்போ ஆரம்பிச்சிதுனு தெரியல… மே பி மூணாவது படிக்கறப்ப ஆரம்பிச்சிருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு பக்கத்தில இருக்க கடையில தான் எப்பவும் கதை புக் வாங்குவேன். கதை புக்குனா நாவல்லாம் கிடையாது. தினசரி நாளேடுகளோட வர்ற இணைப்பு மலர்கள் தான். உதாரணமா சிறுவர் மலர், தங்கமலர், வாரமலர் இப்படியான புத்தகங்கள் தான். அப்பொழுதெல்லாம் என் அகராதியில் இவை தான் புத்தகங்கள்.
செலவுக்காக தினமும் வீட்டில் ஒரு ரூபாய் தருவாங்க. அதை வாங்கி பத்திரமா வச்சிருந்து கதை புத்தகம் வாங்கனும். அதுவும் காலையிலேலாம் தரமாட்டாங்க. கடைக்கு வர்றவங்க செய்தி தாள் படிச்சி முடிச்சிட்டு போன பின்னாடி மதியம் தான் வாங்க முடியும். வாங்கியதை மத்த பிள்ளைங்க பாக்காம பாத்துக்கணும். தப்பி தவறி பாத்துட்டா நம்ம கதை அவ்வளவு தான். டீச்சர்கிட்ட போட்டு குடுக்கமா இருக்க தாஜா பண்ணனும். டீச்சர்கிட்ட விசயம் போய்ட்டா நம்மளோட வீரவரலெல்லாம் நோண்டப்பட்டு அடி வெளுத்திருவாங்களே!
ஐம்பது பைசா அந்த கதை புத்தகம். சில நாள் கிடைக்காது. பல நாள் மீதி காசு தரமாட்டாங்க. உள்ள என்ன கதை இருக்கும்ன்ற சுவாரசியத்திலே மீதி காசை வாங்க மறந்திடறது. அப்படியே நாட்கள் ஓடுச்சு, நாலாவது படிக்கிற வரை.
ஊருக்குள்ள பழைய புத்தகம் எடைக்கு வாங்குபவன் வர்ற வரை நாளும் பொழுதும் கதையோட போன எனக்கு அன்னைக்கு விழுந்துச்சு இடி மாதிரி அடி. வீட்டுக்கு போய் பாத்தா, "மூணு கிலோக்கு இதையெல்லாம் காசு குடுத்து வாங்கி வச்சுருக்க… நீ காசு குடுத்து வாங்குனதுல பாதி கூட அவன் தரலனு…" அம்மா சொல்ல, ஒரே அழுகை தான். என் அழுகை தாங்கமா அன்னைக்கு வச்சாங்க பாருங்க அடி! அடுத்த இரண்டு வருசமும் எந்த புத்தகமும் வாங்கலையே! ஆனாலும் குட்டியூண்டு பேப்பர் கிடைச்சாலும் ஒளிச்சி வச்சி படிச்சிடுவேன்.
ஏழாவது படிச்சிட்டு இருந்தப்ப, எதிர்த்த வீட்டுக்கு ஒரு அக்கா புதுசா குடி வந்தாங்க… அவங்க மூலமா தான் எனக்கு நாவல் அப்படிங்கற ஒரு விசயமே தெரிஞ்சிது!! அப்படி தான் என்னோட நாவல் வாசிக்கும் அனுபவமும் ஆரம்பிச்சிது!!
அவங்க வீட்டுல மினி லைப்ரரியே வச்சிருப்பாங்க… எப்ப போனாலும் எதாச்சும் ஒரு புக் எனக்கு வாசிக்க குடுப்பாங்க… ரமணிசந்திரன், காஞ்சனா ஜெயதிலகர், எல்.சி. திவாகர், ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தரராஜன் னு நிறைய பேர் சொல்லி படிக்க சொல்லுவாங்க… இந்த பேராலெம்மா அப்போ எனக்கு ஏதோ ஏலியன் லாங்குவேஜ் மாதிரி தான் இருக்கும்… படிக்க ஏதோவொரு கதைனு வாங்கி படிச்சிட்டு குடுத்துடுவேன்… எனக்கு அப்போ வித்தியாசம்லாம் தெரியாது…
இப்படி பக்கத்து வீட்டு அக்காகிட்ட புக் வாங்கி படிக்கவும் வீட்டுல செம்ம திட்டு… நான் திட்டு வாங்கறதை பாத்துட்டு அந்த அக்காவே புக் தரதை நிறுத்திட்டாங்க… வருத்தங்கள்… அப்பறமா வீட்டுல யாரும் இல்லாதப்ப நைஸா போய் வாங்கிட்டு வந்து படிப்பேன்… அப்பறம் ஸ்கூல்லையும் க்ளாஸ் ரூம் லைப்ரரினு ஒன்னு ஓபன் பண்ணினாங்க… அதுவரை பெரிய பெரிய பீரோக்குள்ள தூங்கிட்டு இருந்த புத்தகமெல்லாம் அப்ப தான் க்ளாஸ் ரூம்க்கு வந்துச்சு… அந்த புத்தகம்லாம் வர்றதுக்கு முன்னாடி க்ளாஸ்லையே நான் தான் வாயாடி… வந்த பின்னாடி அட்டெண்டன்ஸ் செக் பண்ணினா தான் நான் இருக்கிறதே மத்தவங்களுக்கு தெரியும்… அப்படி ஒரு படிப்பு சிகரம்... சுதந்திரத்துக்கு முன்னாடி வந்து கதை புத்தகமெல்லாம் அப்ப தான் வாசிச்சேன்… அப்போ படிச்ச வள்ளலார் பத்தின புத்தகம் என்னோட வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு… இன்ன வரை அதோட வீரியம் கொஞ்சமும் குறையல…
இந்த மாதிரி நான் புத்தகம் படிக்கறதுக்கும் ஆப்பு வந்துச்சு… ஒன்பதாவது படிக்கறப்ப அந்த சிஸ்டமை ஒரேயடியா தூக்கிட்டானுங்க… பத்தாவது படிக்கும் போது படிப்புக்காக வேற ஊருக்கு மூவ் ஆனப்ப பக்கத்து வீட்டு அக்காகிட்ட கடன் வாங்கி நாவல் படிக்கிற பழக்கம் அப்படியே நின்னுடுச்சு…
நாளெல்லாம் மாசாமா மாறி வருசமே ஓடி காலேஜ் படிக்கும் போது தான் என்னோட வாசிக்கத் பழக்கம் ஆரம்பமாச்சு… காலேஜ் லைப்ரரில தான் பர்ஸ்ட் டைம் பொன்னியின் செல்வன் பாத்தேன்… எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்… என்னையே மறந்து, என்னை சுத்தி இருக்கிறதை மறந்து, சாப்பிட, தூங்க மறுத்து படிச்ச கதை… சில நேரம் போதும் டா படிக்கவே முடியலனு பல நாளாக திறக்காம வச்ச கதை… அப்புறமும் விடாமல் படிச்சேன்… பொன்னியின் செல்வன் எனக்குள்ள ஏற்படுத்தின தாகங்கள் நிறைய… அதுக்கப்பறம் கல்கி ஐயாவோட புத்தகங்களாக தேடி தேடி படிச்சேன்… நடுவுல புதுமைபித்தன் கதைகளையும் படிச்சேன்… "இதான் உங்க சமுதாயமாடா??"னு சமுதாயத்தை அவ்வளவு அசால்ட்டா தூக்கி போட்டு மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாரு புதுமைபித்தன்.
எதையே நெட்ல தேடப்போய் "இருள் மறைத்த நிழல்" கதையை படிச்சேன்… முதன் முதல் ஆன்லைன் கதை… ஒரே நாள்ல படிச்சேன்… அப்பறம் அப்படியே தேடி தேடி எத்தனையோ கதைகளை ஆன்லைன்ல படிச்சிருக்கேன்… எத்தனை விதமான எழுத்தாளர்கள், எத்தனை விதமான எழுத்துக்கள், விதவிதமான கற்பனைகள், நாசூக்காக சொல்லப்படும் கருத்துகள், வார்த்தை பிரோயகங்கள்னு ஒவ்வொன்னா கவனிக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு கதையும் எனக்கு ஒவ்வொரு அனுபவத்தை கற்று கொடுத்தன.
கதைகள் வெறும் கதைகளாக மட்டும் என்னுடைய வாழ்க்கையில் இல்லை… புத்தகங்கள் என் வாழ்க்கையில் வெறும் ஏடுகளாய் மட்டும் நின்றதில்லை… தனிமையின் தோழமையாக, உரையாட அறிவுள்ள தோழியாக, பாதை காட்டும் நல்வழிகாட்டியாக எத்தனையோ தருணங்களில் என் கைகளில் தவழ்ந்துள்ளது! இத்தகைய புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கும், அதை பதிப்பித்தவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
இப்படிக்கு
துமி...
நானும் நாவலும்… இல்லை இல்லை… நானும் வாசிப்பும்! இப்படி ஆரம்பிச்சா தான் அது சரியா இருக்கும்.

Quote from monisha on November 5, 2020, 8:45 PMவாசிப்பும் நீங்களும் இணைபிரியாத தோழர்கள் என்று இந்த பதிவின் ஒவ்வொரு வரியிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.
நேற்றைய வாசகி இன்றைய எழுத்தாளினி துமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்க அனுபவம் அருமை
வாசிப்பும் நீங்களும் இணைபிரியாத தோழர்கள் என்று இந்த பதிவின் ஒவ்வொரு வரியிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.
நேற்றைய வாசகி இன்றைய எழுத்தாளினி துமிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்க அனுபவம் அருமை
Quote from Guest on November 10, 2024, 9:37 AMDogs diagnosed early can achieve remission for several years with prednisone, vitamin E, antioxidants, and ursodeoxycholic acid priligy side effects Cells were then isolated using centrifugation at 8000xG for 1 minute followed by RBC lysis BioLegend for 10 15 minutes
Dogs diagnosed early can achieve remission for several years with prednisone, vitamin E, antioxidants, and ursodeoxycholic acid priligy side effects Cells were then isolated using centrifugation at 8000xG for 1 minute followed by RBC lysis BioLegend for 10 15 minutes
Quote from Guest on December 1, 2024, 5:47 AMExogenous lipids promote the growth of breast cancer cells via CD36 cytotec online pharmacies 0 x 103 cells ВµL in 17 65
Exogenous lipids promote the growth of breast cancer cells via CD36 cytotec online pharmacies 0 x 103 cells ВµL in 17 65
Quote from Guest on January 16, 2025, 3:42 AMResearchers don t know exactly why hormonal therapies cause hair loss, but by lowering estrogen levels they reduce the growth of hair follicles over the counter fertility drugs
Researchers don t know exactly why hormonal therapies cause hair loss, but by lowering estrogen levels they reduce the growth of hair follicles over the counter fertility drugs