You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

நீ நதி போலே ஓடி கொண்டிரு - பாரதி பாஸ்கர்

Quote

பெண்களின் ஏக்கங்களையும், கனவுகளையும் கோர்த்து ஒரு அழகிய மாலையாய் என் கரங்களில் தவழ்ந்தது இந்த "நீ நதி போலே ஓடிக்கொண்டிரு" புத்தகம். ஏற்கனவே "அப்பா என்னும் வில்லன்" புத்தகத்தின் வழியாக பெண்களின் உணர்வுகளையும், வாழ்க்கை போராட்டங்களையும் தன் எழுத்துக்கள் மூலமாக இந்த உலகிற்கு பறைசாற்றிய பேச்சாளரும் எழுத்தாளருமான திருமதி பாரதி பாஸ்கர் தான் இந்த அறிய புத்தகத்தின் ஆசிரியரும் கூட. இருபது கதைகள், அதாவது தன் வாழ்நாளில் தான் கடந்து வந்த அற்புதமான பெண்களையும், வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் பற்றி தான் இந்த கதைகள் அமைந்துள்ளன.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கதைக்களத்தைக் கொண்டுள்ளது. பாராட்டிற்காக ஏங்கும் சரோ, சமூத்தில் நிலவும் கொச்சை சொற்களை கேட்க தயங்கும் கல்பனா, அம்மாவை பிரிய தயாராக இருக்கும் உஷா, ஜப்பானிய முறையான சுமோ (sumo), இளமைக்கும் முதுமைக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகள், அழகால் அழிக்கப்பட்ட வள்ளி, அவமானங்களை தாங்காத ஆநித்ரா, பிள்ளையின் எதிர்காலம் பற்றி பயம் கொள்ளும் மீனா, கணவரை இழந்த கமலாம்மா, புதுப்பெண் ஆண்டாள் போன்ற பெண்கள் வெறும் கதாப்பாத்திரங்கள் மட்டும் அல்ல. அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு போராட்டவாதிகள். அவர்கள் சந்திக்கும் சவால்களும், கடந்து வரும் சூழ்நிலைகளும் வெவ்வேறு. அவர்கள் வாழ்க்கையை கையாளும் யுக்திகளும் வித்தியாசமானது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் வாழ்வியல் வித்தியாசங்களை ஆழமாக இந்த கதைகள் கூறுகின்றன. பொதுவாகவே ஆண்கள் மேற்கொள்ளும் பயணத்தை விட பெண்கள் மேற்கொள்ளும் பயணத்தில் தான் சிக்கல்கள் அதிகம். அந்த சிக்கல்களை கடந்து போனால் தான் இலக்கை அடைய முடியும். இதை தான் இந்த புத்தகத்தின் தலைப்பு நமக்கு சொல்கிறது. நதியின் துவக்கம் வேறு, அது போகும் பாதைகள் வேறு, சந்திக்கும் தடைகள் வேறு. ஆனால் நதி ஒரு போதும் தேங்கியதில்லை. ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. அதை போல தான் பெண்களும். ஆயிரம் தடைகள் வந்த போதும் இலக்கை நோக்கிய பயணத்தை மட்டும் நிறுத்தவேக் கூடாது. அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளையும், குழப்பங்களையும் தீர்க்கும் வழிமுறைகளை தான் ஆசிரியர் நமக்கு மறைமுகமாக சொல்கிறார். இதில் வரும் கதைகளை நம் வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்புபடுத்தி கொள்ளும் வகையில் மிகவும் எதார்த்தமாக எழுதியுள்ளார் திருமதி பாரதி பாஸ்கர்

Review By VAISHNAVI

You cannot copy content