மோனிஷா நாவல்கள்
மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 23

Quote from monisha on February 14, 2026, 10:10 PMஅத்தியாயம் – 23
இரவு நீளமாக விரிந்தது. அந்தப் பெரிய பங்களாவின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விதமான மூச்சுத்திணறல் பரவியிருந்தது. அது ஸ்ரீதரின் நுரையீரலுக்குள் மட்டும் அல்ல, கவிதாவின் மனதிற்குள்ளும் தான்.
தூக்கம் வராமல் படுக்கையிலிருந்து எழுந்தவள், தோட்டத்திலிருந்த இருக்கையில் வந்து அமைதியாக அமர்ந்தாள். இருளின் மிச்சங்கள் இன்னும் அகலவில்லை. விடியலுக்கும் இருளுக்கும் இடையிலான அந்த அந்திப்பொழுதைப் போலவே, ஸ்ரீதரும் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருந்தான்.
அவனால் சரியாக உறங்க முடியவில்லை; அவன் மூச்சு விடச் சிரமப்படுவதைப் பார்க்க அவளால் முடியவில்லை. “யாருக்கும் கால் பண்ணாத கவி... கொஞ்ச நேரத்துல சரியாயிடும்” என்று அவன் சொல்லும் சமாதானங்கள் எதற்கும் அவளிடம் பதில் இல்லை. நோயின் வலியை விட, இயலாமை கொடியது. அவன் துடிப்பதை கையறு நிலையில் பார்த்துக் கொண்டிருப்பது அவளைச் சிதைத்தது.
அன்று அவளது அம்மாவிற்கும் இதே போலத்தான் நிகழ்ந்தது. அவள் கண் முன்பாகவே அந்த உயிர் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து காணாமல் போனது. ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த நினைவுகள் இப்போது ஸ்ரீதரைக் காணும்போதும் அவளை வாட்டியது. தான் ஏதோ பெரிய பாவம் செய்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அதனால்தான் தான் நேசிக்கும் மனிதர்களின் மரண வலியை இவ்வளவு அருகிலிருந்து பார்க்க வேண்டியிருக்கிறதோ?
அவன் அருகே அமர்ந்து அவளால் அழக்கூட முடியவில்லை. அதனால்தான் அவன் உறங்கிய பிறகு இங்கே வந்து அமர்ந்தாள். அந்தத் தனிமையும் நிசப்தமும் இப்போது அவளுக்கு மருந்தாகத் தேவைப்பட்டது. முகத்தைப் பொத்திக்கொண்டு தன் வேதனையை எல்லாம் கண்ணீராகக் கொட்டித் தீர்த்தவள், ஒரு கட்டத்தில் மேஜை மீதே தலை சாய்த்துச் சோர்ந்து போனாள்.
“கவிதா...” என்ற மெல்லிய அழைப்பு அவளது மௌனத்தைக் கலைத்தது. நிமிர்ந்தாள். ரஞ்சன் நின்றிருந்தான்.
“போ இங்கிருந்து...” என்று சொல்லிவிட்டு மீண்டும் அதே போலத் தலை சாய்த்துக் கொண்டாள்.
“டீ எடுத்துட்டு வந்தேன். குடிங்க...” என்றவன், தேநீர் ஜாடியை மேஜையில் வைத்தான்.
“ஒன்றும் தேவையில்லை. எடுத்துட்டுப் போ.”
“நீங்க இப்போ இருக்கிற மனநிலைக்குக் கொஞ்சம் டீ குடிச்சா பெட்டரா இருக்கும்.”
அவள் எரிச்சலுடன் நிமிர்ந்தாள். “நான் உன்கிட்ட கேட்டேனா? போடான்னு சொன்னேன்ல!”
அவன் நகரவில்லை. மாறாக, ஒரு நாற்காலியை அவள் எதிரே இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவன் கண்கள் அவளை ஒருவித தவிப்புடன் நோக்கின.
“உனக்குக் காது கேட்கலையா?”
“கேட்டுச்சு...” என்றான் நிதானமாக.
“அப்புறம் எதுக்குடா இன்னும் இங்க உட்கார்ந்திருக்க?”
“நீங்க அழுது நான் பார்த்ததே இல்லை... அதான் பார்க்கலாம்னு.”
அவள் உதடுகள் கோபத்தில் துடித்தன. “சைக்கோபாத்தாடா நீ?”
“சின்னப் பையனா தெரியிறதுக்கு, சைக்கோபாத்தா தெரியிறதுல தப்பில்லை” என்றான் அதே நிதானத்துடன்.
“நான் உன்னை ஏளனம் பண்ணதுக்கு பதிலுக்குப் பதில் பேசுறியா?”
“இல்லை... உங்ககிட்ட கொஞ்சம் பேசலாம்னு வந்தேன்.”
அவள் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, மூச்சை ஆழமாக இழுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள். “உனக்கும் எனக்கும் இடையில ஒன்னும் இல்லைன்னு தெளிவா சொல்லிட்டேன்.”
“நான் நம்மளப் பத்திப் பேச வரல... ஸ்ரீதரைப் பத்திப் பேசணும்.”
“ஸ்ரீதரைப் பத்தியா?”
“ஆமா”
“என்ன பேசணும்?”
“இந்த பத்து நாள் ஸ்ரீதர் இங்கே வந்து தங்கக் காரணம், அமைதிக்காகவும் சந்தோஷத்துக்காகவும்தான். ஆனா நீங்க இப்படி அழுதுட்டு இருந்தா அது எப்படி நடக்கும்?”
“ஓ வாவ்! என்னை விடவும் உனக்கு அவன் மேல அவ்வளவு அக்கறையோ?” என்று உதட்டைச் சுழித்தாள்.
“அக்கறை இல்லை கவிதா... குற்றவுணர்வு. அன்னைக்கு அந்த டீ கடையில உங்களோட அவரைச் சேர்த்துப் பார்த்தப்போ எனக்குக் கொலைவெறியா இருந்துச்சு. தாங்கவே முடியல. அந்த கோபத்துலதான்" என்று நிறுத்தியவன் பின் மெதுவாக தொடர்ந்தான். "அந்தத் தப்பை இனிமே என்ன செஞ்சாலும் என்னால சரி பண்ணவே முடியாது. முடியவே முடியாது. அதனாலதான் அவருக்குச் சப்போர்ட்டா இந்த பத்து நாள் இங்கே இருக்கணும்னு வந்தேன்.”
கவிதா மௌனமாக அவனைப் பார்த்தாள். அவன் குரலில் இருந்த நேர்மை அவளை என்னவோ செய்தது.
“நேத்து நீங்க சொன்னீங்களே... எனக்கு எல்லாம் கத்துக்கொடுத்தது நீங்கதான்னு. அப்படி நீங்க கத்துக்கொடுத்த ஒரு விஷயத்தைத்தான் இப்போ உங்களுக்கு ஞாபகப்படுத்தப் போறேன். என் பிறந்தநாள் அன்னைக்கு ஒரு பைக் ட்ரிப் கூட்டிட்டுப் போனீங்களே... அப்போ நீங்க ஒன்னு சொன்னீங்க: ‘வாழ்க்கை ஒரு இலக்கில்லாத பயணம் மாதிரி. தொடங்குற இடம் தெரியும், ஆனா முடியுற இடம் தெரியாது. அதனால ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழக் கத்துக்கணும். Journey is better than the destination’. இது நீங்க சொன்னதுதான்.”
இருள் விலகத் தொடங்கி, சூரிய வெளிச்சம் அவர்கள் மீது படரத் தொடங்கியது.
“ஸ்ரீதர் இங்கே வந்தது அந்த ஜர்னிக்காகத்தான். டெஸ்டினேஷன் எதுவா வேணா இருந்துட்டுப் போகட்டும். அதைப் பத்தி யோசிச்சு இந்த பத்து நாளோட சந்தோஷத்தைக் கெடுத்துக்காதீங்க.”
அவள் திகைத்துப் போய் அமர்ந்திருக்க, “எல்லாமே நீங்க கத்துக்கொடுத்ததுதான்” என்று சொல்லிவிட்டு எழுந்தான். “டீ குடிங்க... இஞ்சி, மசாலா எல்லாம் போட்டு ஸ்ட்ராங்கா போட்டிருக்கேன். You'll feel better.”
அவன் உள்ளே செல்லும்போது ஸ்ரீதர் எதிரே வந்தான்.
“குட் மார்னிங் ரஞ்சன். கவிதா வெளியே இருக்காளா? ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தீங்களோ?” என்று ஸ்ரீதர் கண்ணடிக்க, “இல்லை, அவங்களுக்கு டீ போட்டுக் கொடுத்தேன்” என்றான் ரஞ்சன்.
“கூட உட்கார்ந்து குடிக்கலையா?”
“நான் டீ குடிக்க மாட்டேன். அவங்களுக்கு மட்டும் தான் போட்டேன்.”
“குடிக்க மாட்ட... ஆனா போடுவ ம்ம்ம்... புரியுது” என்று அவன் தோளைத் தட்டிவிட்டு ஸ்ரீதர் தோட்டத்திற்கு வந்தான்.
அவனைப் பார்த்த கவிதா, “எப்போ எழுந்த?” என்று கேட்க, அவன் அவள் அருகே அமர்ந்தான். “இப்போதான்" என்று விட்டு , "வாவ், டீ வாசனையே நல்லா இருக்கே! உனக்காக ஸ்பெஷலா போட்டிருக்கான் போல” என்று அவன் கிண்டல் செய்ய, அவள் முறைத்தாள்.
“ரொம்ப பண்ணாத... உனக்குத்தான் டீ பிடிக்கும்ல” என்று அவளுக்கும் தனக்கும் ஊற்ற, அதனை எடுத்து குடித்தவள், "இதனால எல்லாம் என் கோபம் குறையாது" என்றாள்.
ஸ்ரீதர் மெதுவாக, “கோபமும் கேன்சர் மாதிரிதான் கவி, அளவுக்கு மீறி அதை வளர விட்டோம்னா அப்புறம் அது நம்மையே அழிச்சுடும்” என்றான்.
“ஒ கம்மான் ஸ்ரீதர் இந்த கேன்சர் தத்துவத்தை எல்லாம் நிறுத்திட்டு இன்னைக்கு நாளை எப்படி செலவு பன்றதுன்னு யோசி”
“கரெக்ட்தான்” என்றவன் யோசித்து விட்டு, “நல்ல ரொமாண்டிக் மூவி பார்க்கலாமா?” என்று கேட்டான்.
“வேணா சீரிஸ் பார்க்கலாம்... பெரிய சீரிஸ் டைம் போறதே தெரியாம”
“ஐ லைக் திஸ் ஒன்” என்றான். அவர்கள் சிரித்து பேசிக் கொண்டே தேநீரை பருகுவதை ஜன்னல் வழியாக கண்ட ரஞ்சன் திருப்தியுடன் தன் அறைக்கு திரும்பினான்.
அன்று முழுக்க அவர்கள் ஒரு காதல் கலந்த நகைச்சுவை சீரிஸைப் பார்த்துச் சிரித்து மகிழ்ந்தனர். ரஞ்சன் அந்தப் பக்கமே வரவில்லை. அன்று ஸ்ரீதருக்கு மூச்சுத் திணறல் வராதது கவிதாவுக்கு நிம்மதியைத் தந்தது.
மறுநாள் காலை, அதேபோல உணவு மேஜையில் தேநீர் ஜாடியும் அதன் அடியில் ஒரு காகிதமும் இருந்தது. ‘Have a nice day’ என்ற ரஞ்சனின் கைப்பட எழுதிய வாசகத்தைப் பார்த்து அவளையும் அறியாமல் புன்னகைத்தாள்.
சில நேரங்களில் காதலும் நம்பிக்கையும் ஒரே ஒரு கோப்பை தேநீரில் கூட உணர்த்தப்படலாம். அதனை அவள் நிதானமாக ரசித்து பருகுவதை, அவன் மாடியில் மறைவாகப் பார்த்தபடி முகம் மலர்ந்தான்.
அந்த நாளும் அமைதியுடன் தொடங்கியது. ஆனால், மீண்டும் ஸ்ரீதருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அன்று மாலை அஜய் - ஆனந்தி தம்பதி குழந்தையுடன் வீட்டிற்கு வந்ததில், மீண்டும் சூழல் கொஞ்சம் சுமுக நிலைக்குத் திரும்பியது.
கவிதாவைப் பார்த்ததும் ஆனந்தி நெகிழ்ச்சியுடன் அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
“எப்படி இருக்க கவி?”
“நல்லா இருக்கேன் ஆனந்தி.” அதன் பின்பு குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டவள், “ரொம்ப குட்டியா அழகா இருக்கா... அச்சோ, கை குழந்தையைத் தூக்கிட்டு இவ்வளவு தூரம் வரணுமா?” என்று வினவினாள்.
“உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு, அதான் வந்தோம்” என்றாள் ஆனந்தி.
“எனக்கும் உன்னைப் பார்க்கணும்னுதான் இருந்தது... ஆனா வர முடியல.”
“அதான் நாங்களே பேர் வைக்கிற ஃபங்ஷன் முடிச்சுட்டு நேரா இங்கே வந்துட்டோம்.”
“சீரியஸ்லி, தேங்க்ஸ் ஃபார் கம்மிங்,” என்று கவிதா சொல்ல, “தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு நம்ம அந்நியப்பட்டுப் போயிட்டோமா?” என்று ஆனந்தி செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
அதன் பிறகு குழந்தையை வாங்கிக் கொண்ட ஸ்ரீதர், “குழந்தைக்கு என்ன பேர் வச்சீங்க?” என்று கேட்க, ஆனந்தி அஜய்யின் முகத்தைப் பார்த்துவிட்டு, “கவிதா” என்றாள்.
“என்ன?” கவிதா அதிர்வுடன் இருவரையும் பார்த்தாள்.
“அவருக்கு அதுதானே பிடிச்ச பெயர்... அவரோட பெஸ்ட் பிரண்டோட பேர்” என்றாள் ஆனந்தி.
“வேற நல்ல பேரே கிடைக்கலையா உங்களுக்கு?” என்று கவிதா கடுகடுக்க, “ஏன், இந்தப் பேருக்கு என்ன குறை? இது நல்ல பேர்தான். கவிதா குட்டி...” என்று ஸ்ரீதர் குழந்தையைக் கொஞ்ச, கவிதா விடுவிடுவென்று வெளியே எழுந்து வந்துவிட்டாள்.
ஆனந்தி அவளைப் பின்தொடர்ந்து வந்தாள். கவிதா தோட்டத்து நாற்காலியில் அமர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சு கவி?” என்று கேட்டபடி ஆனந்தி அவள் அருகே அமர்ந்தாள்.
“இரண்டு நாளைக்கு முன்னாடி எனக்கும் அஜய்க்கும் செம சண்டை” என்றாள் கவிதா.
“நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறது என்ன புதுசா?”
“இல்ல, அவன் என்னை விட்டு ரொம்ப தூரம் விலகிப் போயிட்டான்னு நினைச்சேன்.”
“எவ்வளவு தூரம் விலகிப் போனாலும் அஜய்யால உன்னை விட்டுக்கொடுக்க முடியாது கவி. நீதான் அவனோட ஒன் அண்ட் ஒன்லி பெஸ்ட் பிரண்ட்.”
“ஆனா நான் அவனை விட்டுக்கொடுத்துட்டேன். சொல்லாம கொள்ளாம விலகிப் போயிட்டேன்.”
“உண்மைதான்... நீ போன பிறகு அஜய் ரொம்ப உடைஞ்சு போயிட்டான். அதனால்தான் இந்த குழந்தை பொண்ணா பிறந்தா உன் பேரை வைக்கணும்னு நினைச்சான். உன்னை மாதிரி அவளை வளர்க்கணும்னு ஆசைப்பட்டான்.”
“என்னை மாதிரியா?” என்று விரக்தியாகப் புன்னகைத்தாள் கவிதா.
“நீ அவனுக்குப் பிரண்ட் மட்டும் இல்ல... ஒரு ரோல் மாடலும் கூட.”
“நானா? கொஞ்சம் கூட யோசிக்காம புத்திக்கெட்டத்தனமா ஒரு கையெழுத்துப் போட்டேனே... அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு.”
“இப்பவும் நீ ரஞ்சனை கல்யாணம் பண்ணது தப்பான முடிவுன்னு நினைக்கிறியா?” என்று ஆனந்தி நம்ப முடியாமல் கேட்டாள்.
“தப்பான முடிவு இல்ல... முட்டாள்தனமான முடிவு!”
“சத்தியமா இல்ல கவி. உன் வாழ்க்கையில நீ எடுத்த பெஸ்ட் டெசிஷன் அதுதான்.”
“என்ன?”
“நீ அவன் மேல இருக்க கோபத்துல விலகிப் போயிட்ட... ஆனா அவன் உன் காதலுக்காக நீ விட்டுட்டுப் போன எல்லாத்தையும் கட்டிக் காப்பாத்திட்டு இருக்கான். அஜய்யைத் தேற்றினதே அவன்தான்.”
ஆனந்தி சொன்னது கவிதாவின் மனதிற்குள் பெரும் அலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் கிளம்பும்போது கவிதா, “ஐம் சாரிடா... ஐம் சோ சாரி” என்று நண்பனை அணைத்துக் கொண்டாள்.
அஜய் உடனே, “அப்போ உனக்கு ஒரு பையன் பிறந்தா என் பேரை வைப்பல்ல?” என்று கேட்க, “போடா லூசு” என்று அவன் தோளில் அடித்தாள். எல்லோரும் சிரித்தனர்.
அவர்கள் புறப்பட்ட பிறகு அந்த வீடே வெறிச்சோடிப் போனது போலானது. இரவு உணவு அமைதியாகக் கழிந்தது. ஸ்ரீதர் அவர்கள் இருவரையும் சீட்டு விளையாட அழைக்க, ரஞ்சன் தனக்கு வேலை இருப்பதாகச் சொன்னான். ஆனால் ஸ்ரீதர் கட்டாயப்படுத்தி அழைக்கவும், மறுக்க முடியாமல் அமர்ந்தான்.
அவர்கள் இருவரும் பேசிச் சிரித்துக் கொண்டே விளையாட, கவிதாவின் கவனம் அதில் ஒட்டவில்லை. ரஞ்சனின் அருகாமை அவளைப் பதற்றமடைய வைத்தது. 'அவனை வெறுக்கிறேன்' என்று திரும்பத் திரும்பத் தனக்குள் சொல்லிக் கொண்டாலும், அவனது நெருக்கம் அவளை என்னவோ செய்தது. அதேபோல் ஸ்ரீதரைத் தான் காதலிக்கிறேன் என்று சொல்வது ஒருவேளை உண்மையில்லையோ என்ற பயம் அவள் மனதைக் குத்தியது.
“கவி கார்டு போடு... ஏய் கவி!” என்று ஸ்ரீதர் உசுப்பவும், அவள் நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள்.
“என்ன பார்க்குற? இது உன் டர்ன்” என்றான் ஸ்ரீதர்.
அவள் இருவரையும் பார்த்தாள். பின்னர் கையிலிருந்த சீட்டுகளைக் கீழே வைத்துவிட்டாள். “இல்ல, எனக்கு எதுவும் செட் ஆகல... நீங்க விளையாடுங்க,” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.
அவள் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.
“நீ என் லைஃப்...” ஸ்ரீதரின் குரல்.
“நான் உங்களை வெறுக்க முடியாது...” ரஞ்சனின் குரல்.
“உன் ஈகோ...” அஜய்யின் குரல்.
மூன்று குரல்களும் மாறி மாறி அவளுக்குள் ஒலித்தன. தலையைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்தாள். அவர்கள் இருவரையும் தனித்தனியாக எதிர்கொள்ளும்போது ஏற்படாத பயமும் குழப்பமும், ஒன்றாகப் பார்க்கும்போது உண்டாகிறது.
உயிர் பயம், காதல் பயம் - இரண்டிற்கும் இடையில் அவள் தவித்துக் கொண்டிருந்தபோது, “கவி” என்று ஸ்ரீதர் கதவைத் தட்டினான். கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
“என்னாச்சு? ஏன் திடீர்னு எழுந்து வந்துட்ட?”
“அதான் சொன்னேனே, எனக்கு எதுவும் சரியா செட் ஆகலன்னு,” என்று சொல்லிக்கொண்டே வந்து படுக்கையில் அமர்ந்தாள். அவனும் அருகே அமர்ந்து அவள் கன்னத்தைப் பற்றித் திருப்பினான்.
“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு பேபி” என்று வாஞ்சையுடன் கேட்டான்.
“ஒன்றும் இல்லைன்னு சொல்றேன் இல்ல” என்று அவள் அழுத்தமாகச் சொல்ல, “ஒன்றுமே இல்லையா?” என்றவன் அவள் கன்னத்தை மென்மையாக வருடியபடியே தன் முகத்தருகே இழுத்தான்.
துடிக்கும் அவள் உதடுகளை அவன் பார்க்க, அவள் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டாள். ஆனால் அவன் இதழ்கள் அவள் உதடுகளைத் தீண்டுவதற்குப் பதிலாக, செவிகளுக்கு அருகே சென்றன.
“ரஞ்சனை நீ காதலிக்கிறதா உன் மனசு சொல்லுது, இல்லையா?” என்றான் மெல்ல.
அவள் விழிகளை விரித்தாள்.
“உன் மனசுல இருக்கிறதைக் கண்டுபிடிச்சுட்டேனா?” என்றவன் நக்கலாகப் புன்னகைத்தான்.
“என் மனசுல என்ன இருக்குன்னு எனக்கே புரியல.”
“புரிஞ்சுக்கணும்னு நீ விரும்பல, அதான் உண்மை.”
“ஆமா, நான் விரும்பல, ஏன்னா எனக்கு நீ வேணும். உன் காதல் வேணும்... எப்பவும் வேணும்” என்று உணர்ச்சிவசப்பட்டவள், அவனை அணைத்து முத்தமிட்டாள்.
அவளது தீவிரம் ஸ்ரீதரைத் திகைக்க வைத்தது. அவள் அவனது சட்டையைக் கழற்றி, அவன் உடல் முழுவதும் தன் முத்தங்களைப் பதித்தாள். அவனது செயற்கைக் காலைக் கழற்றும்போது ஸ்ரீதர் தடுத்தான். “வேண்டாம் கவி...”
“எனக்கு வேணும் ஸ்ரீ...”
அவனைப் படுக்கையில் சாய்த்தாள். அவளது மென்மையான தீண்டல்களில் அவன் தன்னை மறந்தான். நீண்ட நேர நெருக்கத்திற்குப் பிறகு, அவன் தோள் வளைவில் சாய்ந்து கழுத்தில் முத்தமிட்டவள், “இதுக்கு பேர் என்ன வேணா வச்சுக்கோ... ஐ டோன்ட் கேர்... ஆனா எனக்கு நீ வேணும்” என்றாள்.
“எனக்கு மட்டும் நீ வேணாம்னு தோணுமாடி?” என்று அவளை இறுக அணைத்து நெற்றியில் முத்தம் பதித்தான் ஸ்ரீதர்.
அந்த அறையில் ஒரு மெல்லிய நிசப்தம் பரவியது.
அத்தியாயம் – 23