மோனிஷா நாவல்கள்
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி?- கட்டுரை
Quote from bhagyasivakumar on January 11, 2020, 10:14 AMமுன்னுரை :
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பார்கள் ஆம் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.அத்தகைய அளவிட முடியாத மகிழ்ச்சியை உண்மையில் நாம் அனுபவிக்கிறோமா? உண்மையில் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோமோ? அதைப்பற்றி ஒரு சிறிய பார்வை.
மகிழ்ச்சி
சந்தோஷம்
ஆனந்தம்
இதற்கு எல்லாம் ஒரே அர்த்தம் தான் இதைத்தான் ஆங்கிலத்தில் "ஹேப்பி"என்கிறோம். தமிழில் மட்டும் ஏன் இவ்வளவு பெயர்? ஏனெனில் நாம் சூழ்நிலையை பொறுத்துதான் வார்த்தை யை பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக.
"நீங்கள் வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி"
"நான் எதைபற்றியும் கவலையில்லாமல் சந்தோஷமாக வாழ்கிறேன்"
"அருவியில் குளிப்பதே ஒரு தனி ஆனந்தம்"
இப்படி வாக்கியங்களுக்கு தகுந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். சரி பொதுவாக இந்த மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது?
வெற்றியடையும் போது
மற்றவர்கள் நம்மை பாராட்டும் போது
ஏதேனும் நல்லகாரியம் நடக்கும் போது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்பது வெளிநபர்களிடமிருந்தோ ,வெளிசூழ்நிலையிலிருந்தோ வருவதில்லை..அது நம் உள்மனதிலிருந்து வருகின்றன. ஆத்மா எனச் சொல்லப்படும் (inner soul) மூலம் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
விளக்கம் :
நம் உள்ளுணர்வு ஏற்படுத்தும் மகிழ்ச்சியானது எவ்வாறு அளவிடபடுகிறது என்றால் அது நம் மனநிலையை பொறுத்துதான். பொதுவாக மகிழ்ச்சியை அளவிடமுடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்வீர்கள் ஆனால் அது முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார் ஒரு ஜப்பான் விஞ்ஞானி. ஆம் நாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது எவ்வாறு அது தண்ணீரில் பிரதிபலிக்கிறது ,மகிழ்ச்சி குறையும் போது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்று ஆராய்ச்சி மூலம் சாதித்து காட்டியுள்ளார். அவர் பெயர் எமோட்டோ (psuedoscientist). அதாவது (human consciousness has an effect on the molecular of water) என்பதை விளக்கியுள்ளார். இந்த விவரம் நான் "மனமே மாமருந்து" என்ற புத்தகத்தை வாசிக்கும்போது தெரிந்துக்கொண்டேன். இப்படி மனிதனின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களானது நம்மையும் நம்மை சுற்றியுள்ளவற்றையும் பாதிக்கும் தன்மை உடையது. நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சுற்றியுள்ள மக்களும் மத்த பொருள்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது. நாம் கோபப்படும்போதோ அல்லது உணர்ச்சிவசப்படும்போதோ அதில் வெளிப்படும் உணர்வு நமக்கும் நம்மை சுற்றியுள்ளவற்றையும் பாதிப்படைய செய்யும். சரி நமக்கு கோபம் அடையும் போது நம் உடலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என்று கேட்டால்,நம் உடலில் இருக்கும் டாக்சின்ஸை அதிகப்படுத்தும் தமிழில் "நச்சுக்கள்" என்று கூறுவோமே அது தான். அதனால் தான் கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் என்று கூறுகிறோம். கோபத்தை கட்டுபடுத்தினாலே மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ளும். சரி கோபம் வந்துவிட்டால் எப்படி கட்டுபடுத்துவது ?கண்களை மூடிக்கொண்டு எண்களை வரிசைபடுத்துங்கள்.
அல்லது
தண்ணீர் மெதுவாக பருகுங்கள்
அல்லது
அந்த இடத்தை விட்டு நகருங்கள்இப்படி முயற்சி செய்தால் கோபம் ஓரளவு குறையும். கோபம் குறைய இன்னொரு வழியும் உண்டு ,அது என்னவென்றால் "மற்றவர்களின் குறையை கண்டு பிடிக்காமல் இருங்கள்"ஏனெனில் பெரும்பாலான கோபம் மற்றவர்களின் குறைகளை பார்ப்பதனால் தான் வருகிறது . "குறையொன்றும் இல்லை மலைமூர்த்தி கண்ணா" என்ற பாடலில் சொல்வதுபோல். குறையொன்றும் இல்லை என்பதை நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் இயல்பாகவே பழகவேண்டும். இயல்பாக பழகும்போது மற்றவரின் நிறைகளை மட்டுமே பார்க்கதோன்றும். அதற்காக குறைகளை சுட்டிக்காட்டி பேசக்கூடாது என்பதில்லை தேவைப்படும் இடத்தில் உண்மையான காரணங்களை முன்வைத்து அவர்களை காயப்படுத்தாதவாறு சுட்டிக்காட்டவேண்டும். உதாரணமாக
"நீ பேசியது தவறு" என்று சொல்வதற்கும் "இதை இப்படி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்வதற்கும்"வித்தியாசம் உள்ளது. சரி அப்படி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ளாமல் இருந்தால் அவர்களிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள். விலகிக்கொள்வது பல நேரங்களில் பாதி பிரச்சனையை தீர்த்துவிடும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் "சாக்கடையில் கல் விட்டு எரிந்தாலும் மறுபடியும் நம் மீதே தெரிக்கும்" அப்படி தான் இதுவும்.மகிழ்ச்சியாக மனதை வைத்துக்கொள்ள இன்னொரு வழியும் உண்டு அது தான் பிறருக்கு உதவி செய்வது..ஆம் உங்களால் முடிந்த உதவியை மற்றவருக்கு செய்யுங்கள். ஒரு பிச்சைக்காரனுக்கு 10 ரூபாய் போட யோசிக்கிறோம் ஆனால் பல தருணங்களில் பத்தாயிரம் ரூபாய் நஷ்டம் அடைகிறோம். எனவே உங்களிடம் யாசிப்பவருக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். செய்து தான் பாருங்களேன் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள். ஆனால் ஒரு ஏழைக்கு நீங்கள் அளிக்கும் பத்து ரூபாயானது அவனது பசியை ஆற்றுமோ இல்லையோ இன்னும் ஒரு பத்து ரூபாய் எனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையாவது கிடைக்கும். இப்படி உங்களது மகிழ்ச்சிக்கு பெருந்துணை செய்வதில் இசைக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது.தினமும் உங்களுக்கு பிடித்த நான்கு பாடலை கேட்டு பாருங்கள் உங்கள் மனதில் உள்ள சோர்வு அனைத்தும் நீங்கிவிடும். சரி இவையெல்லாம் பட்டியல் போட்டு விட்டேன் இப்பொழுது நீங்களே ஒரு பயிற்சி செய்து பாருங்கள்.பயிற்சி 1:
தினமும் ஒரு பத்து நிமிடமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள் ,அதுவும் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலே. சும்மா அப்படியே ரிலாக்ஸா சுற்றி இருக்கிற மரம் செடி கொடியை பார்த்து ரசிச்சிட்டு நார்மலா நடந்தாலே போதும்.பயிற்சி 2
தினமும் உங்களுக்கு பிடித்த நான்கு பாடல்களை செவி வழியே கேட்டு மகிழுங்கள். அது சினிமா பாடலாக இருந்தாலும் சரி பக்தி பாடலாக இருந்தாலும் சரி...ஆனால் உங்களுக்கு பிடித்த பாடலாக இருக்கட்டும்.பயிற்சி 3
தினமும் நீங்கள் செய்யும் சமையலை ருசிபார்த்து செய்யுங்கள். "இன்னைக்கு என்ன சமைக்கட்டும்"என்று குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு செய்யுங்கள். அவங்களுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்த திருப்தி அன்று நாள் முழுவதும் இருக்கும்.பயிற்சி 4
தினமும் வீட்டில் உள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் செய்யுங்கள். எதாவது ஒரு விஷயம் பற்றி பேசுங்கள். அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.பயிற்சி 5
விளையாட்டு. ஏதேனும் ஒரு விளையாட்டை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ விளையாடி மகிழுங்கள். அது பல்லாங்குழி விளையாட்டாக இருந்தாலும் சரி அல்லது ஓடியாடி விளையாடும் விளையாட்டாக இருந்தாலும் சரி.இந்த ஐந்து பயிற்சியும் நான் பின்பற்றுவதினால் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இது எளிமையான பயிற்சி தான். தாராளமாக செய்யலாமே. இதையெல்லாம் செய்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா?ஹாஹா இதோ சொல்கிறேன்.
1. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை உருவாகும்.
2. நீங்கள் செய்யும் வேலையில் ஒரு த்ரிப்தி ஏற்படும்.
3. குடும்பத்தில் உள்ள ஓற்றுமை ஓங்கும்.
4. மனசு லேசாக இருக்கும்.
5. மற்றவரின் எண்ணங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவும்.இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
முடிவுரை:
மகிழ்ச்சி என்பது உன்னுள்ளே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாதவரை நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
நன்றி வணக்கம்.
முன்னுரை :
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பார்கள் ஆம் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.அத்தகைய அளவிட முடியாத மகிழ்ச்சியை உண்மையில் நாம் அனுபவிக்கிறோமா? உண்மையில் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோமோ? அதைப்பற்றி ஒரு சிறிய பார்வை.
மகிழ்ச்சி
சந்தோஷம்
ஆனந்தம்
இதற்கு எல்லாம் ஒரே அர்த்தம் தான் இதைத்தான் ஆங்கிலத்தில் "ஹேப்பி"என்கிறோம். தமிழில் மட்டும் ஏன் இவ்வளவு பெயர்? ஏனெனில் நாம் சூழ்நிலையை பொறுத்துதான் வார்த்தை யை பயன்படுத்துகிறோம்.
உதாரணமாக.
"நீங்கள் வெற்றி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி"
"நான் எதைபற்றியும் கவலையில்லாமல் சந்தோஷமாக வாழ்கிறேன்"
"அருவியில் குளிப்பதே ஒரு தனி ஆனந்தம்"
இப்படி வாக்கியங்களுக்கு தகுந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்துகிறோம். சரி பொதுவாக இந்த மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது?
வெற்றியடையும் போது
மற்றவர்கள் நம்மை பாராட்டும் போது
ஏதேனும் நல்லகாரியம் நடக்கும் போது
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் உண்மையில் மகிழ்ச்சி என்பது வெளிநபர்களிடமிருந்தோ ,வெளிசூழ்நிலையிலிருந்தோ வருவதில்லை..அது நம் உள்மனதிலிருந்து வருகின்றன. ஆத்மா எனச் சொல்லப்படும் (inner soul) மூலம் மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
விளக்கம் :
நம் உள்ளுணர்வு ஏற்படுத்தும் மகிழ்ச்சியானது எவ்வாறு அளவிடபடுகிறது என்றால் அது நம் மனநிலையை பொறுத்துதான். பொதுவாக மகிழ்ச்சியை அளவிடமுடியுமா என்று கேட்டால் முடியாது என்று தான் சொல்வீர்கள் ஆனால் அது முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார் ஒரு ஜப்பான் விஞ்ஞானி. ஆம் நாம் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது எவ்வாறு அது தண்ணீரில் பிரதிபலிக்கிறது ,மகிழ்ச்சி குறையும் போது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்று ஆராய்ச்சி மூலம் சாதித்து காட்டியுள்ளார். அவர் பெயர் எமோட்டோ (psuedoscientist). அதாவது (human consciousness has an effect on the molecular of water) என்பதை விளக்கியுள்ளார். இந்த விவரம் நான் "மனமே மாமருந்து" என்ற புத்தகத்தை வாசிக்கும்போது தெரிந்துக்கொண்டேன். இப்படி மனிதனின் மனதில் ஏற்படுத்தும் மாற்றங்களானது நம்மையும் நம்மை சுற்றியுள்ளவற்றையும் பாதிக்கும் தன்மை உடையது. நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நம்மை சுற்றியுள்ள மக்களும் மத்த பொருள்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாது. நாம் கோபப்படும்போதோ அல்லது உணர்ச்சிவசப்படும்போதோ அதில் வெளிப்படும் உணர்வு நமக்கும் நம்மை சுற்றியுள்ளவற்றையும் பாதிப்படைய செய்யும். சரி நமக்கு கோபம் அடையும் போது நம் உடலில் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என்று கேட்டால்,நம் உடலில் இருக்கும் டாக்சின்ஸை அதிகப்படுத்தும் தமிழில் "நச்சுக்கள்" என்று கூறுவோமே அது தான். அதனால் தான் கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் என்று கூறுகிறோம். கோபத்தை கட்டுபடுத்தினாலே மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ளும். சரி கோபம் வந்துவிட்டால் எப்படி கட்டுபடுத்துவது ?
கண்களை மூடிக்கொண்டு எண்களை வரிசைபடுத்துங்கள்.
அல்லது
தண்ணீர் மெதுவாக பருகுங்கள்
அல்லது
அந்த இடத்தை விட்டு நகருங்கள்
இப்படி முயற்சி செய்தால் கோபம் ஓரளவு குறையும். கோபம் குறைய இன்னொரு வழியும் உண்டு ,அது என்னவென்றால் "மற்றவர்களின் குறையை கண்டு பிடிக்காமல் இருங்கள்"ஏனெனில் பெரும்பாலான கோபம் மற்றவர்களின் குறைகளை பார்ப்பதனால் தான் வருகிறது . "குறையொன்றும் இல்லை மலைமூர்த்தி கண்ணா" என்ற பாடலில் சொல்வதுபோல். குறையொன்றும் இல்லை என்பதை நினைத்துக்கொண்டு மற்றவர்களிடம் இயல்பாகவே பழகவேண்டும். இயல்பாக பழகும்போது மற்றவரின் நிறைகளை மட்டுமே பார்க்கதோன்றும். அதற்காக குறைகளை சுட்டிக்காட்டி பேசக்கூடாது என்பதில்லை தேவைப்படும் இடத்தில் உண்மையான காரணங்களை முன்வைத்து அவர்களை காயப்படுத்தாதவாறு சுட்டிக்காட்டவேண்டும். உதாரணமாக
"நீ பேசியது தவறு" என்று சொல்வதற்கும் "இதை இப்படி பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்வதற்கும்"வித்தியாசம் உள்ளது. சரி அப்படி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ளாமல் இருந்தால் அவர்களிடமிருந்து விலகிக்கொள்ளுங்கள். விலகிக்கொள்வது பல நேரங்களில் பாதி பிரச்சனையை தீர்த்துவிடும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் "சாக்கடையில் கல் விட்டு எரிந்தாலும் மறுபடியும் நம் மீதே தெரிக்கும்" அப்படி தான் இதுவும்.
மகிழ்ச்சியாக மனதை வைத்துக்கொள்ள இன்னொரு வழியும் உண்டு அது தான் பிறருக்கு உதவி செய்வது..ஆம் உங்களால் முடிந்த உதவியை மற்றவருக்கு செய்யுங்கள். ஒரு பிச்சைக்காரனுக்கு 10 ரூபாய் போட யோசிக்கிறோம் ஆனால் பல தருணங்களில் பத்தாயிரம் ரூபாய் நஷ்டம் அடைகிறோம். எனவே உங்களிடம் யாசிப்பவருக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். செய்து தான் பாருங்களேன் அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்"என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள். ஆனால் ஒரு ஏழைக்கு நீங்கள் அளிக்கும் பத்து ரூபாயானது அவனது பசியை ஆற்றுமோ இல்லையோ இன்னும் ஒரு பத்து ரூபாய் எனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையாவது கிடைக்கும். இப்படி உங்களது மகிழ்ச்சிக்கு பெருந்துணை செய்வதில் இசைக்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது.தினமும் உங்களுக்கு பிடித்த நான்கு பாடலை கேட்டு பாருங்கள் உங்கள் மனதில் உள்ள சோர்வு அனைத்தும் நீங்கிவிடும். சரி இவையெல்லாம் பட்டியல் போட்டு விட்டேன் இப்பொழுது நீங்களே ஒரு பயிற்சி செய்து பாருங்கள்.
பயிற்சி 1:
தினமும் ஒரு பத்து நிமிடமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள் ,அதுவும் உங்கள் வீட்டு மொட்டை மாடியிலே. சும்மா அப்படியே ரிலாக்ஸா சுற்றி இருக்கிற மரம் செடி கொடியை பார்த்து ரசிச்சிட்டு நார்மலா நடந்தாலே போதும்.
பயிற்சி 2
தினமும் உங்களுக்கு பிடித்த நான்கு பாடல்களை செவி வழியே கேட்டு மகிழுங்கள். அது சினிமா பாடலாக இருந்தாலும் சரி பக்தி பாடலாக இருந்தாலும் சரி...ஆனால் உங்களுக்கு பிடித்த பாடலாக இருக்கட்டும்.
பயிற்சி 3
தினமும் நீங்கள் செய்யும் சமையலை ருசிபார்த்து செய்யுங்கள். "இன்னைக்கு என்ன சமைக்கட்டும்"என்று குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டு செய்யுங்கள். அவங்களுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்த திருப்தி அன்று நாள் முழுவதும் இருக்கும்.
பயிற்சி 4
தினமும் வீட்டில் உள்ள உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் செய்யுங்கள். எதாவது ஒரு விஷயம் பற்றி பேசுங்கள். அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
பயிற்சி 5
விளையாட்டு. ஏதேனும் ஒரு விளையாட்டை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது குழந்தைகளுடனோ விளையாடி மகிழுங்கள். அது பல்லாங்குழி விளையாட்டாக இருந்தாலும் சரி அல்லது ஓடியாடி விளையாடும் விளையாட்டாக இருந்தாலும் சரி.
இந்த ஐந்து பயிற்சியும் நான் பின்பற்றுவதினால் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இது எளிமையான பயிற்சி தான். தாராளமாக செய்யலாமே. இதையெல்லாம் செய்தால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா?ஹாஹா இதோ சொல்கிறேன்.
1. எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை உருவாகும்.
2. நீங்கள் செய்யும் வேலையில் ஒரு த்ரிப்தி ஏற்படும்.
3. குடும்பத்தில் உள்ள ஓற்றுமை ஓங்கும்.
4. மனசு லேசாக இருக்கும்.
5. மற்றவரின் எண்ணங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவும்.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
முடிவுரை:
மகிழ்ச்சி என்பது உன்னுள்ளே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளாதவரை நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது.
நன்றி வணக்கம்.
Quote from நலம் விரும்பி !!.. on January 17, 2020, 9:38 AMஅருமை ,. மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருந்து மட்டுமே தொடங்குகிறது என்று மிக அழகாக கூறியுள்ளீர்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல .
அருமை ,. மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருந்து மட்டுமே தொடங்குகிறது என்று மிக அழகாக கூறியுள்ளீர்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல .
Quote from bhagyasivakumar on January 22, 2020, 9:35 AMThank you brother
Thank you brother