You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மோனிஷா- நானும் நாவலும்

இந்த பதிவை குறித்த உங்கள் கருத்து
சிறப்பு
மிக சிறப்பு
Quote
நான் போட்டியில் இல்லை. எனினும் என்னுடைய அனுபவத்தை பதிவு செய்ய விழைந்து எழுதியது. 
'நானும் நாவலும்'
 
நாவல் படிப்பது கண்களை திறந்தபடி கனவு காண்பது போல.
 
நாம் வார்த்தைகளை படிக்கிறோம் என்பதே மறந்து போகும். நாம அந்த கதைமாந்தர்களை பார்த்து கொண்டிருக்கிறோம். அவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் குறுக்கும் நெடுக்குமாக அவர்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கிறோம் இப்படியெல்லாம் ஒரு மாயை தோற்றம் உருவாகி அப்போதைய நமது வாழ்க்கை சூழல் கஷ்ட நஷ்டங்களை மறக்கடித்துவிடும் மேஜிக் புத்தகங்களில் மட்டுமே உள்ளதாக நான் எப்போதுமே நம்புகிறேன்.
 
நாவல்கள் படிப்பது அனுபவம் அல்ல. அது உணர்வுகளின் மொத்த குவியல். நிறைய அழுது சத்தமாக சிரித்து பயந்து நடுங்கி காதலில் கரைந்து ... நாம் உணர்ச்சி பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி போவோம்.
 
கதை முடியும் போது ஒரு அழகான கனவு கலைந்த உணர்வு. மீண்டு வந்து நான் என்னை  உணரவே சில நிமிடங்கள் பிடிக்கும்.
 
இப்படி நிறைய கதைகளில் நான் என்னை மறந்து தொலைத்த அனுபவங்கள் அதிகம்.
 
அரசு பேருந்தில் இறங்க வேண்டிய ஸ்டாப் தாண்டி இறங்கியதும் உண்டு. சில நேரங்களில் தூக்கம் மறந்து உறங்காமலே அலாரங்களை அணைத்ததும் உண்டு. நீண்ட ரயில் அல்லது கார் பயணங்களில் சுற்றம் மறந்து சத்தமாக சிரித்து சங்கடப்பட்டதும் உண்டு.
 
ஆனால் இது போன்ற அற்ப காரணங்களுக்காக நான் நாவல் படிக்கும் அற்புதமான விஷயத்தை விட்டு கொடுத்ததே இல்லை.
 
எனக்கு எல்லாமுமாக படிக்க பிடிக்கும்.
 
படித்து கொண்டே புது உலகில் பயணிக்க பிடிக்கும். 
எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் ஒரே மாதிரியான கதைகளங்களை படிப்பது. வித்தியாசமான களங்கள். விசித்திரமான காட்சிமைப்புகள்.
 
சில நேரங்களில் மிதமாக பதமாக ஒரு காதல் செய்ய வேண்டும். சில நேரங்களில் பாதை தெரியாமல் திக்கி திணற வேண்டும். நாடி நரம்பெல்லாம் நடுங்குமளவுக்கு சிதறி ஓட வேண்டும். சில நேரங்களில் உணர்ச்சி பிடியில் சிக்கி தேம்பி தேம்பி அழ வேண்டும்.
 
என்னை பொறுத்தவரை மனிதனின் ஆகசிறிந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள்தான்.
 
என்னுடைய வாசகர்களுக்கும் கூட என் ரசனையை போலவே நாவல்கள் கொடுக்க விழைகிறேன். இந்த நாவல் உலகத்தில் நானுமே ஒரு சிறு பறவையாக வளைய வர ஆசை கொள்கிறேன்.
 
காற்றும் காலமும் ஒத்தழைத்தால்....
Uploaded files:
  • th-5.jpg
Madhu Anjali, jamunarani and 2 other users have reacted to this post.
Madhu AnjalijamunaraniAvinash TonyRithi
Quote

👌👌👌👏👏👏

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Avinash Tony on October 25, 2020, 9:32 PM

👌👌👌👏👏👏

Thanks😍

Avinash Tony has reacted to this post.
Avinash Tony

You cannot copy content