மோனிஷா நாவல்கள்
விந்தியா 💙 ஆதித்தியா (இரு துருவங்கள்)

Quote from monisha on January 9, 2026, 12:05 PMவிந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.
தரையில் உறங்கி கொண்டிருந்த ஆதித்தியாவை காணாமல் அவனைத் தேடிக் கொண்டு போனவள் அவன் எங்கேயும் காணாமல் பதற்றம் அடைந்தாள். அந்த இரவு நேரத்தில் அவன் மாடிக்குப் போயிருக்கக் கூடுமா என்று யோசித்தபடி அந்த இருளில் படிக்கட்டு ஏறிப் போனாள்.
வானின் இருளை முடிந்தளவுக்கு விரட்டிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் நடுநிசியில் ஆதித்தியா சிகரெட்டும் கையுமாய் நின்று கொண்டிருந்தான்.
விந்தியாவைப் பார்த்தவுடன் சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.
“நீங்க இன்னும் இந்தக் கெட்ட பழக்கத்தை விடலயா?” என்று மிரட்டலாகக் கேட்டாள் விந்தியா.
“ஜஸ்ட் ஒன்...”
“இட்ஸ் நாட் குட் பாஃர் ஹெல்த்துனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இந்த சிகரெட்டை பிடிச்சு உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?”
“டென்ஷனா இருந்துச்சு... நாளைக்குக் கோர்ட்டில என்ன நடக்குமோ... அந்த வித்யாதரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்... யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துட்டா... அதுவும் இல்லாம கேத்ரீனோட ஞாபகம் வந்தாளே நான் ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்”
“இன்னிக்கு யோசிச்சி என்ன பன்றது... அன்னிக்கு அவங்க ப்ரபோஸ் பண்ணும் போதே யோசிச்சிருக்கலாம்”
“ஓகே சொல்லி இருக்கணும்னு நினைக்கிறியா?”
“ஒய் நாட்... அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்… நமக்கு எப்பவும் உறுதுணையா இருக்கிற கணவன் வேணும்னு நினைச்சிருக்கா... நீங்க அப்படி இருப்பீங்கனு அவ யோசிச்சிருக்கா... இதில தப்பென்ன இருக்கு?”
“நான் சம்மதமே சொல்லி இருந்தாலும் எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிச்சிருக்காது”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“என்னை உண்மையிலேயே புரிஞ்சிக்கிட்டுருந்தா அப்படி ஒரு பழியை என் மேல போட்டிருக்க மாட்டா”
“அவளோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சு”
“என்ன பெரிய சூழ்நிலை... உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் மாசக்கணக்குதான்... ஆனா இந்தக் கொலைப்பழி என் மேல விழுந்த போதும் நீ என்னை ஒரு கேள்விகூடக் கேட்காம நம்பின இல்ல... அந்த லாயர் இஷ்டத்துக்குப் பேசின போது முகத்திலறைந்த மாதிரி நான் அப்படிப்பட்டவன் இல்லனு அழுத்தம் திருத்தமா சொன்னியே... ஆனா வருஷக்கணக்கா நான் அவ கூடப் பழகியிருந்தும் அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையே”
அவனின் பதிலுக்கு அவள் என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றிருந்தாள்.
“நீ சொல்லனாலும் உனக்கு என் மேல இருக்கிற காதலும் நம்பிக்கையும் உன்னோட ஒவ்வொரு செயலிலும் தெரியுது... இந்த நைட்டில் என்னைத் தேடிட்டு வந்ததையும் சேர்த்து.
ஆனா உன் பிடிவாத குணத்தால ஒரு தடவை கூட நீ மனசவிட்டு எதுவும் சொன்னதில்லை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது விந்தியா... எனக்காக ஒரே தடவை உன் மனசில இருக்கிறதை சொல்லிடேன்”
“அப்புறம் பேசிக்கலாம் ஆதி... ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு... நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வேற போகணும்” என்று அவள் சமாளித்துவிட்டு திரும்பி போகப் பார்த்தவளை வழி மறித்து நின்று கொண்டான். அந்த இருளும் தனிமையும் அவளை மனம் திறந்து பேச வைக்கும் என்று எதிர்பார்த்தான்.
“கோபத்தை வெளிப்படுத்த தெரிஞ்ச அளவுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதா உனக்கு?”
“வழி விடுங்க நான் போகணும்” என்று அடாவடியாக அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதமாய் இறங்கி போகப் பார்த்தாள் விந்தியா.
“கணவன் மனைவிக்குள்ள இந்த பிடிவாதமெல்லாம் எதுக்கு?”
“ஆதித்தியா... எனக்குத் தலைவலிக்குது... வழி விடுங்க”
அதற்கு மேல் அவளை வழிமறிப்பதில் பயனில்லை என்றெண்ணி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவள் அவன் வாயில் வைத்திருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே எரிந்தாள்.
“இப்பதானே சொன்னேன் ஸ்மோக் பண்ண வேண்டாம்னு”
“நான் சொல்றத ஏதாவது நீ காதில போட்டுக்கிறியா? நீ சொல்றத மட்டும் நான் கேட்கணுமா.? இப்போ நான் இந்த பேக்கெட் முழுசையும் காலி பண்ணிட்டுத்தான் வருவேன்... நீ போய் தூங்கு”
அவனை அப்படியே விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை.
“ப்ளீஸ் ஆதி... அந்தப் பாக்கெட்டை என் கிட்ட கொடுத்துடுங்க… பிடிவாதம் பிடிக்காதீங்க…”
“நானா?”
“இல்ல நான்தான்... நான்தான் பிடிவாதம் பிடிக்கிறேன்... என் மனசில இருக்கிறத சொல்லாம பிடிவாதம் பிடிக்கிறேன்...
உங்களை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும்... ஆனா அதை நான் ஒத்துக்க மாட்டேன்...
நான் உங்களை மனசாரக் காதலிக்கிறேன்... இருந்தும் வாயை திறந்து சொல்லித் தொலைய மாட்டேன்...
நீங்க என் பக்கத்தில இருந்தா ஒயாம சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்... ஆனா உங்களை விட்டு தள்ளி வந்துட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்...
இந்த ஜென்மம் முழுக்க ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உங்கக் கூட நான் வாழணும்... நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சண்டை போட்டாலும் அதை எல்லாம் தாண்டி என்னைக் காதலிக்க நீங்க என்னோட கடைசிவரை கூட இருக்கணும்...
என் மனசில இருக்கிறதை சொல்லிட்டேன்... போதுமா... அதை தூக்கி போடுங்க ஆதி” என்று சொல்லி அவன் கையில் இருந்த சிகரெட் பேக்கெட்டை வாங்கித் தூக்கி போட்டாள்.
கண்ணில் நீர் பெருக அவனை ஏறிட்டும் பார்க்காமல் வேக வேகமாய் படியிறங்கி போனாள்.
அந்த நிலவொளி நிரம்பிய இரவில் விந்தியா பேசிவிட்டு போனதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுந்தது ஆதித்தியாவிற்கு.
கீழே இறங்கி வந்தவன் அறைக்குள் விந்தியா படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவளின் கைககளைப் பிடித்துக்கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.
விந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.