You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துகுமார்

Quote

சிப்பிக்குள் இருக்கும் முத்துக்களை தேடி சேகரிக்கும் உலகில் நான் முத்துக்குள் இருக்கும் கவிதைகளை தேடி பயணித்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் மேற்கொண்ட பயணம் ஆகாயத்தில் மிதந்து, மேகங்களுக்குள் புதைந்து என்னை வேடிக்கை பார்க்க வைத்தது. சென்னையில் தொடங்கி டில்லி வரையிலான என் விமானப் பயணத்தில் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், நா.முத்துக்குமாரையும் அவர் எழுதிய "வேடிக்கை பார்ப்பவனை"யும்.

எத்துனை ஆழமான செய்திகளை அது சுமந்துக் கொண்டிருந்தது. சொற்களஞ்சியத்தைத் தன்னுள் அடக்கித் தன் வரலாறு படைத்த கவிஞனை படிக்கையில் என் வயதின் அனுபவங்கள் இரட்டித்ததாக எண்ணிக் கொண்டேன். உலகளாவிய கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் அவர் நினைவுக் கூர்ந்த விதமும், அவர் பரிமாறிய அழகிய நிகழ்வுகளும் என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது. சற்று மெய்சிலிர்த்து தான் போனேன் அவரை படிக்கையில்.

பள்ளியில் படித்ததுத் தொடங்கி திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக விஸ்வரூபம் எடுத்தது வரை எத்தனை ஏற்ற இறக்கங்கள் அவரது வாழ்க்கையில். முன்னோக்கி செல்லும் இரயிலின் ஜன்னல்களில் பின்னோக்கி செல்லும் மரங்களை போல் தடைகளை பின்னோக்கி தள்ளிவிட்டு முன்னேறிச் செல்லும் இவரைத் திரையுலகம் அணைத்துக் கொண்டது.

காஞ்சிபுரத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கான பயணத்தில் இவர் கடந்து வந்த ஊர்களையும், நபர்களையும் இந்த புத்தகம் பட்டியலிட்டிருக்கிறது. பட்டியல் என்றதும் நினைவுக்கு வருகிறது, இந்த புத்தகத்தில், ஒரு கோடை விடுமுறையில் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று சொல்லி இவருக்கு இவர் தந்தை கொடுத்த பத்து புத்தகங்களின் பட்டியலை குறிப்பிட்டிருக்கிறார். அப்படி அவர் குறிப்பிட்ட பட்டியலோடு சேர்த்து வேடிக்கை பார்ப்பவனையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தோன்றியது.

Review By Vaishnavi

You cannot copy content