மோனிஷா நாவல்கள்
வேடிக்கை பார்ப்பவன் (பாகம் - 2) நா. முத்துக்குமார்
Quote from monisha on July 30, 2021, 1:57 PMகனவுகளை மட்டும் முதலீடாக வைத்து அவர் அடைந்த உயரத்தை நினைக்கையில் பிரம்மிப்பாக இருக்கிறது. அந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இவரது ஞானம் பச்சையப்பாவில் விரிவடைந்த கதையை புத்தகத்தின் பக்கங்கள் ஒருபக்கம் கதைத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த கதையை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது இவர் எழுதிய காகிதங்கள். இப்படி கலைப் பயின்ற கலைமகனை வாரி அணைத்துக் கொண்டது சென்னை பல்கலைக்கழகம். பிஹெச்டியில் தமிழ்த் திரைப்பட பாடல்களை பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வில் திரையுலகம் நெகிழ்ந்தது. படைப்புக் கலை பற்றி இவர் எடுத்த வகுப்புகளில் இருந்து அறுபது கவிஞர்கள் உருவாகி இவர் புகழ்பாட தொடங்கிவிட்டனர்.
எத்தனையோ தடுமாற்றங்களையும், குழப்பங்களையும், புத்தகங்களின் விரல் பிடித்துக் கடந்து வந்த இவரின் வாழ்க்கை ஓர் ராட்சத பரமபத விளையாட்டு என்பதை அந்த அனுபவங்கள் கலந்த எழுத்துக்கள் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தது. சில வரிகளில் அன்பு, சில வரிகளில் ஏக்கம், சில வரிகளில் ஏழ்மை, சில வரிகளில் காதல், சில வரிகளில் சிநேகம், சில வரிகளில் விடாமுயற்சி, தன்னம்பிக்கை என அத்தனையும் என் மனதை கனமாக்கியதில், என் விழிகளில் ஈரம் கசிந்தது. அதை துடைத்துக் கொண்டு மீண்டும் ஆயத்தமானேன் அடுத்த அத்தியாயத்தை வாசிக்க.
சிறுபிள்ளையில் அப்பா சொல்லிக் கொடுத்ததையும், பதின்பருவத்தில் புத்தகங்கள் கற்றுக் கொடுத்ததையும் நெஞ்சில் சுமந்தபடி சினிமா என்னும் காற்றில் பறந்த காஞ்சிபுரத்து இறகு ஒன்று திரைப்பாடல்களில் இளைப்பாறுவதைக் கண்டுப் பெருமிதம் கொள்ளாதவர் யாரும் இல்லை. பள்ளியில் குச்சி ஐஸ் விற்றவர் முதல் பாடல்கள் எழுத வாய்ப்பு தந்தவர்கள் வரை ஒருவரையும் இவர் பேனா மறந்ததில்லை.
முதல் கவிதை புத்தக வெளியீட்டிற்காக கவிஞர்கள் சந்திக்கும் கஷ்டங்களையும், இவரின் "தூசிகள்" படிந்த முதல் கவிதை நூலையும் பற்றி இவர் கூறுகையில், கலங்கிய என் இதயத்தை என்னவென்று நான் சொல்லுவேன். மனதில் படிந்த தூசிகளை "தூர்" கவிதைத் துடைத்த படலம் அவர் வாழ்க்கையின் அடுத்த பரிணாமம். அதற்கடுத்து இவர் எழுதி இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட "பட்டாம்பூச்சி விற்பவன்" கவிதை தொகுப்பு இந்த காஞ்சிபுரத்து இறகை இன்னும் உயரப் பறக்க வைத்தது. பத்திரிகையாளராகப் பணியாற்றிய போது இவருக்குக் கிடைத்த பாராட்டுக்களும், அங்கீகாரங்களும் இவரின் சினிமா கனவிற்கு வித்திட, நண்பர்கள் நீரூற்ற, கனவு நிஜமானது. உச்சம் தொட்ட இந்த கவிஞரின் பணிவும், எளிமையும், கட்டம் போட்ட சட்டையும் என் நினைவலைகளை தனதாக்கிக் கொண்டது. தான் படித்த புத்தகங்களை தன் மகனுக்காக விட்டுச் செல்லும் இவர் ஓர் இணையற்ற மனிதர்.
தொழில் அதிபராக, புகைப்பட கலைஞராக, கவிஞராக, பத்திரிக்கையாளராக, உதவி இயக்குநராக, பாடலாசிரியராக தன் கனவு ஏணிகளை வானத்தை நோக்கிப் போட்டவர் ஒரு நாள் உறங்கிக் போனார். மீளா துயரில் திரையுலகம் இருக்க பல விரல்கள் அவருக்கு " பா" எழுதிக் கொண்டிருந்தது. இரங்கற்பா என்று சொல்ல மனம் வரவில்லை. இறந்தவர்களுக்குத் தானே இரங்கற்பா? எல்லோர் மனதிலும் வாழும் இந்த காஞ்சிபுரத்து இறகிற்கு ஏது இரங்கற்பா?
கனவுகளை துரத்திக் கொண்டு ஓடியவரை ஓய்வெடுக்க அழைத்துச் சென்ற காலனால் இவரது படைப்புகளை நெருங்க முடியவில்லை. காலத்தால் அழியாத இவரது படைப்புகள், என்னை போன்ற வாசகர்களையும் எழுத்தாளர்களையும் ஒன்றாக இணைத்து, திறமைக்கான விருதுகளை தேடிக் குவித்துக் கொண்டு தான் இருக்கிறது. தேசிய விருதுகளும், திறமைக்கான அங்கிகாரங்களும் இவரை தேடி வந்து தழுவிக் கொண்டது. நாற்பது ஆண்டுகளின் தேடலுக்கு ஓய்வு கொடுத்து அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் இவரின் வரிகளுக்கு காலமுள்ள வரை ஆயிரம் "ஆனந்த யாழ்கள்" இசைத்துக் கொண்டே தான் இருக்கும்….
Review By Vaishnavi
கனவுகளை மட்டும் முதலீடாக வைத்து அவர் அடைந்த உயரத்தை நினைக்கையில் பிரம்மிப்பாக இருக்கிறது. அந்திரசன் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இவரது ஞானம் பச்சையப்பாவில் விரிவடைந்த கதையை புத்தகத்தின் பக்கங்கள் ஒருபக்கம் கதைத்துக் கொண்டிருக்க, மறுபக்கம் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்த கதையை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது இவர் எழுதிய காகிதங்கள். இப்படி கலைப் பயின்ற கலைமகனை வாரி அணைத்துக் கொண்டது சென்னை பல்கலைக்கழகம். பிஹெச்டியில் தமிழ்த் திரைப்பட பாடல்களை பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வில் திரையுலகம் நெகிழ்ந்தது. படைப்புக் கலை பற்றி இவர் எடுத்த வகுப்புகளில் இருந்து அறுபது கவிஞர்கள் உருவாகி இவர் புகழ்பாட தொடங்கிவிட்டனர்.