மோனிஷா நாவல்கள்
AA - 11
Quote from monisha on April 2, 2021, 1:52 PMஇருதலைக் கொள்ளி எறும்பு
சிவசங்கரன் தன் குடும்பத்தார் முன்னிலையில் செல்வியுடன் நெருக்கமாய் இருப்பதைப்போல் ஓர் பொய்யான பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்க, அது அவர்கள் எல்லோர் மனதிலும் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது.
அதுவும் கனகவல்லிக்குதான் இந்த விஷயத்தில் அதீத ஏமாற்றம். தன் தங்கை வாழ வேண்டிய வாழ்க்கையைச் செல்வி பறித்துக்கொண்டுவிட்டாளே!
அதுவும் செல்வியும் சிவசங்கரனும் சேர்ந்து வாழ ஆரம்பித்து இருப்பார்களோ என்ற எண்ணம் அவள் போட்டு வைத்த திட்டங்களின் மீது பேரிடியாய் விழுந்தது.
அந்த ஆத்திரத்தை எல்லாம் அவள் மொத்தமாய் செல்வியின் மீது காண்பித்தாள். வீட்டு வேலைகளை எல்லாம் அவள் தலைமீது போட்டுவிட்டு மருமகள்கள் ஒய்யாரமாய் இருந்தார்கள்.
வேலைக்காரி அன்னம்மாவையும்கூட செல்விக்கு உதவி செய்யவிடாமல் தடுத்து கனகவல்லி அவளின் மீது கொண்ட தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டாள்.
சிவசங்கரன் எப்போதும் இரவு வேலைகளை முடித்து வெகுநேரம் கழித்து வருவதால் இவை எதுவும் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
செல்வியும் இதுப்பற்றியெல்லாம் அவனிடம் சொல்ல விரும்பவில்லை. சிவசங்கரன் பல நேரங்களில் தன் மனைவியிடம் மனம்விட்டுப் பேச எண்ணிக்கொண்டு வரும் போதெல்லாம் செல்வி அசந்து தூங்கி இருப்பாள்.
அவள் தன்னை நிராகரிக்க இப்படி நடந்துகொள்கிறாளோ என்று அவன் எண்ணிக் கொள்ள, அவள் களைப்பினால் உறங்குகிறாள் என்பதை யார் அவனுக்குச் சொல்லிப் புரிய வைப்பது.
கிட்டதட்ட ஒரு மாதம் காலம் இப்படியே கழிந்து போக அன்று வேலைக்காரி அன்னம்மா சிவசங்கரனைப் பார்க்க வயல்வெளிக்கு வந்திருந்தார்.
"என்ன அன்னம்மா? இந்நேரத்தில வயக்காடு பக்கம்" என்றவன் விசாரிக்கவும்,
"உங்களைப் பார்க்கதான் தம்பி வந்தேன்" என்றார்.
"என்ன? உங்க புள்ள வெள்ளையப்பன் ஏதாவது களவாணித்தனம் பன்றானா?" என்றுக் கேட்டு அவன் பார்க்க, அவர் விரக்தியான முகபாவத்தோடு,
"அவன் என்னிக்கு தம்பி ஒழுங்கா இருந்தான்... இன்னிக்கு ஒழுங்கா இருக்க... அவனை மாதிரி ஒரு புள்ளைய பெத்த பாவத்துக்கு நான் அனாதை பிணமாதான் போகணும்" என்று சொல்ல சிவசங்கரன் பதறிப் போனான்.
"என்ன அன்னம்மா? இப்படியொரு வார்த்தை சொல்லிட்டீங்க? நான் உங்க பிள்ளை மாதிரி இல்லயா? நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா?!" என்றவன் அவர் கரத்தைப் பற்றுதலாய் பிடித்துக் கொண்டான்.
(இந்த அன்னம்மாதான் இன்று ஆதிபரமேஸ்வரி ஆலய வாசலில் வயது முதிர்ந்த பாட்டியாய் மரத்தினடியில் தனியே அமர்ந்திருந்தார் என்பதை நம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்)
"உங்க மனசு எனக்குத் தெரியும் தம்பி... எல்லார்கிட்டயும் இவ்வளவு அக்கறையா பேசறீங்க... ஆனா உங்க பெண்ஜாதியை" என்றவர் மேலே சொல்ல முடியாமல் நிறுத்த சிவசங்கரன் முகம் கடுகடுவென மாறியது.
"அவ உங்ககிட்ட ஏதாச்சும் வம்பு பண்ணாளா?" என்றுக் கோபமாய் கேட்க,
"நீங்க வேற... அந்த புள்ளயே வாயில்லா பூச்சி" என்று அன்னம்மா சொல்ல, சிவசங்கரன் மனதில்
'அவளா வாயில்லாத பூச்சி... தேள் கொடுக்கு போல நாக்கு... பேசற வார்த்தையாலேயே மனுஷனை கொன்னுடுவாளே!' என்று எண்ணினான்.
அவளின் நிராகரிப்பு அவன் மனதை ரணப்படுத்தியிருக்க, ஆதலாலேயே அவள் நினைவு வெறுப்பாய் கசந்தது அவனுக்கு. அவன் இப்படி யோசித்திருக்கும் போதே, அன்னம்மா அவனிடம் வீட்டில் கனகவல்லி செல்வியை ஆடு மாடுகளைவிடவும் மோசமாய் நடத்துவதாகவும் அடிமாட்டைப்போல வேலை வாங்குகிறாளென உண்மையான நிலவரத்தைத் தெரிவிக்க, சிவசங்கரன் அதிர்ச்சியானான். அதேநேரம் உள்ளூர செல்வி மீதிருந்த கோபமும் தலைதூக்க,
"அவங்க செய்ய சொன்னா இவளுக்கு எங்க போச்சு புத்தி" என்றவன் கேட்க,
"பாவம்.. அந்த புள்ளைக்கு என்ன பண்ணனும்னு தெரியல" என்றார்.
"அவளா பாவம்?!" என்று மெலிதான குரலில் சொல்லியவன்,
"என்கிட்ட இதைப்பத்தி ஒரு தடவை கூட அவ சொல்லலியே" என்று சந்தேகமாய் கேள்வி எழுப்ப, அப்போது அன்னம்மா அவனிடம்,
"உங்ககிட்ட அந்தப் புள்ள சொல்லப் பயந்திருக்கும் தம்பி" என்றார்.
அவனும் உள்ளூர தனக்கும் அவளுக்கும் இடையில் பேச்சு வார்த்தைதான் இல்லையே எனும்போது அவள் எப்படி சொல்லக்கூடும் என்று எண்ணிக் கொண்டான். பின்னர் யோசனையாய் அன்னம்மாவை பார்த்தவன்,
"சரி நீங்க போங்க அன்னம்மா... நான் பாத்துக்கிறேன்" என்றான்.
"அப்புறம் தம்பி... இதைப்பத்தி வீட்டில நான் சொன்னேன்னு" என்று அன்னம்மா பயந்து இழுக்க,
"எனக்கு என் மதினிங்க பத்தி தெரியாதா? நான் பாத்துக்கிறேன்... நீங்க கவலைப்படாதீங்க" என்றதும் அன்னம்மா புறப்பட்டுவிட சிவசங்கரனுக்கு அதற்கு மேல் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
அவன் மனம் தன் மனைவியின் நிலையை எண்ணிப் பரிதவிக்க, இந்நேரத்தில் தான் வீட்டிற்குச் சென்றால் அங்கே என்ன நடக்கிறது என அறிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு புறப்பட்டான்.
அவன் பின்புறம் வழியாகத் தன் வீட்டினை வந்தடைய, அப்போது செல்வி கிணற்றில் குடம் குடமாய் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்தவன் உள்ளம் கலங்கி போனது.
அதுவும் இத்தனை நாளாய் அவளிடம் இருந்த தயக்கத்தின் காரணமாக அவளை ஏறிட்டும் பார்க்காதவனுக்கு இன்று கண்டக் காட்சி பேரதிர்ச்சிதான். அவள் முகம் வெளிறிப் போயிருக்க, கண்களில் சோர்வு தெளிவாய் தெரிந்தது. கைகளை மாற்றி மாற்றித் தண்ணீர் இரைக்கும்போது அதனால் ஏற்படும் வலியை அவள் முகம் அப்பட்டமாய் உணர்த்த, அந்த நொடி அவனின் விழிகள் தன்னையறியாமலே நீரை உகுத்தன.
என்னதான் சிவசங்கரன் மீது செல்வி வெறுப்பை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தாலும் அவன் அவள்மீது கொண்ட காதல் துளியளவும் குறையவில்லை.
அதேநேரம் செல்வியை தன்னுடைய மனைவியாய் அவன் எப்போதுமே விட்டுக் கொடுக்க முனைந்ததுமில்லை. ஆனால் இப்போது அவன் பார்க்கும் காட்சி அவன் மனதை ஆழமாய் குத்திகிழித்தது.
அச்சமயமே தன்னுடைய மதினிகள் எங்கே இருக்கிறார்கள் என்று அவன் கண்கள் தேடின. அவர்கள் அவன் பார்வைக்கு புலப்படவில்லை என்ற நிலையில் அவன் செல்வியின் புறம் தன் பார்வையைத் திருப்ப, அவளோ எதிர்பாராத விதமாய் வாளியைக் கிணற்றில் விட்டுத் தன்னைமீறிக் கொண்டு தரையில் மயங்கிச் சரிந்தாள்.
சிவசங்கரன் பதட்டத்தோடு மயங்கி விழுந்தவளை தன் மடியில் கிடத்தி தண்ணீர் தெளிக்க, அவளோ விழித்துப் பார்க்கவேயில்லை. அவளின் தேகம் அனலாய் கொதிப்பதை உணர்ந்தவன் அவளைத் தன் கரத்தில் தாங்கியபடி வீட்டினுள்ளே தூக்கிச் சென்றான்.
அங்கே வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு புரணிப் பேசிக் கொண்டிருந்த கண்ணம்மாவிற்கும் கனகல்லிக்கும் சிவசங்கரன் செல்வியை தூக்கி வரும் காட்சி அதிர்ச்சியாய் இருந்தது.
அவர்கள் இருவரும் சிவசங்கரனின் செயலை அவனின் காதுப்பட கேலி பேச, அவன் அதைப் பொருட்படுத்தாமல் அவளை தூக்கிக் கொண்டு போய்ப் அறையில் படுக்க வைத்தான்.
வைத்தியரை அழைத்து வர அவசரமாய் வெளியே சென்றவனை இடைமறித்தாள் கனகவல்லி.
"என்ன தம்பி இது? கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம? சேச்சே... என்னதான் புது பொண்டாட்டியா இருந்தாலும்கூட இப்படியா?!" என்று அனர்த்தமாக பேசியவளை கனலேற பார்த்தவனுக்கு கோபம் தன் எல்லைகளை மீறியது. இருந்தும் மதனி என்ற உறவுமுறைக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் பல்லைக் கடித்து கொண்டு,
"நீங்க நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல மதனி... அவ மயங்கி விழுந்துட்டா... அதான்" என்க,
கனகவல்லி உடனே "அதெப்படி தம்பி?! உங்க பொண்டாட்டி மயங்கி விழுவா... தூக்கலாமன்னு இந்நேரத்தில வேலை எல்லாம் விட்டுட்டு வந்தீங்களோ?!" என்றவள் சொல்லி கண்ணம்மாவை பார்த்துப் பரிகசித்து சிரித்தாள்.
அதற்கு மேல் அங்கே நின்றால் வார்த்தை தடித்துவிடும் என்று எண்ணியவன், அவளின் பேச்சைக் கவனியாமல் கடந்து சென்றான். அப்போது கனகவல்லியின் உடனிருந்த கண்ணம்மா,
"உண்மையிலயே செல்விக்கு உடம்பு முடியலயோ?" என்று கேட்க,
"அடி போடி கூறு கெட்டவளே... புருஷனைப் பார்த்ததும் உடம்பு முடியாதவ போல நடிக்கிறா... பாவம் போல இருக்கிறவளுங்கள நம்பவே கூடாதுடி" என்றாள்.
அந்த ஊரில் வெகுதொலைவில் மருத்துவமனை இருந்தபோதும் அது பல நேரங்களில் சரியாகச் செயல்படுவதில்லை. அதனால் சிவசங்கரன் ஊருக்குள் இருந்த வைத்தியரை அழைத்து வந்தான்.
இதை எல்லாம் இரு மதனிகளும் ஓரமாய் நின்று வேடிக்கைப் பார்த்து கேலி செய்துக் கொண்டிருந்தனர். ஆனால் சிவசங்கரன் அவர்கள் பேச்சைக் கவனிக்காமல், வைத்தியர் சொன்ன விவரங்களைக் கேட்டு யாருடைய உதவியும் நாடாது தானே தன் மனைவியைக் கவனித்து கொண்டான்.
அதைப் பார்க்கப் பார்க்க இரு மதனிகளுக்கும் பொறாமை தீக்கனலாய் எரிந்தது. அதற்குக் காரணம் அவர்களின் கணவன்மார்கள் அப்படி அக்கறையாய் ஒருநாளும் அவர்களைக் கவனித்து கொண்டதில்லை.
செல்வி உணர்வுபெற்று மெல்லக் கண்விழித்த போது அவள் உடல் வெப்பம் தணிய நெற்றியில் ஈர துணியால் பத்து போடப்பட்டிருப்பது புரிந்தது. அதேநேரம் அவள் கரமெல்லாம் ஏதோ பிசுபிசுத்த நிலையில் இருக்க, தண்ணீர் இறைத்துச் சிவந்திருந்த அவள் கரத்திற்கு அவன் மருந்து தடவி கொண்டிருந்தான்.
அப்போது விழிகளை அகற்றிப் பார்த்தவள், தன் கணவனின் அருகாமை உணர்ந்து விலகிக்கொள்ள எத்தனிக்க அவன் அழுத்தமாய் அவள் கரத்தைப் பற்றிக்கொண்டிருந்தான்.
அவள் என்ன நடந்திருக்கும் என்று சிரமப்பட்டு யோசிக்க, அவளால் எதையும் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
சிவசங்கரன் மருந்தை முழுவதுமாக தடவி முடித்து எழுந்து கொள்ள அவள், "என்னாச்சு?" என்று அவனை நோக்கி வினவினாள்.
அவன் அவளை ஏறிட்டுப் பார்க்காமலே, "நீ கிணத்தடியில மயங்கி விழுந்துட்ட... உடம்பெல்லாம் வேற அனலா கொதிச்சது... வைத்தியர் வந்து பார்த்துட்டு ரொம்ப காய்ச்சலா இருக்குன்னு மருந்துகொடுத்துட்டு போனாரு... இரண்டு நாளைக்கு நல்லா ஓய்வு எடுத்துக்க சொன்னாரு" என்று இறுக்கமான தோரணையில் சொல்ல,
அவள் சந்தேகமாய், "யாரு என்னை தூக்கிட்டு வந்து இங்கே படுக்க வைச்சுது" என்றவள் தடுமாற்றத்தோடு கேட்டு முடிக்க,
அந்த நொடியே உக்கிரமாய் அவளை முறைத்தவன், "வேற எவன்டி உன்னைத் தூக்கிட்டு வருவான்?" என்று கேட்டான். அவள் அதற்கு மேல் பேசாமல் மௌனமானாள்.
ஒருபக்கம் அவன் கோபமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவனின் அக்கறையும் கவனிப்பும் அவள் மூளைக்கு எட்டாமல் இல்லை.
சிவசங்கரன் தன் வேலை எல்லாம்விட்டு அவள் அருகிலேயே இருந்து அவளைப் பார்த்துக் கொண்டான். அவனைத் தவிர்த்து அவளை அந்த வீட்டில் கவனித்து கொள்ள வேறு ஆளுமில்லை என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்.
செல்விக்கு தன் கணவன் மீதான கோபம் ஒருபுறமிருந்தாலும் அவனின் அக்கறையான கவனிப்பு அவளை வியப்பில் ஆழ்த்தியது. இப்படியொரு இளகிய மனம் ஆண்மகன்களுக்கு உரித்தாய் இருக்குமா என்று கேள்வியும் அவளுக்குள் எழுந்தது.
அவள் அப்பா என்ற உறவோடு வளராதவள். அவள் பார்த்தவரைக்கும் ஆண்களை மூர்க்கர்கள் என்றே எண்ணி இருந்தாள். அதுவும் ஆண்களை பற்றிய அவளின் தவறான எண்ணத்திற்கு வேறொரு சொல்ல முடியாத வலி மிகுந்த நிகழ்வும் காரணமாயிருந்தது. ஆனால் சிவசங்கரனின் செயல் அவளின் எண்ணத்தை லேசாக மாற்றி இருந்தது.
ஒரு இரவு ஒரு பகல் கடந்துவிட, செல்வி லேசாக உடல்நிலை தேறியிருந்தாள்.
சிவசங்கரன் அப்போதும் வேலைக்குப் போகாமல் இருக்க, வீட்டில் குத்தலான பேச்சுகள் எழுந்தன. அதனை செல்வி புரிந்து கொண்டு சிவசங்கரனிடம், "நான் இப்போ நல்லாதான் இருக்கேன்... நீங்க வயலுக்கு புறப்படுங்க" என்றாள்.
அவளை ஆழமாய் ஒரு பார்வைப் பார்த்தவன், "நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்" என்றவன் ஆரம்பிக்க அவள் மௌனமாய் அவனை ஏறிட்டாள்.
அவன் அவளைக் கூர்மையாய் பார்த்தபடி, "உன்னால முடியாத பட்சத்தில் நீ ஏன் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்யற... உன்னை யார் அப்படி செய்ய சொல்றது?" என்று கேட்டான்.
"என் வேலையை நான் செய்றேன்... இதுல யாரு என்னை என்ன சொல்ல?" என்றாள். இப்போதும் செல்வி அதே அலட்சியத்தோடு பதிலுரைக்க, இவள் தன்னிடம் சொல்லக் கூடாது என நினைக்கிறாள் என்பதாக சிவசங்கரனுக்கு தோன்றியது.
"என்கிட்ட எதுவுமே சொல்ல கூடாதுன்னு நினைக்கிறியா செல்வி?" பொறுமையோடு அவன் வினவ,
"நான் என்ன உங்ககிட்ட சொல்றதுக்கு இருக்கு?" விட்டேற்றியாய் அவள் வார்த்தைகளை உதிர்க்க,
அவன் வேதனையோடு, "உனக்கு என் மேல அப்படி என்னதான்டி கோபம்... வாய திறந்து சொல்லித் தொலையேன்" என்று ஏக்கமாய் கேட்டான்.
"சொன்னா எல்லாம் மாறிடுமா... அதுவும் நீங்க செஞ்ச கொடூரமான செயலுக்கு என்ன காரணம் சொன்னாலும் அதை நியாயப்படுத்தவே முடியாது" என்றாள் உக்கிரத்தோடு!
"அப்படி என்னடி நான் செஞ்சேன்... எதை நியாயப்படுத்தினேன்... பைத்தியம் மாதிரியே பேசிட்டிருக்க" என்றவன் குரலை உயர்த்த,
"பைத்தியம்தான்... அப்படி ஆக்கினதே உங்க குடும்பத்தில இருக்கிறவங்கதானே!" என்று சொல்லியவளின் பார்வையில் அத்தனை சீற்றம்.
"ஏன் இப்படி விளங்காமலே பேசிட்டிருக்க... கன்னத்திலேயே ஒண்ணு வைச்சேனா பாரு" என்று கோபமாய் சீற,
"நீங்க அடிக்கிறது ஒன்னும் எனக்கு புதுசு இல்லயே... அடிச்சு உங்க ஆத்திரத்தை தீர்த்துக்கோங்க... ஆனா எனக்குள்ள இருக்கிற கோபத்தை நான் எப்படி தீர்த்துக்க?" என்றாள்.
"அதான் நாக்கில விஷத்தைத் தடவி பேசி கொல்றியே... பத்தாது... பாவம்... சின்ன பொண்ணு புரியாம நடந்துக்கிறன்னு பார்த்தா... நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற... இப்படி எல்லாம் உன்னை நான் அனுசரிச்சுக்கணும்னு எனக்கு ஒன்னும் அவசியமில்ல செல்வி...
நல்லா கேட்டுக்கோ... இந்த வீட்டில நீ இருக்கிறதா இருந்தா எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்... இல்லன்னா வேண்டாம்... உனக்கு உடம்பு முடியலன்னு உங்க அம்மாக்கு சொல்லி அனுப்பிச்சேன்... நிச்சயம் வருவாங்க... வந்தா நீ அவங்க கூடயே போயிடு... திரும்பியே வந்திராதே... சொல்லிட்டேன்" என்றவன் ஆவேசமாய் கத்திவிட்டு விறுவிறுவென வெளியேறிவிட, செல்வி கலக்கமுற்றாள்.
அவனை ஏற்று அனுசரித்து வாழ்வது ஒரு புறம் வேதனை என்றால் வாழாவெட்டி என்ற பெயரோடு இருப்பதோ தனிமையாய் வாழும் தன் அம்மாவுக்கு தான் தரும் பெரிய தண்டனை. இப்பொழுது அவள் மனம் எந்தப் பக்கமும் சாய முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பெனத் தவிக்கலானது.
இருதலைக் கொள்ளி எறும்பு

Quote from Marli malkhan on May 30, 2024, 10:27 PMSuper ma
Super ma