மோனிஷா நாவல்கள்
AA - 15
Quote from monisha on April 8, 2021, 9:41 PMபருந்திடம் சிக்கிய பறவை
செல்வி வீட்டைவிட்டு சென்ற நொடியில் இருந்து சிவசங்கரனின் உள்ளம் தாளாத துயரில் மூழ்கியிருந்தது. அவன் தன் அறையின் ஜன்னலின் ஓரம் நின்றபடி தன்னவளைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். சிறு வயதிலிருந்தே அவள் அவனுடைய தங்கை பரமேசுவரியோடு அந்த வீட்டை வளைய வந்துக் கொண்டிருந்தாள்.
அப்போதிலிருந்தே செல்வியின் வளர்ச்சியையும் அதனோடு வளர்ந்த அவள் பெண்மையையும் அணுஅணுவாய் அவனை அறியாமலே ரசித்திருக்கிறான். அவனுக்கு அவள் மீது உண்டான ஈர்ப்பை தவிர்க்கவும், மறைக்கவுமே பலநேரங்களில் அவள் மீது கோபமாய் பாய்ந்திருக்கிறான்.
இன்று அந்த கோபம்தான் செல்வி தன்னைவிட்டு விலகி இருக்க காரணமோ என்று அவனுக்குள் ஓர் குற்றவுணர்வு அழுத்த, முன்பு ஒரு முறை நிகழ்ந்த சம்பவம் அவனின் மனதில் நினைவலைகளாய் எழும்பியது.
வீட்டின் பின்புறத்தில் அடர்த்தியாய் வளர்ந்திருந்தத புளிய மரத்தை வெட்ட சிவசங்கரன் ஆட்களை வரவழைத்திருந்தான். அவர்கள் அந்த மரங்களின் கிளைகளை வெட்டிக் கொண்டிருக்க, அந்த வழியே பரமேசுவேரி செல்வியின் கரத்தைப் பிடித்தபடி நடந்து வந்தாள்.
"ஏன் பரமு இங்க வந்த?... மரக்கிளை ஏதாச்சும் மேல விழுந்தா... அந்தப் பக்கம் போவே" என்று அவன் தங்கையை விரட்ட பரமுவும் செல்வியும் போகாமல் தயங்கி நின்றனர்.
"போன்னு சொல்றேன் இல்ல... கேட்க மாட்டியா?" என்று பரமுவிடம் அதிகார தொனியில் அவன் கடிந்துக் கொண்டிருக்க, அப்போது செல்வி பரமுவின் காதில் ஏதோ ரகசியம் ஓதினாள்.
சிவசங்கரன் அவர்கள் இருவரையும் குழப்பமாய் பார்த்துவிட்டு,
"ஏ புள்ள செல்வி இங்கே வா" என்று அழைத்தான். அவள் மிரண்டு பரமுவின் பின்னோடு போய் ஒளிந்து கொண்டாள்.
"இங்க வான்னு சொல்றேன் இல்ல" என்றவன் சற்றுக் குரலை உயர்த்தி மிரட்டலாய் அழைக்க அவள் படபடத்து போனாள்.
பரமு அவள் கரத்தை பற்றி, "அண்ணா கேட்கிறாரு இல்ல... சொல்லுடி" என்க, அவள் சற்றும் அசைந்துக் கொடுக்காமல் சிவசங்கரனை கண்டு ஒதுங்கியே நின்றாள்.
அவனோ அவளை விடாமல், "என்னதான் பிரச்சனை அவளுக்கு" என்றவன் பரமுவிடம் விசாரிக்க, அந்த கணம் செல்வியின் பார்வை வேறெங்கோ வெறித்தது. எப்பொழுதும் தலைகவிழ்ந்திருப்பவள் அந்த தடவை நிமிர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருக்க,
அவளிள் அகலாமான விழிகள் முழுமையாய் விரிய அந்த ஒருசில நொடிகள் சிவசங்கரன் அந்த அழகிய விழிகளில் சிக்குண்டு தொலைந்தே போனான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேநேரம் பரமுவும் அண்ணனின் பார்வையில் தெரிந்த காதலை உணர்ந்து புன்னகைக்க, சிவசங்கரன் தன்னிலை உணர்ந்து சுதாரித்தபடி செல்வியின் மீதான பார்வையை சிரமப்பட்டு விலக்கி வேலையாட்களை மேற்பார்வை செய்ய தொடங்கினான்.
அந்தச் சமயத்தில் நடந்தேறிய நிகழ்வை இன்றளவிலும் அவனால் மறக்க முடியாது. வெட்டப்பட்ட அந்தப் பெரிய கிளை தரையை நோக்கி விழ செல்வி அதன் குறுக்கே ஓடினாள்.
கரணம் தப்பினால் மரணம் என்பார்களே! அப்படி அரங்கேறியது அந்தக் காட்சி.
சிவசங்கரன் பரமு இருவருமே செல்விக்கு ஏதோ ஆகிவிட்டதோ என மிரண்டு போக, செல்வியோ அவள் செய்த செயலினால் ஆனந்த களிப்படைந்திருந்தாள்.
சிவசங்கரன் கோபத்தில் செல்வியின் மீது கைகளை ஓங்கிக் கொண்டு போக அவள் பயந்து ஒதுங்கினாள்.
"கூறு கெட்டவளே... தலை மேல அந்த கிளை விழுந்தா என்னாயிருக்கும் தெரியுமா?" என்றவன் பதறித் துடித்தான். அவனுக்கு அந்த நொடி இதயமே தன் துடிப்பை நிறுத்திவிட்டது போல் தோன்றியது.
பரமுவும் படபடப்பு அடங்காமல், "என்ன செல்வி நீ?... அண்ணே சொல்ற மாதிரி அந்தக் கிளை விழுந்தா உன் உசுரே போயிருக்கும் தெரியுமா?" என்று கேட்க,
"என்னை மாதிரிதானே எல்லா உயிரும்" என்று தத்துவம் பேசினாள் செல்வி.
"என்னடி சொல்ற?" என்ற பரமு புரியாமல் கேட்க,
செல்வி அவள் தாவணியின் முந்தானையை விரித்தாள்.
அதைப் பார்த்த பரமு பரவசமடைய, சிவசங்கரன் நெகிழ்ந்து போனான். உள்ளே சின்னதாய் தலையைத் தூக்கி பார்த்தபடி ஒரு சிறிய கூட்டிற்குள் இரண்டு குஞ்சு பறவைகள் கிரீச் என்று சத்தமிட்டு தங்கள் பயத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தன.
அந்தக் கிளையின் உட்புறத்தில் இருந்த அந்தப் பறவை கூட்டைச் செல்வி கவனித்திருக்கிறாள். அந்தக் கிளை வெட்டப்பட்டு தரையை நோக்கி வர செல்வி ஓடிச் சென்று அதனில் இருந்து தவறி விழுந்த பறவை கூட்டை தன் தாவணி முந்தானையால் பிடித்துக் கொண்டாள்.
அந்தச் சம்பவம் இன்றளவிலும் சிவசங்கரன் மனதில் பசுமையாய் குடி கொண்டிருந்தது. அதுதான் முதல்முறை செல்வியின் மீதான ஈர்ப்பு அவனுக்குக் காதலாய் அவதரித்தது.
எந்த உயிரையும் தன் உயிருக்கு மேலாய் பாவிக்கும் அந்த மனம் செல்விக்கு தெரியாமலே சிவசங்கரனை முழுவதுமாய் ஆட்கொண்டுவிட்டது.
எல்லா உயிரின் மீதும் பாரபட்சமின்றி அன்பு காட்டும் தன் காதல் மனைவி தன்னை மட்டும் காயப்படுத்திப் பார்ப்பது ஏன் என்று புரியாமல் சிவசங்கரன் வேதனையோடு தவித்துக் கொண்டிருந்தான்.
அதேநேரம் செல்வியும் மங்களத்தோடு அவள் வீட்டை அடைந்திருந்தாள். பிறந்த வீடு அவள் புகுந்த வீட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் தொலைவிலேயே இருந்த போதும் இப்பொழுதுதான் செல்விக்கு அங்கே வரச் சமயம் அமைந்தது.
மங்களம் செல்வியை வீட்டிற்கு அழைத்து வந்த நொடி அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் செல்வியைப் பார்த்துப் பேச ஆவலாய் கூடினர்.
அவளின் முகத்தில் குடி கொண்டிருந்த சோகத்தின் காரணம் புரியாமல், கணவனைப் பிரிந்து வந்த துக்கம் என அவர்களாகக் கதைப் புனைந்து கொண்டிருக்க, செல்விக்கு எரிச்சலாய் இருந்தது.
மங்களம் அவர்களைப் பேச சொல்லிவிட்டு உள்ளே போக செல்வியிடம் அவர்கள் அவளின் திருமண வாழ்வின் அனுபவத்தைப் பற்றி பேசி வெட்கப்படச் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்க, அவளோ வேண்டா வெறுப்பாய் அவற்றை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள்.
அதுவும் அவர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் தராமல் செல்வி அழுத்தமாகவே அமர்ந்திருக்க, அவளின் அந்த மௌனத்தை உடைத்திட அங்கிருந்த பெண்களில் ஒருத்தி ,
"பரமேசுவரியை நீ எப்ப பாரு பார்க்க போனதோட அர்த்தம் இப்பத்தானே விளங்குது... ஊமைக்கொட்டான் மாறி இருந்துட்டு எப்படி வளைச்சி போட்டுட்டா பாரு... இல்லாட்டி போன ஊருக்குள்ள பொண்ணே இல்லாத மாதிரி சங்கரன் இவளைத்தான் கட்டிப்பேன்னு ஒத்த காலில் நிப்பாரா என்ன?" என்றாள்.
அந்த நிமிடமே செல்விக்கு கோபம் எழ அங்கிருந்து அவர்களைத் தவிர்த்துவிட்டு வேகமாய் எழுந்து சென்றாள். அந்தப் பெண்கள் எல்லோரும்,
"உண்மையை சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வந்திருமே" என்று சொல்லியபடி ஒவ்வொருவராய் கலைந்து சென்றனர்.
ஓரே ஒரு அறை மட்டுமே உள்ளே அந்தக் கூரைவீட்டின் பின்புற வாசலில் இருள் மூழ்கி கிடக்க, செல்வியும் அந்த இருளுக்குள் தன்னை மறைத்துக் கொண்டபடி அமர்ந்து கொண்டாள்.
அந்த நொடி தாரையாய் தாரையை வழிந்த அவளின் கண்ணீர் யார் கண்களிலும் படவில்லை. பரமு இறந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்து போயிருக்க, அந்த ஊரும் அவள் குடும்பமும் கூட அந்தச் சோகத்திலிருந்து மீண்டுவிட்ட நிலையில் செல்வியால் மட்டும் அந்த நினைப்பிலிருந்து மீண்டுவரவே முடியவில்லை.
அது அத்தனை சீக்கிரத்தில் மறந்து போக கூடிய சம்பவமா?
செல்வி எந்த உயிர் துன்பப்படுவதையும் விரும்பாதவள். ஆனால் அவளின் கண்முன்னே துடிதுடித்து உயிர்விட்ட தன் உயிர்த் தோழி பரமுவை காப்பாற்ற முடியாத இயலாமையால், அவள் தன்னையே மன்னிக்க முடியாமல் கிடக்கிறாள் என்பதுதான் உண்மை.
இவற்றிற்கெல்லாம் காரணம், 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாரதியார் பாடலைப் பல பள்ளிக்கூடங்கள் கற்பித்துக் கொண்டிருந்தாலும் அவை வெறும் மனப்பாட அளவிலும் ஏட்டளவிலும் நின்று விடுவதினால்தான்.
மதங்களும் ஜாதிகளும் அர்த்தமற்று போவது காதல் என்ற உணர்வை அனுபவிக்கும் போதுதான். பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட காதலினால் பரமேசுவரி தன் குடும்ப உறவுகளின் கௌரவம், மரியாதை போன்றவற்றை மறந்து போனாள்.
செல்வியின் அறிவுரைகள் எதுவும் அவளின் காதில் ஏறவில்லை. காதலுக்கு கண்கள் மட்டுமல்ல, காதும்கூட இல்லை போலும். பல நேரங்களில் பரமுவும் அவள் காதலனும் பேசிக்கொள்ள செல்வி அவர்களுக்குக் காவல் புரிந்திருக்கிறாள்.
இப்படியே காதலில் திளைத்திருந்த பரமு தனக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அறியாதவளாய் இருந்தாள். பரமு அவள் காதலனோடு பேசிக் கொண்டிருந்த அந்தக் காட்சியை வேல்முருகன் பார்த்துவிட்டு, வீட்டில் அதனை பெரும் நெருப்பாய் பற்ற வைத்தான்.
சண்முகவேலனுக்கு என்று ஊருக்குள் இருந்த மரியாதை மகளை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு பரமு தனியாய் செல்ல அனுமதியில்லை.
செல்விக்கு கூட பரமுவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. எங்கே சென்றாலும் பாதுகாப்பிற்கு அவளின் மதினிகள் துணைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் கட்டுப்பாட்டை மீறி தோழிகள் இருவராலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆதலால் யாரும் அறியாதவண்ணம் பரமு வீட்டின் பின்புற சாளரம் வழியாகச் செல்வி தினமும் தன் தோழியைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.
பிரயத்தனப்பட்டு பரமுவின் அண்ணன்கள், மதனிகள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு அவர்கள் சந்திப்பு தவறாமல் நிகழ்ந்து கொண்டிருக்க,
பரமு வீட்டில் உட்புறம் இருந்து சாளரத்தின் கம்பிகளின் இடுக்குகளில் தன் தோழியின் கரத்தை பற்றிக் கொண்டு, "எனக்கு வீட்டில கல்யாண ஏற்பாடு பண்றாங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்குடி" என்று கண்ணீர் வடிக்க,
செல்வி அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு, "நான்தான் உன்கிட்ட அன்னைக்கே பாடமா படிச்சனே... நீ கேட்டியா?" என்றாள்.
"என் மனசுக்கு பிடிச்சவரை காதலிச்சது ஒரு குத்தமாடி" என்று பரமு கேட்க,
"அது" என்று செல்வி பதில் சொல்லாமல் தயங்க, இருவருக்கும் ஏதோ காலடி சத்தம் கேட்டது.
பரமு அவள் கரத்தை விடுத்து, "யாரோ வராங்க போல... நீ போ... நாம நாளைக்கு பேசிக்கலாம்" என்று சொல்ல செல்வியும் பதட்டத்தோடு அங்கிருந்து கிளம்ப முற்பட்டாள்.
அப்போதுதான் அவள் கவனித்தாள். பரமுவின் இரண்டாவது அண்ணன் மாணிக்கம் அவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டிருந்தான். அவள் பயத்தில் அவனிடமிருந்து தப்பிக் கொள்ள நடந்தவள் வழிமாறி தோப்பிற்குள் நுழைந்துவிட, மாணிக்கம் அவள் கரத்தைப் பிடித்து நிறுத்தினான்.
அவள் அரண்டு போய் நிற்க அவன் கோபமாக, "என்னடி இரண்டு பேரும் பேசிக்கிட்டீங்க?" என்று மிரட்ட அவள் படப்படத்த விழிகளோடு அவனை வெறிக்கப் பார்த்திருந்தாள்.
அவன் மேலும், "நீங்கதான் அவ காதலுக்கு தூது போறீகளோ?" என்க,
"உம்ஹும் இல்ல" என்றவள் அச்சமுற,
அவன் கண்டிப்பான பார்வையோடு, "இனிமே உன்னையும் அவளையும் சேர்த்து பார்த்தேன்... வெட்டிக் கூறு போட்டிருவேனாக்கும்" என்றவன் விழிகள் சிவக்க மிரட்டினான்.
"நான் இனிமே பரமுவை பார்க்க வரமாட்டேன்... என் கையை விடுங்க நான் போறேன்" என்றவள் மிரட்சியோடு சொல்ல அவன் அவள் கரத்தை விடாமல் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவள் முகமெல்லாம் வியர்வைகள் முத்துமுத்தாய் அரும்பியிருந்தன.
அவன் மேலும் கீழுமாய் தன் பார்வையால் அவளை அளவெடுக்க, அவள் மிரட்சியடைந்தாள். அந்த இடம் வேறு ஆளரவமின்றி பகலிலேயே பாதி இருளில் மூழ்கிகிடக்க, மாணிக்கத்தின் வஞ்சக புத்தி அந்தத் தனிமையை சாதகமாக்கிக் கொண்டு, செல்வியின் மீது கொண்ட சபலத்தைத் தீர்க்க பயன்படுத்திக் கொள்ள எத்தனித்தது.
அந்தக் கணமே அவளின் பருவவயதையும் இளமையையும் தன் ஆண்மைக்கு இரையாக்கிக் கொள்ள முடிவெடுத்தவன் அவளின் இளம்தேகத்தை தன் வலிய கரத்தால் அணைத்தான்.
அவள் பதறித் துடித்து, "என்னை விடுங்க நான் போகணும்" என்று கதறினாள்.
அந்தத் தோழிகள் இருவரும் விதைத்த வினை இன்று அவர்களுக்கே விபரீதமாய் திரும்பியது. பகல் நேரங்களில் கூட அந்தத் தோப்பில் யாரும் வரப் பயந்து கொண்டிருந்த நிலையில் யார் அவளை அங்கே காப்பாற்றுவது.
செல்வி பருந்திடம் மாட்டிக்கொண்ட சிறு பறவை போல துடித்துக் கொண்டிருக்க, மாணிக்கத்திற்கு இருந்த சபல புத்தி இன்று நேற்றல்ல, அவளை ரொம்ப நாட்களாய் குறி வைத்திருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைய அதை அவன் எளிதில் விடுவதாக இல்லை. அவனின் கரத்திற்குள் அவள் வசமாய் சிக்கி கொள்ள,
"என்னை தயவு செஞ்சி விட்டுவிடுங்களேன்" என்று கண்ணீர் மல்க அவனிடம் மன்றாடினாள்.
ஆனால் அதையெல்லாம் அவன் துளியும் பொருட்படுத்தவில்லை. அந்த நொடி அவன் குரூர புத்தி அவளை அடைந்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே மும்முரமாய் இருந்தது.
அவன் தன் பிடியை இன்னும் இன்னும் இறுக்கமாக மாற்றி அவள் தேகத்தை தன்வசம் இழுக்க, அவன் கரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் அவள் தத்தளித்தாள்.
பெண்களே பலவீனமானவர்கள் என்று காலங்கள் தாண்டி போதிக்கபட்டிருக்க அந்த எண்ணத்தை மீறி செல்வியால் என்னதான் செய்துவிட முடியும்.
அங்கே என்ன நடந்தாலும் கேட்க ஆளில்லாத பட்சத்தில் அது மாணிக்கத்திற்கு இன்னும் வசதியாய் போனது. இனி தன் நிலைமை அவ்வளவுதான் என்று செல்வி சோர்ந்து போக அந்தத் தோப்பிற்குள் யாரோ வரும் சலசலப்பு சத்தம் கேட்டது.
மாணிக்கம் அரண்டு போய் யாரென்று சுற்றும் முற்றும் பார்க்க சிவசங்கரன் தோப்பிற்குள் நடந்து வந்துக் கொண்டிருந்தான். தன் தம்பியின் வருகையைப் பார்த்த மாணிக்கம் அச்சத்தில் அவள் மீதான பிடியை தளர்த்திவிட, செல்வி அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பித்தால் போதும் எனத் தலைதெறிக்க ஓடினாள்.
தன் இயல்பான வேகத்தையும்விட வேகமாய் ஓடியவள் வீட்டை அடைய, அவளின் இதயத்துடிப்பின் சத்தம் அவள் காதுகளில் ஒலித்தபடி இருந்தது.
அவள் மனம் படபடப்பு அடங்காமல் இருக்க, ஒருவிதமான அருவருப்பான உணர்வு அவள் தேகம் முழுக்க ஆட்கொண்டது. அந்தச் சம்பவம் அவளுக்கு ஏற்படுத்திய மோசமான தாக்கத்திற்கு பிறகு,
பரமுவைப் பார்க்க அந்த வீட்டிற்குப் போவதையே அவள் நிறுத்திவிட்டாள். அங்கோ பரமு தன் தோழியைப் பார்க்க முடியாமல் போக... அவளின் மனோபலம் மெல்ல மெல்ல கரைந்து கொண்டே போனது.
பருந்திடம் சிக்கிய பறவை

Quote from Marli malkhan on May 31, 2024, 12:35 AMSuper ma
Super ma