You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

AA - 18

Quote

காதலும் நாணமும்

கனகவல்லி, வேல்முருகன், மாணிக்கம், கண்ணம்மா ஆகியோர் வெளியே நின்றுக் கொண்டு நடந்ததைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். அதை சிவசங்கரன், செல்விக்கு எதிரான சதியாலோசனை என்று கூட சொல்லலாம். அந்த ஆலோசனையின் முக்கிய சூத்திரதாரியாய் விளங்கியவள் கனகவல்லி.

"பாத்தீங்களா உங்க தம்பியை... பொண்டாட்டிக்கு ஒன்னுன்னா அவன் அண்ணன் தம்பினெல்லாம்கூட பார்க்கமாட்டான்" என்று கனகவல்லி சொல்லி  சகோதரர்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்த தன் முதல் விதையினைப் போட்டாள்.

"இதுநாள் வரைக்கும் தம்பி இப்படி எல்லாம் பேசினதில்லையே" என்று வேல்முருகன் வருத்தமுற,

"நீங்க வேற அண்ணே... செல்வி பாக்கத்தான் பாவம் போல இருக்கா... ஆனா சங்கரனை நல்லா ஆட்டிவைக்கிறா... அவனும் அப்படியே ஆடுறான்... இல்லாட்டி போனா நம்ம யாரப் பத்தியும் கவலைப்படாம பொண்டாட்டி கையைப் பிடிச்சுகிட்டில்ல நின்னுட்டிருந்தான்" என்று மாணிக்கம் சொல்லி கொதிப்படைய,

"நானும்தான் அந்த கன்றாவியைப் பார்த்தேனே" என்று கனகவல்லி சொல்லித் தலையிலடித்துக் கொண்டாள்.

"அந்த செல்விய முதல்ல இந்த வீட்டை விட்டு அனுப்பணும்" என்று வேல்முருகன் குரூரமாய் யோசித்தான்.

"அதுக்கு உங்க தம்பி ஒருநாளும் ஒத்துக்கமாட்டாரு" என்றாள் கனகவல்லி.

"அப்ப என்னதான் பன்றது மதனி?" என்று மாணிக்கம் குழப்பமாய் கேட்க,

"நான் சொல்றது நல்லா கேட்டுக்கோங்க... உங்க கடைசி தம்பி இருக்கிறவரைக்கும் மாமா உங்ககிட்ட எந்த பொறுப்பையும் கொடுக்க மாட்டாரு... வயக்காடு, நிலம், தோப்பு மத்த கணக்கு வழக்கு எல்லாம் உங்க தம்பி கவனிப்புல இருக்கு... இப்படியே போனா மாமாவுக்கு அப்புறம் இந்த வீட்டுப்பொறுப்பு... அப்புறம் சொத்தோட நிர்வாகம் முழுக்க உங்க தம்பி கைக்குப் போயிடும்... அதுவும் இல்லாம ஊருக்குள்ள உங்க இரண்டு பேரையும்விட அவனுக்குதான் மரியாதை... நீங்கதான் மூத்தப்பிள்ளை... இருந்தாலும் அவனுக்குதான் அடுத்த ஊர் தலைவனா இருக்கிற தகுதி இருக்குன்னு பேசிக்கிறாங்க... அவன் மட்டும் ஊர்தலைவனாயிட்டான்... அப்புறம் ஊருக்குள்ள உங்களுக்கு கொஞ்ச நஞ்சம் இருக்கிற மரியாதையும் போயிடும்... உங்க தம்பி தயவிலதான் நம்ம வாழணும் சொல்லிட்டேன்...

அதுகூட பரவாயில்ல... உங்க தம்பி வேற பொண்டாட்டி தாசனா இருக்கான்... அப்புறம் எல்லாம் பொறுப்பும் செல்வி கிட்ட போயிடும்... நாளைக்கே நம்ம புள்ளைங்களுக்கு நல்லது பொல்லாதுன்னா அவ காலில்தான் விழணும்... அதனாலதான் சொல்றேன்... இரண்டு பேருமே நமக்கு பிரச்சனைதான்... உங்க தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் சேர்த்து வீட்டைவிட்டு அனுப்பிட்டா... தானா எல்லாப் பொறுப்பும் தலைவர் பதவியும் உங்க கைக்கு வந்துடும்" என்று கனகவல்லி தன் வன்மமான எண்ணத்தைச் சரியான சமயம் பார்த்து வெளிப்படுத்தினாள்.

வேல்முருகன் இதுநாள் வரை இப்படி ஒரு கோணத்தில் யோசித்ததில்லை. சிவசங்கரன் மீது அவனுக்கிருந்த நம்பிக்கை இன்று கனகவல்லியின் கணிப்புகளைக் கேட்டு உடைந்து போனது. சுயமாய் யோசிக்காத வேல்முருகன் கனகவல்லி விதைத்த தீய எண்ணங்களை அப்படியே நம்பினான். சொத்தும் பதவி ஆசையும் ஒருபுறம் அவனை ஆட்டிவைக்கப் பொறாமை தீ அவன் இதயத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இவ்வளவு நேரம் மௌனமாய் அவர்கள் உரையாடல்களைக் கேட்டு கொண்டிருந்த கண்ணம்மா கனகவல்லியை நோக்கி, "அதெப்படி மச்சினரையும் செல்வியையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்ப முடியும்... அதுக்கு மாமா ஒத்துக்கனுமே" என்றவள் சரியான கேள்வியைக் கேட்க,

இம்முறை அந்தக் கேள்விக்கு வேல்முருகன் பதிலளித்தான்.

"அவங்களாகவே போக வைக்கணும்... சங்கரனுக்கு அவன் பொண்டாட்டின்னா ரொம்ப இஷ்டம் இல்ல... அவளை நாம தரக்குறைவாக நடத்துவோம்... அவமானப்படுத்துவோம்... அப்போ சங்கரனுக்குதானா ரோஷம் வரும்... நிச்சயம் சொத்தும் வேணா... ஒன்றும் வேணாம்ன்னு அவனே அவளை அழைச்சிட்டு வீட்டைவிட்டு போவான்... போக வைக்கிறோம்... ஆனா ஒரு முக்கியமான விஷயம்... அப்பா முன்னாடி மட்டும் இது எதுவுமே வெளிய தெரியாத மாதிரி நடந்துக்கணும்" என்று அவன் தன் மோசமான சதித்திட்டத்தை விளக்க, அங்கே இருந்த மூவரும் அதை ஏற்றுக் கொண்டனர்.

இதுவரை பட்டதெல்லாம் போதாதென்று இனி செல்வி சந்திக்கப் போகும் பிரச்சனைகளும் அவமானங்களும் எத்தனை இருக்கிறதோ... நாம் அறியோம்.

ஆனால் இந்த நொடி செல்வியின் வாழ்வு இன்பமயமாக இருந்தது. சிவசங்கரன் அவன் அறையின் படுக்கையின் மீது கம்பீரமான தோரணையோடு அமர்ந்து கொண்டு செல்வியின் கரத்தைப் பிடித்தபடி, அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை அவளை ஆழமாய் ஊடுருவிக் கொண்டிருக்க, அவள் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் வெட்கத்தால் தலைகவிழ்ந்தபடி நின்றிருந்தாள்.

அந்த அறையில் நிலுவிய மௌனத்தை யார் கலைப்பதென அவர்களுக்குள் ஒரு போட்டியே நிகழ்ந்து கொண்டிருக்க, செல்வி தன் பொறுமையிழந்து,

"இப்படியே விடாம என் கையை எவ்வளவு நேரம் பிடிச்சிட்டிருக்க போறீங்க" என்றுக் கேட்டாள்,

"நான் சாகிற வரைக்கும்" என்றவன் சொல்ல,  பதறிப்போனவள்,

"என்ன பேச்சு இதெல்லாம்?" என்று சற்றுக் கோபமாகவே கேட்டாள்.

அவன் அவள் கரத்தை வருடியபடியே நிதானமாக, "என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன் கையைப் பிடிச்சிட்டிருப்பேன்... உனக்கு எந்தப் பிரச்சனையும் வரவிடமாட்டேன்" என்றவன் அழுத்தமாய் சொல்ல அவள் நெகிழ்ந்து போனாள்.

அந்த நொடியே அவள் தரையில் சரிந்து அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு, "என்னை மன்னிச்சிருங்க" என்று அழ அவன் பதறிபோய் அவளைத் தூக்கி நிறுத்தி,

"என்னடி செய்ற?" என்று உணர்ச்சிவசப்பட்டான்.

"நான் உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்... அதுவும் மரியாதையில்லாம அவமானப்படுத்தியெல்லாம் பேசி இருக்கேன்" என்றவள் கண்ணீர் வடிக்க அவள் கன்னத்தை வருடியவன்,

"அதெல்லாம் விடு செல்வி... போகட்டும்... இப்போ நீ என்னை புரிஞ்சிக்கிட்ட இல்ல... அதுவே போதும்" என்றவன் சொல்லி அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

அவனின் அணைப்பில் கிடந்தவளுக்கு அந்த உணர்வு ரொம்பவும் புதிதாய் இருந்தது. அதனை அனுபவித்து லயித்திருந்தவளுக்குச் சற்றுமுன்பு நடந்த பிரச்சனை விடாமல் மனதை உறுத்திக் கொண்டிருக்க, அதைப்பற்றி அவனிடம் கேட்டாள்.

"நீங்க கீழே எல்லார்க்கிட்டயும் கொஞ்சம் பொறுமையாய் பேசி இருக்கலாம்" என்க, கோபமாய் அவளைவிட்டு விலகி நின்றவன்,

"நானாவா பேசினேன்... அவங்கதானே என்ன பேச வைச்சாங்க" என்று பொங்கினான்.

அவள் தயக்கத்தோடு, "இல்ல நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே" என்று அவள் இழுக்க,

"என்னை எங்கண்ணே என்ன சொன்னாலும் நான் பொறுமையா இருந்திருப்பேன் செல்வி... ஆனா உன்கிட்ட அப்படி பேச அவருக்கு என்ன உரிமை இருக்கு?" என்றவன் அழுத்தமாய் கேட்க அவள் உள்ளூர பூரித்து போனாள்.

இருந்தாலும் அவள் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்க, எதற்கு தேவையில்லாத பிரச்சனையென்று எண்ணியவள்,

"குடும்பன்னா அப்படிதான் இருக்கும் நம்மதான் இதையெல்லாம் சகிச்சிக்கணும்... அதுவுமில்லாம சண்டை... பிரச்சனை இதெல்லாம் எதுக்குங்க... போதாக்குறைக்கு நான்தான் உங்களை தூண்டிவிட்டேனு எனக்கு கெட்ட பேரு வேற" என்றவள் வருத்தமான முகபாவனையோடு தன் எண்ணத்தைச் சொல்லிமுடித்தாள்.

"சொல்லிட்டு போகட்டும்... மதனி அண்ணனைத் தூண்டிவிடலயா? அப்பா இல்லாத நேரமா பாத்து பிரச்சனை பண்ணி அண்ணனுங்களை எனக்கெதிரா திருப்பிவிடனும்னு பார்க்கிறாங்க... அவங்க எண்ணம் எனக்கு தெரியாம இல்ல.. வம்பு வேண்டாம்ன்னு ஒதுங்கி இருக்கேன்" என்று அவன் கோபமாகவே  விளக்கம் தர,

"எதுக்கு அக்கா அப்படி செய்யணும்?" என்று புரியாமல் கேட்டாள் செல்வி.

"எல்லாம் பொறுப்பையும் நானே பாத்துக்கிறேன் இல்ல... அண்ணன்களோட உரிமையை பறிச்சுக்கிறேன்னு அவங்களுக்கு நினைப்பு... யாருக்கு தெரியும்? இப்போகூட ஏதாவது நமக்கெதிரா திட்டம் போட்டுட்டு இருப்பாங்க" என்று சரியாய் கணித்தவன் மேலும் அவளிடம்,

"ஆனா இப்போதைக்கு அதைப்பத்தி எல்லாம் கவலைபடற மாதிரி நான் இல்லை" என்று தன் படுக்கையின் மீது அமர்ந்துக் கொண்டு, அவள் இடையை தன் கரத்தால் சுற்றி வளைத்து அருகில் இழுக்க... அவள் மிரண்டு போனாள்.

அதோடு அல்லாது அவன் தன் முகத்தை அவள் வயிற்றில் புதைத்து கொண்டு சீண்ட அவள் தவிப்புற்று, "விடுங்க எனக்கு கூச்சமா இருக்கு" என்று நெளிந்தாள்.

அவன் விடுவேனா என்று தன் சீண்டல்களை மேற்கொண்டிருந்தவன்,

அவள் சேலையை விலக்க எத்தனிக்க அவள் பதட்டத்தோடு அவனைத் தள்ளிவிட்டு பின்னோடு சென்றாள்.

அவளை ஏக்கமாய் பார்த்தவன் "படுத்தாதடி... வாடி" என்றவன் அழைக்க, "உம்ஹும்" என்று இடமும் வலமுமாய் தலையசைத்தாள்.

"ஓடி பிடிச்செல்லாம் என்னால விளையாட முடியாது... ஒழுங்கா என் பக்கத்துல வந்திரு" என்றவன் முறைப்பாய் கேட்க,

"எனக்கு பயமா இருக்குங்க" என்று தரையை நோட்டமிட்டபடி அவள் சொல்ல முகவாயைத் தடவியபடி யோசித்தவன் ஏதோ நினைவு வந்தவன் போல, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?" என்று கேட்டான்.

அவள் என்னவென்பது போல் தலையை நிமிர்த்திப் பார்க்க, "பக்கத்தில வா சொல்றேன்" என்றான்.

"உம்ஹும்... நீங்க அங்கிருந்தபடியே சொல்லுங்க" என்க, மூச்சை ஏற்றமாய் இறக்கமாய் விட்டவன் அவளைப் பார்த்து

"மதினி என் மேல கோபமா இருக்க இன்னொரு காரணமும் இருக்கு" என்றான்.

"என்னது?"

"மதனி அவங்க தங்கச்சி அமுதவல்லியை என் தலையில கட்டி வைக்க பாத்தாங்க... நான் ஒத்துக்கல... அதனாலதான் அவங்களுக்கு என் மேல ரொம்ப கோபம்... முக்கியமா உன் மேல" என்று சொல்ல செல்வியின் முகம் வாடிப் போனது.

"அப்போ அமுதவல்லியை நீங்க கல்யாணம் பண்ணிட்டிருந்தா... இந்த பிரச்சனை எல்லாம் உங்களுக்கு வந்திருக்காதா?" என்றவள் வேதனையோடு கேட்க,

"அதுவும் சரிதான்... பண்ணி இருந்தா எந்தப் பிரச்சனையும் இருக்காது... நானும் நிம்மதியா இருந்திருப்பேன்" என்றவன் சூட்சமமாய் சிரித்தபடி சொல்லி முடிக்க அவள் முகம் இருளடர்ந்தது.

"அப்போ உங்க மனசில அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சோ?" என்றவள் தன் விழிகளை விரிக்க,

"இதுவரைக்கும் இல்ல, ஆனா இனிமே வரலாம்" என்றவன் எகத்தாளமாய் சொல்ல அவள் முகம் சுருங்க,

"இனிமேவா?" என்று அழுகை தொனியில் கேட்டாள்.

"ஹ்ம்ம்... பேசாம மதனியோட தங்கச்சியை நான் இரண்டாவதா கட்டிக்கிறேன்" என்றவன் சொன்னதுதான் தாமதம்.

அவள் முகத்தை மூடிக் கொண்டு வெடித்தழ அவன் சற்றும் அசறாமல், "நீ இப்படியே அழுது அங்கயே நின்னிட்டிருந்த... நான் சொல்றதுதான் நடக்கும் செல்வி" என்றவன் கோபமாக மிரட்டினான்.

அவள் தன் கரத்தை விலக்கி அவனை விழிஇடுங்க பார்த்தவள்,

"நான் உங்க பக்கத்தில வரத்தான் இப்படி எல்லாம் சொன்னீங்களா?" என்று சினம் பொங்கக் கேட்டவள் தன் கன்னங்களை நனைத்திருந்த கண்ணீர் துடைத்துக் கொண்டு,

"வரமாட்டேன் போங்க" என்று கோபமாய் திரும்பி நின்று கொண்டாள்.

அவனுக்கு அதற்கு மேல் பொறுமை இராமல் அவள் பின்புறம் கருநாகம் போல நீட்டமாய் பின்னப்பட்டிருந்த கூந்தலைப் பற்றி இழுக்க,

"ஆ வலிக்குது " என்றவள் கதறிக் கொண்டே படுக்கையின் மீது சாய்ந்தாள்.

"வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்... நீ என்னைவிட்டு விலகி போற ஒவ்வொரு தடவையும் எனக்கும் இப்படித்தாண்டி வலிச்சுது" என்று சொல்லியவன்,

"நான் இன்னொரு கல்யாணம் பண்ணிடுவேன்னு சொன்னா நீ உடனே நம்பிடுவியா... உன்னைத்தான் கட்டிக்கிடுவேன்னு என் குடும்பத்தையே எதிர்த்துக்கிட்டவன்டி... நான் எப்படிறி உன்னை விட்டுடுவேன்...

உன்னை தவிர வேறொருத்தியை இன்னை வரைக்கும் நான் மனசால கூட நினைச்சதில்லை... தெரியுமா?" என்றவன் உணர்ச்சி பொங்க சொல்லி முடிக்க, அவள் கண்களில் நீர் ததும்பியது.

"தப்புதான்... நான் அப்படியெல்லாம் யோசிச்சிருக்க கூடாது.... நான் இருந்த நிலைமையில நீங்க மட்டும் என்னை கல்யாணம் பண்ணிக்கலன்னா... காலம் பூரா இந்த ஊர்ல நான் பைத்தியக்காரி பட்டத்தோடவே இருந்திருப்பேன்" எனறு சொல்லி விம்மத் தொடங்கினாள்.

அவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டபடி, "இந்த ஊர்ல இருக்கிறவங்க எல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு நல்லது செஞ்சிருக்காங்க" என்று சொல்ல, செல்வி புரியாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.

"உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளைங்க கிட்ட எல்லாம் உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொன்னதுதான். இல்லாட்டி போனா நீ எவனையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஊர விட்டு போயிருப்ப... எனக்கு இங்கே பைத்தியமே பிடிச்சிருக்கும்... நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லடி... ரொம்ப சுயநலக்காரன்" என்றான்.

செல்வி இதைக் கேட்டு புன்னகைக்க, அந்தச் சிரிப்பை ரசித்தபடியே அவள் நெற்றியில் கலைந்த முடியை சரிசெய்து தன் இதழ்களால் முத்தம் பதிக்க, "விளக்கை அணைச்சிடலாமே" என்றவள் நாணமுற சொல்ல,

"எதுக்கு அணைக்கனும்... அப்புறம் எப்படி உன் அழகை நான் ஆசை தீர ரசிக்க?" என்றவன் கல்மிஷமான பார்வையோடு கேட்க அவள் மிரள மிரள விழித்தபடி

"வேண்டாங்க... எனக்கு வெட்கமா இருக்கு" என்றவள் கெஞ்சலாய் அவனிடம் மன்றாடினாள்.

"நீ இப்படியே வெட்கப்பட்டுக்கிட்டே இருந்தா என் வம்சாவெளி விளங்கிரும்டி" என்றவன் கோபமாய் சொல்லிவிட்டு மேலே அந்த பேச்சை தொடராமல், அவள் தேகத்தோடும் நாணத்தோடும் அவன் போராட,

அவள் கிறங்கி தன் விழிகளை மூடிக் கொண்டாள். அவன் மெல்ல மெல்ல முன்னேறி செல்ல திடீரென அவனை விலக்கிவிட்டவள்,

"முருகன் அழுற சத்தம் கேட்குது நான் போய் பாத்துட்டு வரவா" என்க சலித்து கொண்டவன்,

"நீ எங்கயும் போக வேண்டாம்... அவங்க அம்மா பார்த்துப்பாங்க... நீ கொஞ்ச நேரத்திற்கு உன் காதையும் வாயையும் திறக்காதே.. ஆனா உன் கண்ணை மட்டும் திறந்து என்னைப் பார்த்தபடியே இருக்கணும்" என்று உரைக்க,

"அது ஏன்?" என்று சந்தேகமாய் கேள்வி எழுப்பினாள் அவள்.

"நீ வெட்கப்படும் போது உன் கண்ணை மூடிடிறியே... நீ உருட்டி உருட்டி  பாக்கிற அழகை என்னால பாக்க முடியலடி.. இனிமே அந்த மாதிரி செய்ய கூடாது... நீ என்னைக் கண்கொட்டாம பாத்துக்கிட்டே இருக்கணும்" என்றான்.

"விளக்கையும் அணைக்க கூடாது... நானும் கண்ணை மூட கூடாதுன்னா... அதெப்படிங்க... ரொம்ப கஷ்டம்" என்றவள் சிணுங்க,

"என்னை நீ படுத்தின பாட்டுக்கு இதுதான் உனக்குத் தண்டனை" என்றான் அழுத்தமாக!

அவள் பெருமூச்செறிந்து அவனைப் பார்க்க அவன் அவள் கரத்தை தன் கரத்திற்குள் கோர்த்துக் கொள்ள நாணத்தால் கண்கள் மூடிக் கொண்டவளை, "செல்வி" என்று அதட்டினான்.

ஒவ்வொருமுறையும் அவளை அறியாமல் மூடிக் கொண்ட விழிகளைத் திறக்க சொல்லி அவளின் காதலோடு பிணைந்திருந்த நாணத்தை அவன் அனுபவித்து ரசிக்கலானான்.

அவன் அவள் மீது தேக்கி வைத்திருந்த காதல் வற்றாத ஊற்றாய் பெருகி அவர்களுக்கு இடையில் இன்பத்தைச் சுரந்து கொண்டே இருக்க, இதற்கு மேலாக அவர்களுக்கே உரித்தான அந்தரங்கத்தை நாம் பார்ப்பது நாகரிகமல்லவே!

ஆதலால் விடியலை நோக்கி விழித்திருக்கும் வானின் நட்சத்திரங்களை ரசித்தபடி நாம் காத்திருப்போமாக.

Quote

Super ma 

Quote

dapoxetine priligy The way Clenbuterol works inside the human body is by stimulating the beta 2 receptor

You cannot copy content