மோனிஷா நாவல்கள்
AA - 20
Quote from monisha on April 15, 2021, 8:51 PMபாவத்தின் விளைவு
"இனிமேதான் உனக்குப் பைத்தியம் பிடிக்கணுமா?"
இப்படிக் கேட்டது மாணிக்கம்தான். அந்தக் குரலை கேட்டுத் திரும்பியவளுக்கு உடலெல்லாம் நடுக்கமுற ஆரம்பித்தது.
அதிர்ச்சியும் பயமும் ஒரு சேர அவளை ஆட்கொள்ள அந்த நொடியே அங்கிருந்து போக முயற்சி செய்தவளை மாணிக்கம் வம்படியாய் வழிமறித்து நின்றான்.
இதைச் சற்றும் அவள் எதிர்பார்க்காத நிலையில் அவன் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாய் வழிமறிக்க அச்சத்தில் அவள் உள்ளம் படபடக்க தேகத்தில் வியர்வைத் துளிகள் ஆறாய் பெருக்கெடுத்தன.
மனமெல்லாம் நடந்த அந்தப் பழைய மோசமான நினைவுகளை கண்முன்னே நிறுத்த, அவள் பயந்த நிலையில்
"வழி விடுங்க" நடுக்கத்தோடு கேட்க, அவன் தன் நிலையிலிருந்து மாறாமல் அங்கேயே நின்றான்.
அவள் இம்முறை கோபம் பொங்க, "இப்போ வழிவிட போறீங்ககளா இல்லையா?!" என்று கேட்டு வைக்க,
"வழி விடமாட்டேன்... என்னடி பண்ணுவ?" என்று சொல்லி குரூரமாய் சிரித்தவனை அப்போதுதான் அவள் ஏறிட்டுப் பார்த்தாள்.
விழிகள் சிவந்த நிலையில் போதையின் மயக்கத்தில் அவன் இருக்க, அவளுக்குப் பதட்டம் அதிகரித்தது. அவனிடம் பேசுவது வீண் என்றுணர்ந்தவள் அவன் அசந்த நேரமாய் பார்த்து அந்த இடத்தைவிட்டு விரைந்துவிட எத்தனித்தாள்.
ஆனால் மாணிக்கம் அவளைப் போகவிடாமல், அவளின் ஒற்றைக் கரத்தை அழுத்தமாய் பிடித்து நிறுத்த, அவளின் கைவளையல்கள் துண்டு துண்டாய் நொறுங்கி கீழே விழுந்தன.
சில அவள் கைகளில் குத்திக் காயப்படுத்தியது. அந்த வலியை விடவும் அவனின் பிடி அவளுக்கு ரொம்பவும் எரிச்சல் மூட்ட,
"நான் இப்போ உங்க தம்பி பொண்டாட்டி... நினைவிருக்கட்டும்" என்று பல்லைக்கடித்து கொண்டு உரைத்தவள் அவனிடமிருந்து தன் கரத்தை மீட்கப் போராடினாள்.
அவனோ போதை மயக்கத்தில், "என் தம்பி... ஏதோ பாவம் பாத்து உன்னை கட்டிக்கிட்டான்... இல்லாட்டி போனா நீயெல்லாம் இந்த வீட்டுக்கு மருமகளா வர தகுதியே இல்லாதவ" என்று சொல்ல அவள் அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கேட்டுச் சலித்திருந்தாள்.
"உங்களுக்கு என்ன சொல்லணும்னாலும் அவர் கிட்ட சொல்லுங்க... இப்போ என் கையை விடுங்க" என்றவள்
இந்நேரத்தில் இங்கு வந்து தனியாக மாட்டிக் கொண்டோமே என தன்னைத் தானே நொந்து கொண்டாள். அவளின் இன்னொரு கைகளால் அவன் பிடியை விலக்க முயற்சி செய்ய அவளின் இன்னொரு கையினையும் தன் மறு கையால் பற்றிக் கொண்டான்.
அவளின் தவிப்பை கண்ட ஈஸ்வரன் கட்டுண்ட போதும் துள்ளி துள்ளிக் குதித்து தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினான்.
அவள் கோபத்தோடு, "நீங்க இப்படி நடந்துக்கிறது மட்டும் அவருக்கு தெரிஞ்சுது" என்றவள் மிரட்டலாய் சொல்ல,
"ஏய் சும்மா நிறுத்துடி... அவனைதான் நீ எப்பவோ எங்ககிட்ட இருந்து பிரிச்சிட்டியே... அவனை அப்படியே ஒரு பொம்மை மாதிரி இல்ல மாத்தி வைச்சிருக்க.. அப்படி என்னடி உன்கிட்ட இருக்குன்னு மதிமயங்கி போயிருக்கான்" என்க, அவள் சீற்றமானாள்.
"அவர் ஒன்னும் சுயபுத்தி இல்லாம மதிமயங்கி கிடக்கிறவர் கிடையாது... முதல்ல கை விடுங்க... அப்புறம் நான் கத்தி கூச்சல் போடுவேன்" என்றவள் எச்சரிக்கை விடுத்தாள்.
அவன் சற்றும் அசறாமல், "கத்தி கூச்சல் போடு... எனக்கென்ன பயமா? உன்னை மாறி கிறுக்கச்சி சொல்றதை எவன்டி நம்புவான்... ஏதோ பைத்தியம் முத்தி கத்துதுன்னு நினைப்பாங்க... அதுவும் புருஷன் இல்லாத நேரத்தில தனியா நீ இங்க ஏன் வந்தன்னு கேட்பாங்க... அப்புறம் நீதான் அவமானப்பட்டு போவ" என்றவன் உரைக்க அவளின் கோபம் தன் எல்லையை மீறிக் கொண்டிருந்தது.
அவன் மேலும் வன்மமாய் அவளைப் பார்த்து மயக்கத்தோடு சிரித்து, "அன்னைக்கு மட்டும் நீ என்கிட்ட இருந்து தப்பிக்காம இருந்திருந்தா" என்று பழைய மோசமான நினைவுகளை ஞாபகப்படுத்த அவளுக்குப் பதட்டம் அதிகரிக்க... அவன் அவளை நெருங்கி வந்தான்.
"நீ இந்த தடவ என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது" என்று தன் கேவலமான எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
அவனின் வார்த்தை செல்வியை ரொம்பவும் கலவரப்படுத்தியது.
இந்தத் தடவை செல்வி தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்று புரிந்து கொண்ட போது, அவளின் மனோதைரியம் பன்மடங்கு பெருகியது. தன்னைத் தானே காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தவள் அவனின் இரும்புப் பிடியை அசாத்திய பலம் கொண்டு உதறித் தள்ளினாள்.
இம்முறை மாணிக்கத்தின் உறுதியான உடல் பலமும், கெட்ட எண்ணமும் செல்வியின் மனோபலம் முன் தோற்று போனது. அவன் தூரமாய் சென்று விழ, அவனைத் திரும்பியும் பார்க்காமல் அந்த நொடியே வீட்டிற்குள் சென்றவள் கதவை மூடி தாளிட்டாள்.
செந்நிறமான துகள்களை தூவியபடி சூரியன் உதிக்க, அந்த விடியல் பொழுதில் புலம்பிக் கொண்டே எழுந்து வந்தாள் கண்ணம்மா.
"விடிஞ்சது கூட தெரியாம அப்படி என்னதான் தூக்கமோ... வாசல் தெளிச்சி கோலம் போடாம... எல்லாம் அக்கா இல்லாத திமிரு... இந்தக் கூறுகெட்ட மனுஷன் வேற எங்க போனாருன்னு தெரியல... இராத்திரியெல்லாம் ஆளையே காணோம்... வீட்டில ஆளில்லன்னா போதும்... சாராயத்தை குடிச்சிட்டு மல்லாந்திடுறது... வரட்டும் அந்த மனுஷனுக்கு இருக்கு" என்றபடி வாசல் பெருக்க விளக்குமாற்றை எடுத்தவள் அப்படியே கிணற்றடிக்கு தண்ணீர் எடுக்க சென்றாள்.
அந்தக் காட்சியைப் பார்த்து அவள் இதயமே நின்று போனது.
மாணிக்கம் மாட்டு கொட்டகை அருகில் தலையின் பின்புறம் கல்லில் மோதி இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தான். இதனைப் பார்த்த கண்ணம்மா சத்தமாய் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ, அக்கம் பக்கத்தினர் எல்லாம் அவள் சத்தத்தைக் கண்டு அங்கே கூடினர்.
அவர்கள் எல்லோருமே அங்கிருந்த மாணிக்கத்தின் உயிரற்ற உடலைப் பார்த்து அதிர்ந்து நின்றனர்.
செல்வியும் கூட்டத்தோடு கூட்டமாய் அந்தக் காட்சியை பார்த்தாள். தான் தள்ளிவிட்ட வேகத்தில்தான் அவன் அந்தக் கல்லில் மோதி இருக்கக் கூடும் என்பது அவளுக்கு புரிந்து போனது. ஆனால் அவள் மனம் அதற்காக வருத்தப்படவோ கலங்கவோ இல்லை. நடந்த நிகழ்விற்கான நியாயம் அவளுக்கு மட்டுமே புரிந்தது. இந்தத் தண்டனை அவனுக்குத் தேவைதான் என்று உள்ளூர எண்ணிக் கொண்டவளுக்கு அவன் மரணித்திருந்த காட்சி வெகுசாதாரணமாகவே இருந்தது.
அதேசமயத்தில் மனோரஞ்சிதத்தின் வீட்டிற்குச் சென்ற சங்கரனும் சண்முகவேலனும் அங்கே பிரச்சனை தலைக்கு மேல் போயிருக்க அதைத் தீர்க்க முடியாமல் ரஞ்சிதத்தையும் அவளின் இருமகன்களையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்னர்.
அங்கே அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மாணிக்கத்தின் மரணம் அந்தக் குடும்பத்தினரை மட்டுமல்லாது அந்த ஊர்மக்களையும் அதிர்ச்சியுற செய்திருந்தது.
அவர்களில் பலரும் செல்வி மருமகளாய் வந்த பின்புதான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று புரளி பேச, கனகவல்லி தன் பங்குக்கு துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் எல்லாம் அவ்விதமே சொல்லி அந்தச் செய்தியை காட்டுத்தீயாய் பரப்பினாள்.
சிவசங்கரனுக்கோ கனகவல்லியின் இந்த அவதூறான பேச்சுக்கள் கோபத்தை ஏற்படுத்திய போதும் அவன் அப்போது வேறொரு குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததினால் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மாணிக்கத்தின் இறப்பில் ஏற்பட்ட சோகம் அந்த வீட்டிலுள்ள எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது. அதிலும் சிவசங்கரன் மனதளவில் ரொம்பவும் கலங்கிப் போயிருந்தான்.
"அண்ணனுக்கு ஏன் இப்படி ஆகணும்?"
"மனசு தாங்கல... சாகிற வயசா அவருக்கு?" என்றவன் அவளிடம் புலம்பி கண்ணீர் வடிக்க,
அவன் அப்படி மனமுடைந்து போவதை காண முடியாமல் அவன் தலைமுடியை வருடிக் கொடுத்தவள்,
"நடக்கிறதெல்லாம் நம்ம கையிலயாங்க இருக்கு... இப்படியே வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப்போறதில்ல... மனசைத் தேத்திக்கோங்க" என்று சமாதானம் உரைத்தாள்.
ஆனால் அவனோ கொஞ்சமும் சமாதானம் அடையாமல் அவள் மீது சாய்ந்தபடி மேலும் மேலும் கண்ணீர் வடிக்க, அவளுக்கு அவனின் அழுகையைப் பார்த்து என்ன சொல்வதென்றே புரியவில்லை.
சொந்த தம்பியின் மனைவி என்றும் பாராமல் தவறாய் நடந்து கொண்ட அப்படி ஒரு ஈனபிறவிக்காக தன் கணவனின் கண்ணீர் வீணாவதை விரும்பாமல்
"இப்படியே அழுதிட்டிருந்தா எப்படித்தான்" என்றவள் சொல்லி அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
அப்போதுதான் அவள் கரங்களில் கன்றிப் போயிருந்த காயத்தை கவனித்தான் சங்கரன். அதோடு சில கண்ணாடி கீறல்கள் வேறு இருக்க, அப்போது மாணிக்கம் இறந்த இடத்தில் சில கண்ணாடி வளையல்களின் சிதறல்களைப் பார்த்ததைக் குறித்து நினைவு கூர்ந்தது அவன் மனம்.
செல்வியை ஆழ்ந்து பார்த்தவன், "இந்த காயம் எப்படி ஆச்சு?" என்று கேட்க,
"வேலை செய்யும் போது வளையல் உடைந்து போச்சு... அப்பதான்" என்று சாதாரணமாக பதிலுரைத்தாலும் உள்ளூர அச்சம் அவளைத் தொற்றிக் கொண்டது. சங்கரன் அவளை ஏறஇறங்க பார்த்து,
"இது... வெறும் வளையல் உடைஞ்சதனால பட்ட காயம் மாதிரி தெரியலியே?!" என்று கேட்கவும் செல்வி தன் பயத்தையும் தடுமாற்றத்தையும் வெளிப்படுத்தாமல்,
"வேலை செய்யும் போது எனக்கே தெரியாம ஏதாச்சும் நடந்திருக்கும்... அதெல்லாம் யாருக்கு ஞாபகம் இருக்கு" என்றாள் தன் பதட்டத்தை மறைத்தபடி!
"சரி அது போகட்டும்... அண்ணன் விழுந்து அடிபட்டுக் கத்தினது கூடவா உன் காதில விழுல... அந்தளவுக்கா தூங்கிட்டிருந்த"
"என்னை ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க? புருஷன் எங்க போனாருன்னு கவலைப்பபடாம தூங்கிட்டிருந்த உங்க மதனியை போய் கேளுங்க" என்றவள் திமிராக பதில் சொன்னாள்.
அவளின் இந்த அலட்சியமான பேச்சும் நடவடிக்கையும் அவள் மீதான சந்தேகத்தை வலுக்க செய்ய,
"நான் உன்னை கேட்டா... நீ பதில் சொல்லு... அதை விட்டுட்டு நான் யாரை... என்ன கேட்கணும் னு நீ சொல்லாதே" என்றபடி கோபமாய் முறைத்தான்.
"உங்களுக்கு இப்போ என்ன தெரியனும்.. இதுக்கெல்லாம் காரணம் நான்தானான்னு தெரியனுமா?" என்றவள் கோபத்தோடு குரலை உயர்த்தினாள்.
"நான் அந்த அர்த்தத்தில கேட்கல"
"நீங்க அந்த அர்த்தத்திலதான் கேட்டீங்க"
"இப்ப நான் என்ன கேட்டுட்டன்னு இவ்வளவு கோபப்படற"
"பின்ன... இந்த குடும்பத்தில நடக்கிற எல்லா கெட்டதுக்கும் நான்தான் காரணம்... ஊரே அப்படிதானே சொல்லுது... நீங்க சொன்னா என்னாயிட போகுது" என்றவள் அவன் பேச்சை திசை திருப்ப,
"நான் போய் உன்னை அப்படிச் சொல்வேனா செல்வி?" என்று அவன் இறங்கி வந்தான். அவளோ தன் முகத்தை மூடி விம்ம ஆரம்பித்தாள்.
பெண்களின் அழுகை அவர்களின் ஆயுதம் என்பதில் சந்தேகமே இல்லை. செல்வி அதைச் சரியாகவே பயன்படுத்திக் கொண்டாள். செல்வியின் அழுகை அவனுக்குள் குற்றவுணர்வை ஏற்படுத்த, அதற்கு மேல் சிவசங்கரனால் அவளிடம் எதுவும் கேட்க முடியவில்லை.
அதன் பிறகாய் அவளைச் சமாதானப்படுத்த அவன் படாதபாடுபட வேண்டியதாய் போயிற்று.
மேலும் இந்தச் சம்பவத்தால் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தேக்கம் அடைந்திருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் ஒரு புது விதமான நோய் பரவிக் கொண்டிருந்தது. சரியான விழிப்புணர்வு இல்லாததினால் பல உயிர்கள் பலியாகின. அதுவும் குறிப்பாக குழந்தைகளின் உயிர்கள்.
பட்ட காலில் படும். கெட்ட குடியே கெடும் என்று பழமொழிக்கு ஏற்ப... ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த சிவசங்கரன் வீட்டில் முருகன் அந்த நோயால் பாதிக்கப்பட்டான்.
அவ்வாறு முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது செல்விக்கு அவளின் மனவுணர்வு அவனின் இறப்பு குறித்தும் எச்சரித்தது.
அதனால் செல்வி முருகனை காப்பாற்றுவதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளையும் மேற்கொண்டாள். ஆனால் கனகவல்லியும், கண்ணம்மாவும் அவளை எதுவும் செய்யவிடாமல் தடுத்துவிடச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் முருகனின் உயிரைப் பலி வாங்கியது.
உடனுக்குடனாய் இரண்டு மரணங்கள் அந்தக் குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்திருக்க, ஒரே மாத இடைவெளியில் கணவனையும் மகனையும் இழந்துவிட்ட கண்ணம்மா அங்கே இருக்க விருப்பமில்லாமல் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள்.
செல்விக்கும் முருகனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கனகவல்லி மேலும் மேலும் அவளைக் காயப்படுத்தினாள்.
"உன் கண்ணு பட்டுதான்டி அந்த பிள்ளைக்கு அப்படியாயிடுச்சு... சரியான ராசி கெட்டவ... தரித்திரம்" என்க,
சங்கரன் சீற்றமாகி, "வேண்டாம் மதினி... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க" என்றவன் விரல் நீட்டி எச்சரிக்க
"என்னடா பண்ணுவ?" என்று மல்லுக்கு நின்றான் வேல்முருகன்.
தன் கணவனிடம் பேச வேண்டாமென செல்வி சமிக்ஞை செய்ய, கனகவல்லி அப்போது, "இந்த தரித்திரம் பிடிச்சவ இருக்கிற வீட்டில நாம இருக்கவேண்டாம்... அப்புறம் நம்ம குழந்தைக்கும் ஏதாச்சும் வந்து தொலைஞ்சிரும்" என்று வேல்முருகனிடம் உரைத்தாள். அந்த வார்த்தைகளை தாங்க முடியாமல் செல்வி அழ ஆரம்பித்தாள்.
சிவசங்கரன் தன் பொறுமையிழந்து, "வேண்டாம் மதினி... நீங்க உங்க பிள்ளைகளோட இங்கயே சந்தோஷமா இருங்க... நான் என் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போறேன்" என்று சொல்லி கொண்டிருக்கும் போது சண்முகவேலன் அவர்களின் உரையாடல்களைக் கேட்டபடியே உள்ளே நுழைந்து,
"இந்த வீட்டை விட்டு யாராச்சும் வெளியே போகணும்னா என் பிணத்தை தாண்டிதான் போகணும்" என்றார் சீற்றமாக!
சங்கரனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேல்முருகன் தான் நினைத்ததைச் சாதித்து விட்டோம் என்ற உள்ளூர சந்தோஷபட்டுக் கொண்டிருந்த நிலையில் தன் தந்தை நடுவில் புகுந்து காரியத்தைக் கெடுத்துவிட அவர்களின் திட்டம் மொத்தமாய் தவிடுபொடியானது.
சண்முகவேலனுக்கு வீட்டில் வரிசையாய் நிகழும் மரணங்களும் பிரச்சனைகளும் பெரும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. இவை எல்லாம் பரமுவிற்கு இழைத்த அநீதியினால் ஏற்பட்ட பாவத்தின் விளைவாக இருக்குமோ என்ற எண்ணம் அவரைப் பயமுறுத்தியது .
ஆதிபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷகத்தை ஏற்பாடு செய்தால் இந்தப் பாவத்திற்கு விமோட்சனம் ஏற்படும் என்று எண்ணியவர் கோயில் குடமுழுக்கு விழா தேதியை பல தடங்கல்களை கடந்து முடிவு செய்தார்.
முப்பத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போகும் இந்த ஆதிபரமேஸ்வரியின் குடமுழுக்கு விழாவைப் பல ஊர் கிராம மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாகிவிடும் எனச் செல்வியின் அகம் அறிவுறுத்தியது. ஆனால் அந்த எண்ணத்தை அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தாள்.
பாவத்தின் விளைவு

Quote from Marli malkhan on May 31, 2024, 1:09 AMSuper ma
Super ma