மோனிஷா நாவல்கள்
AA - 27
Quote from monisha on April 27, 2021, 7:54 AMஅழகான மோதல்
விஷ்வாவைப் பார்த்த நொடி சரவணன் எந்தளவுக்கு எரிச்சலுற்றான் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அவனை ஊரைவிட்டு அனுப்பிவிட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவன் தன் வீட்டில், தன் அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்றக் கேள்வி எழ சரவணன் குழப்ப நிலைக்குச் சென்றான்.
இந்த எண்ணம் ஒரு புறமிருக்க விஷ்வா ஆதியுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த கணமே சரவணனுக்கு உள்ளூர பொறாமைத் தீ படர தொடங்கியிருந்தது.
அதேநேரம் விஷ்வாவும் சரவணனை சீற்றமாகத்தான் பார்த்திருந்தான். அவன் ஆதி இங்கே இல்லை என்று பொய்யுரைத்ததின் காரணத்தையும் விஷ்வா ஒருவாறு யூகித்திருந்தான்.
ஆதியின் மீதான அவன் பார்வையிலேயே விஷ்வா அவன் எண்ணத்தைக் கணித்துவிட்டான். விஷ்வாவும் சரவணனும் பார்வையினாலேயே ஒருவரை ஒருவர் ஆழமாய் வெறுத்துக் கொண்டிருக்க ஆதி அவர்களின் எண்ண ஓட்டத்தைத் தடையிட்டபடி பேசினாள்.
"நீங்க கெஸ் பண்ணது கரெக்ட் விஷ்வா... இவர்தான் சரவணன்... என் அத்தை மனோரஞ்சிதத்தோட பையன்" என்றவள் விஷ்வாவிடம் அறிமுகம் செய்ய சரவணன் முகம் கடுகடுவென மாறியது.
அதேநேரம் அவள் சரவணனிடமும், "இவர் என்னோட ஃப்ரண்டு விஷ்வா" என்று அறிமுகம் செய்வித்தாள்.
சரவணன் ஒருவித அலட்சிய புன்னகையோடு, "ஒ... ஃப்ரண்டா சரி சரி... இருந்து சாப்பிட்டு போகச் சொல்லு" என்று உரைக்க,
ஆதி உடனே, "இல்ல... சரவணன்... நான் இங்க இருக்கிற வரைக்கும் விஷ்வாவும் என் கூட இங்க தங்கி இருப்பாரு" என்றவள் சொல்ல சரவணன் கோபமானான்.
"கண்டவங்கெல்லாம் இங்க தங்க வைக்க முடியாது... ஒழுங்கா அனுப்பி வை" என்றவன் மிரட்டல் தொனியில் சொல்ல, ஆதி கோபமானாள்.
"பாத்து பேசுங்க சரவணன்... விஷ்வா என்னோட ஃப்ரண்டு"
இவர்கள் பேச்சுக்கிடையில் செல்லாமல் விஷ்வா கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, சரவணனுக்கு ஆதியின் கோபம் ஓரளவுக்கு விஷ்வாவின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தது.
அதற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்து அவளிடம் வெறுப்பைச் சம்பாதிக்க விரும்பாமல், "சரி.. அப்புறம் உன் இஷ்டம்" என்று வேண்டா வெறுப்பாய் சம்மதித்தான்.
ஆதி தயங்கிய பார்வையோடு, "அப்புறம் இன்னோரு சின்ன உதவி" என்று மெலிதான குரலில் அவள் கேட்க,
"என்ன?" என்று புருவத்தை உயர்த்தி அவளை ஏறிட்டான் சரவணன்.
"அது ஒன்னும் இல்ல... விஷ்வாவை நீந்க உங்க ரூம்ல ஸ்டே பண்ண அலோ பண்ணனும்" என்று மெல்ல தன் எண்ணத்தைச் சொல்ல அவனோ ரௌத்திரமானான்.
"என்ன விளையாடுறியா.. அதெல்லாம் முடியாது" என்று ஆக்ரோஷமாய் அவளிடம் தன் மறுப்பைத் தெரிவிக்க, ஆதி விஷ்வாவை தவிப்பாய் பார்த்தாள்.
விஷ்வாவோ சிரித்த முகத்தோடு, "நோ பிராப்ளம் ஆதி... சரவணனுக்கு எதுக்கு தொந்தரவு... நான் வேணா உன் ரூம்ல ஸ்டே பண்ணிக்கிறேனே" என்று ஒரே போடு போட ஆதி, சரவணன் இருவருமே அதிர்ச்சியாயினர்.
அவள் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவிப்புற சரவணனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
விஷ்வா மீது வெறுப்பின் உச்சத்திற்கே சென்றவன் எங்கே ஆதி அவனை தன் அறையில் தங்க வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்துவிட போகிறாளோ என்ற எண்ணத்தில் தானே முந்திக் கொண்டு,
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... இந்த ரூம்லயே இருந்துட்டு போகட்டும்" என்றான்.
ஆதி பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "தேங்க் யூ சோ மச்" என்று சரவணனிடம் சொல்ல, விஷ்வாவிற்குதான் பெருத்த ஏமாற்றம்.
அவன் முகம் வாட்டமுற ஆதி அவன் புறம் திரும்பி, "சரி விஷ்வா... நீ ஃபிரஷாயிட்டு வா... நம்ம அப்புறமா பேசுவோம்" என்று சொல்லி அந்த அறையைவிட்டு வெளியேற எத்தனித்தாள்.
அப்போது சரவணன் அவளை வழிமறித்து, "வந்ததும் சொல்லணும்னு நினைச்சேன்... நீ புடவையில ரொம்ப அழகா இருக்க ஆதி.. அப்படியே தேவதை மாதிரி" என்று வழிந்து ஊற்றினான்.
அவன் அப்படிச் சொன்னதை கேட்டு ஆதிக்கு அதீத எரிச்சல் மூண்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் மௌனமாய் நிற்க,
பின்னோடு இருந்த விஷ்வா, "ஆதிக்கு இப்படி எல்லாம் வர்ணிச்சா சுத்தமா பிடிக்காது" என்று முந்திக் கொண்டு பதிலளித்தான்.
சரவணன் கடுப்பாகி விஷ்வாவை முறைக்க அந்த நிலைமையைச் சமாளிக்கும் விதமாய் ஆதி இடைபுகுந்து,
"விஷ்வா சும்மா விளையாட்டுக்கு சொல்றான்... அப்படி எல்லாம் இல்ல... அன் தேங்க்ஸ் ஃபார் தி காம்பிளிமெண்ட்" என்று சொல்லிவிட்டு இயந்திரத்தனமாய் சிரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்தால் போதுமென சென்றுவிட்டாள்.
விஷ்வாவிற்கோ ஆதி சரவணனிடம் நடந்து கொள்ளும் விதம் குழப்பமாய் இருந்தது. அது அவளின் இயல்பில்லையே என்றவன் மௌனமாய் யோசித்துக் கொண்டு நிற்க சரவணன் அப்போது,
"வந்தோமா... இரண்டு நாள் இருந்தோமான்னு கிளம்பி போயிட்டே இருங்க சொல்லிப்புட்டேன்" என்றான்.
"சாரி... நான் வந்தது ஆதிக்கு சப்போர்ட்டா... அப்படி எல்லாம் அவளை விட்டுட்டு கிளம்ப முடியாது" என்று முகத்திலறைந்தது போல் பதிலுரைத்தான் விஷ்வா.
"நாங்க இத்தனை பேர் அவளுக்காக இருக்கும் போது உனக்கென்ன அவ்வளவு அக்கறை?" என்று சரவணன் முறைத்துக் கொண்டு நிற்க,
"நேத்து அவ வாழ்கையில வந்த உனக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது... அவ கூடவே பிறந்ததிலிருந்து இருக்கிற எனக்கு அக்கறை இருக்காதா?" என்று விஷ்வா குத்தலாய் பதிலுரைத்தான்.
"இத்தனை வருஷமா கூட இல்லங்கிற காரணத்துக்காக எங்க உறவு இல்லன்னு ஆயிடுமா?!"
விஷ்வா உதட்டைச் சுளித்தபடி, "உறவா? உறவுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?" என்று கேட்டவன் ஆழ்ந்த பார்வையோடு, "ஆதியோட அம்மா தன்னந்தனியா கஷ்டப்பட்ட போது இந்த உறவெல்லாம் எங்க போச்சு?" என்று கேட்க,
"நீ எதுவும் தெரியாம பேசாதே... அத்தைதான் யார் உறவும் வேணாம்னு இந்த ஊரை விட்டு போனாங்க" என்று பதிலளித்தான் சரவணன்.
"சோ… இத்தனை வருஷமா அவங்க எங்க இருக்காங்கன்னு தேடல... இல்லயா?!" என்று விஷ்வா சரவணனை தன் கேள்வியால் மடக்க அவன் பதில் சொல்ல முடியாமல் திக்கிதிணற விஷ்வாவே மேலும் தொடர்ந்தான்.
"சாரி சரவணன்... உங்க கூட பிரச்சனை பண்றது என் நோக்கம் இல்லை... நான் ஆதிக்காக வந்திருக்கேன்... தேவையில்லாம என்கிட்ட வம்புக்கு வராதீங்க" என்றவன் அழுத்தமாய் சொல்லிவிட்டு விறுவிறுவென அந்த அறையைவிட்டு வெளியேறி விட, சரவணனுக்கு எங்கேயோ அவன் கேள்வியின் நியாயம் மனதைத் துளையிட்டது.
*******
இந்த பூசல்கள் பிரச்சனைகள் எல்லாம் ஒரு புறமிருக்க, என்ன நடந்தாலும் ஆதி மட்டும் தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள். அதன் முதல் முயற்சியாக வசந்தாவிடம் ரொம்பவும் நெருக்கமாக பழகி வேல்முருகன் தன்னுடைய நில சொத்து பத்திரங்களை எங்கு வைப்பார் என்ற விவரங்களைக் கேட்டறிந்தாள்.
அதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக அவள் காத்திருக்க அடுத்த நாள் காலை வேல்முருகன்... சரவணனையும் மணிமாறனையும் அழைத்துக் கொண்டு கோயில் வேலை சம்பந்தமாக வெளியே போக ஆதி அந்தச் சமயத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டாள்.
அவள் வேல்முருகன் அறையிலிருந்த பெரிய மர பீரோவை திறந்து பத்திரங்களை எடுக்கச் செல்ல எண்ணிய போது விஷ்வா அவளை வழிமறிக்கக் கடுப்பானவள்,
"நேரங்காலம் தெரியாம குறுக்க வந்து என் உயிரை எடுக்காதே விஷ்வா" என்று சொல்லிவிட்டு அவனைக் கடந்து வர,
"எனக்கு இங்க ரொம்ப போரடிக்குது... ஃபோன்ல வேற சிக்னல் இல்ல... எங்கயாவது வெளிய போயிட்டு வரலாம்" என்று கேட்டபடி அவளைப் பின்தொடர்ந்தான்.
"ஆமா... நான் என்ன டூருக்கா வந்திருக்கேன்... உன் கூட டைம் பாஸ் பண்ண... உதவி செய்யலன்னாலும் பரவாயில்ல... உபத்திரம் பண்ணாத விஷ்வா" என்று சொல்லியவள் மெதுவாகக் கதவை திறந்து வேல்முருகன் அறைக்குள் நுழைந்தாள். அவளின் நல்ல நேரம் சாவி பீரோவின் கதவிலேயே தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து அவள் ஆனந்தமாய் புன்னகைக்க, விஷ்வாவும் பின்னோடு அந்த அறைக்குள் நுழைந்தான்.
"யார் ரூம் இது?" என்றவன் கேட்க,
"என் பெரியப்பா ரூம்" என்றவள் அவனை உள்ளே வரவிட்டுக் கதவை மூடியவள்,
"நீ ஸைலன்ட்டா இங்கயே நின்னு யாராச்சும் வர்றாங்களா பாரு" என்றுப் பணித்துவிட்டு அந்த பீரோவை நோக்கிச் சென்றாள்.
"இந்த திருட்டு வேலையைத்தான் முக்கியமான வேலை... முக்கியமான வேலைன்னு சொன்னியா?! இதுல நான் வேற உனக்கு காவலா?" என்றவன் அவளைக் கேவலமாய் ஒரு பார்வைப் பார்க்க,
"நீதானே எனக்கு சப்போர்ட்டா வந்திருக்கேன்னு சொன்ன... கம்முனு அங்கேயே நின்னு வாட்ச் பண்ணு" என்று சொல்லியபடி அவள் பீரோ கதவைத் திறந்து அதன் உட்கதவை திறக்க அந்த கொத்து சாவியில் ஒன்றொன்றாய் நுழைத்து திறக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.
"ஹெலோ... இந்த மாதிரி வேலைக்கெல்லாம் என்னால சப்போர்ட் பண்ண முடியாது... அப்புறம் என் டிக்னிட்டி என்ன ஆகிறது" என்றுக் கேட்டு விஷ்வா தோள்களை குலுக்க,
"அய்யோ... நீ பேசாம உன் டிக்னிட்டியைத் தூக்கிட்டு வெளியே போயிரு... நானே பார்த்துக்கிறேன்" என்றவள் அவனைப் பார்க்காமலே சொல்லிவிட்டு தன் வேலையில் மும்முரமாக கவனம் செலுத்தினாள்.
"நல்லதுக்கே காலம் இல்ல" என்று புலம்பியபடி அவன் கதவைத் திறக்க அப்போது மணிமாறன் அந்த அறையை நோக்கி அவசரமாய் நடந்து வந்துக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த விஷ்வா கதவை மூடிவிட்டு,
"ஏ ஆதி... அந்த சரவணனோட அண்ணன் வர்றான்" என்று எச்சரிக்கை விடுக்க ஆதி பதட்டமாகி பீரோ கதவை மூடினாள்.
"நாம மாட்ட போறோம்" என்று விஷ்வா சொல்ல ஆதி அவன் கையைப் பிடித்து கதவோரமாய் இழுத்து வந்தாள். அதேநேரம் மணிமாறன் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைய, ஆதி வேறவழியின்றி கதவின் மறைவில் விஷ்வாவை இடித்தபடி நிற்க நேரிட்டது.
அவன் அப்போது கிசுகிசுத்த குரலில், "சரவணன் மட்டும் நம்மை இப்படி பாத்தான்... அவன் நெஞ்சே வெடிச்சிடும்" என்று அந்த நிலைமையிலும் அவன் வேடிக்கை செய்ய, அவளோ பதறிக் கொண்டு தன் கைகளால் அவன் வாயை மூடிவிட்டாள்.
பின்னர் அவள் என்ன நடக்கிறது என்று கதவின் இடைவெளியில் பார்த்துக் கொண்டிருக்க விஷ்வா ஆதியின் அருகாமையை ரசித்தபடி நின்றிருந்தான்.
மணிமாறன் பீரோவின் கதவிலிருந்த சாவியைப் பார்த்து திகைத்து, "இந்த சரவணனுக்கு கொஞ்சம்கூட பொறுப்பே இல்ல" என்று சொல்லிக் கொண்டே பீரோ கதவைத் திறந்து பணத்தை எடுத்து எண்ணி தன் சட்டைப் பையில் வைத்து சாவியைப் பூட்டி தன்னோடு எடுத்துச் சென்றான்.
மணிமாறன் சென்றுவிட ஆதி பெருமூச்சுவிட்டு, "தேங் காட்" என்றாள்.
"நிச்சயமா இந்த மொமன்டுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்" என்று சொல்லிய விஷ்வா ஆதியைப் பார்த்து வசீகரமாய் புன்னகைக்க, துணுக்குற்றவள் அந்த நொடியே அவனைவிட்டு விலகி வந்தாள்.
அதோடு அவள் அதீத கோபத்தோடு, "உன்னாலதான் காரியமே கெட்டுப் போச்சு" என்று அவனைத் திட்டிக்கொண்டே அறையைவிட்டு வெளியே செல்ல,
"நீ என் பக்கத்துல அவ்வளவு நெருக்கத்தில நின்னதினால என் கண்ணியம் கூடதான் கெட்டுப் போச்சு" என்று அலட்டிக் கொள்ளாமல் உரைத்தான் விஷ்வா.
அப்போது முன்னே சென்றுக் கொண்டிருந்த ஆதி அவன் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியாகி, "திஸ் இஸ் டூ மச்" என்று கண்களை அகல விரித்துக் அவனைப் படுகோபமாய் முறைத்தாள்.
"இட்ஸ் ஓகே ஆதி... நான் இதைப்பத்தி யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்... முக்கியமா சரவணன் கிட்ட" என்று சொல்லி அவன் குறும்புத்தனமாய் சிரிக்க,
"விஷ்வா" என்றவள் பல்லைக் கடித்தாள்.
அவன் புன்னகை ததும்ப, "யூ ஆர் இரிட்டிட்டிங் மீ... அதானே சொல்லப் போற" என்று அவள் வாக்கியத்தை அவனே உரைக்க,
"உன்னைய" என்றவள் கடுப்பாக, "என்னைய... கம்மான் பினிஷிட் இட்" என்று விஷ்வா அவளை நெருங்கினான்.
"நத்திங்... இட்ஸ் ஆல் மை ஃபேட்" என்று சொல்லிவிட்டு அவனை பாராமல் அவள் கடந்து செல்ல,
"ஆதி... உனக்கு ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா சொல்லு" என்றவன் அவள் காதில் விழும்படி உரைத்தான்.
"அய்யோ உன் உதவியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்... என்னை விட்டுடு" என்று அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவள் தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு,
"கருணா அங்கிள்... இவனை போய் எனக்கு துணையா அனுப்பி விட்டீங்களே... உங்களை சொல்லணும்" என்று புலம்பியபடி தலையிலடித்துக் கொண்டாள்.
அழகான மோதல்

Quote from Marli malkhan on May 31, 2024, 1:57 AMSuper ma
Super ma