மோனிஷா நாவல்கள்
AA - 29
Quote from monisha on April 28, 2021, 5:43 PMநெகிழ்ச்சியான தருணம்
ஆதித்தபுரத்தில் குடமுழுக்கு வேலைகள் அவசர அவசரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதே சமயத்தில் அந்தத் தொழிற்சாலையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் மீண்டும் தடைகளைக் கடந்து தொடங்கியது.
இந்த விஷயம் ஆதிக்கு தெரிய வந்தபோதும் அவள் எதுவும் செய்ய முடியாமல் தவித்தாள். வேல்முருகனிடம் சவாலாக பேசிவிட்டாளே ஒழிய அந்த நிலத்தைப் பற்றிய விவரம் இன்னும் முழுமையாய் அவளுக்குத் தெரியவில்லை.
இப்படி பிரச்சனைகள் ஆதியை சூழ்ந்திருக்க ஒருபுறம் சரவணின் காதல் பார்வையும், விஷ்வாவின் குறும்புத்தனமும் அவளை எரிச்சல்படுத்திக் கொண்டிருந்தது.
அதேநேரம் ஆதி அந்த ஊரில் அவளுக்கு உதவி புரியச் சரியான நபரைத் தேடிக் கொண்டிருந்தாள். அந்த நிலையில்தான் ஜேம்ஸின் நினைவு வந்தது. தன் அலைபேசியில் ஜேம்ஸைத் தொடர்புக் கொண்டு பேசினாள்.
"எங்க போயிட்டீங்க ஆதி? நீங்க இல்லாமல் இங்க வேலையே ஓடல" என்று ஜேம்ஸ் ஆதியிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தான்.
"நான் இல்லன்னா என்ன? நீங்க இருக்கீங்க இல்ல... டேக் கேர் ஆஃப் எவ்ரித்திங்" என்றாள்.
"அத பத்தி இல்ல... உங்களை நாங்க ரொம்ப மிஸ் பன்றோம்" என்றான்.
"நானும்தான்... ஆனா சில முக்கியமான வேலைகளுக்காக என்னோட சொந்த ஊருக்கு வந்திருக்கேன்"
"ஓ அப்படியா... ஒன்னும் பிரச்சனை இல்ல ஆதி... நீங்க உங்க வேலையை முடிச்சிட்டு வரவரைக்கும் நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிக்கிறேன்"
"தேங்க் யூ ஜேம்ஸ்... அப்புறம் நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்"
"சொல்லுங்க ஆதி"
"இங்க ஆதித்தபுரத்து கெமிக்கல் ஃபேக்டிரி விஷயத்தை பத்தின டீடைல்ஸ் எல்லாம் நீங்களே கலெக்ட் பண்ணீங்களா இல்ல இந்த ஊர்ல உங்களுக்கு யாராச்சும் உதவி செய்தாங்களா?" என்றவள் சந்தேகித்து கேள்வி எழுப்ப,
"அங்க சங்கரின்னு ஒருத்தங்க... அவங்கதான் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க... அந்த விஷயத்தைப் பத்தி நமக்கு லெட்டர் போட்டதும் அவங்கதான்" என்று தெரிவித்தான் ஜேம்ஸ்.
"குட்... அந்த சங்கரி பத்தின டீடைல்ஸ், அட்ரெஸ் ஏதாச்சும் உங்ககிட்ட இருக்கா?"
"ஓ... எஸ்... நான் அனுப்பி விடுறேன்... அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... அவங்க உங்களோட எழுத்துக்குத் தீவிர ரசிகை" என்றதும் அவள் புன்னகைத்து,
"அப்போ எனக்கு அறிமுகம் தேவையில்லை... சரி ஜேம்ஸ்... உடனே சங்கரி அட்ரஸை அனுப்பி விடுங்க" என்று சொல்லி ஆதி அழைப்பைத் துண்டித்தாள்.
ஜேம்ஸ் ஆதிக்கு சங்கரியின் முகவரி அனுப்பி வைத்த மறுகணமே அவளைப் பார்க்க தயாரானாள் ஆதி.
வீட்டில் யாரிடமும் அதைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் ஆதி தனியே புறப்பட எத்தனிக்க, விஷ்வா மட்டும் அவளை விடாமல் நிழல் மாதிரி தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
"விஷ்வா... நான் ஒரு முக்கியமான வேலையா போயிட்டிருக்கேன்"
"திரும்பியும் ஏதாச்சும் லாக்கரை உடைக்க போறியா?"
"நீ இப்படியே என்னை டார்ச்சர் பண்ணிட்டிருந்த... உன் மண்டைய உடைக்க போறேன்" என்றவள் சொல்ல,
"அவ்வளவு கோபமா உனக்கு என் மேல" பாவமாய் அவன் கேட்க,
"டன் டன்னா" என்று எரிச்சலடைந்தாள்.
"அதுல வெறும் கோபம் மட்டும்தானா... இல்ல வேற ஏதாச்சும்" என்றவன் சூசகமாய் கேட்க,
அவள் கைக்கட்டி கொண்டு அவன் புறம் திரும்பியவள், "நீ என்ன ட்ரை பன்ற... அத கொஞ்சம் சொல்லிட்டு செய்றியா?" என்றவள் வினவ,
"என்னன்னோவோ ட்ரை பண்றேன்... எதுவும் வொர்க் அவுட் ஆகலயே" என்று சொல்லி ஏக்கமாய் பெருமூச்செறிந்தான்.
அவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல், "விஷ்வா ப்ளீஸ்... ஐம் பெக்கிங் யூ... நான் வந்த வேலையைக் கொஞ்சம் செய்யவிடேன்" என்று கெஞ்ச,
அவன் எங்கோ வெறித்தபடி, "ஓகே... கன்டின்யூ" என்றான்.
அவனை ஏற இறங்கப் பார்த்தவள் முன்னேறி நடந்து செல்ல, விஷ்வா சில நொடிகளுக்கு மேல் மௌன நிலையில் இருக்க முடியாமல்,
"இன்னைக்கும் புடவை கட்டியிருக்கலாமே" என்று அவன் எண்ணத்தை வெளிப்படுத்த,
"வேணாம் சாமி... நான் எதுக்குடா புடவை கட்டினன்னு நினைச்சு நினைச்சு வருத்தப்படற அளவுக்கு நீயும் சரவணனும் எனக்கு பாடம் கத்து கொடுத்திட்டீங்க... இனிமே அந்த தப்ப நான் என் வாழ்கையில செய்யமாட்டேன்" என்று அவன் முகத்தை பாராமலே அவள் பதிலளிக்க விஷ்வாவுக்கு கடுப்பானது.
"என்னை போய் அந்த சிடுமூஞ்சி சரவணனோட கம்பேர் பண்ணாதே"
"ஆமா ஆமா... கம்பேர் பண்ணது தப்புதான்... ஏன்னா சரவணன் உன்னைவிட ரொம்ப பெட்டர்" என்றாள் ஆதி.
"நேத்து வந்தவன் உனக்கு பெட்டரா" அவன் கோபமான பார்வையை அவள் மீது வீச நிதானமாய் அவன் முகத்தை ஏறிட்டவள்,
"ஆமா... நேத்து வந்தவன் சரவணன்... அவன் என்கிட்ட அப்படி சொன்னதுகூட பரவாயில்ல... ஆனா இத்தனை வருஷமா நீ என்னைப் பாத்துகிட்டு இருக்க... நேத்துதான் நான் உன் கண்ணுக்கு அழகா தெரிஞ்சேனா?" என்ற அவளின் கேள்விக்கு விஷ்வா உடனடியாக பதிலளிக்க முடியாமல் திகைத்துப் போனான். அந்தக் கேள்வியில் ஆழமான அழுத்தமான கோபம் இருந்தது.
இத்தனை நாளா நான் உன் கண்ணுக்கு அழகா தெரியலயா? அந்தக் கேள்வியின் அர்த்தம் என்னவென்று விஷ்வா மனதிற்குள்ளே ஆராய்ந்து கொண்டு வந்தான். அப்போது ஆதியைப் பார்த்த அந்த ஊர்க்காரர்கள் சிலர் அவளின் முகசாயலை வைத்து அடையாளம் கண்டுக்கொண்டனர்.
"ஓடி போனாளே செல்லம்மா... அவ பொண்ணுதான் இவ" என்று ஆதியின் காதுபடவே சிலர் சொல்ல விஷ்வா இந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி திரும்பி அவர்களை அடிக்கச் சென்றுவிட்டான்.
ஆதி அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, "ப்ளீஸ் விஷ்வா... காம் டவுன்" என்றவள் அறிவுறுத்த, "அதெப்படி? உங்கம்மாவைப் பத்தி தப்பா பேசறான்... அவன் முகரையை உடைக்க வேணாமா?" என்று ரௌத்திரமானான்.
"இந்த ஊரே அப்படிதான் பேசுது... இதுல எத்தனைப் பேரை நீ அடிப்ப?" என்றவள் கேள்வி எழுப்ப, அவன் அதிர்ச்சியானான்.
ஆதியே மேலும், "கோபப்பட வேண்டிய இடமும் நேரமும் இதில்ல விஷ்வா" என்றவள் எடுத்துரைக்க அவன் அமைதியடைந்தான்.
அதுவும் ஆதியின் கரம் அவன் கரத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த காரணத்தினால்தான். இப்படியாக விஷ்வா அவள் பிடியில் கட்டுண்டு வர அப்போது இருவரும் சங்கரியின் வீட்டு வாசலை நெருங்கியிருக்க ஆதி விஷ்வாவின் கரத்தை விடுவித்து, அந்த வீட்டின் திறந்திருந்த வாயிற்கதவைத் தட்டினாள்.
அப்போது சங்கரியின் அம்மா வடிவு வேலை செய்த களைப்போடு வந்து எட்டிப் பார்க்க ஆதி அவர்களிடம், "சங்கரியைப் பார்க்கணும்" என்று கேட்டாள்.
"நீங்க யார்?" என்ற கேள்வி எழுந்தது.
"நான் பாரதி பத்திரிக்கையில் இருந்து வந்திருக்கேன்... என் பெயர் ஆதி" என்றவள் அறிமுகம் செய்து கொள்ள,
வடிவு அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து அமர வைத்துவிட்டுக் கொல்லைப்புறத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த சங்கரியிடம் ஆதி சொன்ன விவரத்தைத் தெரிவித்தாள்.
சங்கரிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. நாம் ரசிக்கும் கதாநாயகன் நம் வீடு தேடி வந்தால் நம் மனநிலை எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில்தான் சங்கரி முகப்பு அறைக்கு ஓடி வந்தாள்.
சங்கரி கற்பனையில் வடிவமைத்த ஆதியின் உருவம் விஷ்வாவோட பொருந்தியது. அவனை ஊர் எல்லையில் கண்டதைக் குறித்து நினைவு கூர்ந்தவள்,
"சார்... நீங்கதான் ஆதியா... நான் உங்க எழுத்துக்களுக்கும் புதுமையான கருத்துக்களுக்கும் ரொம்ப பெரிய ரசிகை... என்னைத் தேடி நீங்களே வந்திருக்கங்கனு என்னால நம்பவே முடியல... எனக்கு ரொம்ப எக்ஸைடிங்கா இருக்கு... நீங்கதான் ஆதின்னு அன்னைக்கு ரோட்டில பாக்கும் போதே தெரிஞ்சிருதா நான் அப்பவே எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருப்பேனே" என்று சங்கரி நிறுத்தாமல் விஷ்வாவைப் பார்த்துப் பேச ஆதிக்கு சிரிப்பு தாளவில்லை.
தவிர்க்க முடியாத குழப்பத்திற்குள் சிக்கிக் கொண்ட விஷ்வா வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தான்.
சங்கரி நிதானத்துக்கு வராத நிலையில் அவளின் அப்பா சோமு அறையைவிட்டு வெளியே வந்தார்.
ஆதி சங்கரியிடம் புரிய வைக்க முயற்சி செய்ய நினைக்கையில் சங்கரி தன் அப்பாவிடம் அவர்களைப் பற்றிய விவரங்களை சொல்லி அறிமுகம் செய்துக் கொண்டிருந்தாள்.
விஷ்வா அந்தச் சமயத்தில் தன் தெளிவற்ற நிலையிலிருந்து மீண்டவனாய் ஆதியிடம் மெலிதான குரலில், "வாட்ஸ் கோயிங் ஆன் ஆதி?" என்றுக் கேட்டான்.
"நத்திங்... சின்ன மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்" என்றவள் சொல்ல,
"இது சின்ன மிஸ் அன்டர்ஸ்டேன்டிங்கா?" என்று ஆதியைப் பார்த்து முறைத்தான். அதற்குள் சோமு அவர்கள் இருவரையும் கவனித்தார்.
ஆதியின் முகம் அவரால் மறக்கவே முடியாத நண்பனின் மனைவி செல்வியின் முகமாயிற்றே?
அவர் பரபரப்போடு ஆதியின் அருகில் வந்து, "நீ சிவசங்கரனின் மகளா?" என்று கேள்வி எழுப்பினார்.
ஆதியின் முகம் பிரகாசமானது. எல்லோருமே அவளை செல்வியின் மகளாகவே அடையாளம் கண்டுக் கொண்ட நிலையில் சோமுவின் வார்த்தை அவளை நெகிழ்ச்சியுறச் செய்தது.
கண்கள் கலங்க வார்த்தைகளின்றி ஆமாம் என்று தலையாட்டினாள். சோமுவும் தன் சந்தோஷத்தை கண்ணீரில் வெளிப்படுத்தினார். உயிர் நண்பன் சிவசங்கரனின் இறப்பு இன்று வரையிலும் பேரிழப்பாய் இருந்து கொண்டிருந்தது அவருக்கு.
அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாய் ஆதியை சந்தித்தது அவருக்குள் அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆதிக்கு அவரின் முகத்தில் தெரிந்த அன்பு அவர் தனக்கு எத்தகைய உறவு என்றக் கேள்வியை எழுப்ப, "அப்பாவை உங்களுக்கு நல்லா தெரியுமா?" என்று கேட்டாள்.
"தெரியுமாவா... சிவசங்கரன் என்னோட உயிர் நண்பன்" என்றவர் அழுத்தமாய் சொல்ல,
"அப்போ நீங்க சோமு அங்கிள்... கரெக்டா?!" என்று ஆதி வினவினாள்.
தன் பெற்றோர்களின் வாழ்க்கையைக் கதையாய் படித்திருந்தாலும் எல்லா கதாப்பாத்திரங்களும் அவள் மனதின் ஆழ பதிந்திருந்தது. அதன் விளைவாகவே ஆதி சோமுவை சரியாக அடையாளம் கண்டுக் கொண்டாள்.
"என்னை பத்தி உங்கம்மா உன்கிட்ட சொல்லிருக்காங்களாம்மா?" என்றவர் கேட்டபடி ஆதியின் தலையை வருட,
"ஆமாம் அங்கிள்... இன்னொரு விஷயமும் தெரியும்... சங்கரியோட முழுபெயர் சிவசங்கரி... அதுவும் எங்க அப்பாவோட பெயர் இல்லையா?" என்றாள்.
இம்முறை சங்கரி ஆதியை ஆச்சர்யமாய் பார்த்தாள். சிவசங்கரி என்ற முழுப்பெயரை யாரும் அழைப்பதே இல்லாத நிலையில் ஆதி அப்படிச் சொன்னது நம்பமுடியாத ஒன்றாய் இருந்தது.
அதேநேரம் சங்கரியை ஆதி நெருங்கி வந்து அணைத்துக் கொண்டு,
"நீங்க எனக்கு செஞ்ச உதவி சாதரணமானதில்ல... என்னோட வாழ்கையை உங்களோட ஒரு லெட்டர் மாத்திடுச்சு... உங்க பேர்ல இன்னும் எங்க அப்பா வாழ்ந்திட்டிருக்காருன்னு தோணுது... உங்களுக்கு நான் எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் ஈடாகாது" என்று ஆதி தன் நன்றியை வெளிப்படுத்த சங்கரிக்கு எல்லாமே புதிராய் இருந்தது.
எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தாத சங்கரியின் முகத்தைப் பார்த்து, "சாரி சங்கரி.. நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லை... ஆதி அலைஸ் ஆதிபரமேஸ்வரி" என்று உரைக்க சங்கரியிடம் குழப்பம் மறைந்து அதிர்ச்சி உண்டானது.
சங்கரி அவளின் முகத்தை பார்த்து, "அப்போ பாரதி பத்திரிக்கையில கட்டுரை தொடர் எழுதிற ஆதி" என்றாள்.
"ம்... நான்தான்... ஒன் மோர் திங் அவர் பேர் விஷ்வா... என்னோட ஃப்ரண்ட்.. மோரோவர் ஹீ இஸ் வெரி புவர் இன் தமிழ் ரைட்டிங்" என்றாள்.
"இதை இப்போ நீ கண்டிப்பா சொல்லியே ஆகணுமா? " என்றுக் கேட்டு விஷ்வா ஆதியை முறைக்க எல்லோர் முகத்திலும் அப்போது புன்னகை தவழ்ந்தது.
அந்தத் தருணம் நெகிழ்ச்சியாகவும் பழைய ஞாபகங்களின் அணிவகுப்பாகவும் மாறியது. பிறகு ஆதி அந்த கெமிக்கல் ஃபேக்டிரி கட்டப்போகும் இடத்தைப் பற்றி சோமுவிடம் விசாரித்தாள்.
அந்த இடம் முன்னர் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த இடமாக இருந்தது என்றும் அங்கே பேய் இருப்பதாக வதந்திகள் பரவியதால் மக்கள் அந்த இடத்தை உபயோகப்படுத்தவே தவிர்த்தனர். அந்த வதந்திக்கு ஏற்ப அங்கே திடீரென பரவிய தீயால் சிவசங்கரனோடு சேர்த்து இன்னும் சிலர் பலியானது மக்களின் நம்பிக்கையை உறுதி செய்தது.
அன்று பலியானவர்களில் அன்னம்மாவின் மகன் வெள்ளையப்பனும் ஒருவன். அவனின் இறப்பினை நேரில் பார்த்த அதிர்ச்சியின் காரணமாகவே அன்னம்மா கோயில் வாசலில் மனநிலை பாதிக்கப்பட்டு ஊமையாய் கிடக்கிறார்.
அதுமட்டுமின்றி அந்த இடத்தின் பத்திரம் சிவசங்கரனின் பேரில் இருக்கும் என்பதுதான் சோமுவின் யூகம். அது உபயோகப்படாத இடம் என்பதாலும் அங்கே தீய சக்திகள் இருப்பதாக மக்கள் ஆழமாய் நம்பிக் கொண்டிருப்பதால் அந்த இடத்தில் ஃபேக்டிரி கட்ட ஊர் மக்கள் எல்லோருமே கிட்டதட்ட சம்மதித்து விட்டதாகச் சோமு கொடுத்த தகவல்கள் ஆதியை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
அவள் அத்தை பரமுவும் அவள் அம்மாவும் செய்த விளையாட்டுத்தனம் இன்று அந்த ஊரின் அழிவுக்கு வித்தாய் மாறிவிட்டது. சங்கரியின் வீட்டிலிருந்து புறப்பட்ட போதும் ஆதி மௌனமாய் யோசனையில் மூழ்கினாள்.
விஷ்வாவும் அவனுக்கு புரியாத தெரியாத விஷயங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க அமைதியாக நடந்து வந்தான்.
அந்த ஊரால் ஒதுக்கப்பட்ட அந்த இடம் அந்த ஊரையே அழித்துவிடப் போகிறது. அதைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பும் கடமையையும் தனக்கு இருப்பதாக இம்முறை ஆதி உறுதியோடு நம்பினாள்.
இந்த எண்ணம் ஒரு புறமிருக்க தன் தந்தையின் மரணத்தில் ஏதோ ஒரு பெரிய ரகசியம் மறைந்து கிடப்பதாக ஆதியின் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.
அவரின் மரணம் குறித்த ரகசியம் அன்னம்மாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதோ என்ற கேள்வி எழுந்தது.
நெகிழ்ச்சியான தருணம்