மோனிஷா நாவல்கள்
AA - 32
Quote from monisha on May 2, 2021, 7:10 PMகுடை சாய்ந்தது
விஷ்வா எங்கே கோபத்தில் சரவணனிடம் சண்டைக்கு போய்விடுவானோ என்று அச்சமுற்ற ஆதி, அவனை அவசர அவசரமாய் இழுத்துக் கொண்டு அறைக்கு வெளியே சென்றாள். அவள் கரத்தை பட்டென உதறியவன்,
"அந்த சரவணனை நான் சும்மா விட போறதில்ல" என்றுக் கோபமாய் சொல்லிக் கொண்டு கடந்து செல்ல பார்த்தவனை வழிமறித்து நின்றாள் ஆதி.
"விஷ்வா ப்ளீஸ்ஸ்ஸ் வேண்டாம்" என்று தன் கரம் கூப்பி அவள் கெஞ்சி நிற்க, அவன் கோபம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
"அவன் உன்னைக் கொல்ல பார்த்திருக்கிறான்... அவனை சும்மாவிட சொல்றியா?" ரௌத்திரமாய் மாறியிருந்தது அவன் முகம்.
"அவனா எதுவும் செய்ல விஷ்வா... எல்லாம் என் பெரியப்பாவோட திட்டம்" என்று ஆதி சொல்ல விஷ்வா அதிர்ந்து நின்றான்.
அதேநேரம் சரவணன் அறையை விட்டு வெளியே வந்து விஷ்வாவை முறைத்துக் கொண்டே செல்ல, "அவனை" என்று விஷ்வா சினத்தோடு தன் விரல்களை மடக்கிக் கொண்டு அடிக்கப் போக
ஆதி அவன் கரத்தைப் பற்றி, "என் மேல உனக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தா நீ சரவணனை அடிக்கக் கூடாது" என்றாள்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட பின் அவனால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. அவன் அப்படியே அமைதியாய் நின்றுவிட,
"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் விஷ்வா... உள்ளே வா" என்று சொல்லி அவன் கரம் பற்றி அறைக்குள் அழைத்துச் சென்றவள் அறைக்கதவை மூடி தாளிட்டாள்.
விஷ்வாவோ கட்டுக்கடங்கா கோபத்தோடு அடிப்பட்ட புலி போல இடமும் வலமுமாய் நடந்தபடி,
"என்ன நடக்குது ஏதுன்னு நீ வாயைத் திறந்து சொல்ல மாட்டியா?" என்றுக் கேட்டவனின் முகத்தில் அத்தனை சீற்றம்.
ஆதி தன் கரங்களைக் கட்டி கொண்டு நிதானமாய் அவன் கோபத்தை உள்வாங்கியவள், "ஏன் விஷ்வா? என் மேல எப்பத்தில இருந்து உனக்கு இவ்வளவு அக்கறை" என்று எகத்தாளமாய் கேட்டு அவள் புன்னகைக்க,
அவன் முகம் மேலும் கடுகடுவெனவே மாறியது.
"உன் கூட நான் ஓயாம சண்டை போடுவேன்... இல்லன்னு சொல்லல... ஆனா உனக்கு ஒண்ணுன்னா நான் பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா?" இறுக்கமான குரலில் அவன் சொல்ல,
ஆதி சிறு புன்னகையோடு அவனை வியப்பாய் பார்த்திருந்தாள்.
"இதுக்கு மேல நீ இங்கே இருக்க வேண்டாம்... புறப்படு போலாம்" என்று விஷ்வா அமர்த்தலாகவே சொன்னாலும் அவன் முகத்திலிருந்த கோபம் துளியளவும் குறையவில்லை.
"விஷ்வா ப்ளீஸ்... முதல்ல ரிலேக்ஸாயிட்டு... நான் சொல்றதை கேளு" என்றவள் பொறுமையாக சொல்ல,
"நீ எதையும் சொல்ல வேண்டாம்... நான் எதையும் கேட்க வேண்டாம்... வீ ஆர் லீவிங் நவ்... வர மாட்டேன்னு அடம்பிடிச்ச... நான் போலீஸ்ல போய் சரவணன் மேலயும் உங்க பெரியப்பா மேலயும் கம்பிளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்" என்க,
அவள் அதிர்ந்தபடி, "ஆர் யூ மேட் ஆர் வாட்? ஏன் இப்படி எல்லாத்துக்கும் அவசரப்படற... உனக்கு எதையும் பொறுமையா ஹேன்டில் பண்ணவே தெரியாதா? எல்லாத்துக்கு கோபம் கோபம் கோபம்... இவ்வளவு கோபம் எனக்கு சத்தியமா செட்டாகாதுப்பா" என்று படபடவென பொரிந்தவள் அவனிடமிருந்து தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டு நின்றாள்.
விஷ்வா அப்படியே மௌன நிலையில் அவளைப் பார்க்க அந்த அறையை ஆக்கிரமித்த நிசப்தத்தால் துணுக்குற்று ஆதி மீண்டும் தன் பார்வையை அவன் புறம் திருப்பினாள்.
அவனோ விழி எடுக்காமல் இவளையே பார்த்திருக்க, "விஷ்வா" என்றவள் மெல்ல அழைப்பு விடுத்தாள்.
அவன் ஆழ்ந்த பெருமூச்சோடு அவளை ஏறிட்டவன்,
"எனக்கு இவ்வளவு கோபம் செட்டாகாதுன்னா... அதுக்கு என்ன அர்த்தம் ஆதி?" என்று கேட்டவனின் முகத்தில் ஓர் எதிர்பார்ப்பு!
அவசரமாய் சொன்ன வார்த்தையை அவன் சரியாய் பிடித்துக் கொண்டு கேள்வி எழுப்ப ஆதி அவனை ஏற இறங்க பார்த்தவள்,
"என்ன பெரிய அர்த்தம்... செட்டாகாதுன்னா செட்டாகாது... அவ்வளவுதான்" என்று சாதாரணமாய் சொல்லி முடித்தாள்.
அவளின் பதிலில் கொஞ்சம் கடுப்பானவன்,
"சரி அதை விடு... கிளம்பு புறப்படலாம்" என்று திரும்பியும் சுற்றி முதலிலிருந்து அவன் ஆரம்பிக்க,
"அய்யோ... விஷ்வா... திரும்பியும் வேதாளம் மாறி முருங்கை மரத்தில ஏறாதே... ப்ளீஸ் என் நிலைமையைப் புரிஞ்சிக்கோ... நான் இங்கே இருந்தாகணும்" அவள் தவிப்போடு சொல்ல,
"நீ முதல்ல நான் சொல்றதைப் புரிஞ்சிக்கோ... அங்க உங்க அம்மா... உன்னை நினைச்சு கவலைபட்டுட்டு இருக்காங்க ஆதி.. உனக்கு எதாவது ஆயிடுமோன்னு பயந்துட்டு இருக்காங்க... அவங்க பயத்துக்கு ஏத்த மாதிரிதான் இங்க எல்லாமே நடந்துட்டிருக்குன்னு இப்பதான் எனக்கு புரியுது... இந்த ஊரும் வேண்டாம்... நீ இங்க இருந்து ஒரு மண்ணும் செய்ய வேண்டாம்... வாக்குவாதம் பண்ணாம கிளம்பு ஆதி" என்று சொல்லி அந்த அறையிலிருந்த அவள் பேகை கையில் எடுத்தான்.
அவன் பிடித்த பிடியில் பிடிவாதமாய் நிற்க ஆதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விஷ்வா மீண்டும், "கிளம்பு ஆதி" என்று அழுத்தம் கொடுக்க,
"சரி போகலாம் விஷ்வா... ஆனா நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு... அப்புறமா போகலாம்" என்றாள்.
அவளை ஆழமாய் ஒரு பார்வைப் பார்த்தவன், "சரி சொல்லு கேட்கிறேன்... ஆனா அதுக்கப்புறம் நம்ம கிளம்பறோம்" என்று விஷ்வா அமைதியாய் சுவரில் சாய்ந்தபடி நின்றுக் கொண்டான்.
"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவள் அவனிடம் ஆரம்பத்திலிருந்து தன் அம்மாவின் வாழ்வில் நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னாள்.
கடைசியாக அப்பாவின் இறப்பையும், தொடர்ந்து அம்மாவிற்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் பற்றியும் சொல்லும் போது அவளது கலங்கிய கண்களும், தழுதழுத்த குரலும் இதுவரை ஆதியிடம் அவன் பாராதது, கேட்காதது.
முதல் முறையாய் அவள் தளர்ந்து போவதைப் பார்த்த விஷ்வாவின் விழிகளிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ஆதி தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு ஜன்னல் புறமாய் திரும்பி நிற்க,
"ஆதி" என்று அழைத்து அவள் தோளைத் தொட்டான் விஷ்வா.
"நத்திங் விஷ்வா... ஐம் ஆல்ரைட்" என்று ஆதி சொல்ல விஷ்வா அவள் தோள்களைப் பிடித்துத் திருப்பினான்.
ஆதியின் கண்கள் சிவந்திருப்பதைப் பார்த்தவனின் மனம் கனத்து போனது. அவளோ வேதனையோடு மேலும் பேசத் தொடங்கினாள்.
"எங்கம்மாவைப் பத்தியும் என்னைப் பத்தியும் தப்பா பேசினதை தாங்க முடியாமதானே நீ கோபப்பட்ட விஷ்வா... இந்த ஊரே எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசுது... என் சொந்த பெரியப்பா நீ என் தம்பி மக இல்லன்னு சொல்றாரு...
எங்கப்பா கூட வாழதான் எனக்குக் கொடுப்பினை இல்ல.. ஆனா அவரோட அடையாளத்தைக்கூட எனக்கில்லாம பண்றதைக் கேட்டுட்டு நான் இந்த ஊரை விட்டு அமைதியா வந்திரனுமா விஷ்வா... என்னையும் எங்கம்மாவை பத்தியும் இங்க இருக்கிறவங்களுக்கு புரிய வைக்க வேண்டாமா...
அதுமட்டுமில்ல... இந்த ஊருக்கு ஏற்படப் போகிற ஆபத்தை நான் தடுக்க வேணாமா?!" என்றவள் வேதனையோடும் வலியோடும் கேட்க விஷ்வா குழப்பத்தில் ஆழ்ந்தான்.
"நீ சொல்றதெல்லாம் சரிதான்... ஆனா இந்தப் பிரச்சனையில உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு உங்க அம்மா பயப்படுறாங்க" என்று பொறுமையாக அவன் எடுத்துரைக்க,
"எனக்கு எதுவும் ஆகாது விஷ்வா... எங்க அப்பாவோட ஆசீர்வதம்... என் நம்பிக்கை... இது இரண்டும் என் கூடவே இருக்கு" என்று தன் மனநிலையை நம்பிக்கையோடு ஆதி வெளிப்படுத்தினாள்.
விஷ்வா அவளை உற்று நோக்கியபடி, "அப்படின்னா நானும் உன் கூட இருப்பேன் ஆதி... என்ன நடந்தாலும் உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் உன் கூட துணையாய் இருப்பேன்... இப்ப மட்டும் இல்ல... உன் வாழ்க்கை முழுக்க... ஒரு நண்பனா அதே நேரத்தில... நீ விருப்பப்பட்டால் உன்னோட கணவனா" என்று விஷ்வா தன் மனதில் உள்ள எண்ணத்தை வெளிப்படுத்த ஆதியின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
"ஹும்ஹு.... உன் மனசுல இருக்கிறதை சொல்ல சரியான சேன்ஸ் பாத்திட்டிருந்தியோ?!"
"ஆனா நீ உன் மனசில இருக்கிறதை சொல்லவே மாட்டிறியே" என்றவன் கேட்டு அவள் மீது ஏக்கபார்வையை வீசினான்.
அவனை ஆழ்ந்து பார்த்தவள், "நீ எப்பவுமே இதே மாதிரி நட்போட... என்னோட லைஃப் பாட்னரா வாழ்க்கை முழுக்க வர்றதில எனக்கு ஓகேதான்... ஆனா உன்னோட இந்தக் கோபத்தை சமாளிக்கணும்னு நினைச்சாதான்" என்று ஆதி இழுக்க விஷ்வாவின் முகம் மலர்ந்தது.
"அது ஒரு பிரச்சனையே இல்ல... நீ ஒரு ஹக் கொடுத்தா என் கோபமெல்லாம் பறந்து போயிடும்" என்க,
ஆதி அவனை விழியிடுங்கப் பார்த்து, "கிட்ட நின்னாலே சாரோட கண்ணியம் கெட்டு போகும்.. அப்படியிருக்க கட்டிப்பிடிச்சா மட்டும் உங்க கண்ணியம் கெட்டுப் போகாதோ?" என்றாள்.
"காதலிக்கிற பொண்ணுகிட்ட அந்த மாதிரி... கட்டுப்பாடெல்லாம் கிடையாது" என்று சொல்லி விஷ்வா புன்னகைக்க,
"ஓ... அப்போ மாலதிக்கும் இந்த மாதிரி கட்டுப்பாடெல்லாம் இல்லையோ?!" என்றவள் கேட்ட மறுகணம் விஷ்வாவின் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது.
"இப்போ கண்டிப்பா நீ மாலதியை பத்தி பேசணுமா?!" அவன் முகம் சிறுத்து போக,
"ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்... கேட்கக் கூடாதா?!" அவள் இயல்பான முகபாவத்தோடே கேட்க அவன் அவள் பார்வையை கூர்ந்து நோக்கி,
"மாலதியோட அடக்கமான அழகு, அந்த சைலன்ட் கேரக்டர் எல்லாம் எனக்கு பிடிச்சு போனது உண்மைதான்... நான் மறுக்கல... என்ன காரணத்தினாலோ அவ என் வாழ்க்கையைவிட்டு போயிட்டா... ஆனா ஆதி... உன்னை நான் காதலிப்பேன்னு சத்தியமா நினைச்சு பார்த்ததேயில்லை... அப்படி ஒன்னு கனவுல நடந்தா கூட, அது ஒரு கெட்ட கனவாதான் நான் நினைப்பேன்....
ஆனா அந்த எண்ணத்தை எல்லாம் மாத்தி இந்த ரொம்ப குறுகிய காலத்தில பழைய எல்லா விஷயங்களை மறக்கடிச்சி… இப்போ நீ மட்டுமே என் மனசு முழுக்க நிறைஞ்சிருக்க... அதனாலதான் நீ அப்படி யாரோ ஒருத்தன் மாதிரி என்னை எடுத்தெறிஞ்சு பேசினதை என்னால தாங்கிக்க முடியல... உன் நிராகரிப்பை தாங்க முடியாமதான் இங்கிருந்து போகணும்னு நினைச்சேன்... பட்... நீ விஷ்வா டோன்ட் கோன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் நிச்சயம் போயிருக்கமாட்டேன்" என்றான்.
"ஆமா... சார் அப்படியே நான் சொல்றதை காது கொடுத்துக் கேட்டுட்டாலும்... கோயில்ல பேசலாம்னு பாத்தா நீ அதுக்கான சேன்ஸையே எனக்குக் கொடுக்காம கிளம்பி போயிட்டியே"
"போனேன்தான்... ஆனா நான் ஊரைவிட்டு போகறதுக்குள்ள உங்கம்மா ஃபோன் பண்ணாங்க... ஆதியை எப்படியாவது பேசிக் கூட்டிட்டு வந்துரு... அவளுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு பயமா இருக்குன்னு… ரொம்ப ஃபீல் பண்ணாங்க... அதுக்கப்புறம் நான் எங்க புறப்படறது… அதான் திரும்பி வந்துட்டேன்"
"அப்போ நீயா சமாதானமாகி வரல" என்று அவனை முறைத்தபடி அவள் கேட்க,
"அது அப்படி இல்ல... கிளம்பறேன்னு சொல்லி ரெடியாயிட்டேன்... நீயும் என்னைப் போக வேண்டாம்னு தடுக்கல... நானா போகாம நின்னுட என் ஈகோ ஒத்துக்கல.. நான் திரும்பி வர ஆன்ட்டியோட ஃபோன் ஒரு காரணம்... அவ்வளவுதான்"
"நல்ல சமாளிப்பு"
"அப்போ நம்பமாட்ட?"
"நம்பிட்டேனே" என்று சொல்லி ஆதி சிரிக்க விஷ்வாவும் அவளோடு சேர்ந்து சிரித்தான். அவர்கள் இருவர் இடையிலும் ஒருவித இலகுதன்மை வந்திருக்க விஷ்வா அப்போது தன் கைப்பேசியை நீட்டி,
"உங்கம்மாக்கு ஃபோன் போட்டு பேசு ஆதி… அப்பதான் அவங்க சமாதானம் ஆவாங்க" என்றவன் சொல்ல யோசனையாய் அவனைப் பார்த்தவள்,
"பேசறேன் விஷ்வா" என்றாள்.
"ப்ச்...ஸ்பீக் நவ்" என்றவன் அழுத்தம் கொடுக்க,
"நான் என் ஃபோனிலிருந்து பேசறேன்... நீ பேக் எடுத்துட்டு உன் ரூமுக்கு போ" என்று சொல்லி மூடியிருந்த கதவைத் திறந்தாள்.
விஷ்வா அதிர்ச்சியான பார்வையோடு, "அந்த சரவணன் ரூமுக்கா?!" என்று கேட்க,
"பின்ன வேறெங்க?" என்றாள்.
"அவன் தூங்கும் போது என் தலையில கல்லைத் தூக்கிப் போட்டாலும் ஆச்சர்யபடறதுக்கில்ல... நான் அவன் ரூமுக்கு போக மாட்டேன்" என்று விஷ்வா மறுக்க,
"அப்படி எல்லாம் பண்ணமாட்டான் விஷ்வா... நீ போ" என்றாள் ஆதி.
"நோ வே.. நான் இந்த ரூம்ல உன் கூடவே ஸ்டே பண்ணிக்கிறேன்"
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுற்றவள், "இரண்டு நாள் முன்னாடி நீ இப்படி சொல்லிருந்தாக் கூட நான் யோசிச்சிருப்பேன்... ஆனா இப்பக் கூடவே கூடாது" என்றாள் தீர்க்கமாக!
"ஏன்... உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்லையா?!" வெகுசமார்த்தியமாய் அவன் கேட்க,
"இல்ல... எனக்கு உன் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை... போ விஷ்வா... என்னை இரிடேட் பண்ணாதே" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவனை அனுப்ப முற்பட்டாள்.
அவளை வித்தியாசமான பார்வையோடு ஏறிட்டவன்,
"நான் இவ்வளவு கண்ணியமா இருந்தும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா... எதுக்குத் தேவையில்லாம கண்ணியமா இருந்துகிட்டு" என்று சொல்லி வாசல் கதவருகில் நின்றிருந்தவளை அருகில் இழுத்து அணைத்து, அவளின் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாய் பதித்துவிட அவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்று போனது.
அவள் அதைச் சற்றும் எதிர்பாராதவளாய் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, "தேங்க்யூ.. அன் சாரி" என்று ஆதி தன்னிலைக்கு வருவதற்கு முன்பே விஷ்வா சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியேறினான்.
ஆதி ஒருவாறு அவன் தந்த அதிர்ச்சியிருந்து மீண்டு அறையைவிட்டு வெளியே வந்தவள், "விஷ்வா யூ ராஸ்கல்... ஐ வில் கில் யூ" என்றுப் பொறுக்க முடியாமல் கத்தினாள்.
"தப்பா சொல்ற டார்லிங்... கே ஐ எல் எல்.. இல்ல... இட்ஸ் கே ஐ எஸ் எஸ்.. காட் இட்" என்றவன் சொல்லி எள்ளலாய் நகைக்க,
அவன் சொன்னது சற்று தாமதமாகவே அவள் புத்திக்கு எட்ட, "போடா இடியட்" என்று அடங்கா கோபத்தோடு சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்றுக் கதவை மூடிக் கொண்டாள்.
சில விநாடிகளில் நடந்துவிட்ட அந்நிகழ்வு ஆதியின் மனக்கட்டுபாடுகளை சிதைத்துவிட இத்தனை ஆண்டுகளாய் அவளுக்குள் பத்திரமாய் பூட்டியிருந்த பெண்மை என்ற உணர்வு வெளிப்பட்டது.
அவளைப் பார்வையாலும் தீண்டக் கூட எந்த ஆணும் யோசிக்க, சர்வசாதாரணமாய் அவளை அணைத்து முத்தமிட்ட அவன் தீரத்தில் குடை சாய்ந்தது அவள் பெண்மை. தான் வந்த வேலையெல்லாம் மறந்தவள்,
விஷ்வாவின் அந்தக் காதல் முத்தத்தில் இருந்து மீள முடியாமல் தன் படுக்கையில் சாய்ந்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.
குடை சாய்ந்தது

Quote from Marli malkhan on May 31, 2024, 2:16 AMSuper ma
Super ma