மோனிஷா நாவல்கள்
AA - 33
Quote from monisha on May 3, 2021, 8:08 PMதந்திரம்
ஆதி மொட்டை மாடி இருளில் நின்றபடி செல்லம்மாவிற்கு தன் அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். சிறிது நேரத்தில் அந்த அழைப்பை ஏற்று, "ஆதி" என்று செல்லம்மாவின் குரல் கேட்க,
ஆதி பதில் ஏதும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள்.
"ஆதி... ஏதாச்சும் பேசு" என்று தாளாத தவிப்போடு செல்லம்மா கேட்க,
"நான் ஏதாச்சும் பேசி.. உங்க மனசு கஷ்டபட வேண்டாமேன்னு அமைதியா இருக்கேன்" என்று வெறுமையான உணர்வோடு அவளிடமிருந்து பதில் வந்தது.
"ஒரு வார்த்தைக்கூட சொல்லாம உன்னை யாரு ஆதித்தபுரத்திற்கு போக சொன்னது" செல்லம்மா கண்டிப்போடுக் கேட்க,
"சொன்னா போகவேண்டாம்னு சொல்வீங்களே... அதான் சொல்லல" அலட்டிக் கொள்ளாமல் பதிலுரைத்தாள் ஆதி.
"வாய் ரொம்ப ஜாஸ்தியா போச்சு... ஒழுங்கா புறப்பட்டு வர வழியை பாரு"
"முடியாது... வேற ஏதாவது விஷயம் இருந்தா சொல்லுங்கம்மா" என்று ஆதி விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தாள்.
"அப்போ நான் சொல்றதை நீ கேட்கக் கூடாதுன்னு இருக்கே... அப்படிதானே ஆதி"
"அப்படி எல்லாம் இல்லம்மா"
"அப்படின்னா உடனே அங்க இருந்து முதல்ல புறப்படு ஆதி... நீ அங்க இருக்கிறது உனக்கு நல்லதில்ல" என்றவர் தவிப்போடு சொல்ல,
"முடியாதும்மா... எங்க அப்பாவோட சாவுக்கான நியாயத்தை நான் கேட்காம இந்த ஊரை விட்டு நகரமாட்டேன்" படுதீவிரமாய் சொன்னாள் ஆதி.
"பைத்தியம் மாதிரி பேசாதே... உங்க அப்பாவோட இறப்பு ஒரு விபத்து" என்றார்.
"எங்கப்பாவுக்கு நடந்தது வெறும் விபத்துன்னு என்னால நம்ப முடியல... நான் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்கணும்"
"நான்தான் சொல்றேன் இல்ல... உங்கப்பாவுக்கு நடந்தது விபத்துன்னு... நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிட்டிருக்காதே"
"எப்படிம்மா கொஞ்சம் கூட யோசிக்காம பொய் சொல்றீங்க... அப்பாவுக்கு என்ன நடந்ததுன்னு உங்களுக்கு நல்லா தெரியும்... ஆனா என்ன நடந்ததுன்னு நீங்க எழுதவேயில்லை... எதுக்காக என் கிட்ட இருந்து அப்பா இறப்பு பத்தின விஷயத்தை மறைக்கணும்னு நினைக்கிறீங்க" என்று ஆதி ஆவேசமாய் கேட்க,
செல்லம்மா மறுபுறத்தில் ஆதியின் பேச்சைக் கேட்டு அப்படியே மௌனமானார்.
"ஏன் அமைதி ஆயிட்டீங்கம்மா... நான் ஜர்னலிஸம் படிச்சிருக்கேன்.. நீங்க எழுதினதை அப்படியே கண்ணை மூடிட்டு நம்பிடுவேன்னு நினைச்சீங்களா... உங்களால மட்டும்தான் அப்பாவுக்கு என்னாச்சுன்னு சொல்ல முடியும்... அந்த தோப்புல நெருப்பு பரவ ஆரம்பிச்ச போது… நீங்களும் அப்பா கூடதானே இருந்தீங்க.. அந்த நேரத்தில என்ன நடந்ததுன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்... ஏன் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறீங்கன்னு எனக்கு புரிய மாட்டேங்குது... சொல்லுங்கம்மா" என்று ஆதி தொடர்ச்சியாய் பேச
செல்லம்மா பதிலின்றி அமைதியானார். "ஹலோ அம்மா" என்று ஆதி அழைக்க மறுபுறத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்ட ஒலி கேட்க ஆதிக்கு கடுப்பானது.
தன் அலைபேசியை எடுத்து கோபமாய் பேக்கெட்டில் நுழைத்தவள்,
'எனக்கு ஏன் தெரிய கூடாதுன்னு நினைக்கிறீங்க... வாட்ஸ் ராங்க்?" என்று தனக்குத்தானே புலம்ப, அப்போது விஷ்வா அவளைத் தேடிக் கொண்டு அந்த இருளில் மாடி ஏறி வந்தான்.
ஆதியின் விழிகள் விஷ்வாவை பார்த்த நொடி அதீத உக்கிரமாய் மாறியது. மற்ற எல்லா எண்ணங்களும் இரண்டாம் பட்சமாய் மாற, அவன் எப்படி தன் அனுமதியின்றி முத்தம் கொடுப்பான் என உள்ளூர கோபம் கொண்டாள்.
அவளின் கண்களில் கோபம் அனலெனத் தகித்து கொண்டிருக்க அவன் சிரித்த முகத்தோடு அவளை நோக்கி நடந்து வந்தான். அவனிடம் பேச கூட விருப்பமில்லாதவளாய் அவனைத் தவிர்த்துவிட்டு அவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க,
"ஆதி வெயிட்... என்ன கோபமா?" என்றவன் குரல் கொடுக்க, ஆதி அனலாய் அவனைத் திரும்பி நோக்கி,
"கோப... மா ... வா... கொலையே பண்ணிடுவேன் பாத்துக்கோ... என் காலேஜ் மெட்ஸ்... என் கூட வேலைப் பாத்த ஜென்ஸ் கூட யாருமே என் கிட்ட வந்து... வேற எண்ணத்தோட பேசக் கூட பயப்படுவாங்க... ஆனா என் கிட்ட நீ இப்படி இன்டீஸன்டா நடந்துக்கிறேன்னா... உனக்கு என்ன திமிரு இருக்கும்... ஆமா... இதுல எல்லாம் உனக்கு ரொம்ப அனுபவமோ... இந்த மாதிரி நீ நிறைய கொடுத்திருக்க... நிறைய வாங்கி இருக்க போல" என்று ஆதி அவனை சரமாரியாய் வெளுத்து வாங்க விஷ்வாவின் முகம் கோபத்தில் சிவந்து உதடுகள் துடிக்க,
"ஸ்டாப் இட் ஆதி... இந்த செகண்டு வரைக்கும் வேற எந்த பொண்ணுகிட்டயும்... இன்க்லூடிங் மாலதி.. யார் கிட்டையும் நான் இப்படி நடந்துகிட்டதில்ல... உன்கிட்ட மட்டும்தான்.. அதுவும் உன்னாலதான்" என்றான்.
அப்படியே அதிர்ந்து ஒரு நொடி மௌனமாய் நின்றவள் பின் சுதாரித்துக் கொண்டு மீண்டும் அதே கோபத்தோடு,
"நான் காரணமா... நீ அட்வான்டேஜ் எடுத்துகிட்ட மாதிரி நான் நடந்துகிட்டேன்னு சொல்லவர்றியா?!" என்றவள் வினவ,
"நீ நடந்துகிட்ட விதம் தப்பில்ல... நீ பேசின விதம் தப்பு... நான் கட்டுப்பாடு இல்லாதவன்னு நீ எப்படி சொல்லலாம்... யூ நோ வாட்?!!
என்னோட கேர்ள் பிரண்ட்ஸ் எல்லாம் என்னை பிலீவ் பண்ணி என் கூட சில சூழ்நிலைகளால ஸ்டே பண்ணிருக்காங்க... ஏன்? பெங்களூரில மாலதி என் கூட சில நேரங்கள்ல ஸ்டே பண்ணிருக்கா... ஆனா நான் என் லிமிட்ஸை கிராஸ் பண்ணதில்ல... அப்படி நம்பிக்கை இல்லன்னா... மாலதி நம்பர் கூட தரேன் கேட்டு பாரு... பொண்ணுங்கள தப்பான கண்ணோட்டத்தில பார்க்கிற சீப்பான மென்டாலிட்டி எனக்கில்ல...
நாம ஒண்ணா தங்க வேண்டாம்னு சொன்னதுக்கு நீ வேற காரணம் ஏதாச்சும் சொல்லிருக்கலாம்... பட் நீ அப்படி சொன்னது எனக்கு இன்ஸல்டிங்கா இருந்துச்சு ஆதி...
லைஃப் பாட்னரா இருக்க ஓகேன்னு சொல்லிட்டு அடுத்த நொடியே என் மேல நம்பிக்கை இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம்... என்னைப் பார்த்தா அவ்வளவு சீப்பானவன் மாறி தெரியுதா?!" என்று படபடவென அவன் பொறிந்து தள்ள ஆதி திகைத்து நின்றாள்.
அவனே மேலும், "நீ அப்படி சொன்னதை என்னால டாலரேட் பண்ணிக்க முடியல... உன்னை பனிஷ் பண்ணனும்ன்னு தோணுச்சு... அதான் அந்த மொமன்ட்ல என் மைன்ட் என்ன சொல்லுச்சோ அதைச் செஞ்சிட்டேன்... வேற மாதிரி எண்ணத்தோட முத்தம் கொடுத்திருக்கனும்னா கன்னத்தில இல்ல... வேற எடத்துல கொடுத்திருப்பேன்" என்று விஷ்வா கடைசி வார்த்தையில் அழுத்தம் கொடுக்க ஆதியின் முகம் இருளடர்ந்து போனது.
அவன் சொன்னதை எல்லாம் கேட்டவளுக்கு சில நொடிகள் பேசுவதற்கு வார்த்தையே வரவில்லை. ஒருபுறம் அவன் தன்னையே குற்றவாளியாய் மாற்றி விட்டானே என்று ஆச்சரியப்பட்டாள்.
ஏன்? அவள் மனமும் கூட நீ பேசியதுதான் தவறு எனக் குற்றம் சாட்டியது. விஷ்வா அவள் அமைதியாக நிற்பதைப் பார்த்து அவளை நெருங்கி வரச் சட்டென்று அவள் கால்களைப் பின்னோக்கி நகர்த்தினாள்.
"நில்லு ஆதி... ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு"
"இன்னும் என்ன சொல்லணும் "
"ஸாரி... நான் என்ன நியாயப்படுத்தினாலும் நான் செஞ்சது தப்புதான்... பேசாம உன் கோபம் தீர்ற மாதிரி பளார்னு ஒரு அடி அடிச்சிடு.. பிராப்ளம் சால்வ்ட்" என்றவன், அவள் எதிரே வந்து நிற்க இது என்ன மாதிரியான தந்திரம் என்று ஆதிக்கு விளங்கவேயில்லை.
"கம்மான் ஆதி... அடிச்சிடு" என்று மீண்டும் அவன் சொல்ல, ஆதி அவனிடமிருந்து விலகி வந்து நின்றுக் கொண்டாள்.
"அப்போ கோபம் இல்லயா?!" என்று தலைசாய்த்து அவன் கேட்ட தோரணையில் ஆதி புன்னகைத்து,
"ரொம்ப புத்திசாலி விஷ்வா நீ... எல்லாத்தையும் நீ செஞ்சிட்டு நான் தப்பு செஞ்ச மாதிரி என்னை கில்டியா ஃபீல் பண்ண வைச்சதில்லாம... அடிக்க வேற சொல்லி முன்னாடி வந்து நின்னு என்னையே மிரள வைச்சிட்ட... ஹாஸம்" என்று அவனை வஞ்சமாய் அவள் பாராட், அவன் அவளை ஆழமாய் பார்த்தான்.
"ப்ளீஸ் ஆதி... அந்த மேட்டரை விட்டுடேன்... நம்ம காதலை சொல்லிக்கிட்ட முதல் நாளிலேயே சண்டை போடணுமா.. அதான் போதும் போதுங்கிற அளவுக்கு நாம சின்ன வயசில இருந்து நிறைய சண்டை போட்டுட்டோமே.. இனிமேயும் அதையே தொடரணுமா... லெட்ஸ் லவ் ஈச் அதர்" என்றவன் கெஞ்சலாய் கேட்க, அவன் முகபாவனையை பார்த்தவளுக்கு அவள் கோபமெல்லாம் கண் காணாமல் கரைந்து போனது.
இருந்தும் முகத்தைச் சற்று இறுக்கமாகவே வைத்துக் கொண்டவள்,
"சரி சண்டை போடல... ஆனா நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு... இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன்னு" என்று சொல்லி அவள் வலது கரத்தை நீட்ட விஷ்வாவின் புருவங்கள் நெரிந்தன.
அதற்குள் ஆதியின் அலைபேசி மணி ஒலிக்க விஷ்வாவிடம் , "ஜஸ்ட் அ மினிட்" என்று சொல்லி ஃபோனை காதில் வைத்து தனியே சென்று பேசத் தொடங்கினாள்.
விஷ்வா நிம்மதி பெருமூச்சுவிட்டு, 'தப்பிச்சோம்... ஃபோன் பேசி முடிச்சிட்டு சத்தியம் வாங்கிற மேட்டரை மறந்துட்டா நல்லா இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டான். அதேநேரத்தில் ஆதியுடன் பேசியில் உரையாடிக் கொண்டிருந்தது வேறுயாருமில்லை, ஜேம்ஸ்தான்.
அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டு ஆதி சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
"ஆதித்தபுரத்திற்கு வர்றதுக்கு ஆர்கியாலஜிஸ்ட் அன் டெம்பிள் ரிசச்சர் தமிழ்வேந்தன் ஒத்துக்கிட்டாரு" என்று ஜேம்ஸ் சொன்ன தகவல்தான் அவள் ஆனந்தத்திற்குக் காரணம்.
"வாவ்!... ஜேம்ஸ்... யூ டன் அ கிரேட் ஜாப் மேன்" என்று புகழாரம் சூட்டிப் பரவசப்பட்டவள்,
"ஆமா அவர் என்னிக்கு வரேன்னு சொன்னாரு" என்று ஜேம்ஸிடம் வினவினாள்.
"அவரே டிசைட் பண்ணிட்டு சொல்றேன்னு சொன்னாரு"
"ஓகே... பட் முடிஞ்ச அளவுக்கு இந்த வீக்ல" என்று ஆதி சொல்லிவிட ஜேம்ஸும் முயற்சி செய்வதாக சொன்னான்.
ஆதி பேசி முடிக்கும் வரை காத்துக் கொண்டிருந்த விஷ்வா அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தான். அவள் முகத்தில் இருந்த இறுக்கம் மறைந்து ரொம்பவும் உற்சாகமாய் தென்பட்டாள். எல்லா விஷயங்களையும் ஆதி விஷ்வாவிடம் பூரிப்போடு பகிர்ந்து கொண்டுவிட்டு பின் ஏதோ ஞாபகம் வந்தவளாய்,
"நாம என்ன பேசிட்டிருந்தோம்" என்று கேட்டாள்.
"அது.. எனக்கு ஞாபகத்தில் இல்ல... அவ்வளவு முக்கியமா எதுவும் பேசல" என்றவன் சமாளிக்க ஆதி அவனை ஏறஇறங்க பார்த்து,
"ஏ ஃப்ராடு... எனக்கு மறக்கல... சத்தியம் பண்ணு" என்று மீண்டும் தன் கையினை நீட்டிக் கேட்க விஷ்வா அந்தச் சூழ்நிலையை சமாளிக்கச் சிந்திக்க ஆரம்பித்தான்.
"என்ன முழிக்கிற ஒழுங்கா சத்தியம் பண்ணு" மிரட்டலாய் அவள் கேட்க திருதிருவென்று முழித்தவன், சத்தியம் செய்வதாகச் சொல்லி அவள் கரத்தில் கரம் வைத்துச் சட்டென அவளைப் பிடித்து அருகில் இழுத்து அணைக்க,
"யூ" என்று அவனை தன் கரத்தால் குத்தி போராடி அவனிடமிருந்து வெளியே வர முயல, அவனோ தன் இதழ்கள் விரிய,
"அப்படி எல்லாம் உன்கிட்ட இருந்து என்னால தள்ளி இருக்க முடியாது... சோ சாரி" என்றான்.
"நீ இருக்கியே... பெரிய கேடிடா" என்று உரைத்தவள் அதற்கு மேல் அவன் அணைப்பில் இருந்து ஏனோ விலக மனமில்லாமல் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.
ஏற்கனவே அவள் சந்தோஷத்தில் இருக்க அவன் அணைப்பில் கிடப்பதை அவள் மனம் ரசிக்கவே செய்தது. வெறும் வெறுப்பை மட்டும் திகட்ட திகட்ட உமிழ்ந்த அந்த விழிகள் நான்கும் முதல்முறையாய் காதலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்க,
எதிர்பாராதவிதமாய் மாடிக்கு வந்த சரவணனின் விழிகள் அவர்களின் நெருக்கத்தைப் பார்த்து பொறாமை தீயில் அவர்களைப் பொசுக்கிவிடுவது போல் பார்த்தன.
அவன் வெறியோடும் கோபத்தோடும் இயலாமையையும் வலியையும் நெஞ்சில் சுமந்தபடி அங்கிருந்து அகன்றுவிட ஆதி விஷ்வாவின் காதல் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்துக் கொண்டிருந்தது.
*********
செல்லம்மா தன் மகளின் ஒவ்வொரு கேள்வியைப் பற்றியும் மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தார். ஆதி இவற்றை எல்லாம் எப்படிக் கண்டறிந்தாளோ என்ற புரியாத குழப்பம் அவர் மனதைத் துளைத்து கொண்டிருந்தது.
சிவசங்கரனோடு வாழ்ந்த காலங்களை எண்ணி எண்ணி இன்புற்றவள், அதேநேரம் அவனுக்கு நேர்ந்த நிலையை எண்ணி வருந்தாத நாளே இல்லை.
தன்னவன் சாம்பலாய் ஆதித்தபுரத்தில் கரைந்து போன அந்த மோசமான ஞாபகங்ளை இன்றளவும் அவர் தன் நினைவு பெட்டகத்தில் இருந்து அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தார்.
இன்று ஆதி எழுப்பிய கேள்விகள் அந்த மோசமான சம்பவத்தை உயிரோட்டமாய் அவர் கண்முன்னே காட்சிகளாய் கொண்டு வந்து நிறுத்தியது.
தந்திரம்

Quote from Marli malkhan on May 31, 2024, 2:21 AMSuper ma
Super ma