மோனிஷா நாவல்கள்
AA - 35
Quote from monisha on May 8, 2021, 5:52 PMவீசப்பட்ட கத்தி
ஆதி அவர்களை உள்ளே வரவேண்டாம் என்று சொல்ல, மூவருமே புரியாமல் விழித்தனர். அவள் அப்படிப் பொத்தி பொத்தி எந்த ரகசியத்தைப் பாதுகாக்க நினைக்கிறாள் என்று சங்கரி ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் விஷ்வா பேச ஆரம்பிக்க அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை மெல்லத் தகர்ந்தது. ஆதியும் அவனும் சிறு வயதிலிருந்து போட்டுக் கொண்ட சண்டைகளைப் பற்றி அவன் சுவாரஸ்மாய் சொல்ல ஜேம்ஸும் சங்கரியும் கண்கள் கலங்குமளவிற்குச் சிரித்து சிரித்துக் களைத்து போயினர்.
சங்கரி விஷ்வாவைப் பார்த்து, "அப்போ நீங்க இரண்டு பேரும் எலியும் பூனையும் மாதிரியா?" என்று கேட்க,
"சேச்சசே... சிங்கமும் புலியும் மாதிரி... ஒருத்தர் மேல ஒருத்தர் பாஞ்சி பிராண்டிக்காத குறை... ஆனா முதல்ல அவளை வெறுப்பேத்தறது நான்தான்... ஆனா கடைசியா என்னை எதாச்சும் பேசி வாயை அடைச்சிடுவா" என்றான் விஷ்வா.
அதற்குள் ஆதியும் தமிழ்வேந்தனும் ஆலயத்தின் வாசலை அடைய விஷ்வா ஜேம்ஸையும் சங்கரியும் பார்த்து, "நான் சொன்னதைப் பத்தி எதுவும் வாயை திறந்துராதீங்க... அப்புறம் அவ என்னைப் பாஞ்சி பிராண்டிடுவா." என்க, "ஆதி கேட்டா நான் சொல்லிடுவேன்" என்று சங்கரி சொல்ல.
ஜேம்ஸும், "கேட்டா சொல்லித்தானே ஆகணும் " என்றான்.
விஷ்வா பயபக்தியோடு, "ஆதிபரமேஸ்வரிதான் என்னை காப்பாத்தணும்" என்று சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
தமிழ்வேந்தன் ஆதியிடம், "இது சென்சிட்டிவ் இஷு... பொறுமையாதான் ஹேன்டில் பண்ணனும்" என்று சொல்லிக்கொண்டிருக்க, அதே சமயத்தில் அவர்களின் சிரிப்பு சத்தம் ஆதியின் காதில் ஒலிக்க அவள் அவர்களை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு,
"நீங்க இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்" என்று கேட்டு கொள்ள தமிழ்வேந்தன் சற்றுத் தயங்கினார். ஆனால் ஆதி எடுத்துரைத்த விளக்கங்களைக் கேட்ட பின் அவர் அவள் சொன்னதற்கு ஆமோதித்துவிட, அவள் களிப்புற்றாள்.
தமிழ்வேந்தனோடு நடந்து வந்த ஆதி, சங்கரியை நெருங்கியதும் அவர்கள் சிரித்ததன் காரணத்தை வினவ, விஷ்வா சொல்ல வேண்டாம் எனத் தலையாட்டினான். அதைக் கவனித்த ஆதி அங்கே அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என யூகித்துவிட்டு அப்போதைக்கு எதுவும் பேசாமல் அமைதியானாள்.
சங்கரி தமிழ்வேந்தனைப் பார்த்து, "எங்க கோயிலும் அத்தனை பழமை வாய்ந்ததா?" என்று கேள்வி எழுப்ப,
தமிழ்வேந்தன் சிறுபுன்னகையோடு, "இந்த கோயில் பார்க்க ரொம்பவும் சாதாரணமாய் தெரிவதினால் நீங்க இந்தக் கோயிலின் பழமையும் அருமையும் புரியாம இருக்கீங்க... இந்த கோயிலைப் பிரமாண்டமாய் கட்டனும்கிறதுதான் ஆதித்தியவர்மனோட ஆசை...
ஆனால் அந்த சூழ்நிலையில் ஏற்பட்ட பெரும் சேதத்தை ஈடுகட்ட அவன் செல்வமெல்லாம் செலவாயிடுச்சு... அதனால்தான் இப்போ இது ஒற்றை கோபுரத்தோட நிக்குது" என்றார்.
"ஆதித்தியவர்மன் வரலாறைப் பற்றி எங்க அப்பாவும் சொல்லிருக்காரு… ஆனா நீங்க சொன்ன விஷயத்தைப் பத்தி நான் இப்பதான் கேள்விபடறேன்"
"நீங்க இன்னும் உங்க ஊர் கோயிலைப் பற்றிய அறிவியல் ரகசியங்களைத் தெரிஞ்சிக்கணும்"
"அறிவியல் ரகசியமா? கோயிலுக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்?" என்று விஷ்வா புருவங்கள் நெறிக்க, அப்போது தமிழ்வேந்தன் விஷ்வாவைப் பார்த்து,
"சோலார் சிஸ்டத்தைப் பத்தி நம்ம அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நவக்கிரகங்களை நிர்மாணித்து நம்முடைய கோயில்களில் கடவுளாக வணங்கிட்டிருக்கோம்...இது அறிவியலோடு சம்பந்தபட்டதில்லையா?!" என்றுக் கேட்டார்.
விஷ்வா வியப்பாய் தலையசைத்து, "ஆமா இல்ல" என்றான்.
"நாம சில கோயில்களுக்கு போனால் சில நோய்கள் குணமாகும் சொல்றோம்... அது கடவுளின்பால் உள்ள நம்பிக்கை மட்டும் இல்லை...
அதுக்கு அறிவியல் ரீதியான காரணங்கள் இருக்கு... செருப்பு அணிஞ்சிட்டு கோயிலுக்குப் போகக் கூடாது... அதுக்கு சுத்தம் மட்டும் காரணம் இல்லை...
கோயில்களின் தரைதளங்களோடு நாம தொடர்பு கொள்வதன் மூலமா அங்கே இருக்கிற ஆக்கபூர்வமான சக்தி நமக்கு கிடைக்கும்...
நம்முடைய ஐம்புலன்களும் கோயில்களில் இயக்கப்படுகிறது... முதலில் நாம் உள்ளே நுழையும் போது எழுப்பப்படுகிற மணி ஓசை... கேட்கும் திறனையும்...
அப்புறம் கற்பக்கிரகங்களில் நடக்கிற தீபாரதனைப் பாக்கிற திறனையும்... அந்தத் தீபத்தைத் தொட்டு கண்களில் ஒத்திக்கும் போது உணரும் திறனையும்..
அப்புறம் கோயிலில் கமழ்கிற பூ மற்றும் கற்பூர வாசம் நுகரும் திறனை... அப்புறம் கடைசியாய் செம்பு அல்லது வெள்ளி பாத்திரங்களில் ஐந்து மணிநேரம் துளிசி போட்ட தீர்த்தம் குடிக்கும் போது ருசியை உணரும் திறன்... கிட்டதிட்ட பல நோய்களுக்கு அது மருந்து...
இப்படி ஐம்புலன்களும் இயக்கப்பட்டு கோயிலை மூன்று முறை வலது புறமாக சுத்தி கீழே விழுந்து பிரதக்ஷனம் பண்ணா நம்ம உடல் மற்றும் மனம் தெளிவடையும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை...
நம்ம புருவங்களுக்கிடையில் குங்குமம் வைப்பது அங்கே அமைந்துள்ள மத்திய நரம்பான அந்தய சக்ராவை அழுத்தினால் அது நம் முகத்தின் இரத்த ஓட்டத்தை சீராக்குது...
இதுதான் கடவுள் என்ற காரணிக்கு பின்னாடி இருக்கிற அறிவியல்... ஆனா இன்னைக்கு இருக்கிற அவசர உலகத்தில கோயிலுக்குள்ள கூட வராம வாசலோட சாமிக்கு ஓர் சலாம் போட்டு போயிடறோம்" என்று தெளிவாய் சொல்ல எல்லோரும் பிரமிக்க ஆதி மட்டும் இயல்பாய் சிரித்தாள்.
சங்கரி ஆவல் ததும்ப, "எங்க கோயிலுக்கு அந்த மாதிரி எதாச்சும் அறிவியல் ரகசியம் இருக்கா?" என்றுக் கேட்க,
"பழமை வாய்ந்த ஒவ்வொரு கோயிலும் அமைக்கப்பட்டதிற்கும் அமையப்பட்ட விதத்திலும் அறிவியல் ரகசியங்கள் இருக்கு... சிதம்பர ரகசியம் மாதிரி... இந்தக் கோயில் இங்குள்ள கிராமங்கள் செழிப்பா இருக்கவே அமைக்கபட்டிருக்கு...
கோயிலின் கோபுரத்தின் மேல் உள்ள ஐம்பொன் கலசங்கள் இடிதாங்கியாய் செயல்படுது... அந்த கலசத்தில் நிரப்பப்பட்டிருக்கும் வரகு அரிசி நவதானியங்கள் பேரிடி வந்தாலும் அதைத் தாங்கி கொள்ளும்...
அதே நேரத்தில பெரிய வெள்ளம் வந்து பெரிய சேதம் ஏற்பட்டா அந்தக் கலசத்தில் உள்ள தானியங்கள் விவசாயத்திற்குப் பயன்படும்... இந்தக் கலசத்தில் உள்ள தானியங்கள் பன்னிரண்டு வருடத்தில் தன் சக்தியை இழந்திடும்.
அதுக்காகத்தான் குடமுழுக்கு விழா நடத்தி கலசத்தின் தான்யங்களை புதுப்பிக்கிறாங்க... இது பல ஊர்களை இடிதாக்காமல் காப்பாற்றும் அறிவியல் ரகசியம்...
இந்தக் கோபுர கலசம் எல்லாக் கோவிலுக்கும் பொதுவான ஒன்று… ஆனா இந்த ஆதிபரமேஸ்வரி கோயில் ரகசியம் ஆச்சர்யத்துக்குரியது தனித்துவமானது... இந்த கோயில் கல்வெட்டுகளில் செழுமையும் வளமையும் சூழ ஆதிபரமேஸ்வரி காத்து நிற்பாள் என்ற சூட்சமமான வரி இருக்கு" என்று தமிழ்வேந்தன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதி கண்ணசைத்து அவர் பேச்சை நிறுத்தினாள்.
அதைப் புரிந்துக்கொண்டவர் தன் புரிதலை உணர்த்தும் விதமாய், "சாரி... கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு… நான் கிளம்பறேன்" என்றுப் பேச்சை நிறுத்திவிட்டு காரை நெருங்க ஜேம்ஸும் அவர் பின்னோடு சென்றான்.
ஆதி தமிழ்வேந்தனிடம் சமிக்ஞையால் ஏதோ சொல்ல அவர் தலையசைத்து புறப்பட்டுச் சென்றார். "வெரி இன்டிரஸ்டிங் அன்ட் சர்பிரைஸிங்" என்று சொல்ல சங்கரியும் ஆமோதித்தாள்.
தமிழ்வேந்தன் வந்து சென்றதில் இருந்து ஆதி தன் அறையில் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி இருக்க விஷ்வா அவளைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே நின்றிருந்தான்.
ஆதி தன் யோசனையிலிருந்து மீண்ட போதும் விஷ்வா தன் பார்வையை விலக்கிக் கொள்ளவே இல்லை. "விஷ்வா" என்றவள் அழைக்க,
"ம்" என்றான் மெய்மறந்து அவளைப் பார்த்தபடியே!
"உன் பார்வையே சரியில்ல... நீ முதல்ல ரூமுக்கு போ" என்று ஆதி சொல்ல, "நோ" என்றான்.
"நோவா... கெட் அவுட் விஷ்வா... இல்ல சாரதா ஆன்டிக்கு ஃபோன் பண்ணி வத்தி வைச்சிருவேன்"
"வத்தி வை.. அதை தவிர வேறென்னடி உனக்குத் தெரியும்"
"என்னது டியா ? விஷ்வா... யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்ஸ்"
"அப்படியே லிமிட்டை கிராஸ் பண்ண விட்டுட்டாலும்... ஒரு ரோமேன்டிக்கான பார்வை இல்ல... காதலோட பேசறதில்ல... எல்லாத்துக்கும் நோ... எப்ப பாரு வேலையே பாத்திட்டிரு... இல்ல மேல பாத்து எதாவது யோசிச்சிட்டு இருக்க வேண்டியது... உனக்கு லவ் ஃபீலிங்கே வரவே வராதா?" என்று விஷ்வா கேட்க ஆதி அவன் சொன்னதை பொறுமையாகக் கேட்டவள் சிறு புன்னகையோடு,
"சோ சேட்... உன் நிலைமையை நினைச்சா எனக்கும் கஷ்டமாதான் இருக்கு... பட் நான் இப்போ காதல் செய்கிற மனநிலையில் இல்லையே" என்றவள் சொல்ல விஷ்வா முகத்தைத் திருப்பிக் கொண்டு,
"நீ என்ன மனநிலையிலாவது இருந்துக்கோ... நான் கிளம்பிறேன்... பேட் நைட் அன்ட் ஐ ஹேட் யூ" என்று கடுப்போடு சொல்லிவிட்டுச் செல்ல
ஆதி அவன் பின்னோடு சென்று, "மீ டு" என்றதும், "போடி" என்று விஷ்வா கோபித்துக் கொண்டு அவளைத் திரும்பி பாராமலே சென்றுவிட்டான்.
******
நடுநிசி இரவு. செல்லம்மா உறங்கிக் கொண்டிருந்தார். ஓர் பயங்கரமான இருளில் அவர் நடந்து செல்வதாய் தோன்றியது. மீண்டும் நெருப்பு சூழ மாட்டிக் கொண்டு தவிக்கும் அந்த உணர்விலிருந்து மீள முடியாமல் தன் உறக்கத்திலிருந்து பதறிதுடித்து மீண்டு எழுந்தவர் வேகமாய் தண்ணீரை அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அது கனவென்று அவரால் நம்பவே முடியவில்லை.
கனவில் அவர் கண்ட காட்சியில்... அந்த பயங்கர இருளில் நடந்து சென்றது தான் இல்லையென்றும் அது ஆதியாக இருக்கும் என்றும் யுகித்தவர், அப்படியெனில் அந்த நெருப்பு... ஒருவேளை அவளை சூழயிருக்கும் ஆபத்தா என்று எண்ணி மிரட்சியுற்றார்.
இத்தகைய கேள்வி செல்லம்மாவின் மனதில் எழுந்த அதே நள்ளிரவில் விஷ்வாவை அனுப்பிய பின்னர் எல்லோரும் ஆழ்ந்து உறங்கியவுடன் ஆதி தனியாய் அந்த நேரத்தில் இரும்பு வேலிகளால் சூழப்பட்டிருந்த அந்தத் தோப்பிற்குள் ஏறிக் குதித்தாள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆதி அப்படி ஒரு தீரச் செயலைச் செய்துவிட்டு, அந்தத் தோப்பிற்குள் கையில் டார்ச் லைட்டை ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றவள், அந்த இடத்தில் தொழிற்சாலை கட்டப்படப் போவதற்கான அறிவிப்புப் பலகை ஒன்றிருந்ததை தன் டார்ச் லைட்டை அடித்துப் படித்துவிட்டு முன்னேறி நடந்தாள்.
எதைத் தேடி வந்தாள்? என்ன செய்ய எண்ணிக் கொண்டிருந்தாள்? இந்த இரவில் ஏன் அங்கே வந்தாள்? என்ற வாசகர்களின் கேள்விக்கு இப்போதைக்கு நம்மிடம் பதில் இல்லை.
சருகுகளும் முட்களும் சூழ்ந்த அந்த ஆபத்தான பாதையில் அந்த இருளில் செல்வது நமக்கு கிலியை உண்டாக்கிய போதும் வேறுவேழியில்லை. இப்போது நாம் ஆதியின் பின்னோடு சென்றுதான் ஆக வேண்டும்.
அந்த கோரத்தீ விபத்தின் அடையாளங்கள், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அங்கே அதன் நினைவுச் சின்னங்களை விட்டுச் சென்றிருக்க,
இருளில் வௌவால்களும் ஆந்தைகளும் ஓலமிட்டு ஆதியை அச்சுறுத்திப் பார்த்தன. அதற்கெல்லாம் அஞ்சுபவளா அவள்? அவற்றை எல்லாம் ஒரு பொருட்டாக கூட மதியாமல் அவள் முன்னேறிச் செல்ல,
அவளை யாரோ பின்தொடர்வதாக ஒரு பிரமை தோன்ற யார் என்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆனால் அங்கே யாரும் தென்படாமல் போக இழுத்து மூச்சை விட்டுக் கொண்டு மேலே நடந்தாள்.
கருவேலமரங்கள் மரங்கள் அங்கே நிறைய மண்டிக் கிடக்க, அது அவளின் கைகளை பதம் பார்த்த போதும் கவலையின்றி அவள் நடக்க
சட்டென்று அவளின் காலினை முறிந்த கிளை ஒன்று இடறிவிட அவள் நிலைதடுமாறி முன்புறம், "அம்ம்ம்ம்மா" என்ற அலறியபடி விழப் போனாள். ஆனால் அவளை விழவிடாமல் ஓர் வலிய கரம் தாங்கிக் கொள்ள, அதிர்ச்சி கலந்த தொனியில் "ஏ யாரு?" என்று திரும்பி டார்ச்சை அடிக்க,
விஷ்வா அந்த வெளிச்சத்தைக் காண முடியாமல் விழிகளை மூடிக் கொண்டான்.
"விஷ்வா நீயா?!" என்று சொல்லி அவன் பிடியை விலக்கி அவள் தள்ளிவர, "யா... இட்ஸ் மீ" என்றான் மலர்ந்த முகத்தோடு!
ஆதி தலையிலடித்துக் கொண்டு, "எதுக்கு இப்போ நீ என் பின்னாடி வந்த?" என்று கடுப்பானாள். அவன் தன் புன்னகை மாறாமல்,
"அது... நான் உன்கிட்ட கோபமா பேசிட்டமேன்னு சமாதானப்படுத்தலாம்னு வந்தேன் ... பாத்தா மேடம் தனியா இந்த நைட் நேரத்துல காட்டுக்குள்ள நுழைந்த... அதான் உன்னை ஃபாலோ பண்ணி" என்றவன் சாதாரணமாய் சொல்ல, அவளுக்கு அவனின் செய்கையை எண்ணிச் சிரிப்பதா கோபப்படுபவதா என்றே புரியவில்லை
"ஆமா உனக்கு பயமா இல்ல" என்று விஷ்வா கேள்வி எழுப்ப,
"இவ்வளவு நேரம் பயமா இல்ல… உன்னை பாத்த பிறகுதான் பயமே வருது" என்றாள்.
"அடிப்பாவி... துணைக்கு ஹெல்பா இருக்கட்டுமேன்னு பின்னாடி வந்தா அது புரியல உனக்கு... இப்ப நான் உன்னை காப்பாத்தலன்னா நீ தவறி விழுந்திருப்ப"
"விழுந்தாலும் எழுந்திருச்சிருப்பேன்"
"நான் செஞ்ச உதவியோட மதிப்பு உனக்கு தெரியல"
"உதவிங்கிற பேர்ல நீ எனக்கு செய்றதெல்லாம் உபத்திரவம்தான்... ப்ளீஸ் கிளம்பறியா?" என்றவள் அவனிடம் கோபமாக சொல்ல
"தேவை விஷ்வா... உனக்கு தேவை... இவ பின்னாடி வந்ததுக்கு உன் ஷுவை கழட்டி நீயே அடிச்சிக்கணும்" என்றவன் சொல்லி தன்னைத் தானே நிந்தித்துக் கொள்ள ஆதி கொல்லென்று சிரித்துவிட்டாள். அப்போது அவர்கள் சற்றும் எதிர்பாராத அந்த விபரீதம் அரங்கேறியது. பேசிக் கொண்டே இருந்த விஷ்வா அந்த இருளில் எதையோ பார்த்து அதிர்ந்து, "ஆதி" என்றழைத்து அவளைக் கீழே தள்ளிவிட,
அவளுக்காகக் குறி வைத்து வீசப்பட்ட கத்தி அவன் இடதுபுற மார்பில் ஆழதுளைத்துவிட, "அப்ப்ப்ப்பா" என்று வலியால் கதறிவிட்டு அப்படியே நிலைதடுமாறி தரையில் சரிந்தான். ஆதி கீழே விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, நேர்ந்ததைப் புரிந்து கொண்ட போது விஷ்வா குருதியில் நனைந்து மூர்ச்சையாகிக் கிடந்தான்.
அவனின் இரத்தம் அந்த இடத்தை நனைக்க மீண்டும் மீண்டும் மக்கள் நம்புவது போல் அந்த இடம் உயிர்ப் பலி கேட்கிறதா என்ன?
சுயநினைவற்ற விஷ்வாவின் அருகில் அமர்ந்தவள் தன் தொண்டை வற்ற விஷ்வா என்று கத்தி கதறி அழைக்க அவனோ சற்றும் மூச்சுப் பேச்சின்றி உணர்வுகளற்ற நிலையில் கிடந்தான். அவள் முகம் பயத்தில் வெளிறிப் போனது.
"ஏ விஷ்வா... எழுந்திருடா ராஸ்கல்... என்னை பயமுறுத்தாதே... எழுந்திருச்சிருடா" என்று அழுதுக் கொண்டே கதறியவள், சட்டென்று தலையை நிமிர்த்திய கணம் அதிர்ச்சியில் ஒரு சில விநாடிகள் உறைந்தாள். அவள் பார்த்த திசையில் சரவணன் கற்சிலையாய் நின்றிருந்தான்.
வீசப்பட்ட கத்தி

Quote from Marli malkhan on May 31, 2024, 8:31 AMSuper ma
Super ma