மோனிஷா நாவல்கள்
AA - 36
Quote from Krishnapriya Narayan on May 10, 2021, 8:34 PM36
சுவாசமே!
முதல்முறையாக ஆதியின் மனதில் அச்சமென்ற உணர்வு படர்ந்து கொண்டிருக்க, அவளின் கண்ணீர் பிரவாகமாய் மாறியது. நடந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பார்த்தாள்.
அவள் எதிரே நின்று விஷ்வா பேசிக் கொண்டிருக்க, அவள் அவன் சொன்னதை கேட்டு சத்தமாய் சிரித்துக் கொண்டிருந்தாள். ஒரே ஒரு நொடிதான்... விஷ்வாவின் கரம் அவளை அவசரமாய் தரையில் தள்ளிவிட அவள் தரையில் சென்று விழுந்த சில கணங்களில்,
"அப்ப்ப்ப்ப்ப்ப்பபா" என்று சத்தமாய் அலறிக் கொண்டு அப்படியே தரையில் சரிந்திருந்தான்.
அவள் மீது பாய்வதற்கு இருந்த கத்தி அவன் மார்பில் ஆழத் துளையிட்டது. அந்தப் பயங்கர இருளில் அவனின் குரல் அதிபயங்கரமாய் ஒலிக்க, அங்கே குடிகொண்டிருந்த ஜீவராசிகள் எல்லாம் மிரட்சியுற்று தன் ஒலிகளை எழுப்பி அந்த இடத்தின் நிசப்தத்தைக் கலைத்தன.
ஆதி அவனின் கத்தி பாய்ந்த மார்பையும், இரத்தத்தில் நனைந்திருந்த தேகத்தையும் பார்த்து உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போக,
அவளின் கண்ணீர் ஊற்றாய் பெருகியது. இப்போது அந்தத் தோப்பும் அதனைச் சூழ்ந்திருந்த பயங்கரமான இருளும் அவளை நடுநடுங்க வைத்தது.
விஷ்வாவைக் காப்பாற்ற வேண்டும் என்று அவசரமாய் அவசரமாய் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று அந்த இருளில் சுற்று முற்றும் தன் பார்வையால் கூர்ந்து நோக்கினாள்.
அப்போதே அவளின் கண்ணீர் சூழ்ந்த விழிகள் சரவணனை கண்டு உச்சபட்சமாய் அதிர்ந்தது. "சரவணனா??" என்றவள் உதடுகள் முனகிய மறுகணம் ரௌத்திரமாய் எழுந்து அவனை நோக்கி நடந்தாள்.
கண்ணீர் கோபம் இரண்டுமே அவளுக்குக் கட்டுக்கடங்காமல் பெருக அவன் சட்டையைக் கொத்தாய் பிடித்துக் கொண்டு,
"ஏன்டா இப்படி பண்ண? விஷ்வா என்னடா செஞ்சான் உனக்கு? மனுஷனா மிருகமாடா நீ?! அப்படி என்ன பழி உணர்ச்சிடா உனக்கு?
அய்யோ... என் விஷ்வா யாருக்கும் மனசார எந்த தீங்கும் செஞ்சதில்லையே... ரொம்ப நல்லவன்டா... அவனைப் போய்" என்று தன்னை மீறிக்கொண்டு வந்த அழுகையோடு ஆதி கதறிக் கொண்டே தரையில் சரிந்தவள் தலையை தூக்கி,
"ஏன்டா இப்படி கல்லு மாதிரி நிக்கிற?" என்று கதறினாள்.
அவன் சிலையாகவே நிற்க அவள் சீற்றத்தோடு எழுந்து நின்று, "ரொம்ப சந்தோஷப் படாதே... நான் என் விஷ்வாவுக்கு எதுவும் ஆகவிடமாட்டேன்... அப்படி ஏதாச்சும் ஆச்சு இந்த இடத்திலேயே நான் உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்... பார்த்துக்கோ" என்று எச்சரித்தபடி அவனை ஆக்ரோஷமாய் பார்த்தாள்.
அந்த ஆதிபரமேஸ்வேரி அம்மனே ரௌத்திரமாய் அவன் முன்னே உயிர்பெற்று நின்றது போலிருந்தது. அவளை அப்படிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி நீங்கி மிரட்சி உண்டாக, "ஆதி" என்று நடுங்கிய குரலில் அவன் அழைக்க அவள் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தாள்.
சரவணனுக்கு அந்த அறை உச்சமான அவமானத்தை ஏற்படுத்திவிட,
"ஏய் நான் எதுவும் பண்ணலடி... அவனைக் கொல்லனும்னு வெறி எனக்கும் இருக்கு... ஆனா இப்போ நடந்ததுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல... நான் தோப்புக்குள்ள தெரியிற வெளிச்சத்தை பாத்து உள்ளே வந்தேன்... என்ன நடந்துச்சு எப்படி நடந்துச்சுன்னு எனக்கும் ஒன்னும் புரியல" என்றவன் படபடப்போடு உரைக்க,
"நடிக்காத டா" என்று மீண்டும் அவன் சட்டையைப் பிடித்து ஆதி உலுக்கினாள்.
"எங்க அம்மா மேல சத்தியமா நான் இல்லை" என்றவன் உரக்கக் கத்த,
ஆதி அப்படியே யோசனையாய் அவன் சட்டையின் மீதான கையை எடுத்துவிட்டவள் உடனே விஷ்வாவிடம் ஓடி அவன் நாசிக்குக் கீழ் தன் விரலால் தொட்டுப் பார்த்தாள். சீரற்ற நிலையில் இருந்தது அவன் மூச்சுக் காற்று.
சரவணனை ஏறிட்டவள், "விஷ்வாவை ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போனும் சரவணன்... ஹீ இஸ் டையிங்... ப்ளீஸ் ஹெல்ப் மீ" என்றவள் கெஞ்சலாய் அவனிடம் வேண்டிக் கேட்க,
அவன் எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றான். இப்போதைக்கு சரவணனை விட்டால் தனக்கு வேற யாரும் உதவி செய்ய முடியாது என்று எண்ணியவள் அவனருகில் வந்து,
"சரவணன் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு... நான் கோபத்தில் ஏதோ தெரியாம... ஐம் சாரி... எக்ஸ்ட்ரீம்லி சாரி... இப்ப எனக்கு நீ மட்டும்தான் ஹெல்ப் பண்ண முடியும்... விஷ்வா ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போக ஹெல்ப் பண்ணு... இல்லாட்டி ரொம்ப கஷ்டமாயிடும்... உனக்கு என் மேல என்ன கோபம் இருந்தாலும் அதை இப்ப காட்டாதே... ப்ளீஸ் சரவணன்... ஒரு ஃப்ரண்டா கேட்கிறேன்" என்று கண்ணீர் மல்க உரைத்தவள் அப்படியே தரையில் மண்டியிட்டுத் தலைவணங்கி நிற்க,
சரவணன் பதறிப் போனான். அவன் காதலித்ததே அவளின் கம்பீரத்தையும் தைரியத்தையும்தான்.
அவளின் துணிச்சலைக் கண்டு பலமுறை அவன் வியந்திருக்கிறான். அப்படியானவள் தன் கண்முன்னே உடைந்து நிற்பதை அவனால் தாங்க முடியவில்லை.
"ஆழாதே ஆதி... பக்கத்திலதான் கார் நிற்குது... விஷ்வாவை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடலாம்" என்றவன், சொன்னதோடு நிற்காமல் தன் காரை எடுத்து வரச் சென்றான்.
ஆதி உடனே விஷ்வாவின் அருகில் சென்று, "உனக்கு எதுவும் ஆகாது விஷ்வா... எதுவும் ஆகக் கூடாது... ஐ நீட் யூ மேன்" என்று சொல்லி முகத்தை மூடிக் கொண்டு வெதும்பும் போது சரவணன் ஓட்டமும் நடையுமாய் வந்து நின்றான்.
"ஆதி தைரியாம இரு... ஒன்னும் ஆகாது... நான் கார் கொண்டுவந்துட்டேன்... விஷ்வாவ கார்ல ஏத்திட்டு புறப்படலாம்" என்றவன் சொல்ல அவளும் தலையசைத்து ஆமோதித்தாள்.
ஏற்கனவே இரத்தம் அதிகமாய் போய்விட்ட நிலையில் சரியாக இருதயத்திற்கு அருகில் பாய்ந்திருக்கும் கத்தியை அகற்ற இருவருமே தயங்கினர். ஆதலால் அப்படியே அவனை இருவரும் சிரமப்பட்டு தூக்கிக் கொண்டு சென்று காரில் ஏற்றினர்.
சரவணன் காரை அதிவேகமாய் ஓட்ட ஆதி விஷ்வாவின் முகத்தையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு வந்தாள். எந்தவித உணர்ச்சிகளுமின்றி வெறும் உடலெனக் கிடந்த விஷ்வாவை வேதனையோடு பார்த்தவள்,
"என்னை விட்டு போயிராதடா... என்னை இரிடேட் பண்ணு... சண்டை போடு... நான் டாலரேட் பண்ணிப்பேன்... பட் என்னை விட்டுட்டு மட்டும் போயிடாதே... அதை என்னால தாங்க முடியாது... நீ எனக்கு வேணும்... ஐ லவ் யூ விஷ்வா... ஐ லவ் யூ ஐ லவ் யூ...ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ... ஐ லவ் யூ டா.. எழுந்திரிடா" என்று அழுகுரலோடு சொல்லி கொண்டே அவன் முகத்தின் மீது தன் முகத்தை வைத்துக் கொண்டாள்.
இவள் கண்ணீரெல்லாம் அவன் முகத்தை நனைத்திருந்தது. ஆனால் அதை அவன் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அவளை ஐ லவ் யூ சொல்லச் சொல்லி கேட்க விரும்பியவனுக்கோ இப்போது அவள் தொண்டை உலர சொன்ன ஐ லவ் யூ அவன் செவிக்கு எட்டவில்லை. அப்படிக் கேட்டிருந்தால் அவன் இப்படிப் படுத்து கொண்டிருப்பானா!
சிறிது தூரப் பயணம்தான் எனினும் அது ஏனோ அவளுக்கு நெடுந்தூரம் செல்வது போலிருந்தது. சரவணனும் ஆதியின் புலம்பல்களை கேட்டுக் கொண்டேதான் வந்தான்.
அது லேசாய் வலித்தாலும் அவள் விஷ்வாவின் மீது கொண்ட காதலின் ஆழத்தை அவனுக்கு புரிய வைத்தது. கார் மருத்துவமனை வளாகத்தை அடைய விஷ்வாவை அவசர சிகிச்சை பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.
இது கொலை முயற்சி என்பதால் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் நேரே வந்து வழக்குப் பதிவு செய்தவர்கள், ஆதி துவண்டுக் கிடப்பதைப் பார்த்து அவளை எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை.
அந்த அதிகாரி அப்போதைக்குச் சென்றுவிட சரவணன் அவளிடம் சமாதானங்கள் சொல்லி அவளைத் தேற்ற முற்பட்டான். அவன் சொல்லிய சமாதானங்கள் எதுவும் அவள் செவிக்கு எட்டவில்லை. அப்படியே கற்சிலையாய் அமர்ந்திருந்தாள் அவள்.
விஷ்வாவிற்கு சிகிச்சை செய்த மருத்துவர் வெளியே வர அவள் அப்போதே உயிர் பெற்று எழுந்து நின்று,
"டாக்டர்... இஸ் ஹீ ஆல்ரைட்?" என்றவள் பதட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் கேட்க, அவர் முகம் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது.
மருத்துவர் ஆதியிடம் அவனைக் காப்பாற்றுவது சிரமம் என்று உரைத்தவர் அதேநேரம் சென்னையில் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சிறு நம்பிக்கையைத் தந்தார். அவள் தாமதிக்காமல் அவனை உடனே அழைத்துச் செல்ல முடிவெடுக்க, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
ஆதி புறப்பட சரவணன் தானும் வருவதாகச் சொல்ல, "வேண்டாம் சரவணன்... நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.
"இல்ல ஆதி நான் வர்றேன்"
"சொல்றதை கேளுங்க... நீங்க விடியறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போய் சேருங்க... எங்க இரண்டு பேரைப் பத்தி கேட்டா எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம்... நானே ஃபோன் பண்ணி பேசறேன்... எனக்காக இந்த உதவியும் செய்ங்க” என்று கூறியவள், தனது மொத்த சக்தியும் வடிந்துவிட்ட நிலையில் இருந்தாள்.
அவளை எப்படி தனியாக அனுப்புவதென்று தயக்கத்தோடு நின்றான் சரவணன்.
"நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க... வீட்ல யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன்... ஸோ ப்ளீஸ்" என்றவள் சொல்லவும் மறுப்பு தெரிவிக்க மனமில்லாமல்,
"ஹ்ம்ம் சரி... நீ பார்த்துக்கோ" என்றான் அக்கறையோடு!
அவள் தலையசைத்து ஆமோதித்துவிட்டுப் புறப்பட தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸில் ஏறப் போனவள் மீண்டும் சரவணனிடம் திரும்பி,
"அப்புறம் கடைசியா ஒரு விஷயம்.. நான் என்னிக்குமே உங்களை காதலிச்சதே இல்லை... உங்களை ஒரு நல்ல நண்பனாய் நினைச்சுதான் பழகினேன்... நான் உங்க மனசில தேவையில்லாத ஆசை வளர காரணமாய் இருந்தா... ஐம் சாரி" என்றாள்.
"இப்ப எதுக்கு அதெல்லாம்... நீ புறப்படு" என்றவளை வலியோடு வழியனுப்பினான் சரவணன்.
விஷ்வா தன் மயக்க நிலையில் இருந்து மீளவே இல்லை. கருணாகரனுக்கும் செல்விக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டுவிட,
விஷ்வாவை அழைத்துக் கொண்டு வர இருக்கும் மருத்துவமனையில் அவர்கள் தாங்க இயலாத சோகத்தோடு காத்திருந்தனர்.
விஷ்வா அவசரமாய் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட கருணாகரன் சாரதா செல்லம்மா மூவரும் அவன் இருந்த கோலத்தை பார்த்த அதிர்ந்தனர். அதைவிடவும் அவர்கள் பதறி போனது ஆதியின் முகத்தை பார்த்துத்தான். முகமெல்லாம் வாடி வதங்கிய நிலையில் நின்றிருந்தாள் அவள்.
அவர்கள் மூவரையும் எதிர்கொள்ள முடியாமல் அவள் குற்றவுணர்வில் தலைகுனிந்து நிற்க, "ஆதி" என்று அவள் தோளை தொட்டார் செல்லம்மா.
அவள் எதுவும் பேசாமல் அழுத்தமாய் நிற்க, "ஆதி என்னை நிமிர்ந்து பாரு" என்று செல்லம்மா சொல்ல, ஆதி தாங்க இயலாத துயரோடு தன் அம்மாவை கட்டிக் கொண்டு வெடித்து அழுதாள்.
"தப்பு பண்ணிட்டேன்மா... ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... நான் உங்க பேச்சை கேட்டிருக்கணும்... என் பிரச்சனையை மட்டுமே யோசிச்சு ரொம்ப சுயநலமா இருந்துட்டேன்... என்னாலதான் இப்போ விஷ்வா இப்படி மூச்சு பேச்சில்லாம இருக்கிறான்" என்றவள் புலம்பி கொண்டே கண்ணீர் வடிக்க,
செல்லம்மா தன் மகளின் முற்றிலும் மாறுபட்ட ஓர் முகத்தை அன்று கண்டார். அவர் வார்த்தைகள் வராமல் திகைத்து போயிருக்க வேதனையிலிருந்த கருணாகரனும் சாரதாவும் ஆதியின் அருகில் வந்து நின்றனர்.
சாரதா ஆதியின் தலையை வருட அவள் குற்றவுணர்வால் அவர்கள் முகத்தைப் பார்க்க முடியாமல், "என்னை மன்னிச்சிடுங்க ஆன்ட்டி... என்னாலதான் விஷ்வாவுக்கு இப்படி" என்று தலைகவிழ்ந்து அழுதாள்.
கருணாகரன் ஆதியின் கைகளை பிடித்து, "பைத்தியமா ஆதி நீ... எனக்கு விஷ்வா, நீ இரண்டு பேரும் ஒண்ணுதான்... முதல்ல நீ அழறதை நிறுத்து... விஷ்வாவுக்கு எதுவுமே நடக்காது... நீ பயப்படாதே" என்றவர் தீர்க்கமாய் சொல்லிக் கொண்டிருக்க மருத்துவர் வெளியே வந்தார்.
"நீங்கதான் பேஷன்ட்டோட ரிலேஷனா?" என்று கருணாகரனை பார்த்து கேட்க அவர் தலையசைத்தார்.
"நாங்க கொடுக்க வேண்டிய ட்ரீட்மென்ட்டெல்லாம் கொடுத்துட்டோம்... ஆனா அவர் மயக்க நிலையிலேயேதான் இருக்காரு... ஆபத்தான கட்டத்தை விட்டு இன்னும் தாண்டல...
வெயிட் பண்ணி பார்க்கலாம்... அதிர்ஷ்டவசமா கண்விழிச்சிட்டா எல்லாமே சரியாயிடும்...இல்லன்னா" என்று தடுமாறியவர் பின்னர்,
"லெட்ஸ் ஹோப் பாஃர் த பெஸ்ட்" என்று சொல்லி முடித்துவிட்டு நகர்ந்து சென்றார். ஆதி அப்படியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
மற்ற மூவரும் மருத்தவரின் நம்பிக்கையற்ற வார்த்தைகளால் வருத்தப்படுவதா அல்லது இப்படி முற்றிலும் தளர்ந்து போன ஆதியை பார்த்து வேதனை கொள்வதா என புரியாமல் குழம்பினர்.
"ஆதியை அழைச்சிட்டு போய் சமாதானப்படுத்து செல்லம்மா" என்று கருணாகரன் சொல்ல செல்லம்மா ஆதியினை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு வெளியே அழைத்து வந்தார். அங்கே இருந்த மரப்பலகையின் மீது அவளை அமரச் சொல்லிவிட்டு அருகில் அமர்ந்தவர், தன் மகளின் முகத்தை நிமிர்த்தினார்.
வீங்கி சிவந்திருந்த விழிகளும் உலர்ந்த உதடுகளும் கண்ணீரின் தடம் பதிந்த கன்னங்களும் என அவள் முகத்தில் விவரிக்க முடியாத சோகமும் வலியும் மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தது.
"என்னாச்சு ஆதி உனக்கு? நீயா இப்படி உடைஞ்சி போய் நிற்கிற... என்னால நம்ப முடியல... நான் எது வந்தாலும் பார்த்துப்பேன்... சமாளிப்பேன்னு சொல்லுவ... அந்த தைரியம் எங்க போச்சு... அதுவும் நீ ஒரு ஜா்னலிஸட்... நிறைய ஆக்ஸ்டென்ட் கொலை இதெல்லாத்தையும் நேர்லயே பார்த்திருக்க... தனியா இந்த மாதிரி விஷயங்களை ஹேண்ட்ல் பண்ணிருக்க... ஆனா இன்னைக்கு ஒரு சாதாரண பொண்ணு மாதிரி அழுதுட்டு நிற்கிற" என்றவர் கேட்க,
ஆதி தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு வெறுமையான பார்வையோடு தன் தாயினை ஏறிட்டாள்.
"யூ ஆர் ரைட்... ஆக்ஸ்டென்ட் காயம் இரத்தம் இதெல்லாம் எனக்கு புதுசு இல்லதான்... ஆனா காதல் புதுசு ம்மா... அது ஏற்படுத்தற வலி ரொம்ப ரொம்ப புதுசு... தாங்கிக்க முடியல... விஷ்வாவுக்கு ஏதாச்சும் ஆயிட்டா" என்று பதறியவளின் விழிகளில் மீண்டும் நீர் சூழ்ந்தன.
ஆதி பேசப் பேச செல்லம்மாவின் மனமும் கரைந்துருகி போனது.
"ஆதி... என்னை பாரு" என்றவர் அவள் கரத்தை அழுந்த பிடித்து கொண்டு,
"காதல் நம்மை ரொம்ப பலவீனப்படுத்தும்... ஆனா அதே காதல் நமக்குள்ள பெரிய பலத்தையும் கொடுக்கும்... நீ என்னை மாதிரி பலவீனமா இருக்க போறியா... இல்ல தைரியமா பலத்தோட எதிர்கொள்ள போறியான்னு நீதான் முடிவு பண்ணனும்...
நான் உங்கப்பாவுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயந்து பயந்து செத்தேன்... கடைசில என் பயமும் எண்ணமும் உண்மையா மாறிடுச்சு... ஆனா நீ அப்படி இருக்கக் கூடாது ஆதி... எந்தச் சூழ்நிலையிலும் விஷ்வாவுக்கு எதுவும் ஆகாதுன்னு நீ நம்பு... பாஸிட்டீவாவே நினை...
நான் சந்திச்ச இழப்பும் மரணமும் என்னோடு போகட்டும்... உனக்கு வேண்டாம்... உன் பயத்தையும் கவலையையும் தூக்கி போட்டுட்டு உன் மனோபலத்தை நம்பு... நாம ஆழமாவும் உண்மையாகவும் எது நினைக்கிறோமோ அது நிச்சயம் நடக்கும்... நடந்தே தீரும்" என்றவர் சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த ஆதிபரமேஸ்வரி டாலரை அவள் கழுத்தில் மாட்டிவிட்டார்.
ஆதி அவள் அம்மாவின் முகத்தை ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டு, பின்னர் அந்த டாலரை உற்று நோக்கினாள். ஆதிபரமேஸ்வரி கோயிலில் தான் பார்த்த விக்கிரகத்தின் உருவம் தத்ரூபமாய் இருந்தது.
செல்லம்மா தன் மகளின் கலைந்திருந்த முடியை இழுத்துக் கட்டிவிட்டு, "நீ என்ன நினைக்கிறியோ அது நிச்சயம் நடக்கும்... என்ன நடக்கனுமோ... எது உன்னோட விருப்பமோ அதை மட்டுமே நினை... நடக்க கூடாததை எப்பவும் நினைச்சு கூட பார்க்காதே" என்று அழுத்தமாக அவர் சொல்ல அந்த நம்பிக்கை வார்த்தைகள் அவளை உண்மையிலேயே பலப்படுத்தியிருந்தன.
தன் அம்மாவின் கைகளை பற்றிக் கொண்டவள், "நான் நிறைய தைரியமான பெண்மணிகளோட வரலாறை படிச்சிருக்கேன்... இப்ப நான் அதை உங்க ரூபத்தில கண்ணெதிரே பார்க்கிறேன்... நீங்கதான் என்னோட ஐடல்... மை ரோல் மாடல்" என்று நெகிழ்ந்தபடி உரைத்து அவர் கரத்தை தன் கண்களில் ஒற்றிக் கொண்டு நீர் உகுத்தாள்.
செல்லம்மா அவள் தலையை தடவிக் கொண்டு இறைவனை வேண்டிக் கொண்டார், தான் அனுபவித்த எந்தத் துயரும் தன் மகளுக்கு ஒரு போதும் வந்துவிடக் கூடாதென்று.
நேரம் கடந்து கொண்டே போக விஷ்வா விழிப்படையவில்லை. சாரதாவின் முகம் வாட்டமுற்றது. அவர் மெல்ல மெல்ல மகனின் நிலையை எண்ணித் தளர்ந்து போக, செல்லம்மாதான் அவருக்கும் சமாதானம் உரைத்தார்.
ஆதி உறுதியான நம்பிக்கையோடு 'விஷ்வா கம்பேக்!' என்று உதட்டுக்குள்ளே உச்சரித்தபடி கிடந்தாள். அதுவே அவளுக்கு இப்போதைக்கான ஸ்ரீ ராம ஜெயம்.
கருணாகரனும் தாங்க முடியாத வேதனையோடு வெளியே இருக்கையில் சிலையென அமர்ந்திருந்தார். சிகிச்சை அறையிலிருந்த விஷ்வாவிற்கு திடீரென மூச்சு ஏற்ற இறக்கமாய் மாற,
நர்ஸ் அதைப் பார்த்து விட்டு அறையிலிருந்து பதட்டத்தோடு வெளியே ஓட அதனை கவனித்த ஆதி என்னவென்று புரியாமல் சிகிச்சை அறைக்குள் நுழைந்தாள்.
ஆதி அங்கே பார்த்த காட்சி அவள் இதயத்துடிப்பினை நிறுத்திவிட்டது போல இருந்தது.
ஓயாமல் பேசிக் கொண்டும் அவளை எரிச்சல் மூட்டிக் கொண்டும் சலிக்காமல் அவளை காதலித்து கொண்டும் இருந்த அவளின் விஷ்வா அசைவின்றி படுத்து கிடந்தான். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு உணர்வற்று கிடந்தான். ஆனால் உயிரற்று கிடந்தானா???
இந்தச் சந்தேகம் எழுந்த மறுகணம் அவள் உள்ளமெல்லாம் படபடக்க அவனருகில் சென்றவள், அவன் மார்பில் தன் செவியை வைத்து கேட்டாள். அவனின் துடிப்பு சத்தம் கேட்கவில்லை. அதிர்ந்தவள் அவன் நாசிலில் கைவைக்கச் சுவாசமே இல்லை.
அவள் கரமெல்லாம் நடுங்க அவன் கன்னங்களை பற்றிக் கொண்டு, "விஷ்வா ப்ரீத்" என்று கேட்டவள் ஒரு நொடி அவனை ஆழ்ந்து பார்த்தாள்.
பல ஆபத்துகளில் அவள் முதலுதவி செய்ய ஏற்கனவே கற்று தேர்ந்தவள், 'நோ... ஐ வோன்ட் லெட் யூ கோ' என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் இதழ்களைப் பிரித்து தன் இதழ்களை வைத்து வாய் வழியாக தன் சுவாசத்தை அவன் சுவாசக்குழாய்க்கு அனுப்பினாள்.
அவள் அனுப்பியது சுவாசம் மட்டுமே இல்லை. அவளின் காதலையும் நம்பிக்கையும்தான்... அவளின் மொத்த சக்தியையும் திரட்டி அவனைச் சுவாசிக்க வைக்கப் போராடிக் கொண்டிருந்தாள். அவன் உயிரை மீட்டெடுக்கப் போராடி கொண்டிருந்தாள். மரணத்தை அவனை நெருங்கவிடாமல் போராடிக் கொண்டிருந்தாள்.
அந்த சில கணநேரங்கள் அவன் உயிர் பிழைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து வேறு எண்ணமே அவளுக்கு இல்லை. அதேநேரம் மருத்துவர் உள்ளே நுழைந்து அந்தக் காட்சியை பார்த்து ஸ்தம்பிக்க, அவளின் நம்பிக்கையும் போராட்டமும் வீண் போய்விடவில்லை.
விஷ்வா மீண்டும் தன்னவளின் மூலமாய் சுவாசிக்க ஆரம்பிக்க, ஆதி அந்த அதிசயத்தை நிகழ்த்திவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவளின் திடமான நம்பிக்கை தோற்றுப் போகவில்லை. தன்னவனின் உயிரை மீட்டெடுத்துவிட்டாள்.
ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளிகொண்ர்ந்தவள் பின்னோடு சென்று சுவரில் அப்படியே சாய்ந்தபடி. "தேங்க் காட்" என்றாள்.
தன்னவனை உயிர் பெற செய்த ஆனந்தத்தில் அப்படியே அவள் விழிகளை மூடிக் கொள்ள, ஒற்றைத் துளி கண்ணீர் அவள் விழியை விட்டு வெளிவந்து விழுந்தது.
36

Quote from Marli malkhan on May 31, 2024, 8:37 AMSuper ma
Super ma