மோனிஷா நாவல்கள்
AA - 42(final)
Quote from Krishnapriya Narayan on May 19, 2021, 9:42 PMதிருமண நாள்
அன்று ஆதிபரமேஸ்வரி ஆலயம் பூ அலங்காரங்களால் வண்ணமயமாய் காட்சியளிக்க ஆதியின் திருமண ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதே நேரத்தில் சரவணனுக்கும் சங்கரிக்கும் கூட திருமணம் நடக்க இருக்கிறது. இருபக்கமும் பேசி அவர்களையும் ரொம்பவும் சிரமப்பட்டு திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தப் பெருமை ஆதியையே சேரும்.
அந்த இரு அழகிய ஜோடிகளும் மணமேடையில் அமர்ந்திருக்க ஆதி விஷ்வாவின் புறம் திரும்பி, "இப்பவாச்சும் பழையபடி பேசு விஷ்வா" என்று அவனிடம் கெஞ்சினாள். அவனோ சற்றும் இறங்கிவராமல் ஐயர் சொன்ன மந்திரங்களை அத்தனை ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருக்க, ஆதிக்கு கடுப்பேறியது.
அவள் கோபமாய் அவன் கரத்தைக் கிள்ளி வைக்க, "ஆ" என்ற அலறலோடு அவள் புறம் அவன் திரும்ப,
"நீ இப்படியே பண்ணிட்டிருந்தா தாலி கட்டவிடமாட்டேன் பார்த்துக்கோ?!" என்று எச்சரித்தாள் அவள்!
விஷ்வா சற்றும் அசறாமல், "தாலி கட்டாம நானும் விடமாட்டேன்" என்க, அவளுக்கோ வாழ்க்கை முழுக்க அவனுடைய கோபத்தை எப்படிச் சமாளிக்க போகிறோம் என்றக் கவலைப் பிறந்தது அப்போது!
இவர்கள் இருவரும் இப்படி எதிரும்புதிருமாய் சண்டைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க சரவணனும் சங்கரியும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடத் தயங்கியபடி அமர்ந்திருந்தனர்.
மாங்கல்யம் இருக்கும் தட்டை ஐயர் மந்திரம் சொல்லிக் கொண்டே நீட்டினார். சரவணன் மாங்கல்யத்தைக் கட்டிய அதே நேரத்தில் விஷ்வாவும் ஆதியை நெருங்கி தாலியின் முடிச்சைப் போட்டபடி அவள் காதோரத்தில் கிசுகிசுத்தான். "ஐ லவ் யூ டார்லிங்" என்று!
அவள் முகத்தில் புன்னகையும் வெட்கமும் ஏகபோகமாய் வழிந்தோடியது.
அந்தத் திருமணத்தைக் கண்டுகளித்த சாரதா கருணாகரனின் முகத்தில் அளவில்லா ஆனந்தம். அதேநேரத்தில் செல்லம்மாவும் தன் மகளின் திருமணத்தைப் பார்த்து பூரித்து ஆனந்த கண்ணீர் வடித்தாள்.
சோமு மனோரஞ்சிதம் பிறகு வசந்தா என எல்லோரும் பூ மாரி பொழிய, அவர்களின் திருமண சடங்குகள் இனிதே முடிவுற்றன. அதன்பின்னர் அந்த இரு ஜோடிகளும் ஆதிபரமேஸ்வரியை வணங்கி கோயிலை வலம் வர,
ஆதி சரவணனிடம் தன் கைகளை நீட்டி வாழ்த்து தெரிவித்தவள் சற்றே கேலியாக, "இனிமே தினமும் உப்பு போட்ட காபிதான்" என்க,
"அப்போ இதான் உன் பிளானா?!" என்று சரவணன் கோபமானது போல் பாசாங்கு காட்ட, "ஆதி! " என்றபடி சங்கரி சிணுங்கினாள்.
நால்வரும் அந்த நொடி சிரித்து மகிழ, இன்பமான அந்தத் தருணம் இன்னும் அழகாய் மாறியது.
ஆதியின் திருமணத்திற்கு வந்த இன்னும் சிலரை நாம் அறிமுகப்படுத்தத் தவறிவிட்டோம். கணவனையும் கடைசி மகனையும் இழந்த கண்ணம்மா இன்று தன் முதல் மகன் மருமகளோடு திருமணத்திற்கு வந்திருந்தாள்.
அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆதிதான் அழைப்பு விடுத்தாள். கண்ணம்மாவிற்கு எல்லோரையும் பார்த்து கண்ணில் நீர் வழிய அந்தத் தருணம் நெகிழ்ச்சியாய் மாறியது. அவரும் செல்லம்மாவிடம் மனமுருகி மன்னிப்பு கேட்டார்.
பெரும் மதிப்போடு வாழ்ந்த அந்தக் குடும்பத்தில் சில காரணங்களால் சூழ்ந்திருந்த இருள் இன்று ஆதியின் திருமணத்தால் விலகி மீண்டும் ஒளிவீசிப் பிரகாசித்தது. அன்னம்மாவிற்கு சரவணன் கோயில் வாசலில் சிறு குடில் அமைத்துத் தந்துவிட்டான்.
அதேநேரம் ஈஸ்வரன் கனகவல்லியை குத்தியது மக்கள் எல்லோரின் மனதிலும் ஆழமாய் பதிந்துவிட்ட காரணத்தால் ஊர்மக்கள் அவனைப் பார்த்து மிரள, சரவணன் மீண்டும் அவனை வீட்டோடு வைத்துக் கொண்டான்.
சூரியன் மெல்ல மறைய, இரவின் பூக்களாய் வானெங்கும் நட்சத்திரங்கள் மலர்ந்திருந்தது.
சரவணன் வீட்டில் வண்ண விளக்குகளும் தோரணங்களும் மின்னியபடி காட்சியளிக்க, உறவினர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முகப்பு அறையில் பேசி சிரித்த வண்ணம் இருந்தனர்.
அதேநேரம் அந்த இரு ஜோடிகளும் தனிமையில் அந்த அழகிய தருணத்தை இன்னும் அழகாய் மாற்றிக் கொண்டிருந்தனர்.
சங்கரி சரவணன் அருகில் அமர்ந்தபடி, "இந்த கல்யாணம் திடீர்னு முடிவாயிடுச்சு... சோ இப்ப இதெல்லாம் வேண்டாம்... நாம முதல்ல நல்லா பழகிப் புரிஞ்சிக்கிட்ட பிறகு" என்றவள் விலாவரியாய் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்க, சரவணன் அவற்றை எல்லாம் சலிப்பாய் கேட்டுக் கொண்டிருந்தான்.
சங்கரி மேலும், "நான் சொன்னதில் உங்களுக்கும் உடன்பாடுதானே?!" என்று வினவ,
"நீ இவ்வளவு நேரம் என்ன சொன்ன?" என்றவன் ஏதும் தெரியாதவனைப் போல் கேட்க அவளுக்கு கோபமேறியது.
அவனைக் கூர்ந்து பார்த்தவள், "நான் சொன்னது கேட்காத மாதிரி நடிக்காதீங்க" என்க,
"நடிப்பெல்லாம் உனக்குதான் வரும்... அன்னைக்கு சாமி வந்த மாதிரி என்னம்மா நடிச்ச" என்றவன் சொல்ல அவள் முகம் வெளிறிப் போனது.
சட்டென இதயத்துடிப்பு எகிறி, வியர்த்து வழிந்து, முகம் வெளிறிபோய் என்ன பேசுவதென்று அவள் விழித்த சமயம் சரவணன் அந்தத் தருணத்தை அவனுக்குச் சாதகமாக்கி கொண்டான்.
அவளை அவசரமாய் தன்புறம் இழுத்தணைத்துக் கொள்ள அவள் அதிர்ந்த அதேநேரம் கோபத்தோடு, "இப்படி எல்லாம் நடந்துக்கிட்டீங்கனா... எனக்குப் பிடிக்காது" என்று படபடத்தாள்.
"அப்படின்னா கல்யாணம் முடிஞ்ச பிறகும் நான் பிரம்மச்சாரியா இருக்கணுமா?!" என்று சரவணன் சற்றே முறைப்பாய் கேட்க அவளுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது.
"அப்படி இல்ல... ஆனா எனக்கு சட்டுன்னு ஏத்துக்க தயக்கமா இருக்கு" என்று தவிப்போடு உரைக்க அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
"எனக்குப் புரியுது சங்கரி... உன்னோட பெண்மையை நீ இத்தனை நாளாய் எப்படி பாதுகாத்தியோ அதை நானும் அதே மதிப்பு குறையாம பாத்துப்பேன்டி" என்றவன் சொல்ல அவள் குழப்பமாய் அவனை ஏறிட்டாள்.
"நீ என் மேல நம்பிக்கை வையேன்.. எப்பவுமே அந்த நம்பிக்கை குறையாம நடந்துப்பேன்... ப்ளீஸ் சம்மதம் சொல்லுடி" என்றவன் காதலோடும் கனிவோடும் கேட்க அதற்கு மேல் அவளால் மறுக்க முடியவில்லை. அவள் பதில் கூறாமல் தன் சம்மதத்தை நாணத்தாலேயே தெரிவிக்க,
நதியில் சென்ற ஓடம் போல் அவர்களின் உறவின் பயணம் அமைதியோடும் அழகோடும் ஆரம்பித்தது. ஆனால் நம் ஆதி விஷ்வாவின் உறவோ ஆர்ப்பரிக்கும் கடலில் பயணிக்கும் கப்பல் போல் சற்றே மிரட்சியாய் இருந்ததென்றே சொல்ல வேண்டும்.
ஆதி அசாத்தியமான தைரியம் கொண்டவள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். எதையும் சமாளிக்கும் வல்லமை கொண்டவள் இன்று விஷ்வாவின் பிடிக்குள் சிக்கித் தவித்தாள்.
விஷ்வா காதலோடும் அவள் மீது கொண்டிருந்த கோபத்தோடும் கொஞ்சம் மூர்க்கமாகவே அவளைக் கையாள அவனைச் சிரமப்பட்டு இழுத்துத் தள்ளியவள்,
"போடா ராஸ்கல்" என்று சொல்லி அவனிடமிருந்து விலகிவந்து தன் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
விஷ்வா அவளைப் பார்த்து சிரித்தபடி நிமிர்ந்து உட்கார அவள் சீற்றமாய், "என் மேல இருக்கிற கோபத்தைக் காண்பிக்கிற நேரமாடா இது" என்றவள் கேட்க அவன் புன்னகை மாறவில்லை.
"யா டியர்... வெயிட்டிங் ஃபார் திஸ் மொமன்ட்" என்று சொல்லி மீண்டும் அவளை தன்புறம் இழுக்க அவளோ படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு, "வேண்டாம் விஷ்வா" என்க,
"ஐ நீட் யூ பேபி" என்றவனும் எகத்தாளமான புன்னகையோடு எழுந்து கொண்டான்.
அவள் அவனிடம் தப்பிக்கப் படுக்கையைச் சுற்றிவர அவனும் அவளை விடாமல் எல்லாப் பக்கமும் வழிமறிக்க, "ஏன்டா ஒரு ரேப்பிஸ்ட் ரேஞ்சிக்கு நடந்துக்கிற?" என்றவள் அவனிடமிருந்து விலகி ஓடினாள். அவனோ கலீரென்று சிரித்தான்.
"அப்படித்தான்டி நடந்துப்பேன்... நீ என்னைக்காச்சும் ஒரு லவர் மாதிரி என்னை நடத்திருப்பியா... ஆஃபிஸ் ப்யூன் பாய் ரேஞ்சுக்கு காக்க வைச்சி... ஒரே ஒரு கிஸ் ஹக்காக... நாயா அலைய வைச்சல நீ" என்றவன் விவரிக்க,
"இனிமே அப்படி எல்லாம் நடக்காது... இட்ஸ் அ பிராமிஸ்" என்றபடி அவனிடமிருந்து தப்பிக்க ஓடினாள்.
ஆனால் இம்முறை விஷ்வா வெகுசமார்த்தியமாய் படுக்கையின் மீது ஏறி அவளை அணைத்துப் பிடித்தவன், "இனிமே உன்கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்க மாட்டேன்... அட்டம்ப்ட் ரேப்தான்" என்று சொல்லி அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்த, "ஐ வில் கில் யூ இடியட்" என்றாள் சீற்றத்தோடு!
"இப்ப கூட பாரு... கில் யூதான்... லவ் யூ வரலையே" என்றவன் சொல்ல,
"ஓகே ஓகே லவ் யூ... ப்ளீஸ் விட்டுடுறா" என அவன் கரவளைத்திற்குள் மாட்டிக் கொண்ட தவிப்பில் கெஞ்சினாள்.
"இதை நீ முதலயே சொல்லிருக்கணும்" என்றவன் அவளைப் பேசவிடாமல் அவள் உதட்டை நோக்கி நெருங்க,
"ஐ லவ் யூ மேன்... ஐ லவ் யூ சோ மச்" என்றவள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல அவன் சற்று அமைதியாகி அவளை விட்டு விலகிவந்தான்.
ஆதி பெருமூச்செறிந்து அவனை ஏறிட்டவள், "நான் உன்னை காதலிக்கிறேன்தான்... ஆனா அதுக்காக எல்லாம் நான் உன் கையைப் பிடிச்சிகிட்டு பின்னாலேயே வரணும்னு எதிர்பார்க்காதே ப்ளீஸ்" என்றவள் சொல்ல அவன் மௌனமாகவே அவள் பேசுவதைக் கவனித்திருந்தான்.
"உன்னோட கடைசி வரைக்கும் இருக்கணும்னு ஆசைப்படறேன்... இதே அளவு காதலோட" என்றவள் சொல்ல அவளை ஆழ்ந்து பார்த்தவன், "ஹ்ம்ம் மேலே சொல்லு" என்றான் அவள் எண்ணம் புரிந்தவனாய்...
"நான் என்னோட சுயமரியாதை தொலைக்காம இருக்கணும்... அதுக்கு நீ என்னைப் புரிஞ்சிகிட்டு சப்போர்ட் பண்ணனும்" என்றவள் நிதானித்து அவனிடம் தன் மனநிலையை உரைத்தாள்.
விஷ்வா அவளை அருகில் வர சொல்லி கையசைக்க, அவளும் அவனை நெருங்கினாள். அவளை தன் தோள்மீது சாய்த்துக் கொண்டவன்,
"நீ சொல்றதெல்லாம் சரி... ஆனா நீ ஆஃபிஸிலிருந்து லேட்டா வந்தா... எனக்கான நேரத்தை ஒதுக்காம வெறுப்பேத்துனா… சத்தியமா எனக்கு கோபம் வரும்டி... ஆனா இதனால் எல்லாம் நான் உன் மேல வைச்சிருக்கிற காதல் மாறாது... நெவர்... அதேநேரத்தில உனக்கான அடையாளம் தொலையாம ஒரு கணவனா நான் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன்... ஓகேவா" என்றவன் தெளிவாக சொல்ல ஆதியின் கண்கள் பளிச்சிட்டன. அவள் மறுகணமே அவன் கழுத்தைப் பிணைத்துக் கொண்டு,
"தேங்க் யூ விஷ்வா... தேங்க் யூ ஸோ மச்" என்று இறுக்கமாய் அணைத்துக் கொள்ள அவனும் அவளை ஆரத்தழுவி கொண்டான். அவர்களின் உறவு உனக்காக நான் எனக்காக நீ என்பதல்ல. உன்னோடு நான் என்னோடு நீ என்ற அர்த்தமுள்ள புரிதலாகும்.
*******
நாட்கள் வேகமாய் கடந்து செல்ல, வசந்தாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அவள் தான் விருப்பப்பட்டது போல் தன் சித்தப்பா சிவசங்கரனின் பெயரை அவனுக்குச் சூட்டி மகிழ, ரஞ்சிதத்திற்கும் செல்லம்மாவிற்கும் சின்ன சிவசங்கரனைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.
ஆதியும் விஷ்வாவும் சென்னைக்குச் சென்று தங்கள் வேலைகளில் மும்முரமாகி விட்டனர். இருப்பினும் கருணாகரன் சாரதாவோடு தங்கள் நேரத்தைச் சரியாக ஒதுக்கி ஒரு அழகான குடும்பமாய் திகழ்ந்தனர்.
சரவணனும் சங்கரியும் அந்த ஊரை வளமையாய் மாற்றினர். கோயிலுக்கு வருபவர்கள் எல்லோரும் அந்த ஊரின் பசுமையைப் பார்த்து வியக்க, இன்று செழுமையும் வளமையும் சூழ ஆதிபரமேஸ்வரி ஆதித்தபுரத்தைக் காத்து நின்றாள் என்று சொன்னால் அது மிகையாகாது.
*-*-*-*-*-*-*-*-*சுபம்*-*-*-*-*-*-*-*-*
திருமண நாள்

Quote from maanya.rangarajan on February 16, 2024, 8:20 PMVery nice and excellent story 👌 👍
Very nice and excellent story 👌 👍
Quote from Marli malkhan on May 31, 2024, 9:27 AMSuper ma
Super ma
Quote from Guest on November 11, 2024, 7:04 AMIn 2016, Lesnar tested positive for the banned substance clomiphene, in a test administered by USADA, prior to a non- title bout against Mark Hunt at UFC 200 priligy canada 1995, Jacobson 1997, Jarosi et al
In 2016, Lesnar tested positive for the banned substance clomiphene, in a test administered by USADA, prior to a non- title bout against Mark Hunt at UFC 200 priligy canada 1995, Jacobson 1997, Jarosi et al