You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 14

Quote

14

“உன்னை யாரு அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்ல சொன்னது” என்று அமிர்தா தன் கைப்பேசியில் ஜெயாவிடம் எகிற.

“எனக்கென்னவோ ஹரீஷோட லவ் உண்மைனு தோனுது அமிர்தா” என்று ஹரீஷிற்குப் பரிந்து பேசினாள் ஜெயா. 

“நீ கன்வின்ஸ் ஆகலாம்… ஆனா நான் கன்வின்ஸ் ஆகல” என்றவள் அழைப்பைத் துண்டிக்கும் போது வாயிலில் அழைப்பு மணி கேட்டது.  

அந்த சமயத்தில் மும்பையில் மழைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. வீட்டின் வாயிற் கதவைத் திறந்த அமிர்தா வெளியே நின்றிருந்த ஹரீஷைப் பார்த்து அதிசயித்தாள். ஆனால் அடுத்த நொடியே அவள் முறைப்புடன் அவனை நோக்க,

“ஹாய்” என்றவன் இயல்பாக கையசைத்துப் புன்னகைத்தான். அவன் முழுவதுமாக மழையில் நனைந்திருந்தான். 

அவள் அவனைப் பொருட்படுத்தாமல் கதவை மூட முயல, “அமிர்து ப்ளீஸ்… உன்கிட்ட பேசணும்” என்றவன் கதவைப் பிடித்துக் கொள்ள,

“எனக்கு உன்கிட்ட எதுவும் பேச வேணாம்… ஜஸ்ட் கெட் லாஸ்ட்” என்றவள் கதவை மீண்டும் மூட முயல அவன் கெட்டியாக அதனைப் பிடித்துக் கொண்டு,

“ஃபங்கஷன்ல இருந்து கிளம்புனதுதான்… ஃப்ளைட்டைப் பிடிச்சு நேரா உன்னைப் பார்க்க வரேன்…  என்னைப் போய் போ போன்னு விரட்டுற” என்றவன் தவிப்புடன் சொல்ல,

“உன்னை யாருடா என்னைப் பார்க்க வரச் சொன்னது” என்றவள் சற்றும் மசிந்து கொடுக்கவில்லை.

“நீ சொல்லல… ஆனா எனக்கு உன்னைப் பார்க்காம எதுவும் ஓட மாட்டேங்குதுடி” என்றவன் அவள் கண்களைப் பார்த்துச் சொல்ல,

“இந்த மாதிரி டையலாக்கை இதுவரைக்கும் நீ எத்தனை பொண்ணுங்க கிட்ட சொல்லி இருப்ப?” என்றவள் குதர்க்கமாகக் கேட்க,

“உண்மையைச் சொல்லணும்னு உன்கிட்ட மட்டும்தான்… ஏன்னா உன்னைதான் நான் ரொம்ப மிஸ் பண்ணேன்… லவ்னா என்னன்னு ரொம்ப ஆழமா ஃபீல் பண்னேன்” என்றவன் கதவைத் தள்ளியபடி நிற்க,

“டையலாக் நல்லா இருக்கு… இதைப் போய் உன் ஃபியான்ஸிகிட்ட சொல்லு” என்றவள் கடுப்புடன் உரைத்தாள்.

“ஐயோ அமிர்து… அவ ஒன்னும் என் ஃபியான்ஸி இல்ல… எங்க அப்பா அந்தப் பொண்ணை எனக்காகப் பார்த்தாரு… ஆனா நான் ஓகே சொல்லல” என்றவன் தெளிவுப்படுத்த,

“நீ ஓகே சொல்லாமதான் அவ உன்னோட ஃபியான்ஸின்னு தன்னைச் சொல்லிகிட்டாளா ஹரீஷ்” என்றவள் கொஞ்சமும் தன் கோபம் மாறாமல் கேட்டாள் அமிர்தா.

“நான் உனக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன்… ப்ளீஸ் என்னை உள்ளே விடு” என்றவன் கெஞ்சிப் பார்க்க, கொஞ்சமும் அவள் இறங்கவில்லை. அவன் சுதாரிப்பதற்குள் கதவைப் படாரென்று மூடிவிட்டாள்.

“அமிர்து” என்றவன் கதவைப் பலமாகத் தட்ட,

“ப்ளீஸ் கிளம்பு ஹரீஷ்” என்றவள் கதவின் மீது சாய்ந்தபடி கூற,

“சரி போறேன்… ஆனா என் டிரஸ் முழுசா மழையில நனைஞ்சிடுச்சு… கதவைத் திற… உள்ளே வந்து மாத்திட்டுப் போறேன்… ப்ளீஸ்… கொஞ்சம் நாள் நாம ஃப்ரண்டா பழகணும்கிற கார்டிஸிக்காகவது கதவைத் திற” என்றவன் இறங்கிய தொனியில் கேட்க அந்தக் கடைசி வார்த்தைகள் அவள் மனதைக் கொஞ்சம் இறங்க செய்ய, அவள் கதவைத் திறந்துவிட்டாள்.

“தாங்க்ஸ்” என்றவன் உள்ளே நுழைய,

“டிரஸ் சேஞ் பண்ணிட்டு உடனே கிளம்பு” என்றவள் அவன் முகத்திற்கு நேராக ஒரு துண்டை விட்டெறிந்துவிட்டு அகன்றாள்.

அதனைப் பட்டென்று பிடித்துக் கொண்டவன், “ப்பா… என்ன கோபம்… இவளை ஃலைப் லாங் வைச்சு எப்படி சமாளிக்க போறோம்னு… தெரியலயே” என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டே பேகைக் கழற்றி வைத்தான்.

பின் தன் உடையைக் கழற்றித் துண்டால் துடைத்துவிட்டு வேறு உடையை மாற்றிக் கொண்டு உள்ளே நுழைந்த அந்தப் பங்களாவை நோட்டமிட்டான். அது மிகவும் விசாலமாகக் காட்சியளித்தது. சுற்றியுள்ள அறைகள் ஒவ்வொன்றையும் அளவெடுத்தபடி வந்தவன், அவள் பின் கதவைத் திறந்து வீசும் மழைச்சாரலைப் பார்த்தபடி நின்றிருந்ததைக் கவனித்தான்.  

அவனும் அந்தக் கதவின் மறுபுறம் சாய்ந்து கொண்டு, “சில்லன்னு மழை சாரல்… நல்லா இருக்கு… நம்மோட லேக் டிஸ்ட்ரிக்ட் ட்ராவலை ஞாபகப்படுத்துது” என்று சொல்லவும் அவனை முறைத்துப் பார்த்தவள்,

“டிரஸ் சேஞ் பண்ணிட்ட இல்ல… அப்புறம் என்ன… கிளம்பு” என,

“இந்த மழைலயா… ஓ மை காட்! ஏற்கனவே நான் மழைல முழுசா நனைஞ்சிட்டேன்… உடம்பு எல்லாம் வெடவெடன்னு நடுங்குது அமிர்தா” என்று நடுங்கி காண்பித்தவன் மேலும்,

 “இதுக்கே எனக்கு ஃபீவர் வந்துரும் போல… தொண்டை எல்லாம் கரகரன்னு கோல்ட் வர மாதிரி வேற இருக்கு… ஐயோ! தலைவலி சிம்ப்டம்ஸ் வேற தெரியுது” என்று தலை மூக்கை எல்லாம் பிடித்துக் கொண்டு அவன் பரிதாபத்துடன் பார்க்க அவள் சற்றும் அசராமல்,

“ஓவரா ஆக்ட் பண்ணாதே ஹரீஷ்… நம்புற மாதிரி இல்ல” என்றாள்.

“சத்தியமா… என் கையைத் தொட்டுப் பாரு… எவ்வளவு சில்லுனு இருக்குன்னு” என்றவன் அவள் கரத்தைப் பிடிக்கவும் பட்டென்று உதறி விட்டவள்,

“அதுக்கு இப்ப நான் என்ன பண்ணணும்கிற” என்று சீறலாகக் கேட்டாள்.

“சூடா ஒரு இஞ்சி டீ குடிச்சா பெட்டரா இருக்கும்… ப்ளீஸ் அமிர்து… ஒரே ஒரு டீ போட்டுத் தர்றியா” என்றவன் தம் கைகளைச் சூடு பறக்க தேய்த்துக் கொண்டே கேட்க,

“இதுக்கு பேர்தான் இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கிறதுன்னு சொல்லுவாங்க” என்றவள் முறைத்தாள்.

“ஒரு கப் டீ கேட்டதுக்கு இடம் மடம்னு பழமொழி எல்லாம் சொல்லிட்டு இருக்க… ஏற்கனவே தலைவலி ஸ்டார்டான மாதிரி இருக்கு” என்றவன் தலையைப் பிடித்தபடி அவளை அதே பரிதாப பார்வை பார்த்து வைக்க,

“எனக்கு டீ எல்லாம் போடத் தெரியாது” என்றவள் எரிச்சலாகச் சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட்டாள்.

“சரி நானே போட்டுக்கிறேன்… கிச்சன் எங்கன்னு மட்டும் காண்பி” என்றவன் கேட்கவும் அவள் சலிப்புடன், “அதோ இருக்கு” என்று சமையலைறையைக் காட்டிவிட்டாள்.

“தாங்க்ஸ்.. ஸோ ஸ்வீட் ஆஃப் யூ” என்றவன் நேராக சமையலறை நோக்கி சொல்ல அவள் எட்டிப் பார்த்தாள்.

அவன் ஏதேதோ பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்க, ‘ஏதோ செய்து தொலையட்டும்’ என்றவள் அமைதியாக வந்து உணவு மேஜை அருகிலிருந்த இருக்கையில் கன்னத்தைக் கைகளால் தாங்கியபடி அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்களில் இரு கோப்பைகளுடன் வந்தவன்,

“ஹேவ் இட்… சூடான இஞ்சி டீ…” என்று நீட்ட,

“எனக்கு  வேண்டாம்” என்றவள் அலட்சியப்டுத்தினாள்.

“ப்ச்… எடுத்துக்கோ அமிர்து… இந்த க்ளைமட்டுக்கு இப்படியொரு டீ… ப்ச் சான்ஸே இல்ல… இஞ்சி மசாலா எல்லாம் தட்டிப் போட்டு அப்படியே ஸ்மெல் பண்ணி ஸிப் பண்ணி ஸிப் பண்ணி குடிச்சா ஒரு ஃபீல் கிடைக்குமே… ஹெவென்லி” என்றவன் ரசனையுடன் தேநீரின் சிறப்பம்சங்களைச் சொல்லி அவள் உயிரை எடுக்கவும்,

“போதும் போதும்... நிறுத்து… நானே எடுத்துக்கிறேன்” என்று வேறு வழியின்றி அதனை வாங்கிக் கொண்டாள்.

 பின் அமிர்தா அந்தத் தேநீரை அருந்தியபடி, “எதுக்கு ஹரீஷ் இங்கே வந்திருக்க?” என்று கேட்க,

“டீ குடிக்க” என்றவன் பதிலைக் கேட்டுக் கடுப்பாக அவனை முறைக்க,

“இல்ல டீ குடிச்சிட்டுச் சொல்றேன்னு சொன்னேன்” என்றான்.

அவன் அந்தத் தேநீரை ஒவ்வொரு மிடறாக ருசித்து இரசித்து அருந்திய பின் கோப்பையை வைத்துவிட்டு முகப்பறைக்குச் செல்ல, அவள் குழப்பமாக அவன் செல்லும் திசையை எட்டிப் பார்த்தாள்.

அவன் மேஜையிலிருந்த பூஜாடியின் பூங்கொத்தை எடுத்து அவளிடம் நீட்டி சினிமா பாணியில் மண்டியிட்டு, “ஐ லவ் யூ அமிர்தா… ஐ லவ் யூ ஸோ மச்” என,

“என் வீட்டுல இருக்க ஃப்ளவர் வாஸ்… ஃப்ளவரஸ்ஸை…எடுத்து எனக்கே கொடுத்து பிரப்போஸ் பண்றியா?” என்று முறைக்க,

“நான் உனக்காக இலண்டன்ல எவ்வளவு அழகான பூங்கொத்து வாங்கிட்டு வந்தேன் தெரியுமா… நீ என்னை ஏமாத்திட்ட… இந்தத் தடவை வாங்கிட்டு வரலாம்னு நினைச்சேன்… பட் மழைல என்னால வாங்க முடியல… நான் வேற மும்பைக்குப் புதுசு” என்றவன்  அடுக்கடுக்காகக் காரணம் கூறி வெறுப்பேற்ற,

“லூசு” என்று அவள் எரிச்சலுடன் அந்தப் பூங்கொத்தைப் பிடுங்கி எடுத்து மீண்டும் அந்தப் பூ ஜாடியிலேயே நுழைத்தாள்.

“தாங்க்ஸ்… என் லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கிட்டதுக்கு” என்றவன் சொன்ன நொடி கோபமாகத் திரும்பியவள்,

“யாரு இப்போ உன் லவ்வை அக்ஸ்ப்கட் பண்ணிக்கிட்டது?” என்று அதிர்ச்சியானாள்.

“ஃப்ளவரஸ்ஸை நீ வாங்கிக்கிட்ட… என் பிரபோஸலை நீ அக்ஸ்ப்கட் பண்ணிக்கிட்டதாதானே அர்த்தம் டார்லிங்”

“கொன்னுடுவேன் உன்னை” என்று கொதித்தவள் மேலும், “என்னை டார்லிங் கீர்லிங்க்னு கூப்பிடுற வேலை வைச்சுக்காதே” என்றாள்.

“சரி வேற எப்படி கூப்பிடட்டும் நீயே சொல்லு” என்றவன் பார்வை அவளை கல்மிஷ்மாக நோக்க,

“நீ எப்படியும் கூப்பிட வேண்டாம்… கிளம்புற வழியைப் பாரு” என்றவள் வாசல்புறம் கைக் காண்பிக்க,

“அப்போ என் லவ்?” என்றவன் ஐயோ பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

“நான் உன்னை லவ் பண்ணல ஹரீஷ்” என்றவள் நேரடியாகக் கூற,

“இப்போ சொன்னியே… இதை நீ இலண்டன்லயே என்னை நேரா பார்த்துச் சொல்லி இருக்கணும்… அப்போ உன்னை நான் நம்பி இருப்பேன்… ஆனா அதை விட்டுட்டு என் லவ்வை டெஸ்ட் பண்றேன்னு என் எமோஷன்ஸோட விளையாடிட்டு… இப்ப வந்து என்னை லவ் பண்ணலன்னு சொல்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல” என்று படபடவெனப் பொரிய, அவனின் அதிரடியான அந்தக் கேள்வியில் மௌனமானாள்.

அவன் மேலும், “உனக்குத் தெரியுமா… உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சு…  நான் இந்த ஒரு மாசமா எப்படியெல்லாம் அவஸ்த்தைப்பட்டேன்னு… கிட்டத்தட்ட பைத்தியம் ஆகாத குறை… யாரைப் பார்த்தாலும் அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு  கல்யாணம் ஆகிடுச்சுன்னு புலம்பிட்டு இருந்தேன்.”

”எங்க அம்மால இருந்து என் ஃப்ரண்ட்ஸ் வரைக்கும் நீயாடா இப்படின்னு கேட்டு ஷாக்கானாங்க… இந்த ஒரு மாசமா நான் நானாவே இல்ல” என்று தன் உணர்வுகளைத் தீவிரமாக விவரிக்க, அவள் முகம் இருளடர்ந்தது.

“ஏன்… நேத்து மேடையில நின்னுக்கிட்டு பைத்தியகாரனாட்டும்… காதலைப் பத்தி கலாட்சேபம் பண்ணனேனே… அது உனக்காகதான்னு தெரியாதா உனக்கு” என்று அவன் அவளை நெருங்கி நிற்கவும் அவள் பதறி விலக, அவன் கரம் அவளை அணைத்துக் கொண்டது.

“ஹரீஷ்” என்றவள் தவிப்புற அவள் கண்களை நேராகப் பார்த்து, “என் காதல் உனக்குப் புரியலையா… இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியாடி” என்று அவளை அணைத்தபடியே கேட்க அவள் தயக்கத்துடன்,

“தப்பா எடுத்துக்காதே… எனக்குத் தெரிஞ்சு உனக்கு ஸ்டேபிளான மைன்ட் கிடையாது… இன்னைக்கு என்னை லவ் பண்றன்னு உருகி உருகிப் பேசற நீ… நாளைக்கே… வேறொரு பொண்ணு பின்னாடி போக மாட்டேன்னு என்ன நிச்சயம்” என்றவளும் நேரடியாகத் தாக்க அவன் பொங்கிவிட்டான்.

“என்னை என்னன்னு நினைச்ச நீ… காஸனோவா மாதிரி பொண்ணுங்களை அட்ரேக்ட் பண்ணி செடியூஸ் பண்ணிட்டு விட்டுட்டுப் போயிடுற சீப்பான கேரக்டர்னா” என்று அவன் சீறலாகக் கேட்க அவள் பதிலேதும் பேசவில்லை.

மேலும் அவன் கோபம் குறையாமல், “அமிர்தா நான் விளையாட்டுத்தனமா இருந்திருக்கேன்… ஒத்துக்கிறேன் நான் ஒரு மாதிரி டோன்ட் கேர் கேரக்டர்தான்… லவ்னா என்னன்னு தெரியாம நிறைய பேர் கிட்ட பிரபோஸ் பண்ணி இருக்கேன்… எத்தனையோ பொண்ணுங்களைப் பின்னாடி சுத்த வைச்சு இருக்கேன்… சுத்தி இருக்கேன்… சாதராணமா ப்ரேக் அப் பண்ணிட்டு ரிலேஷன்ஷிப்பை முடிச்சிட்டு இருந்திருக்கேன்.”

”ஆனா எந்தப் பொண்ணுக்கிட்டயும் நான் என் எல்லையை மீறனது இல்ல… டூ யூ நோ தட்” என்றவன் சொன்னதும் அவள் பதிலேதும் பேசாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உன்னால பிலீவ் பண்ண முடியாது… ஆனா அதான் உண்மை… என்னோட ஒவ்வொரு ரிலேஷன்ஷிப் பத்தின எல்லா விஷயமும் எங்க அம்மாவுக்கு ஒன்னு விடாம தெரியும்.”

”அப்படி எங்க அம்மாகிட்ட ஓபனா சொல்ற நான் இந்த மாதிரி கேவலமான காரியத்தைப் பண்ணுவேன்னு நினைக்குறியா?” என்று கேட்டதும் அவள் பார்வை அவனை ஆழமாக நோக்கியது.

அவன் கண்களில் பொய்யிருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.

“சாரி ஹரீஷ்… எக்ஸிடிரீம்லி சாரி… நான் அப்படி பேசி இருக்க கூடாது” என்றவள் தவறை ஒப்புக்கொள்ள அவன் அந்த நொடியே தன் கோபத்தை விடுத்து அவள் முகத்தின் அருகே நெருங்கினான்.

அவள் இதழ்ளை தம் இதழ்களால் உரசியபடி, “லவ் யூ ஹரீஷ்னு சொல்லு அமிர்து” என்று மீண்டும் கெஞ்சுதலாகவும் கிறக்கத்துடனும் கேட்க,

“இப்படியே கன்வின்ஸ் பண்றேன் பேர்வழின்னு என்னை கன்ஸீவ் ஆக்கிடலாம்னு பார்க்கிறியா ஹரீஷ்?”  என்றவள் ஆழமான பார்வையுடன் கேட்டதும் அவன் அதிர்ந்து விலக அவள் சத்தமாகச் சிரித்தாள்.

அவன் அவளைக் கடுமையாக முறைக்க, “ஏன் டா? நீ… காஸனோவா இல்லையா… எப்படிடா அது? வீட்டுக்குள்ள டிரஸ் மாத்துறன்னு வந்துட்டு… டீ போட்டுக் குடிச்சிட்டு… என் வீட்டு ரோஸஸ் எடுத்து எனக்கே பிரோபஸ் பண்ணிட்டு… இப்போ என்னடானா… கிஸ் பண்றதுக்கு என் லிப்ஸ் கிட்டயே வந்துட்ட…  அடுத்து நீ எங்கே வருவன்னு எனக்கு தெரியாது” என்று கேட்டதும் கோபத்தில் அவன் உதடுகள் துடித்தன.

“திஸ் இஸ் டூ மச்… என்னை நீ இவ்வளவு இன்ஸல்ட் பண்ண கூடாது” என்றவன் ரோஷத்துடன் கூற,

“நீ என்ன நினைச்சாலும் பரவாயில்ல… இப்பவும் என்னால உன்னை நம்ப முடியாது… ஆனா நான் உன்னை லவ் பண்றேன்… அதனால முதல நாம உங்க ம்மா அப்பா கிட்ட பேசுவோம்… அவங்க நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கட்டும்… அப்புறமா லவ் யூ ஹக் யூ… கிஸ் யூ எல்லாம் சொல்லலாம்… உருகலாம்… மருகலாம்… அது வரைக்கும்” என்றவள் அவனிடம் கைக் காட்டித் தள்ளி நிற்க சொல்லவும் அவன் முறைப்புடன்,

“காதலில் இல்லாத நம்பிக்கை கல்யாணத்துல மட்டும் வந்துருமா உனக்கு?” என்று கேட்டான்.

“காதலில் இல்லாத அஸுரன்ஸ் கல்யாணத்தில இருக்கு ஹரீஷ்… அவ்வளவு சீக்கிரமா நீ என்னைக் கழற்றி விட்டுட முடியாது இல்ல… அப்படியே விட்டா உன்னை நான் சும்மா விட்டுட மாட்டேன்” என்றவள் அழுத்தத்துடன் கூறிப் புருவங்களை ஏற்றி கேட்க, தான் கடந்த வந்த இத்தனை பெண்களில் இவள் மட்டும் ஏன் தன்னை இந்தளவு ஆட்டிப்படைத்துக் கிறுக்குப் பிடிக்க வைத்திருக்கிறாள் என்ற காரணம் இப்போதுதான் புரிந்தது அவனுக்கு.

“சீர்யஸ்லி… ஐ மேட்லி லவ்ட் யூ பார் திஸ் ஆட்டிட்யூட்” என்று  சொல்லி அவன் புன்னகைக்க,

“ஈவன்… ஐ லவ்ட் யூ பார் திஸ் கூல் ஆட்டிட்யூட் ஹரீஷ்” என்றாள் அவள். 

இருவருமே அவரவர்களின் தோற்றங்களைத் தாண்டி குணங்களின் மீது காதல் கொண்டதால்தான் எதிர்மறை சூழ்நிலைகள் நம்பிக்கையின்மைகளை எல்லாம் தாண்டி ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டனர். அதனை விட்டுக் கொடுக்க முடியாமல் தவிப்புற்றனர்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content