You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 15

Quote

15

குளிர்ந்த காற்று அந்த ஜன்னலின் வழியே நுழைந்து ஹரீஷின் தேகத்தைத் தீண்டியது. எனினும் அவன் ஒருவித மறுத்து போன நிலையில் வெளியே வெறித்தபடி இருந்தான்.

திருமணம் செய்து கொள்ளலாம் என்றவள் சொன்ன கையோடு வேறொரு இடியையும் அலுங்காமல் குலுங்காமல் அவன் தலையில் தூக்கிப் போட்டுவிட்டாள்.

அந்த வகையில் அவள் சொன்ன உண்மை அத்தனை சாதாரணமாக ஏற்ககூடியது அல்ல. சினிமாக்களில்தான் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும். ஆனால் வாழ்க்கை ஒன்றும் சினிமா படம் இல்லையே. காலம் காலமாக நம் சமூகம் வகுத்து வைத்திருக்கும் சில விதிமுறைகளும் வரைமுறைகளும் மீறி நாம் எதைச் செய்ய நினைத்தாலும் அதற்கு நிறைய எதிர்ப்புக்களைச் சந்திக்க நேரிடலாம்.

அவனுக்கு அந்த எதிர்ப்புகள் பிரச்சனை இல்லை. ஒரு வகையில் அவன் மனமே அவள் சொன்ன உண்மையை எப்படி ஏற்பதென்ற குழப்பத்தில்தான் தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஸ்பீட் பிரேக்கர் போட்டு நிறுத்தி நிதானமாக யோசிக்க சொன்னது அவன் மூளை.

“உன்னோட கூல் ஆட்டிட்டியூட்தான் எனக்கு ரொம்பவும் பிடித்துப் போனது… நீ எல்லாத்தையும் ஃபன்னா எடுத்துக்கிற டைப்… ஸோ இதையும் நீ சீரியஸா எடுத்துக்கமாட்ட” என்று இழுத்தவள், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலதான் அந்த உண்மையை ஏற்றிவிட்டாள்.

“எங்க அம்மா பேர் சாரா…ஷி வாஸ் எ செக்ஸ் வொர்கர் ஹரீஷ்… இந்த வீடு சொத்து எல்லாம் அப்படி சம்பாதிச்சதுதான்… அவங்க அழகும் வயசும் போறதுக்குள்ள பணத்தை வெறித்தனமான சம்பாதிச்சாங்க.”

”உலகத்தோட டாப் மோஸ்ட் ரிச்சஸ்ட் பீப்பள்ஸ் எல்லாம் எங்க அம்மாவோட அறிமுகத்திற்காகக் காத்திருந்த காலம் ஒன்று உண்டு… அப்படி எத்தனையோ பேர் அவங்க காலடில விழுந்தும் கிடந்திருக்காங்க.”

”தங்கம் வைடூரியமெல்லாம் சர்வ சாதாரணமா கொட்டிக் கொடுத்திருக்காங்க… எங்க அம்மாவுக்கு உலகம் பூரா பிராபர்டீஸ் இருக்கு… நிறைய பணக்காரங்களோட கணக்குல வராத பணமெல்லாம் எங்க அம்மாவோட கணக்குல இருக்கு.”

”சம்பாதிச்சு சம்பாதிச்சு சலிச்சு போய் ஒரு வழியா எங்க அம்மா இலண்டன் வந்து செட்டிலாகிட்டாங்க.”

 ”when a man is tired of a London, he is tired of lifeன்னு இலண்டனைப் பத்தின ஒரு ஃபேமஸ் கோட். அம்மா உலகத்தையே சுத்தி வந்திருந்தாலும் இலண்டன்தான் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடம்.”

”அங்கேயே செட்டிலாகிடும்னு முடிவு பண்ணாங்க… ம்ம்ம்… அங்கேயே அவங்க கடைசி காலத்தையும் முடிச்சிக்கிட்டாங்க… கேன்ஸரோட போராடின காலக்கட்டங்கள் தவிர அம்மா வாழ்க்கை நல்லாதான் இருந்துச்சு.”  

”ஸ்மோக்கிங் ஹேபிட் மட்டும் இல்லன்னா இவ்வளவு சீக்கிரம் அவங்க இறந்திருக்க கூட மாட்டாங்க… என்னை விட்டு போயிருக்கவும் மாட்டாங்க…”

”ப்ச்… இது இப்படிதான் நடக்கணும்னு இருக்கு… நடந்திடுச்சு… இன்னைக்கு எங்க அம்மா என் கூட இல்லை… ஏதோ ஒரு குழிக்குள்ள இருக்காங்க…”

”ஆனா அவங்க வாழ்ந்த வாழ்க்கை இருக்கு இல்ல… லைக்க குயின்… கடைசி வரை அவங்க அப்படிதான் கெத்தா இருந்தாங்க… அவங்க நினைச்சதெல்லாம் சாதிச்சிக்கிட்டாங்க.”

”என்ன? அவங்க இறக்கிறதுக்கு முன்னாடி உன்னை ஒரு தடவை நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க ஹரீஷ்… ப்ச் அதான் நடக்கல” என்றவள் மிகச் சாதராணமாக தன் அம்மாவின் வாழ்க்கையை விவரிக்க, அவன் அதிர்ச்சி நிலையில் அப்படியே உறைந்திருந்தான்.

“இதான் ஹரீஷ்… எங்க அம்மாவோட ஃபோட்டோ” என்றவள் தன் கைப்பேசியில் காட்டிய புகைப்படத்தில் அழகின் மொத்த உருவமாக ஒரு நங்கை இருந்தாள். அவள் முகத்தில் தமிழ் பெண் சாயலிருந்தது.மேலும் அவள் உடையும் தோரணையும் அமிர்தா சொன்னது போல ஒரு இராணியின் கம்பீரத்தை ஒத்திருந்தது.

“இது கொஞ்சம் பழைய ஃபோட்டோ” என்றவள் மேலும் வேறொரு படத்தைக் காட்டி, “இதுதான் ரீஸன்ட் டைம்ஸ்ல எடுத்தது” என்று அவளும் அவள் அம்மாவும் சேர்ந்திருந்த படங்களைக் காட்டினாள். இருவரும் கன்னத்தோடு கன்னம் ஒட்டியபடி நெருக்கமாக இருந்தனர். அவர் உடல் நலம் குன்றிய நிலையிலிருந்த போது எடுத்தப் படங்கள் அவை என்று பார்த்ததும் தெரிந்தது. கண்களில் குழி விழுந்து அவரின் தோல் அதன் ஒளியை இழந்திருந்தது.

“எங்க அம்மாவோட கம்பேர் பண்ணும் போது அவங்க அழகுல கால்வாசி கூட நான் இல்லயில்ல” என்று சொல்லும் போது அமிர்தா கண்கள் கலங்கிவிட்டன. ஆனால் அவளை ஆறுதல்படுத்தும் நிலையில் அவன் இல்லை. இன்னும் அவள் சொன்ன உண்மையை ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியில் இருந்தான்.

அவள் தன் கண்ணீரைத் துடைத்தபடி, “என்ன ஹரீஷ்… ஒரு மாதிரி ஆகிட்ட… நீ எல்லாத்தையும் ஜாலியா எடுத்துக்கிற டைப்தானே… உனக்கு எல்லாமே ஃபன் தானே” என்று சொன்ன போது வேண்டுமென்றே அவள் குத்திக் காட்டியது போலிருந்தது.

அவனுக்கு என்ன பதிலுரைப்பது என்று தெரியவில்லை.

“ஹரீஷ்… ஏன் இவ்வளவு ஷாக்கா இருக்க? எங்க அம்மாதான் செக்ஸ் வொர்க்கர்… நான் இல்ல… ஸ்டில் ஐம் அ வெர்ஜின்…ஆக்சுவலி வெர்ஜினிட்டி மனம் சம்பந்தபட்டதுன்னு நான் கண்டிப்பா வெர்ஜின்தான்.”

”ஆனா உடம்புலதான் வெர்ஜினிட்டி இருக்குன்னா நான் வெர்ஜின் இல்ல ஹரீஷ்” என்றவள் அதையும் மிகச் சாதாரணமாக சொல்ல,

“ஸ்டாப் இட் அமிர்தா…நான் ஒன்னும் உன் உடம்பைக் காதலிக்கல… மனசைதான் காதலிக்கிறேன்… இப்படியெல்லாம் பேசாதே” என்று உரைத்தான்.

அவள் சத்தமாகச் சிரித்துவிட்டு, “அப்படினா என் உடம்பு உனக்கு வேணாமா ஹரீஷ்?” என்று பட்டென்று கேட்டுவிட, அவன் முகம் கன்றி சிவந்துவிட்டது.

“அமிர்தா கம்மான்” என்றவன் கடுப்புடன் குரலையுயரத்த,

“டென்ஷன் ஆகாதே ஹரீஷ்… நான் ப்ரெக்ட்டிகலா பேசுறேன்… என்னை ஒருத்தன் ரேப் பண்ணிட்டான்… அப்போ எனக்கு பத்து இல்லன்னா ஒன்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன்… எனக்கு சரியா தெரியல” என,

“அமிர்தா” என்று அவன் அதிர்வுற்றான்.

“நோ ஹார்ட் ஃபீலிங்ஸ் ஹரீஷ்… நான் அதெல்லாம் கடந்து வந்து ரொம்ப வருஷமாகிடுச்சு… ஆனாலும் இதுவரைக்கும் எந்த ஆண் மீதும் எனக்கு பெருசா நம்பிக்கை எற்படல…காரணம் எங்க அம்மாவை வைச்சு என்னையும் பயன்படுத்திக்கதான் பல ஆண்கள் பார்த்தாங்க.”

”ஒரு வேளை யாரையாவது காதலிச்சிருந்தா கூட அவங்க என்னை யூஸ் பண்ணிட்டு எங்க அம்மா செஞ்ச தொழிலைச் சொல்லி என்னை ஈஸியா தூக்கிப் போடவும் வாய்ப்பிருக்கு.”

”அதனால நான் காதல் விஷயத்தில ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன்… எந்த ஆண்கள் கூட பழகினாலும் நட்புங்குற ரீதில கொஞ்சம் தள்ளியே நிறுத்திடுவேன்… ஆனா நானுமே தவறின ஒரு ஆண் நீதான்.”

”என்ன செய்ய… எனக்கும் எல்லோரையும் போல உணர்ச்சிகள் இருக்கு… அதைக் கட்டுப்படுத்திக்க முடியாத நிலையில்தான்… எனக்கே எனக்குன்னு ஒரு கற்பனை உலகத்தைப் படைச்சு… அதுல எனக்கே எனக்குன்னு உணர்வுபூர்வமான காதலை உருவாக்கி என்னை மறந்து அதுல வாழ்வேன்… எழுதுவேன்.”

”ஐ லவ் மை ரைட்டிங் அன் ஐ லிவ் இன் மை ரைட்டிங்.”

”நீதான் ஹரீஷ்… என்னோட அந்தக் கற்பனை உலகத்தை அப்படியே என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துனவன்… அங்கேதான் நான் உன்கிட்ட ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன்… அப்போ கூட லவ் எல்லாம் பன்னல… ஆனா உன் கையைப் பிடிச்சு நடந்த தூரங்களில்தான் எனக்குமே தோளில் சாய்ஞ்சுக்க… கட்டிப் பிடிச்சுக்க… முத்தம் கொடுக்க ஒரு ஆண் துணை வேணும்னு தோனுச்சு… அதுவும் நீதான் வேணும்னு தோனுச்சு.”

”இருந்தாலும் உன் கேரக்டரைப் பத்தி யோசிச்ச போது தயக்கமாக இருந்துச்சு… தனிமைலயே வாழுறது பிரச்சனை இல்ல… ஆனா ஒரு துணையா யாராவது வந்துட்டு… திடீர்னு அவங்க நம்மல விட்டுட்டுப் போயிட்டா அதுக்கு அப்புறம் வர தனிமை நம்மள நிச்சயமா கொன்னுடும்.”

”அதான் அன்னைக்கு நீ பிரப்போஸ் பண்ண வருவேன்னு தெரிஞ்சே அப்படியொரு டிராமா பண்ணேன்… உன்னை அது ரொம்ப ஹார்ட் பண்ணி இருக்கலாம்… ஆனா எனக்கு அது நியாயம்னு பட்டுச்சு” என்றவள் தெளிவாகத் தன்னிலையை விளக்கிவிட்டாள்.

இருப்பினும் அவன் குழம்பிய குட்டையாகதான் இருந்தான். அவள் சொன்ன உண்மைகள் எல்லாம் ஏற்கனவே மூச்சு முட்ட வைத்த நிலையில் சட்டென்று அவள் பேசிய எதற்கும் அவன் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.

அவன் உதடுகள் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டன. கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் தேவையாக இருந்தது அவனுக்கு.

அவன் மனநிலையை ஒருவாறு புரிந்து கொண்டவளாக, “எனக்கு உன் மனநிலை நல்லா புரியுது ஹரீஷ்… நீ வளர்ந்த சமூகம் நான் சொன்ன உண்மைகளை அத்தனை சாதாரணமா எடுத்துக்க சொல்லிக் கொடுக்கல”

”ஒரு ஆண் பல பெண்களோட உறவு வைச்சுக்கிட்டா அவன் ஒரு ப்ளே பாய்… காஸனோவா… இதுவே ஒரு பெண் அப்படி இருந்தா தே*** யான்னு சொல்லுவாங்க… ப்ளடி பிட்ச்”

”ஏன்? ஒரு பெண்ணை விருப்பமில்லாம பலாத்காரம் செய்தா கூட குற்றவாளிகளாகப் பெண்களைதான் இந்த உலகம் சித்தரிக்குது.”

“ஆனா நான் இந்தக் கருத்துக்கு எல்லாம் உடன்படல… அறுபதாயிரம் மனைவிகளைக் கட்டி குடும்ப நடத்துன தசரதனுக்கு மகனா பிறந்த ராமனைத் தெய்வமா கும்பிடும் போது… நான் எந்த விதத்திலயும் குறைஞ்சவ இல்ல.”

”அதேபோல என் விருப்பம் இல்லாம எனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் பொறுப்பாளியும் இல்ல… ஐ டோன்ட் டிஸ்ர்வ் தட்… அதனால எல்லாம் என் கற்பை யாரும் இரப்பர் வைச்சு அழிக்க முடியாது” என்றவள் சொல்லிவிட்டு,

“ஹரீஷ்… நீ என் கருத்தோட உடன்படனும்னு அவசியம் இல்ல… பொறுமையா யோசிச்சு முடிவெடு… நான் உன் வாழ்க்கை துணையா வரணுமா வேண்டாம்னு” என்றாள்.

இருவரும் அதன் பின் பேசிக் கொள்ளவில்லை. அவர்களின் அன்றைய இரவு ஓர் ஆழ்ந்த அமைதியில் அமிழ்ந்திருந்தது.

“நீ இந்த ரூம்ல படுத்துக்கோ ஹரீஷ்” என்று அவன் படுத்துக் கொள்ள மேல்தளத்திலிருந்த அறையை ஏற்பாடு செய்திருந்தாள்.

அவனுக்கு எங்கே உறக்கம் வந்தது. அவள் எல்லாவற்றையும் சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டாள். அவனுக்குதான் பாறாங்கல்லைத் தூக்கித் தலையில் வைத்தது போல அப்படியொரு கனம்.

தன்னுக்குள்ளும் சந்ததி சந்ததியாக ஆழமாக வேரோடிப் போயிருந்த ஆணாதிக்க எண்ணங்கள்தான் தன்னை இந்தளவு யோசிக்க வைக்கிறதா? தயங்க வைக்கிறதா? என்று அவன் தனக்குள்ளாக ஒரு சுய அலசலை மேற்கொண்டான்.

விடிந்து வெளிச்சக் கீற்றுகள் ஜன்னலில் எட்டிப் பார்த்த அதேநேரம் அவன் மனதிலிருந்த குழப்ப இருளும் விலகியது. நிறைய யோசித்து கனத்திருந்த அவன் மனது ஒருவாறு லேசாக, அவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அவளும் விடியற்காலையில் எழுந்து பால்கனியில் அமர்ந்து யோகா செய்து கொண்டிருந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் மெல்ல படிக்கட்டுகளில் இறங்கி கீழே வந்தான்.

விசாலமான அந்த வீட்டின் அமைதி அவனுக்கு என்னவோ போலிருந்தது.

சமையலறைக்குள் சென்று அவன் தேநீர் தயாரித்துக் கொண்டிருக்கும் போது அமிர்தா தன் யோகா பயிற்சியை முடித்துவிட்டு, “குட் மார்னிங் ஹரீஷ்” என்று பின்னோடு வந்து நின்றாள்.

“வெரி குட் மார்னிங் அமிர்து… நீ யோகா பண்ணிட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ணாம கீழே வந்துட்டேன்… டீ போட்டு குடிக்கலாம்னு” என்றவன் கூறவும்,

“தட் ஸேம் இஞ்சி டீ” என்றவள் புன்னகை முகமாகக் கேட்டுக் கொண்டே அந்தச் சமையல் மேடையில் ஏறி அமர,

“உனக்கும் வேணுமா?” என்று கேட்டான்.

“நேத்து கேட்காமலே போட்டு தந்த… இன்னைக்கு என்ன… வேணுமான்னு கேட்குற” என்றவள் அவனை உறுத்துப் பார்க்க,

“சாரி சாரி… உனக்கும் போடுறேன்” என்றவன் இருவருக்கும் சேர்த்து தேநீரைத் தயாரித்தான்.

“நீயும் எப்பவும் இவ்வளவு சீக்கிரம் எழுந்துடுவியா… யோகா எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணுவியா ஹரீஷ்?”

“ச்சே ச்சே… அதெல்லாம் நமக்கு செட்டே ஆகாது… நான் எல்லாம் பத்து மணிக்கு முன்னாடி எழுந்திருக்கவே மாட்டேன்… எந்த வேலையும் இல்லனா மதியம் பன்னன்டு மணி வரைக்கும் கூட தூங்குவேன்” என்றவன் அசட்டையாகக் கூறிவிட்டு,

“ஆக்சுவலி இன்னைக்கு நான் தூங்கவே இல்ல… அதான் இவ்வளவு சீக்கிரம்” என்றான்.

“ரொம்ப யோசிச்சியோ?”

“ஆமா… நிறைய யோசிச்சேன்” என்றவன் சொன்ன நொடி அமிர்தா எதுவும் பேசாமல் மௌனமாகிவிட்டாள்.

“ஆமா… கேட்கணும்னு நினைச்சேன்… இவ்வளவு பெரிய வீடா இருக்கு… இங்கே நீ தனியாவா இருக்க? யாரும் ஸர்வன்ட்ஸ் இல்லையா?” என்று கேட்டபடி தேநீர் கோப்பையை அவளிடம் கொடுக்க,

“இருக்க போறது ஒரு வாரம்… அதுவும் நான் மட்டும்… இதுக்குப் போய் எதுக்கு ஸர்வன்ட்ஸ் எல்லாம்… அதுவுமில்லாம எனக்கு இந்த அமைதி தனிமை எல்லாம் பழகிய விஷயம்… பிடித்தமான விஷயமும் கூட”

”அப்புறம் எழுதறதுக்கு இதை விட ஒரு அமைதியான நல்ல சூழ்நிலை வேணுமா என்ன?” என்று தேநீரை அருந்திக் கொண்டே உரைக்க.

“அது சரி… எப்போ மும்பைல உன் வேலையெல்லாம் முடியுது” என்றவன் விசாரித்தான்.

“இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்… டாகுமெண்ட் ரெஜிஸ்டர் பண்ணிட்டா முடிஞ்சிடும்” என்றவள் சொல்லவும்,

“அப்படினா ஓகே… முடிஞ்சதும் நம்ம இரண்டு பேரும் சென்னைக்குப் போறோம்… அம்மா அப்பாகிட்ட நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசுறோம்” என, அவள் ஆச்சரிய பார்வை பார்த்து,

“சீரியஸா சொல்றியா ஹரீஷ்… உனக்கு ஒன்னும் தயக்கம் இல்லையே… ஏன் னா நீ ஒரு மீடியா பெர்ஸ்னாலிட்டி… நாளைக்கு எங்க அம்மாவோட வாழ்க்கையால உன்னோட பேர் கூட பாதிக்கப்படலாம்…”

”எதுக்கும் நல்லா பொறுமையா யோசிச்சு சொல்லு… அதுவுமில்லாம இந்த உண்மையை உங்க அம்மா அப்பாவுக்கும் தெரியப்படுத்தணும்… ஸோ இதுல அவசரமோ கம்பல்ஷனோ எதுவும் இல்ல… கொஞ்சம் நிதானமா முடிவெடுக்கலாம்” என்றாள்.

“நிதானமாதானே… முடிவெடுக்கலாம்… நீ டீயைக் குடி” என்று அவன் அமைதியாகத் தேநீரை ஆரதீர குடித்து அந்தக் கோப்பை ஓரமாக வைத்துவிட்டு அவள் கைகளை தம் கரங்களுக்குள் எடுத்துக் கொண்டு,

“யூ ஆர் அன் அமேஜிங் பெர்ஸனாலிட்டி அமிர்தா… என்னால உன்னை விட்டு கொடுக்க முடியாது… நீ என் வாழ்க்கையில வேணும் அமிர்து… கண்டிப்பா வேணும்… அதே போல நான் உன் வாழ்க்கையில இருக்கணும்.”

“நீ தோளில சாய்ஞ்சிக்க… கட்டிப் பிடிக்க... முத்தம் கொடுக்க… இன்னும் இன்னும் எல்லாத்துக்கும்” என்றதும் அவள் இதழ்கள் விரிய புன்னகைக்க,

“ஸோ லெட்ஸ் ப்ரோசீட்… அதுக்கு அப்புறம் எது வந்தாலும் ஒன்னா ஃபேஸ் பண்ணுவோம்… சத்தியமா உணர்ச்சி வசத்தாலோ அவசரப்பட்டோ இந்த முடிவை எடுக்கல.”

”ரொம்ப தெளிவா நிதானமா யோசிச்சுதான் முடிவெடுத்தேன்…

நீ என்னை நம்பலாம் அமிர்தா… நான் எந்த மாதிரி சூழ்நிலையிலும் உன் கூட சப்போர்ட்டா நிற்பேன்… நான் மீடியா பெர்ஸன்… டிரைக்டர் இதெல்லாம் தாண்டி நான் எப்பவும் உன்னோட ஹரீஷ்… உன் உணர்வுகளை மதிக்கிற புரிஞ்சிக்கிற நீ விரும்புற ஹரீஷா இருப்பேன்” என்றவன் அவள் இலண்டனில் ஒரு முறை அவனிடம் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல் உரைக்க, அவள் நெகிழ்ந்துதான் போனாள்.

“இது… இதுதான் ரியல் பிரப்போஸல்… இதை நான் அக்ஸப்ட் பண்ணிக்குறேன்” என்றவள் அந்த நொடியே மேடையிலிருந்து இறங்கி அவனை அணைத்துக் கொள்ள,

அவனோ, “ஐய்யயோ!” என்று பதறினான்

 “என்னாச்சு ஹரீஷ்” என்று அவள் பட்டென்று விலக,

“இல்ல… என்னைக் கட்டிபிடிச்சு… நீ கன்ஸீவ் ஆகிட்டனா?” என்றவன் அதிர்ச்சியாவது போல சொல்லவும் அவள் எரிச்சலுடன்,

 “என் பிட்ட எனக்கே ஓட்றியா… பொறுக்கி ராஸ்கல்” என்றவள் அவனை மொத்தி எடுக்க,

“ஏய் போது போதும்… விடுடி முடியல” என்றவன் கத்தி கொண்டே அந்த வீடு முழுக்கவும் ஓட, அவளும் விடாமல் துரத்தினாள். அவன் மூச்சு வாங்க சோஃபாவில் சரிய அவனை அடிக்க வந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவளும் அமைதியாக அவன் தோளில் ஒண்டிக் கொண்டாள். பல நேரங்களில் அறிவை அன்பு வென்றுவிடுகிறது. மூளையை மனம் வென்றுவிடுகிறது.

அடுத்து வந்த நாட்களில் அமிர்தாவின் மனதையும் நம்பிக்கையையும் ஹரீஷ் முழுமையாகப் பெற்று விட்டிருந்தான். மும்பையின் முக்கிய இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தவர்கள் அன்று அங்கிருந்த ஒரு ஆசிரமத்திற்கு வந்திருந்தனர்.

சிகப்பு விளக்கு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் தொடங்கி… வயது முதிர்ந்த மகளிர்கள் வரை பலரும் அந்த ஆசிரமத்தில் வசித்து வந்தனர். அவ்விடத்திற்குதான் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தையும் மும்பையில் இருக்கும் அந்த வீட்டையும் எழுதி வைத்திருந்தார்அமிர்தாவின் அம்மா.

அதை நல்லபடியாக எந்தவிதப் பிரச்சனையும் இன்றி நேரடியாக சென்று சேரும் வகையில் அவர்களுக்கு ஒப்படைத்திருந்தாள் அமிர்தா. அங்கே அவள் ஹரீஷையும் அழைத்து வந்திருக்க, உடல்நலம் குன்றியிருந்த சிறுமிகள் பலரின் அவலநிலையைப் பார்த்து அவன் மனம் கலங்கிவிட்டான்.

“வாழ்க்கைல எல்லாத்தையும் விளையாட்டுத்தனமா ஜாலியா எடுத்திட்டு இருந்தேன்… ஆனா என்னவோ இந்த இடத்தை… இந்தப் பொண்ணுங்கள எல்லாம் பார்த்த பிறகு… ஒரு மாதிரி கில்டியா இருக்கு… நான் எப்பவுமே என் சந்தோஷத்தைப் பத்தி மட்டுமே கவலைபடுற சுயநலவாதியா இருந்திருக்கேனோன்னு” என்று ஹரீஷ் வார்த்தை வராமல் துக்கம் தொண்டை அடைக்கப் பேச,

“ஹரீஷ்… ரிலாக்ஸ்” என்று அமிர்தா அவனை அமைதிப்படுத்தினாள்.

அதன் பின்னர் இருவரும் அருகிலிருந்த ஒரு மனநல காப்பகத்திற்கு வந்தனர். அங்கே ஆண் நோயாளிகள் மட்டுமே இருந்தனர்.

“இங்கே எதுக்கு வந்திருக்கோம் அமிர்தா?” என்றவன் குழப்பத்துடன் கேட்க,

“ஆக்சுவலி நான் மும்பை வந்து இறங்கனதும் என் வக்கீலை மீட் பண்ண போனேன்… நான் கார்லிருந்து இறங்கி அவர் ஆஃபிஸ்குள்ள போகும் போது யாரோ தெரியல… அமி அமின்னு என் கையைப் பிடிச்சு இழுத்தாங்க.

முதல எனக்குக் கோபமா வந்தது… அப்புறம் அவனோட டிரஸ் அவன் இருந்த நிலைமை எல்லாம் பார்க்க ரொம்ப பரிதாபமா இருந்துச்சு…  அவன் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவன்னு தோனுச்சு… அதுவும் அவன் உடம்பெல்லாம் அடிப்பட்டு இருந்த காயம்… அந்த ஏரியால விசாரிச்ச போது யாருக்கும் அந்த ஆளைப் பத்தி ஒன்னும் தெரியல.”

”அப்புறம்தான் அவனைக் கூட்டிட்டு வந்து இங்கே சேர்த்தேன்… ஆனா என்னவோ அவன் என்னைக் கூப்பிட்ட விதம்… போகாதே அமி… என்னை விட்டு போகாதே அமின்னு… சொன்ன விதமெல்லாம் பார்த்து எனக்கு இப்பவும் மனசைப் பிசையுது… அதுவும் அமிங்குற பேரு…”

“அது” என்று ஏதோ சொல்ல வாயெடுத்தவள், “ப்ச்… பாவம் அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல…”

”அதான் கிளம்புறதுக்கு முன்னாடி அவனைப் பார்த்துட்டுப் போலாம்னு” என்று சொல்லிக் கொண்டே அமிர்தா அந்தக் காப்பகத்தின் உள்ளே வந்திருந்தாள்.

அறையிலிருந்த மருத்துவரிடம் அவன் நிலைமையைப் பற்றி விசாரிக்க, பெரிதாக அவனிடம் முன்னேற்றமில்லை என்றவர் கூறினார். மேலும் அவனை யார் என்னவென்று தெரியவில்லை என்றும் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதாகக் கூறினார்.

“அவருக்கு ஹிந்தி தெரியாதுன்னு நினைக்கிறேன்… ஏன் னா அவர் எனக்கிட்ட தமிழிலதான் பேசினாரு” என்றவள் மேலும் சொல்ல,

“மே பீ” என்று அந்த மருத்துவரும் ஆமோதிக்க அவரிடம் பேசி முடித்துவிட்டு வேலை செய்யும் பணியாளனிடம் விசாரித்தறிந்து சென்றனர்.

அமிர்தா சொன்ன அந்த மனிதன் தோட்டத்திலிருந்த கல் மேடையில் அமர்ந்தபடி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாள் ஹிந்தியில் அவர் வந்த நாளிலிருந்து இப்படிதான் பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பதாகக் கூறினார்.

“இவர்தான் ஹரீஷ்… பார்க்கவே பாவமா இருக்கு இல்ல.. ப்ச்” என்றவள் ஹரீஷிடம் வருத்தப்பட்டு பேச, ஹரீஷ் அவனை நோக்கினான்.

இருவரும் தூரமாக நின்றே பார்த்துவிட்டு திரும்பி நடக்க ஹரீஷிற்கு அவனை எங்கயோ எப்போதோ பார்த்தது போன்ற உணர்வு.

யோசித்து கொண்டே நடந்தான். ஆனால் நினைவு வரவில்லை. அவர்கள் புறப்பட காரில் ஏறிய போதுதான் சட்டென்று அவன் நினைவு தட்டியது.

அவன் அமராவின் கணவன் தேவா.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content