மோனிஷா நாவல்கள்
Amara - Episode 17
Quote from monisha on September 2, 2024, 5:30 PM17
தொப்புள் கொடி கூட அறுப்படாத பச்சிளம் குழந்தையின் மிருதுவான தேகத்தினைத் தொட்டு உணர்கையில் ஒரு வித சிலிர்ப்பு உணர்வு அவள் உடலெங்கும் ஓடி மறைகிறது.
ஆனால் இந்தச் சிலிர்ப்பு உணர்வை முழுவதுமாக அனுபவிப்பதற்கு முன்னரே அது காணாமல் போய் மனமெல்லாம் பதறுகிறது. வீலென்ற அந்தப் பச்சிளம் குழந்தையின் அலறலைக் கேட்டு.
கூட்டிற்குள் இருந்து தவறி விழுந்த குஞ்சின் வலிதான் அந்தக் குழந்தையின் அழுகையிலும். சிந்திக்க தெரியாத போதும் உணர முடியுமே! தாயின் ஸ்பரிசத்தைத் தேடும் தவிப்பில் எழும் அழுகை ஒலி அது. தாய்பாலிற்காக ஏங்கும் அலறல் சத்தம் அவ்விடத்ததின் நிசப்தத்தை நிர்மூலமாக்குகிறது.
சட்டென்று மரங்களும் முட்புதர்களும் மண்டியிருந்த அக்காட்டு வழிப் பாதையில் ஒரு சிறு பெண் பாய்ந்து ஓடுகிறாள். முந்தைய காட்சிக்கும் இந்தக் காட்சிக்கும் என்ன சம்பந்தமென்று புரியவில்லை.
ஆனால் அந்தச் சிறு பெண் நிற்காமல் ஓடுகிறாள். அத்தனை வேகமாக சீராக ஓடுகிறாள். அவள் ஓட்டத்தில் ஒரு அதிவேகப் பாய்ச்சல் தெரிந்தது. மிகுந்த பயிற்சி இருந்தது. அது பயிற்சியாக அல்லாமல் பழக்கமாகக் கூட இருக்கலாம்.
வியர்க்க விறுவிறுக்க எதை நோக்கியோ ஓடுகிறாள். கும்மிருட்டில் காட்சிகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவளின் ஒளிப் பொருந்திய விழிகள் ஏதோ ஒரு இலக்கை நோக்கிப் பாய்கின்றன.
எதை நோக்கி? அவளுக்குத் தெரியவில்லை.
திடீரென்று அவள் கால்கள் பின்னிக் கொண்டு சுருண்டு விழுகிறாள். கண்களில் கண்ணீர் பெருகிறது. உயிரை உருக்கும் ஒருவித கொடூரமான வலி அது.
எங்கேயோ அவள் உடல் சரிந்து கிடக்கிறது. தலையெல்லாம் பாரமாகிறது. காட்சிகள் மங்கிவிடுகின்றன. கால்களுக்கு இடையில் இரத்த பிசுபிசுப்பு. ‘ஆ அ…’ அவள் தொண்டைக் குழியிலிருந்து ஓலமாய் ஒரு ஒலி எழவும் முடியாமல் அழவும் முடியாமல் அழுத்துகிறது.
அணு அணுவாக அவள் நாடி நரம்புகளினூடே அவ்வலி உள்வாங்கப்படுகிறது. உயிரறுக்கும் வேதனையிலிருந்து மீள முடியாமல் மீள்கிறாள் அவள். அமிர்தா!
அந்தப் பயங்கர கனவிலிருந்து மீண்டு கண் விழிக்கிறாள். பதறித் துடித்துப் படுக்கையிலிருந்து மூச்சு வாங்க எழுகிறாள். அந்தக் கணமே தம் கால்களிரண்டையும் மார்போடு மடித்தபடி இறுகிப் பிணைத்துக் கொள்கிறாள்.
இன்னும் இன்னும் நெருக்கமாக தம் கால்களை இறுக்கிப் பின்னி கொள்கிறாள். அப்போதும் வலிக்கிறது. மூளையில் பல வருடங்கள் முன்பாக பதிந்த நினைவுகளின் வலியை இப்போதும் மனமும் உடலும் அதே போல உணர்கிறதெனில் அந்தக் காயம் உடலளவில் ஆறியிருந்தாலும் மனதளவில் அதே நிலையில் இரத்தமும் சதையுமாக உறைந்து கிடக்கிறதோ?
இல்லை. அப்படி இருக்காது. தான் அதிலிருந்து மீண்டுவிட்டோம்.
அவள் தனக்குதானே தீர்க்கமாகச் சொல்லிக் கொண்டாள். அந்த வலியை எண்ணிக் கொண்டே தன் நீண்ட நெடிய ஆயுட் காலங்களை அவள் கரைக்க விரும்பவில்லை.
காதலிக்கவும் காமம் கொள்ளவும் அவள் பெண்மைக்கு உரிமை உண்டு. எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ அவள் தன்னைப் பழக்கிக் கொண்டாள்.
அந்த வகையில் முதல் முதலாக அவள் உணர்வினைத் தூண்டியது ஹரீஷ் மட்டும்தான். அதனாலேயே அவனின் நிறைகுறைகளையும் கடந்து அவனைக் காதலித்தாள்.
ஆனால் விதியும் மதியும் மீண்டும் அவளது பழைய கோரமான நாட்களுக்கு இழுத்துச் செல்ல பார்ப்பது ஏன்?
பல வருடங்கள் முன்பாக அவளை அணுஅணுவாய் தின்று கொண்டிருந்த அந்தக் கனவு மீண்டும் அவளைத் தட்டிப் பார்த்ததன் காரணம் என்ன?
அவளுக்கு அவளே கேள்விகளைக் கேட்டுப் பதில்களைத் தேடினாள்.
மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டாள். நெற்றி முதல் கழுத்து புறம் முழுக்க நனைந்திருந்த வியர்வை துளிகளைத் துடைத்துவிட்டபடி அருகிலிருந்த தண்ணீர் ஜக்லிருந்து நீரைத் தொண்டையில் சரித்துவிட்டு நிமிர்ந்த போது அதே அறையின் மறுபுறத்தில் சோஃபாவில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்த தேவாவைப் பார்த்தாள்.
அவள் தேடிய காரணத்தின் பதில் … அமரா ஆல்வின் என்ற இந்த இரண்டு பெயர்களோ என்று எண்ண தோன்றியது. அப்படிதான் இருக்கும். இந்தப் பெயர்களை எங்கேயோ தன்னுடைய இளம்பிராயத்தில் கேட்டிருக்கிறோம். ஆனால் அது அவள் நினைவை எட்டிப் பிடிக்காமல் போக்குக் காட்டியது.
ஹரீஷ் அவர்களைப் பற்றிச் சொன்ன நொடியிலிருந்து தன் சிறு வயது சம்பவங்களை இதன் வழியாக அவள் கிளறிப் பார்த்ததன் விளைவுதான் மீண்டும் அந்தக் கோர கனவை அவள் கண்டதன் காரணம் என்று புரிந்தது.
ஆனால் முதல் முறை அந்தக் காட்டுப் பாதை அவள் கனவில் வருகிறது. அதுவும் அந்தப் பாதை மிகவும் பரிட்சியமானதாகத் தோன்றியது.
ஆனால் எதுவும் சரியாக கோர்க்க முடியாத நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமான காட்சிகளாகத் தொக்கி நிற்கின்றன.
அதுவும் பிறந்த குழந்தை ஒன்றை அவள் தொட்டு உணர்ந்த நினைவு வந்தது. அது யார்?
அமரா ஆல்வின் இவர்களின் பின்னணயில் தானும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று அவள் மூளை ஒரு கணிப்பை மேற்கொள்கிறது. அதற்கு சாத்தியம் இருக்கிறது. இல்லையெனில் உருவ ஒற்றுமையில் தொடங்கி பெயர் கூட அமராவுக்கும் தனக்கும் ஒற்றுமையாக இருத்தல் எப்படி சாத்தியமாக முடியும்?
அமரா ஒரு வேளை தன்னுடைய உடன் பிறந்த சகோதிரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஒற்றுமைகள் எல்லாம் சாத்தியம். ஆனால் இந்தக் கணிப்பு சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம்.
பதில் ஒரு வேளை ஆல்வினிடம் இருக்கலாம். யார் இந்த ஆல்வின்?
நட்டநடு இரவில் அவள் உறக்கத்தைத் துளைத்த இக்கேள்விக்கான விடையை உடனடியாகத் தெரிந்து கொண்டே தீர வேண்டுமென்று அவள் மூளை முரண்டு பிடிக்க, தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
அறுபது மிஸ்ட் கால்கள்.
‘ஹரீஷ் ஹரீஷ் ஹரீஷ்’ என்று அவள் அலைப்பேசிக் கதறி இருக்கிறது. ஆனால் அவன் அழைப்பை ஏற்க கூடாதென்ற கோபத்தில் சைலன்ட் மோடில் போட்டுவிட்ட பின் இப்போதுதான் எடுத்துப் பார்க்கிறாள்.
அவனும் விடாமல் அடித்து இருக்கிறான்.
அந்தப் பக்கம் அவன் நிலைமையை எண்ணுகையில் பரிதாபமாக இருந்த போதும் கோபம் குறையவில்லை.
அன்று காலை அவர்கள் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஹரீஷின் வீட்டின் உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சியுடன் வரவேற்ற அவனின் தந்தை பாலமுருகன் முதலில் பார்த்ததும் விசாரித்ததும் தேவாவைப் பற்றிதான்.
ஹரீஷ் அப்போது மும்பையில் தேவாவைப் பார்த்த சூழ்நிலையைப் பற்றி விவரிக்க, அமிர்தா அமைதியாக நின்றிருந்தாள். தேவாவோ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் அமிர்தாவின் கையைக் கெட்டியாக அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்க, கீதா அந்தக் காட்சியைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்போ நீ பட விஷயமா பெங்களூர் போகல… மும்பை போயிருக்க… அதுவும் இந்தப் பொண்ணைப் பார்க்க?” என்று பாலமுருகன் கேட்டு வைக்க, அவன் மேலே பேச முடியாமல் தடுமாறினான்.
இத்தனை நேரம் அவர்கள் உரையாடலை சாதாரணமாக வேடிக்கை பார்த்த அமிர்தாவின் புறம் கீதாவின் பார்வை திரும்பிய அதேநேரம் பாலமுருகன் மேலும்,
“ஆமா… நீ எதுக்கு இந்தப் பொண்ணைப் பார்க்க போன?” என்று கேட்டார்.
ஹரீஷ் எச்சிலை விழுங்கிக் கொண்டான். காதலிக்கிறேன் என்று சொன்னால் அவன் அப்பா அவனைத் துரத்தித் துரத்தி அடிப்பார். ஏனெனில் காதலிப்பதை ஏதோ கட்லட் சாப்பிட்டது போல சொல்லியவன் அவன்.
புலி வருகிறது கதைதான் அவனுடைய நிலைமை. இப்போது உண்மையில் புலி வந்துவிட்டது என்று சொன்னால் அதை நம்புவார்களா என்ன?
அந்தப் பயம் அவனுக்கு. அதுவும் இப்போது அமிர்தா அருகிலிருக்கும் போது அவர்கள் தன்னை அவமானப்படுத்திப் பேசினால் அது அவன் காதலைக் கூட பாதிக்கும் என்ற கவலை அவனுக்கு.
ஆனால் அமிர்தாவிற்கு அத்தகைய கவலை தயக்கமெல்லாம் இல்லை.
அவர் கேள்விக்கு அவள் பதில் சொன்னாள். “நானும் ஹரீஷும் லவ் பண்றோம்… என்னைப் பார்க்கத்தான் அவன் மும்பை வந்தான்” என்று சாதாரணமாகச் சொல்ல, பாலமுருகன் அதிர்ந்தார்.
கீதாவோ ஷாக்கடித்த உணர்வுடன், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு குழந்தை வேற இருக்குன்னு ஹரீஷ் சொன்னானேமா” என்று கேட்டுவிட்ட மறுகணமே கணவன் முகத்தைப் பார்த்து உதட்டைக் கடித்துக் கொண்டார்.
அமிர்தாவோ மிக இயல்பாக, “நான் அதைப் பத்தி எக்ஸ்ப்ளைன் பண்றேன் ம்மா” என, பாலமுருகன் மனைவியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவளோ நிலைமை புரியாமல் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக சொன்ன கதையெல்லாம் பொய்யென்று விளக்க, கீதா மாட்டிக் கொண்ட தவிப்புடன் கணவனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தார்.
பாலமுருகனின் கோபம் ஹரீஷின் புறம் திரும்புவதைக் கண்ட கீதா சட்டென்று நிலைமையைச் சமாளிக்க, “ஆமா ஏன் எல்லாம் நின்னுட்டே இருக்கீங்க… உட்காருங்க… நான் போய் காபி எடுத்துட்டு வரேன்… மெதுவா எல்லாத்தையும் பேசிக்கலாம்” என்றார்.
அமிர்தா ஹரீஷைப் பார்க்க அவன் அவளை அமர சொல்லி கண்ணசைக்க அவளும் அமர்ந்துவிட தேவாவும் அவள் அருகிலேயே அமர்ந்தான்.
ஹரீஷ் கடுப்புடன் தன் தோள் பையை இறக்கி வைத்துவிட்டு தன் தந்தையின் அருகில் அமர, அவர் தன் கையிலிருந்து செய்தித் தாளை மடித்து ஓரமாக வைத்தார்.
அவர் தேவாவைப் பற்றிய பிரச்சனையை மறந்து மகன் செய்த காரியத்தில் கடுப்பாக யோசித்தபடி இருக்க அமிர்தா அப்போது, “உங்ககிட்ட ஆல்வினோட கான்டெக்ட் இருக்கும் இல்லப்பா” என்று கேட்டாள்.
அப்போதுதான் அவர் கவனம் தேவாவின் புறம் திரும்பியது. கூடவே அமிர்தாவின் அப்பா என்ற இயல்பான விளிப்பில் அமைதி பெற்றிருந்தது.
“ஆல்வின் எனக்கு கால் பண்ணி பேசுவார்… ஆனா நான் ஆல்வினுக்கு மெயில்தான் பண்ணுவேன்… ஏன்னா ஆல்வின் எப்போ எந்த நாட்டில இருப்பான் தெரியாது… எப்பயாச்சும் இந்தியால தொடர்ச்சியாக இருக்கும் போதுதான் ஒரே கான்டெக்ட்ல இருந்து கூப்பிடுவான்... ஆனா பல நேரங்களில் வித்தியாசமான கான்டக்ட்ஸ்ல இருந்துதான் கால் வரும்”
மீண்டும் அமிர்தா, “ரீஸன்டா ஆல்வின் உங்களுக்கு கால் பண்ணாரா?” என்று கேட்க,
“இல்ல… ஒரு மாசம் முன்னாடி கடைசியா அமராவைக் கூட்டிட்டுப் போகும் போது பார்த்ததுதான்” என்றார்.
“நீங்களும் எதுவும் மெஸேஜ் போடலயா?” என்றவள் கேட்க இல்லையென்று அவர் தலையசைத்த அதேநேரம் அவளைச் சந்தேகமாகப் பார்த்து,
“ஆமா உனக்கும் இவங்க விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒரு வேளை உனக்கும் அமராவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?” என்று கேட்டார். அவளைப் பார்த்த போதே அவர் மனதில் எழுந்த கேள்வி அது.
அவளோ தன் இயல்பு தன்மை மாறாமல், “இல்லப்பா… எனக்கு அமரா ஆல்வின் இரண்டு பேரையும் தெரியாது… ஆனா ஒரு மாதிரி கியூரியாஸிட்டி… பார்க்க என்னை மாதிரியே அந்த அமி இருப்பாளாமே… அதான் தெரிஞ்சுக்கலாம்னு” என்று சொல்ல, தேவாவின் முகம் லேசாக மாறியது. அவனுக்கு அவர்கள் உரையாடல் மூலம் ஏதோ புரிவது போலிருந்தது.
அமிர்தா மேலும், “நீங்க ஆல்வினுக்கு மெயில் போடுங்கப்பா” என, அவர் அவளை ஆழ்ந்து பார்த்தார்.
தேவாவின் இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்ற எந்தக் கணிப்பிற்கும் அவர் வர முடியாத நிலையில் அவள் சொன்னது போல ஆல்வினின் மின்னஞ்சலுக்கு உடனடியாக அழைப்பு விடுக்கச் சொல்லி அருகிலிருந்த கைப்பேசி எடுத்து தகவல் அனுப்பினார்.
அதே சமயம் காபியுடன் வந்த கீதா கணவனிடம் நீட்ட அவர் முறைத்துக் கொண்டே எடுத்துக் கொள்ள, கீதா காபியை ஹரீஷிடம் நீட்டியபடி அவனை முறைத்தார்.
அதன் பின் அமிர்தா எடுத்துக் கொள்ள, தேவா மட்டும் தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தான். அமிர்தா அவனை உலுக்கி காபியை எடுத்துக் கொள்ள சொல்ல அவன் மறுவார்த்தை பேசாமல் எடுத்துக் கொண்டான்.
ஆனால் அதற்கு முன்பாக அமிர்தாவை அளவெடுப்பது போல ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொண்டான்.
காபி பருகிக் கொண்டே பாலமுருகன் தீவிரமான யோசனையில் ஆழ்ந்துவிட அமிர்தா அவரிடம், “ஏன்ப்பா… நீங்க மெஸேஜ் பண்ணா ஆல்வின் எவ்வளவு நேரத்துல ரிப்ளை செய்வாரு” என்று கேட்க,
“எப்பவும் உடனே ரிப்ளை இல்ல கால் வந்துடும்… எப்பயாச்சும் லேட்டாகும்” என்றவர் பதிலைக் கேட்ட அவளின் யோசனையோ அமராவைப் பற்றியே இருந்தது. ஆனால் ஹரீஷ் அவளை உச்சபட்ச எரிச்சலுடன் பார்த்தான்.
தங்கள் காதல் விஷயத்தை விடுத்து இவள் பாட்டுக்கு சம்பந்தமே இல்லாத அந்த ஆல்வினின் விஷயத்தில் முனைப்பாக இருக்கிறாளே என்று.
அதேநேரம் கீதா மகனிடம் சமிஞ்சையால் ஏதோ சொல்ல, “நான் பேகை எடுத்துட்டு போய் உள்ளே வைச்சுட்டு வரேன்” என்று அறைக்குள் சென்றவன் தன் கைப்பேசி எடுத்து தன் அம்மாவிற்கு அழைக்க,
“என்னடா பண்ணி வைச்சு இருக்க? ஏன் டா என்கிட்ட பொய் சொன்ன?” என்று எடுத்ததும் அவன் மீது பாய்ந்தார்.
“ம்மா சாரி மா… நான் எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்” என்றவன் ஒரு பக்கம் கெஞ்ச,
“என்னத்த சொல்ல போற இனிமே… வர்றதுக்கு முன்னாடியாவது ஒரு வார்த்தை இப்படின்னு சொல்லி இருந்தா… நான் ஏதாவது சொல்லி உங்க அப்பாவை சமாளிச்சு இருப்பேன் இல்ல” என்றவர் பதில் சொல்லும் போதே,
“என்ன சொல்லி சமாளிச்சு இருப்ப” என்று பாலமுருகன் குரல் பின்னோடு ஒலிக்க கீதா அதிர்வுடன் திரும்பினார்.
ஹரீஷ் அப்பாவின் குரல் கேட்டு, “ஐயோ அப்பா” என்று பதட்டத்தில் அலைபேசியைத் தவறவிட்டான்.
அங்கே கீதாவோ வகையாக சிக்கிக் கொண்டார்.
“அப்போ இந்தப் பொண்ணு அமிர்தாவைப் பத்தி உனக்கு முன்னாடியே தெரியும்” என்றவர் சீறலாகக் கேட்க,
“இல்லங்க அது வந்து” என்று கீதா தயங்க,
“பேசாதே… எல்லா தெரிஞ்சுக்கிட்டே என் ஃபிரண்டு பொண்ணை உன் பையனுக்குப் பார்க்கிறேன்னு சொன்னதுக்கு தலையாட்டி வைச்ச இல்ல” என்று கேட்டார்.
“இல்லங்க… அப்போ இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைச்சு”
“ஓ… இந்தப் பொண்ணு இல்லன்னா அந்தப் பொண்ணு… அந்தப் பொண்ணு இல்லனா வேற பொண்ணுன்னு உன் பையன் ஆளை மாத்திக்கிட்டே இருப்பான்… அதுக்கு நீயும் துணை போயிட்டு இருப்ப… அப்படிதானே?” என்று கோபமாகக் கேட்க, கீதாவின் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது.
அதற்கு மேல் என்ன பேசுவது? அவர் அமைதியாக நிற்க பாலமுருகன் விறுவிறுவென்று நடந்து வெளியே அமிர்தாவிடம் வந்தார்.
அவள் ஹாலில் மாட்டியிருந்த ஹரீஷின் சிறு வயது புகைப்படத்தை எழுந்து நின்று பார்த்துவிட்டு, “இந்த ஃபோட்டோல நீ ரொம்ப க்யூட்டா இருக்க ஹரீஷ்” என, அவனோ அந்தப் பாராட்டை அப்போதைக்கு இரசிக்கும் மனநிலையில் இல்லை.
பாலமுருகன் அங்கே வந்து நின்று, “ம்க்கும்” என்று தொண்டையைச் செரும,
“அமிர்தா… அப்பா” என்று ஹரீஷ் மெல்லிய குரலில் அழைத்து அவள் கவனத்தைத் திருப்பினான்.
அவள் உடனே, “ஆல்வின்கிட்ட இருந்து ரிப்ளை வந்துச்சா?” என்று பாலமுருகனைக் கேட்டு வைக்க,
‘இவ வேற நிலமை புரியாம’ என்று ஹரீஷ் எரிச்சலாக,
“வரல” என்று பதிலளித்தவருக்கு ஏனோ அவளின் அப்பா என்ற உரிமையான அழைப்பு நெருடலாக இருந்தது. இதெல்லாம் ஒருவித பாசாங்குத்தனமாகக் கூட இருக்கலாம். இன்றைய கால பெண்கள் மிகச் சாமர்த்தியசாலிகள்.
இவளிடம் கொஞ்சம் எச்சரிக்கையுடன் பேச வேண்டுமென்ற எண்ணத்துடன் அவளைப் பார்த்தவர், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று முறைப்புடன் சொல்ல, அவள் ஹரீஷைப் பார்த்தாள்.
அவனோ என்ன பேச போகிறார் என்ற படபடப்பில் இருக்க பாலமுருகன் அமர்ந்துவிட்டு அவளையும் அமர சொன்னார்.
“சொல்லுங்க பா” என்றபடி அவள் அமர்ந்து கொண்டு அவரைப் பார்க்க,
“ஹரீஷைப் பத்தி உனக்கே தெரிஞ்சிருக்கு… அதான் நீ அவனை டெஸ்ட் எல்லாம் பண்ணி செலெக்ட் பண்ணி இருக்க… ஆனாலும் எனக்கு தெரிஞ்சு அவனுக்குக் காதல் கீதல் எல்லாம் சரிப்பட்டு வராது… ஏன்? அவன் எந்த விஷயத்துலயும் நிரந்தரமா நீடிச்சது இல்ல… ஒரு இரண்டு மூணு மாசத்துக்குப் பிறகு உன் காதலையும் ப்ரேக் அப் பண்ணத்தான் போறான்… அதுக்கு இப்பவே நீ ஒதுங்கிடுறது உனக்கும் நல்லது அவனுக்கும் நல்லது… எங்களுக்கும் நல்லது” என்று ஒரே போடாகப் போட,
அமிர்தா புன்னகையுடன், “நீங்க சொல்றது ஒரு அளவு கரெக்ட்தான்… காதல் எல்லாம் அவனுக்கு செட்டாகாது… அதான் நானும் ஹரீஷும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்றவளும் பதிலுக்கு அவர் போட்ட பந்தை அவருக்கே திருப்பி போட, இடையில் மாட்டிக் கொண்டு விழித்தது என்னவோ ஹரீஷ்தான்.
பாலமுருகன் முகம் சிவக்க, “ஓ! முடிவே பண்ணிட்டீங்க… எங்க சம்மதம் எல்லாம் வேண்டாம்” என்று மகனையும் மனைவியையும் பார்த்து நக்கலாகக் கேட்க, இம்முறை ஹரீஷ் பதில் கூறினான்.
“இல்ல பா… உங்க சம்மதமும் வேணும்” என்றவன் பயபக்தியுடன் பேச,
அமிர்தா முறுவலித்து, “உங்க இரண்டு பேர் சம்மதம் இல்லாம எப்படிப்பா?” என்றாள்.
“எங்க இரண்டு பேர் சம்மதம் இருக்கட்டும்… உங்க வீட்டுல சம்மதிச்சுட்டாங்களா?” என்று அமிர்தாவைப் பார்த்து கேட்டார் பாலமுருகன்.
“அம்மாகிட்ட சொல்லிட்டேன்… அவங்க சம்மதிச்சிட்டாங்க… ஆனா என் கல்யாணத்த முன்ன நின்னு நடத்த அவங்க இப்ப இல்ல… போன மாசம்தான் கேன்ஸர்ல இறந்துட்டாங்க” என்றவள் தெரிவிக்க, பாலமுருகன் மனம் லேசாக இறங்கியது.
“ம்ம்ம்” என்று கவலையுடன் அவளைப் பார்த்துவிட்டு, “அம்மா இறந்துட்டாங்கனா… உங்க அப்பா” என்று கேட்க ஹரீஷ் தயக்கத்துடன் பார்த்தான்.
ஆனால் அவள் முகத்தில் எவ்வித தயக்கமும் இல்லை.
“எனக்கு அப்பா இல்ல” என்றவள் சொல்ல,
“இல்லனா அவரும் இறந்துட்டாரா?” என்று பாலமுருகன் அதிர்வுடன் கேட்க,
“அது தெரியாது… நான் எங்க அப்பாவைப் பார்த்தது இல்ல… எனக்கும் எங்க அம்மா அப்பா யாருன்னு சொன்னது இல்ல” என்றவள் பதில் அவர்களைக் குழப்பியது.
“அப்படினா?” என்று இடையில் வந்து கீதா கேட்க,
ஹரீஷ் இடைபுகுந்து சமாளித்தான். “அது அவங்க அம்மா அப்பாவும் பிரிஞ்சிட்டாங்க… இவ அவங்க அம்மாகிட்ட மட்டும் வளர்ந்தா” என்று சொல்லியபடி அவன் அமிர்தாவின் கையினை அழுத்தினான். இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாமென்று.
அவள் கோபத்துடன் அவன் கையை உதறிவிட்டு, “ஏன் ஹரீஷ் பொய் சொல்ற” என்று கேட்க,
“அமிர்தா ப்ளீஸ்” என்றவன் வேண்டாமென்று கெஞ்சலாக அவளிடம் தலையசைத்தான்.
அவளோ அவனைப் பொருட்படுத்தாமல் தன் அம்மாவைப் பற்றிய உண்மையை முழுவதுமாகச் சொல்லிவிட பாலமுருகன் வாயடைத்து அமர்ந்துவிட்டார். என்ன பேசுவதென்றே அவருக்குப் புரியவில்லை.
ஆனால் கீதா அதிர்ச்சியிலிருந்து மீண்டு, “முதல நீ எழுந்திருச்சு வெளியே போ” என்றார் அமிர்தாவை நேரடியாகப் பார்த்து.
“ம்மா… என்ன ம்மா” ஹரீஷ் அவரை சமாதானம் செய்ய முற்பட்டான்.
ஆனால் அவர் அவன் சொல்வதைப் பொருட்படுத்தாமல், “ஒழுங்கா எழுந்திருச்சு வெளியே போயிடு” என்று அவர் அமிர்தாவிடம் சீற்றமாகக் கூற, அமிர்தா அமைதியாக எழுந்து கொண்டாள்.
“ம்மா நான் சொல்றதைக் கேளுங்களேன்”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… இதுவரை நீ செஞ்சதெல்லாம் பொறுத்துக்கிடேன்… ஆனா இது… சை” என்று முகம் சுழித்தவர் அமிர்தாவை அருவருப்பாக பார்க்க அவள் தன்னிலை விளக்கம் எதுவும் தரவில்லை. அமைதியாக வெளியே வந்துவிட்டாள்.
“அமிர்தா ஒரு நிமிஷம் இரு” என்று அவளைப் பின்தொடர்ந்து செல்ல இருந்த ஹரீஷிடம், “நீ அந்தப் பொண்ணு பின்னாடி போன… உனக்கு அம்மா வேண்டாம்னு அர்த்தம்” என்று எமோஷனல் ப்ளேக் மெயில் செய்ய அவன் விக்கித்துப் போனான்.
“ம்மா என்ன ம்மா பேசுறீங்க” என்றவன் எவ்வளவோ அவரைச் சமாளித்து சமாதானப்படுத்த முயன்றும் ஒன்றும் பலனளிக்கவில்லை.
இதற்கிடையில் தேவாவும் அமிர்தாவுடனேயே சென்றுவிட அவர்கள் எங்கே சென்றார்கள் என்று எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. அவளின் அழைப்பு எதையும் அவள் ஏற்கவில்லை.
எல்லாமே சில விநாடிளில் நிகழ்ந்து முடிந்துவிட்டன.
ஜெயாவிடம் அவன் விசாரித்த போது அமிர்தாவைப் பற்றி அவள் தெரியாது என்று சொல்லிவிட்டாள். உண்மையில் அவளை அப்படி சொல்ல வைத்தது அமிர்தாதான்.
தான் அவளின் நீலாங்கரை பங்களாவில் தங்கியிருக்கும் விபரத்தை எக்காரணத்தைக் கொண்டும் அவனிடம் கொடுக்க வேண்டாமென்று அவள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தாள்.
அந்த பங்களாவில் பால்கனியில் நின்று கொண்டு தன் கைப்பேசியை சில நிமிடங்கள் கவலையுடன் உற்றுப் பார்த்தவள் ஹரீஷிற்கு அழைத்துப் பேசும் எண்ணத்தை விடுத்துவிட்டு அமெரிக்காவின் முக்கியமான டிடக்டிவ் ஏஜென்சிகளின் எண்களைச் சேகரித்தாள்.
அவர்கள் மூலமாக ஆல்வினைக் கண்டறிவது என்று முடிவுக்கு வந்தவளுக்கு அவரைப் பற்றிய குறைந்தபட்ச தகவலும் தெரியாதது மிகப் பெரிய சிக்கலாக இருந்தது. அவருடைய புகைப்படம் கூட இல்லை.
என்ன செய்வது என்ற குழப்பத்துடன் யோசித்துக் கொண்டே நடந்தவள் தன் அறையைக் கடந்து செல்லும் போதுதான் கவனித்தாள்.
சோஃபாவில் படுத்திருந்த தேவாவைக் காணவில்லை.
முதலில் சாதாரணமாகத் தேட ஆரம்பித்தவள் அந்த பங்களாவைச் சுற்றிலும் தேடிப் பார்த்து எங்கேயும் அவன் தென்படவில்லை என்றதுமே பதட்டமானாள்.
அவன் எங்கே சென்றிருப்பான் என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
17