மோனிஷா நாவல்கள்
Amara - Episode 18
Quote from monisha on September 3, 2024, 6:43 PM18
ஹரீஷ் தன்னுடைய கைப்பேசி மீது படுத்து அப்படியே கண்ணயர்ந்துவிட்டான். அமிர்தா அழைப்பை ஏற்பாள். குறைந்த பட்சம் தான் அனுப்பிய குறுந்தகவலுக்குப் பதிலாவது அனுப்புவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் இல்லை.
ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் கைப்பேசியின் மீதே சாய்ந்து படுத்தவன் எப்போது உறங்கிப் போனான் என்று அவனுக்கே தெரியவில்லை.
அமிர்தா வெளியேறிய அதிர்ச்சியில் எதுவும் செய்ய முடியாமல் அம்மாவின் கோபத்தையும் கையாள முடியாமல் கொஞ்சம் திக்குமுக்காடிதான் போய்விட்டான். ஆனால் அதெல்லாம் சில நிமிடங்கள்தான்.
அதற்குப் பிறகு அமிர்தா எங்கே சென்றாள் என்று தெரியாமல் போனதில் அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது.
அப்போது எழுந்த மொத்த கோபத்தையும் தன் அம்மாவின் மீதுதான் காட்டினான்.
“ஏன் ம்மா இப்படி பண்ணீங்க… சத்தியமா நீங்க இவ்வளவு அநாகரிகமா நடந்துப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல” என்று அவன் காட்டமாகக் கத்த,
“நான் அநாகரிகமா நடந்துக்கிட்டேனா?” என்றவர் அதிர்ச்சியாகப் பார்த்தார்.
“பின்ன இல்லையா… அமிர்தாவை வெளியே போன்னு அவ முகத்துக்கு நேரா… எப்படி மா உங்களால அப்படி சொல்ல முடிஞ்சது? அவ அப்படி என்ன பண்ணிட்டா…? தான் அம்மா பத்தின உண்மையை மறைக்காம சொன்னா… அது தப்பா?” என்றவன் படபடவெனப் பொரிய,
“என்ன தப்பான்னு சாதாரணமா கேட்குற… அது கேவலம்டா… சை! அவ கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அவங்க அம்மா ஒரு விபச்சாரின்னு சொல்றா” என்று கீதா பதிலுக்குச் சீறும் போதே இடைமறித்த ஹரீஷ்,
“ம்மா ப்ளீஸ்… அமிர்தாவைப் பத்தியோ அவங்க அம்மாவை பத்தியோ தப்பா பேசாதீங்க” என்று அவரைக் கைக் காட்டி நிறுத்தினான்.
“அந்தப் பொண்ணுகிட்ட தப்பு இல்லன்னா… அப்போ நான்தான் தப்பா?” என்று கேட்டபடி அவர் குரல் உடைய,
“ஆமா தப்புதான்… நீங்க நடந்துக்கிட்டது தப்பு… உங்க கருத்து தப்பு… இப்ப நீங்க அமிர்தாவைப் பத்தி தரைகுறைவா பேசுனதும் தப்பு” என்றவன் அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்.
கீதா நொறுங்கி போய்விட்டார். இதுதான் முதல் முறை ஹரீஷ் அவரை எதிர்த்துப் பேசியதும் கோபப்படுவதும். அவரால் தாங்கவே முடியவில்லை.
கண்ணீருடன் அழுது கரைந்த மனைவியை சமாதானம் செய்ய முடியாமல் பாலமுருகன்தான் திண்டாடி போனார்.
அவருக்கும் ஒரு வகையில் கீதாவின் நடவடிக்கை தவறென்று தோன்றியது. சட்டென்று அந்தப் பெண்ணை அப்படி வெளியே போ என்று சொல்லி இருக்கக் கூடாது என எண்ணிய போதும் அவர் தன் கருத்தை வெளிப்படுத்தவில்லை.
ஏற்கனவே மகனுக்கும் அம்மாவுக்கும் முட்டிக் கொண்ட நிலையில் தான் வேறு ஏதாவது கருத்துச் சொல்லி எரிகிற நெருப்பில் எண்ணெய்யை வார்க்க வேண்டாமென்று அமைதியாக இருந்துவிட்டார்.
ஆனால் பிரச்சனை அத்துடன் முடியவில்லையே. அமிர்தாவைத் தேடிவிட்டு வந்த ஹரீஷ் அவள் கிடைக்காத கடுப்பில் தன் பைக் சாவியைத் தூக்கி எறிந்துவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
என்னதான் கோபமிருந்தாலும் மகன் அப்படி சாப்பிடாமல் அறைக்குள் அடைந்திருப்பதைத் தாங்க இயலாத கீதா கதவைத் தட்டி அவனை அழைத்தார்.
பெரும்பாலும் கோபத்தைத் தாய்பாசம் வென்றுவிடுகிறது. ஆனால் ஹரீஷ் கொஞ்சமும் இறங்கிவரவில்லை. கதவையும் திறக்கவில்லை.
“எனக்கு சாப்பாடு வேண்டாம்… ப்ளீஸ் போங்க” என்றவன் மூடிய கதவு வழியாகச் சொல்ல,
“சரி சாப்பாடு வேண்டாம்… நீ கதவைத் திற… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கீதா அமைதியாகப் பேசினார்.
“நான் உங்ககிட்ட பேச விரும்பல… உங்க முகத்தைப் பார்க்கக் கூட விரும்பல” என்றவன் எடுத்தெறிந்து பேசவும் அவர் தாங்க முடியாமல் அழத் தொடங்கிவிட்டார்.
“ஏன் இப்படி எல்லாம் பேசுற ஹரீஷ்… அம்மா அழுகிறாங்க பாரு… கதவைத் திற” என்று பாலமுருகன் பலமாகக் கதவைத் தட்ட,
“எல்லாத்தையும் அவங்க செஞ்சிட்டு அழுதா சரியாயிடுமா?” என்று அவன் அப்போதும் அதே உறுதியுடன் பேசினான். கதவைத் திறக்கவில்லை.
“என்னடா பேசுற… உங்க அம்மாவை விட உனக்கு நேத்து வந்த அந்தப் பொண்ணு முக்கியமா?” என்று பாலமுருகன் சீற்றமாகக் கேட்க,
“யார் முக்கியம் யார் முக்கியமில்லங்குறது இங்கப் பிரச்சனை இல்லபா… யார் தப்பு செஞ்சாங்குறதுங்குறதுதான் இப்போ பிரச்சனை… அப்படி பார்த்தா அம்மா செஞ்சது தப்பு” என்று திட்டவட்டமாகக் கூறியவன்,
“நான் அமிர்தாவை உண்மையா லவ் பண்றேன் பா… உண்மையா லவ் பண்றேன்… உங்களுக்குக் கேட்டுச்சா… ஷி இஸ் மை லவ்… ஷி இஸ் மை லைஃப்… அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல… இதை நான் விளையாட்டுக்கு இல்ல உணரச்சிவசப்பட்டுச் சொல்றேன்னு மட்டும் நினைக்காதீங்க…”
”நான் ப்ரூஃப் பண்ணுவேன்… என் உயிரைக் கொடுத்தாச்சும் என் லவ் ட்ரூன்னு ப்ரூஃப் பண்ணிக் காட்டுவேன்” என்றவன் சொல்லி முடிக்கும் போது அறைக்குள் இருந்து ஏதோ தடால் புடாலென்று பயங்கரமாக உருளும் சத்தம் கேட்டது.
“ஹரீஷ்” என்று பாலமுருகனும்,
“ஹரீஷ் கண்ணா வேண்டாம்” என்று கீதாவும் தன் கண்ணீர் உறைந்த நிலையில் பதட்டமேற கத்த,
“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்… என்னைத் தனியா விடுங்க… நான் இப்போதைக்கு சாகற மூடுல எல்லாம் இல்ல… ஜஸ்ட் சொன்னேன்…அவ்வளவுதான்… என்னை அந்த எல்லைக்குப் போக வைச்சுடாதீங்க” என்று கிட்டத்தட்ட மிரட்டினான்.
கீதா கணவன் முகத்தைக் கவலையுடன் பார்க்க, “அதெல்லாம் ஒன்னும் செஞ்சுக்க மாட்டான்… நீ வா” என்று மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.
ஆனால் அவருக்கே கொஞ்சம் மகனை நினைத்துத் திகிலாகதான் இருந்தது. அவன் எப்போது எதைச் செய்வான் என்று யாராலுமே கணிக்க முடியாது. அதேநேரம் அவன் பிடிவாதம் பிடிப்பவனெல்லாம் இல்லை. உண்மையில் அதற்கான வாய்ப்பை அவர்கள் அவனுக்குக் கொடுத்ததே இல்லை.
அவன் கேட்ட மறுகணமே அவன் கேட்டது கிடைத்துவிடும். எதுவும் அவனுக்கு நிராகரிக்கப்பட்டதில்லை. நிராகரிப்பின் வலியை அவன் இம்மியளவு கூட உணர்ந்ததும் இல்லை.
ஒரே மகனென்று கேட்டதெல்லாம் செய்துவிட்டு திடீரென்று இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொன்னால் அவன் எப்படி கேட்பான்?
அதுவும் கீதாவின் நிராகரிப்பு அவனால் ஏற்கவே முடியாது. அம்மாவுக்கும் ஒரு படி மேலாக போய் ஒரு தோழியாக அவன் விருப்பத்தைக் கேட்டும் கேட்காமலும் கூட செய்து கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும் அம்மாவின் எதிர்ப்பையும் கோபத்தையும் அவனால் தாங்கவே முடியவில்லை.
ஒரு வகையில் கீதாவும் அதே மனநிலையில்தான் இருந்தார். இதுவரையில் கோபப்படாத, தன்னிடம் ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாத மகன் இப்படி எடுத்தெறிந்து பேசுவதையும் நடந்து கொள்வதையும் அவராலும் தாங்க முடியவில்லை. எல்லவாற்றிற்கும் காரணம் அந்த அமிர்தா என்று அவள் மீதான வெறுப்பு இன்னும் அதிகமாக வளர்ந்தது.
அன்றைய இரவும் அமைதியும் மூவருக்குமே நரகமாகத்தான் இருந்தது. கீதா அழுது கொண்டே உறங்கிவிட, ஹரீஷ் அமிர்தாவுக்கு அலைபேசியில் அடித்து ஓய்ந்து போய் அவனுமே கண்ணயர்ந்துவிட்டான்.
இதில் உறக்கம் வராத ஒரே ஜீவன் பாலமுருகன்தான். மாடியில் சிகரட்டைப் புகைத்துக் கொண்டே நடந்தவருக்கு அப்போது வீட்டு பிரச்சனையை விட ஆல்வின் பிரச்சனை பெரிதாக தெரிந்தது .
இப்போதுவரை ஆல்வினிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
தேவாவைப் போல அமராவுக்கும் ஆல்வினுக்கும் ஏதாவது நேர்ந்திருக்குமோ என்று உள்ளுர பதட்டமாக இருந்தது. ஒரு வேளை இதில் தயாவின் கைவரிசை இருக்குமோ என்று யோசித்து கொண்டிருந்தார்.
தற்சமயம் அவர் பணி ஓய்வு அடைந்துவிட்டதால் அதிகாரப்படி உடனடியாக எதுவும் செய்ய முடியாத இயலாமையில் இருந்தார். ஆனால் விடிந்ததும் ஜெயிடம் பேசி இது பற்றி விசாரிக்க வேண்டுமென்ற எண்ணிக் கொண்டே கீழே வந்தவர், ஹரீஷின் அறை ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்தார்.
அவன் தரையில் படுத்திருப்பது தெரிந்தது.
மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டார். அமிர்தாவின் மீது ஹரீஷ் கொண்ட காதல் வெறும் ஈர்ப்பு இல்லையென்று தோன்றியது. அவளை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்ற எண்ணத்தோடு தன்னறைக்குள் நுழைந்தவர் அழுது அழுது வீங்கியிருந்த மனைவியின் முகத்தை இரக்கத்துடன் பார்த்துவிட்டு மெல்ல சத்தம் வராமல் அருகில் படுத்துக் கொண்டார்.
அந்த வீடு அமைதியில் மூழ்கிய அதேநேரத்தில் ஹரீஷின் அலைபேசி அவன் காதிற்கு அருகே அலறி அவனை எழுப்பிவிட்டது. அதனை எடுத்து பார்த்தவனின் முகம் அமிர்தா என்ற பெயரைப் பார்த்த மாத்திரத்தில் பிரகாசித்தது.
“அமிர்தா”
“ஹரீஷ்… நான் உன் நம்பருக்கு என்னோட லொக்கேஷன் அனுப்பி இருக்கேன்… உடனே கிளம்பி வா… இங்க ஒரு பிரச்சனை” என்றவள் படபடவெனப் பேச, அவனையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.
“சரி வரேன்… ஆனா என்னாச்சு?” என்று அவன் கேட்க,
“தேவாவைக் காணோம்… நான் எல்லா இடத்துலயும் தேடிட்டேன்… கிடைக்கல… நீ உடனேயே கிளம்பி வா” என்றவள் அதே அவசரத்துடன் பேச ஹரீஷ் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
‘அடிப்பாவி… இங்கே இவளுக்காக நான் உயிரைக் கொடுத்து அழுதிட்டு இருக்கேன்… இவ என்னடானா எவனோ தேவா… அவனுக்காக உருகிறா… சை’ என்று கடுப்பாகப் புலம்பினாலும் தன் உடைகளைச் சரி செய்துவிட்டு, தூக்கி வீசிய சாவியை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
ஆள் அரவமே இல்லாத மாநகரச்சாலையில் மின்னல் வேகத்தில் தன் பைக்கில் பறந்தவன் முக்கால் மணி நேரத்தில் அவள் அனுப்பிய விலாசத்திற்கு வந்துவிட்டு, அவள் கைப்பேசிக்கு அழைத்தான்.
“வந்துட்டியா ஹரீஷ்” என்று அதே பதட்டத்துடன் பேசியவள்,
“நான் பங்களாவுக்கு பின்னாடி இருக்க ஸீ ஷோர்ல இருக்கேன்” என்றவள் தான் இருக்கும் இடத்தை விவரிக்க அவனுக்கு அதிர்ச்சியானது.
மொத்தமாக இருள் கவ்வியிருந்த அந்தக் கடற்கரை மணலில் அவள் மட்டும் தனியாக நடந்து சென்று கொண்டிருப்பதைப் பார்த்து அவன் பதறிப் போனான்.
“அமிர்தா” என்று அவள் அருகே ஓடிச் சென்றவன்,
“நீ தனியா எங்கே நடந்து போயிட்டு இருக்க? அதுவும் இங்கே லைட் கூட இல்ல” என்று அவன் பதட்டத்தோடும் அக்கறையோடும் கேட்க,
“ஐயோ! அதான் சொன்னேனே… அந்த தேவாவைக் காணோம்னு… அவன் இங்கே எங்கேயாவது இருக்கான்னு பார்க்கலாம்னு தேடி வந்தேன்” என்றாள்.
“அவன் தொலைஞ்சா தொலைஞ்சு போய் தொலையறான்… அதுக்கு எதுக்கு நீ இப்படி நட்டு நடுராதத்திரில நைட் ட்ரஸ் போட்டுக்கிட்டு பீச்ல நடந்து போயிட்டிருக்க… இது என்ன உங்க இலண்டன் நினைச்சியா? ஏதாவது எடாகுடமா நடந்து தொலைச்சதுனா… முதல வா வீட்டுக்குப் போகலாம்” என்றவன் எரிச்சலுடன் மொழிந்து விட்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுச் செல்ல,
“கையை விடு ஹரீஷ்… நான் ஒன்னும் உன்னை என் பாதுகாப்புக்காக வரச் சொல்லல… எனக்கு என்னைப் பார்த்துக்க தெரியும்… எனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைச் சமாளிக்கிற தைரியம் எனக்கு இருக்கு… நான் உன்னை வரச் சொன்னது தேவாவைக் காணோம்னுதான்” என,
“அவனைக் காணோம்னா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவனே ஒரு பைத்தியக்காரன்… எங்கே போய் தொலைஞ்சானோ… யாருக்குத் தெரியும்” தேவாவின் மீதிருந்த அளவில்லாதக் கடுப்பில் அவன் பேச, அவள் முகம் சுருங்கியது.
“என்ன பேசுற ஹரீஷ் நீ… பைத்தியக்காரன் அது இதுன்னு”
“பைத்தியகாரனைப் பைத்தியகாரன்னு சொல்லாம வேற என்னன்னு சொல்லுவாங்களான்”
“போதும் ஹரீஷ்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே” என்று நிறுத்தியவள் எதிர்புறம் திரும்பி நடந்து செல்ல,
“அமிர்தா நில்லு… நானும் வரேன்” என்றான்.
“நீ ஒன்னும் வர வேண்டாம்… உன் வேலையைப் பார்த்துட்டுப் போ” என்றவள் அவனைத் திரும்பி கூட பார்க்காமல் சொல்லிவிட்டு முன்னே நடக்க,
“போவா… அப்புறம் எதுக்குடி இந்த நட்டநடுராத்திரில என்னை ஃபோன் பண்ணி கூப்பிட்ட?” என்றவன் அவளைப் பின்தொடர்ந்தபடி கேட்க,
“சாரி தப்புதான்… இனிமே கூப்பிட மாட்டேன்” என்றதும் அவனுக்குக் கோபமேறியது.
“கூப்பிடாட்டி போடி” என்று சொன்னவன், “எனக்கு இதுவும் தேவை இதுக்கு மேலயும் தேவை… இவ கூப்பிட்டான்னு இந்த மிட் நைட்ல ஓடி வந்தேன் பாரு” என்று புலம்பியபடி அவன் திரும்பி நடக்கும் போது சட்டென்று கரிய நிழல் போன்ற ஒரு உருவம் அங்கே ஓரமாக நின்ற படகுக்கு அருகில் அமிர்ந்திருப்பதைப் பார்த்துக் கொஞ்சம் மிரண்டுவிட்டான்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் செல்பேசி டார்ச்சை ஒளியூட்டி பார்க்கவும்தான் அவன் தேவா என்று தெரிந்தது.
அந்த நொடியே, “அமிர்தா” என்று வேகமாக முன்னே சென்ற அவள் கையைப் பிடித்து இழுக்க,
“என் கையை விடு ஹரீஷ்” என்றவள் முரண்டினாள்.
“ப்ச்… அங்கே பாரு… தேவா” என்றவன் சுட்டிக் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தவள் மெல்ல நடந்து அருகே சென்று பார்க்க, சந்தேகமே இல்லாமல் அவன் தேவாதான். அவனைப் பார்த்ததும் பெருமூச்சுவிட்டு தலையைக் கோதி கொண்டே,
“தேங் காட்” என்றாள்.
ஆனால் தேவா இவர்கள் இருவரும் அருகில் நிற்பதை கூட உணராத நிலையில் கடலை வெறித்துக் கொண்டிருந்தான். ஒருமுறை அமியைத் தொலைத்துவிட்டு இதே போன்றொரு கடற்கரையில் அவளைத் தேடிக் கண்டறிந்த நினைவுகளில் பயணித்து அவன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.
அவன் அருகே அமர்ந்த அமரா, “தேவா” என்று அழைக்க கலங்கிய கண்களுடன் அவளைத் திரும்பி பார்த்தவன், மீண்டும் தன் தலையை அசட்டையாகக் கடலைப் பார்த்தபடி திருப்பிக் கொண்டான்.
“தேவா” என்றவள் மீண்டும் அழைக்க,
“நீங்க என் அமி இல்ல” என்றான் சலனமில்லாத விழிகளுடன்!
அமிர்தா வியப்பான அதேநேரம் பின்னோடு நின்றிருந்த ஹரீஷைப் பார்த்தாள். தேவா தெளிவாகப் பேசியதைக் கேட்டு அவனுக்குமே ஆச்சரியமாக இருந்தது. அதைவிடவும் அவள் அமி இல்லையென்று அவன் தெரிந்து கொண்டது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. அவனுக்கு அவன் கவலை.
அமிர்தாவோ ஆச்சரியத்துடன் தேவாவின் அருகில் அமர்ந்துவிட்டு, “ஓ மை காட்… தேவா… நீங்க தெளிவா பேசுறதைப் பார்த்தா… உங்களுக்கு க்யூர் ஆகிடுச்சா?” என்று கேட்க, அவன் பதிலேதும் பேசவில்லை.
“தேவா… ஏதாவது பேசுங்க” என்றவள் சொல்லவும் அவன் தலையைப் பிடித்துக் கொண்டு,
“என் அமியைக் காணோம்… நான் அவளை எங்கேன்னு போய் தேடுவான்…? என்னை வுட்டு எங்கே போனா…? எப்படி இருக்கான்னு ஒன்னும் தெரியலையே…? என் அமியைத் தொலைச்சிட்டு நான் இன்னாத்துக்கு இன்னும் உயிரோட கீறேன்… ஐயோ” என்று ஆவேசமாக தன் மனவேதனையைக் கொட்டவும் அவள் மனம் கரைந்துருகியது.
“நீங்க கவலை படாதீங்க தேவா… நாம எப்படியாவது அமியைத் தேடிக் கண்டுபிடிப்போம்” என்றவள் நம்பிக்கையாகப் பேச அவளை அவன் கண்ணீருடன் ஏறிட்டான்.
“என்னை நம்புங்க… உங்க அமி இந்த உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் நான் உங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்…இட்ஸ் எ ப்ராமிஸ்” என்றவள் திடமாக உரைக்க, அவன் அடங்கா வியப்புடன் அவளைப் பார்த்தான்.
யார் இவள்? எதற்கு தன்னிடம் இத்தனை அக்கறையாகவும் நம்பிக்கையாகவும் பேசுகிறாள். அமியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இவளுக்கு என்ன அப்படி ஒரு ஆர்வம்.
அமியின் ஜாடையில் இருப்பதால் இவள் ஒரு வேளை அமியுடன் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டு இருப்பாளோ என்று அவன் மூளைக்குள் ஓடிய கேள்விகளை சிந்தித்த வண்ணம் அவளை இமைக்காமல் பார்த்திருக்க,
“எழுந்துரீங்க… வீட்டுக்குப் போலாம்” என்று சொல்லியபடி எழுந்து கொண்டாள்.
அவனோ புரியாமல் விழிக்க, “ம்ம்ம்… வாங்க” என்று மீண்டும் அழைத்து அவனுக்குக் கைக் கொடுத்து எழுப்பிவிட, அவள் வார்த்தைக்கு மறுப்புத் தெரிவிக்காமல் அவனும் எழுந்து அவளுடன் நடந்தான்.
இதை எல்லாம் பார்த்த ஹரீஷோ பொறாமையில் வெந்து புழுங்கிக் கொண்டிருந்தான்.
‘நம்ம கிட்ட இப்படியெல்லாம் அன்பா பேசுறாளா? எவனோ ஒருத்தன்… அவன்கிட்ட அப்படியே அக்கறையா உருகுறா’ என்று மனதிற்குள் புலம்பியபடி அவன் அப்படியே நிற்க,
“ஆமா நீ ஏன் நிற்குற… வா” என்று அவனைத் திரும்பி பார்த்து அமிர்தா அழைக்க,
‘ஏதோ போனா போகுதுன்னு கூப்பிடுறா… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது இவளுக்கு’ என்று அவன் உள்ளுர பொறுமினாலும் வேறு வழியின்றி அவள் பின்னோடு வந்தான்.
அவளோ தேவாவை அறைக்கு அழைத்துச் சென்று ஏதேதோ பேசி அக்கறையாகப் படுத்துறங்க சொல்ல, ஹரீஷால் தாங்க முடியவில்லை.
‘நம்ம தூக்கத்துல கல்லைப் போட்டு அவனைத் தூங்க வைச்சுக்கிட்டு இருக்கா… இவளை என்ன பண்ணா தீரும்’ என்று பொங்கிக் கொண்டிருந்தவன்,
‘உஹும் இதுக்கு மேல இதெல்லாம் பார்த்தா என் நெஞ்சு வெடிச்சிரும்… ஒழுங்கா போயிடுவோம்’ என்றவன் வாசல்புறம் நடக்க,
“ஹரீஷ்… எங்க போற?” என்றபடி அவள் பின்னோடு வந்து நிற்க
“அதான் அந்த தேவா கிடைச்சிட்டான் இல்ல… இனிமே நான் எதுக்கு… கிளம்புறேன்” என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டு நடக்க,
“ஹரீஷ் நில்லு” என்று அமிர்தா அவன் கரத்தைப் பிடித்துத் தடுத்தாள்.
“கையை விடு” என்று அவள் செய்தது போலவே கையை உதறிக் கொண்டு அவன் முகத்தைத் திருப்ப,
“இப்போ எதுக்கு கோபம்?” என்றவள் அமைதியாகக் கேட்டாள்.
விருட்டென அவள் புறம் திரும்பியவன், “அதெப்படி… நாங்கெல்லாம் கோபப்படலாம்… கோபத்துக்கு நீங்கதான் மொத்தமா பேட்டர்ன் ரைட்ஸ் வாங்கி வைச்சிருக்கீங்க… நீங்க மட்டும்தானே கோபப்படலாம்” என,
“ப்ச்… சரி சரி… ஓவரா பண்ணாதே… இப்படி வந்து உட்காரு” என்று அவன் கரத்தைப் பிடித்து சோஃபா அருகே இழுத்து வர,
“யார் ஓவரா பண்றது… நானா இல்ல நீயா அமிர்தா… காலையில இருந்து எத்தனை கால் போட்டேன்… ஒரு காலையாச்சும் எடுத்துப் பேசுனியா… ஏன்? ஒரு சின்ன மெஸேஜ் கூட இல்ல… ஆனா நடுராத்திரில ஃபோன் போட்டு அந்த தேவாவைக் காணோம்னு பதற… ஆமா நான் தெரியாமதான் கேட்குறேன்… அவன் யாருடி உனக்கு?” என்று ஹரீஷ் பட்டாசு போல படபடவென வெடித்தடங்க அவளோ மிக நிதானமாக,
“யாருன்னு தெரிஞ்சாதான் அக்கறை காட்டணுமா என்ன?” என்று கேட்டு மிதமாகப் புன்னகைத்தாள்.
“அப்படி இல்ல… ஆனா நீ பண்றது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு”
“இதுக்கு பேர்தான் பொஸஸிவ்னஸோ” என்றவள் சிரித்துக் கொண்டே கேட்க அவன் முறைத்துக் கொண்டு நின்றான்.
“ஹரீஷ் கம்மான்… ரிலாக்ஸ்” என்று கட்டாயப்படுத்தி அவன் கையைப் பிடித்து சோஃபாவில் அமர வைத்தவள்,
“எனக்கு தேவாவோட லவ் பார்த்து ஆச்சரியமா இருக்கு தெரியுமா?” என்றதும் மீண்டும் சூடாக அவள் புறம் பார்வை திருப்பியவன்,
“அதென்ன… அவன் லவ் பெரிய இந்த லவ்… எந்த விதத்தில என் லவ் குறைஞ்சு போச்சு… இன்னும் கேட்டா அவன் லவ் விட என் லவ் இன்னும் கேரிங்… இன்னும் ஸ்ட்ராங்” என்றவன் அழுத்தமாகச் சொல்ல, அவள் இதழ்கள் பெரிதாக விரிந்தன.
“அதான் பார்த்தனே… நீ நடுராத்திரின்னு பார்க்காம அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்ததையும்… எனக்காகப் பதறனதையும்” என்றவள் சொல்ல அவன் மௌனமாக அமர்ந்திருந்தான்.
அவன் கையை தன் கரத்திற்குள் எடுத்துக் கொண்டு, “உன் லவ் எனக்கு தெரியும்டா?” என்று சொல்ல,
“அப்புறம் எதுக்குடி என் ஃபோனை எடுக்கல? எங்க அம்மா அப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் என்ன பண்ணுவேன்?” என்றவன் கோபத்துடன் சேர்த்து வருத்தமாகக் கூற,
“உங்க அம்மா என்னை வெளியே போன்னு சொன்னதுல எனக்கு எந்தக் கோபமோ வருத்தமோ இல்ல ஹரீஷ்… அது யூஸ்வல்தான்… ஆனா நீ எங்க அம்மா பத்தி உங்க அப்பாகிட்ட பொய் சொன்ன பார்த்தியா… அதான் என்னைக் கோபப்படுத்துச்சு… அந்தக் கோபத்துலதான் நான் ஃபோனை எடுக்கல” என்றாள்.
ஹரீஷ் அவள் முகத்தைப் பார்த்து, “எங்க அப்பா ஏற்கனவே எடாகுடமா பேசிட்டு இருந்தாரு… இதுல உன் அம்மா பத்தி தெரிஞ்சா இதான் சான்ஸ்னு நம்ம கல்யாணத்துக்கு முடியாதுன்னு சொல்லிடுவாரோன்னு பயந்துதான் அப்படி மாத்தி பேசுனேன்… ஆனா கடைசில நான் நினைச்சதுக்கு நேர் மாறா… எங்க அம்மா உங்கிட்ட அப்படி பேசனதுதான் எனக்குப் பெரிய ஷாக்” என்றவன் சொல்ல,
அவன் கரத்தைத் தடவிக் கொடுத்தவள், “விடு ஹரீஷ் பார்த்துக்கலாம்… கண்டிப்பா அவங்க நம்ம லவ்வைப் புரிஞ்சிக்கிட்டு சம்மதிப்பாங்க” என்று சமாதானமாகப் பேசினாள். அவள் அழகிய கண்களில் ஒளிர்ந்த நம்பிக்கையும் பூவிதழில் மிளிர்ந்த புன்னகையும் அவனை அடுத்த வார்த்தை பேச விடாமல் கட்டிப் போட்டது.
இவளைக் கையாள்வது கடினமென்று எண்ணுகையில் மிகச் சாதராணமாக அவன் கைக்குள் அடங்கிவிடுகிறாள்.
இவளை ஈஸி கோயிங் என்று அணுகும் போது எட்டி நின்று எகத்தாளம் காட்டுகிறாள். பொதுவாக இதெல்லாம் பெண்களின் குணம்தான் என்றாலும் இவளிடம் எல்லாமே கொஞ்சம் அதிகப்படியாக இருக்கிறது. ஈகோவும் சரி. அன்பும் சரி.
எப்படியாக இருந்தாலும் இவளைப் போன்றதொரு பெண்ணுக்காக உலகையே எதிர்க்கலாம் என்று அவன் மனம் அடித்துச் சொன்னது.
18