மோனிஷா நாவல்கள்
Amara - Episode 23
Quote from monisha on September 11, 2024, 6:51 PM23
‘அமரா’ என்பது அமரத்துவம் என்ற வார்த்தையின் சுருக்கம்.
அமரத்துவத்தைப் பற்றிப் பேசாத உலக இலக்கியங்களும் இதிகாசங்களும் கூட இல்லை. கடவுளர்கள் எல்லாம் அமரர்களாக நீடித்த இளமையுடன் வாழ்வதாகச் சொல்லும் மதக்கதைகளை நாம் நிறையவே கேட்டிருக்கிறோம். ஆனால் அத்தகைய அமர வாழ்க்கை என்பது சாதாரண மனிதனுக்கு சாத்தியம் இல்லையென்று இன்று வரையில் மனித இனம் நம்பிக் கொண்டிருந்தது. இன்றும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் உலகின் தலைச்சிறந்த உயிரியல் ஆய்வாளர்கள் அந்த நம்பிக்கையை உடைக்க முற்பட்டனர். அதற்கான மிகப் பெரிய ஆராய்ச்சிகள் உலக நாடுகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.
முதுமை என்பதை இயற்கை என்று சில வருடங்கள் முன்பு வரை குறிப்பிட்ட உலக சுகாதார மையம் கூட தங்கள் கருத்தை இன்று மாற்றிக் கொண்டன.
அறுபது வயதிற்கு பின்பு மனித உடலின் முக்கிய உறுப்புக்களான இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை செல்களின் சரிவுகள் (cell decline) எபிஜெனிடிக் மாறுதல் போன்ற காரணங்களால் தங்கள் செயல்பாடுகளில் பின்தங்க தொடங்கிவிடுகின்றன.
இதயத்தின் தசை நார்களில் வயது நிறமிகள் கூடுவது, வயிற்றில் ஜீரணிக்கும் அமிலத்தின் சுரப்பு குறைவது, ஞாபக சக்தி குறைவது, கண் பார்வை குன்றுவது, தோல்கள் சுருங்குவது, எலும்பு தேய்மானம் என்று வயது மூப்பினால் ஏற்படும் நோய்கள் பற்பல.
அத்தகைய நிலையில் இதயத்திற்கும் மூளையின் பாதிப்பிற்கும் தனித்தனியாகச் சிகிச்சை அளிப்பதை விட அத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் முதுமையைக் குணப்படுத்தினால் என்ன என்ற நவீன மருத்துவ உலகம் சிந்திக்கத் தொடங்கியது.
அதேநேரம் உலக சுகாதார மையமும் (WHO) 2018ம் வருடம் இண்டர்நேஷன்ல் டிஸீஸ் கோட் புக்கில்(INTERNATIONAL DISEASE CODE BOOK) முதுமையடைதலை ஒரு நோயென்று குறிப்பிட்டு அதனைக் குணப்படுத்தும் ஆய்வுகளை அங்கீகரிக்கவும் தொடங்கியது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் கூட(FDA) முதுமடைதல் இயறக்கையானது என்ற தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள முன் வந்துள்ளன. இந்தக் காரணங்களால் உலகெங்கிலும் ஆண்ட்டி ஏஜிங் ரிசர்ச் (ANTI- AGING RESEARCH) சூடுப் பிடிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, கொரியா, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகள் இந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டத் தொடங்கின.
ஆல்வினின் ஆராய்ச்சியும் இதே முதுமையடைதல் குறித்துதான்.
இந்த எண்ணத்தை ஆல்வினின் மனதில் விதைத்தவர் அவரின் சித்தப்பா அருள்ராஜ். அவர் ஒரு ஜெர்னட்டாலஜிஸ்ட் (gerontologist) வயதானவர்களுக்கு உண்டாகும் நோய்கள் குறித்த ஆய்வு செய்யும் துறை.
அருள்ராஜ் ஏனைய மருத்துவ ஆய்வாளர்கள் முதுமையைக் குணப்படுத்த கூடிய நோயாக கருதுவதற்கு முன்னதாகவே அவர் அமரத்துவம் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியிருந்தார்.
ஆனால் அவர் காலகட்டத்தில் அவருடைய ஆய்வையும் கருத்தையும் மருத்துவ உலகம் அங்கீகரிக்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. இதை ஒரு முட்டாள்தனமான கருத்தியலாகச் சொல்லி ஒதுக்கிவிட்டது.
இருப்பினும் அருள்ராஜ் தனியாளாகத் தன்னுடைய முயற்சியை மேற்கொண்டார். மேலும் தன்னுடைய ஆய்விற்கு ‘அமரா’ என்றும் பெயரிட்டார். நாளடைவில் அவருக்குத் துணையாக ஆல்வின் இந்த ஆய்வில் துணை நின்றார்.
பின்னாளில் அதுவே ஆல்வினின் இலட்சிய பயணமாக மாறியது. அடுத்த இருபது வருடம் அருள்ராஜின் கனவை ஆல்வின் இரவு பகல் பாராமல் தூக்கிக் கொண்டு சுமந்தார் என்று சொன்னால் அது மிகையில்லை.
மனித உடலில் முதுமையைத் தழுவுவதற்காகக் கண்டறியப்பட்ட காரணங்களில் சிலவை. (genomic disability, epigenetic alterations, telomere attrition, loss of proteostatsis, mitochondrial dysfunction, deregulated nutrient sensing, cellular senescence, stem cell exhaustion, altered intercellular communication).
இவற்றை எல்லாம் குணப்படுத்துவதன் மூலமாக மீண்டும் மனிதன் காலத்தின் பின்னோக்கிச் செல்லும் அசாத்திய சாதனையை மனித இனம் படைக்க முடியும். அந்த வகையில் ஆல்வின் மற்றும் அருள்ராஜின் ஆராய்ச்சிகள் மனித செல்களும் மரபணுக்களும் சில காலகட்டங்களுக்கு பிறகு மனித உடலை மெல்ல மெல்ல முதுமை நிலைக்குத் தள்ளுகிறது என்ற கருத்தை முன் வைத்து தங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினர்.
தோல்கள் சுருங்கி உயிரணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து உடலின் உறுப்புக்களின் செயல்பாட்டுக்களையும் அவை மெல்ல மெல்ல கரையான்களைப் போல அரித்துவிடுகின்றன. அதேநேரம் மூப்படைதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நடக்கிறது. சிலருக்கு தங்கள் ஆரோக்கியமான வாழ்வியல் முறைமையால் முதுமையடைதல் தாமதமாகிறது.
அதேநேரம் மரபணுக்கள் கூட மனித உடல் முதுமையடைதல் அல்லது இளமையாக இருத்தலில் அதிகம் பங்காற்றுகிறது.
அதுவும் மரபணுக்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்வியல் ஞாபகங்களைத் தனக்குள் சேகரித்து வைத்திருப்பதன் மூலமாக இளமையுடன் வாழும் காலக்கட்டத்தையும் அவைத் தீர்மானிக்கின்றன.
கடந்து இருபது வருடமாக மரபணுக்களின் வழியாக மனித இனத்தின் அமரத்துவ சாதனையை எட்டும் நோக்கில் தொடர்ந்த ஆராய்ச்சியில் ஆல்வின் இன்று கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தான்.
ஆல்வின் தன்னுடைய ஆராய்ச்சியைக் குறித்தத் தகவல்களை இணைய சந்திப்பின் வழியாக அமெரிக்க நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஐம்பது வயது நிரம்பிய ராபர்ட் வால்டனிடம் விவரித்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பெரிய திரையில் ஆல்வின் தன்னுடைய ‘அமரா’ ரிசர்ச் குறித்த ஆய்வுகளைத் தெளிவுப்படுத்த ராபர்டின் விழிகள் வியப்பில் விரிந்தன. முதலில் கொஞ்சமும் ஆர்வமே இல்லாமல்தான் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் இப்போது ஆல்வினின் விளக்கங்களையும் ‘அமரா’ஆய்வுகளின் விவரங்களையும் கேட்ட பின் ஆச்சரியத்தில் மூழ்கியவர் ஒரு அதிசயத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை எட்டினார்.
“இஸ் இட் பாஸிப்பில்?!” என்றவர் வியப்புடன் வினவ,
“எஸ்” என்று உறுதியுடன் உரைத்த ஆல்வின்,
“எலி மூலமாக எல்லாம் நான் இந்தச் சோதனையை செய்யல… என் சித்தப்பாவோட சம்மதத்தோட அவர் உடலில் இந்தத் தெரப்பியைச் செய்து பார்த்துதான்… அதன் முடிவுகளைச் சொல்றேன்” என்று மேலும் திரையில் எழுபது வயதை எட்டிய அவரின் உடலில் உள்ள செல்கள் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டினான்.
“இன்னும் ஒரு மாசத்துக்கு இந்தத் தெரப்பியை கன்டினியூ பண்ணா… அவர் முப்பது வருஷம் பின்னோக்கிப் போக முடியும்… காலத்தை வெல்ல முடியும்” என, அந்தப் பண முதலையால் நம்பவே முடியவில்லை. என்னதான் பில்லியன்களிலும் ட்ரில்லியன்களிலும் சம்பாதித்தாலும் இது போன்றதோர் அமரத்துவத்தை எட்டுவதெல்லாம் முடியாத காரியம்தான்.
ஆனால் இன்று அதனை ஒருவன் சாத்தியமாக்குகிறான் எனில் இது சாதாரண விஷயமில்லை. யாருக்குதான் நூறு வருட காலம் இளமையுடன் வாழப் பிடிக்காது. அதுவும் இது போன்றதொரு கண்டுபிடிப்பு மனித வாழ்க்கையில் ஒரு மைல் கல் சாதனைதான்.
ராபர்டின் கண்கள் பேராசையுடன் மின்னின.
“எப்படி இது சாத்தியமாச்சு?” அவர் ஆவலுடன் வினவ,
“நான் உங்களை நேர்ல சந்திச்சு பேசுவதற்கான அப்பாயின்மென்ட் நீங்க தரணும்” என்றான் தன் கண்டுபிடிப்பின் சூட்சமங்களைச் சொல்லாமல்.
ராபர்டிற்குப் புரிந்து போனது. இப்படியொரு கண்டுபிடிப்பிற்கான விலை என்பது மிகப் பெரியது.
“ஷுர்” என்றவர் ஆல்வினின் அர்த்த புன்னகையைப் பார்த்து தலையசைத்து ஆமோதிப்பாகப் புன்னகைத்தார்.
ஆல்வின் எதிரே இருந்த திரை அணைந்த சில நிமிடங்களில் அவனுடைய அலைபேசி ரீங்காரமிட்டது. ராபர்டின் காரியதரிசி ஸ்டீவ் ஆல்வினின் சந்திப்பின் நேரம் நாள் அனைத்தையும் குறித்துக் கொடுத்து அவன் பயணத்திற்கான ஏற்பாட்டையும் தானே செய்வதாகக் கூறினான்.
ஆல்வினின் முகம் வெற்றி களிப்பில் பிரகாசித்தது. இந்தக் கண்டுபிடிப்பினை அரசாங்கத்திடம் கொண்டு செல்லலாம். ஆனால் அதில் நிறைய தடைகளும் பிரச்சனைகளும் ஏற்படும். நேரடியாக ஒரு மனித உடலை வைத்தான சோதனையை எந்த அரசாங்கமும் ஏற்காது.
அப்படியே அவன் ஆய்வை அரசாங்கம் ஏற்று அங்கீகரித்தாலும் அதில் அவனுக்குப் பேரும் புகழையும் தவிர பெரிதாக ஒன்றும் இலாபம் இருக்காது. அவன் இந்த வெற்றியின் மூலம் அடைய நினைத்த இலக்கு மிகப் பெரியது.
இழந்த இளமையை மீட்க வேண்டும். மேலும் செல்வ செழிப்புடனும் புகழுடனும் வாழ வேண்டும்.
ஆல்வினின் மனம் கற்பனை குதிரையில் அதிவேகமாகப் பறந்து கொண்டிருந்தது. இந்தச் சந்தோஷத்தை உடனடியாக தன்னுடைய சித்தப்பாவுடன் பகிர்ந்து கொள்ள எண்ணியவன் அந்த பங்களாவில் தரைத்தளத்திலிருக்கும் ஆராய்ச்சிக் கூடத்திற்கு வந்தான்.
அந்த அறை முழுக்கவும் அறியவல் ஆய்வுகளுக்கான உபகரணங்கள் நிரம்பி இருந்தன. ஆல்வின் மெதுவாக நடந்து அருள்ராஜ் படுத்திருந்த கட்டிலின் அருகே சென்றார். அவரின் ஒரு பாதி முகம் அமிலம் வீச்சுப்பட்டு சிதைந்து கிடந்தது. முப்பது இரண்டு வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய ஆராய்ச்சியின் மூலமாகவே அப்படியொரு விபத்தை அவர் சந்திக்க நேர்ந்ததை ஆல்வின் நன்கறிவான்.
அந்த ஒரு விபத்தால் அவரின் ஆராய்ச்சி வாழ்க்கைத் தடம் புரண்டது. காதலி விட்டுச் சென்றாள். கனவுகள் தட்டிப் போயின.
முகத்தைச் சரி செய்யுமளவுக்கு அப்போதைக்கு அவரிடம் பணமும் இல்லை. எல்லோராலும் ஒதுக்கப்பட்ட காரணத்தால் கூனிக் குறுகிப் போன அருள்ராஜ் வெளிஉலகத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார்.
அவரின் ஆசைகளையும் கனவுகளையும் ஆல்வின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள தொடங்கினார். தன்னுடைய முகமாக ஆல்வினை உருவாக்கினார்.
முதல் முறையாக அவர் முகத்தைப் பார்ப்பவருக்கு நிச்சயம் அது அச்சத்தைத் தோற்றுவிக்கும் எனினும் இளம் வயதிலிருந்து அவருடனே வசித்து வாழ்ந்து வரும் ஆல்வினுக்குப் பழகிப் போய்விட்டது.
ஆல்வின் வாழ்க்கையில் தந்தை, தாய், குரு என்ற மூன்று ஸ்தானத்தையும் நிரப்பியவர் அவர்தான். இந்த உலகத்திலேயே ஆல்வின் நேசிக்கும் ஒரே உயிரும் கூட அவர்தான்.
ஆல்வின் அவர் படுத்திருந்த கட்டில் அருகே இருந்த கணினி திரையில் ஒளிர்ந்த எண்களைப் பார்த்தான். அந்த எண்கள் அவரின் உடல் இயக்கத்தினைக் கண்காணித்து அது சீராக இருப்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்தது.
சிதைவுற்று இருந்த ஒரு பாதி முகத்தின் செவியருகில் சென்று, “மீட்டிங் சக்ஸஸ் பா” என்றதோடு ராபர்ட்டை நேரில் சந்திக்கப் போகும் தகவலைத் தெரிவிக்க, அவர் விழிகளைத் திறக்காமலே தன் கரத்தைக் கொண்டு ஆல்வினின் கரத்தை அழுத்திப் பற்றினார். அந்தப் பற்றுதலின் மூலமாகச் சொல்லிலடங்கா ஆனந்தம் அடங்கியிருப்பதை வார்த்தைகள் ஏதுமின்றி உணர்ந்து கொண்ட ஆல்வினின் கண்கள் பனித்தன.
அதேசமயத்தில் திறக்காத அவர் கண்களிலினோரமும் கண்ணீர் கசிந்தது.
“பைனலி… வீ வொன் பா!”என்றவன் வார்த்தையில் அவர் உதடுகள் பெருமிதமாகப் புன்னகைத்தன.
அந்தப் புன்னகையைப் பூரண திருப்தியுடன் பார்த்த ஆல்வின் அவரின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு, பின்னர் மெல்ல ஊசி வழியாக அவர் இடது கரத்திலிருந்து வென் ப்லான் மூலமாக ஏதோவொரு திரவத்தை ஏற்றி,
“ரிலாக்ஸ் ரிலாக்ஸ்… டேக் ரெஸ்ட்” என்று சொல்லி அவரை அமைதிப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து அருகே இருந்த அறையின் பூட்டைத் திறந்து உள்ளே சென்றான்.
அங்கே பார்த்த காட்சியில் அத்தனை நேரம் அவர் கொண்டிருந்த சந்தோஷமெல்லாம் தொலைந்து போனது.
அமரா தம் கால்களைப் பின்னிக் கொண்டு வயிற்றைப் பிடித்தபடி வலியால் துடித்திருக்க, ஆல்வின் என்னவோ ஏதோ என்று பதறிவிட்டு,
“அமரா வாட் ஹேப்பன்?” என்ற கேள்வியுடன் ஓடி வந்து அவள் உடல் நிலையை சோதிக்க எத்தனிக்க அவள் பட்டென்று பின்னிருந்து தன் கரத்தால் அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டதோடு அல்லாமல்,
“மவனே சாவுடா…” என்று ஆவேசமாகக் கூறினாள்.
அவளின் இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராத ஆல்வின் உடனடியாக எதிர்வினையாற்ற முடியாமல் தடுமாறிய கணத்தில் தன் கரத்தில் பிடித்திருந்த உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து அவனின் தொண்டைக் குழியில் குத்த முற்பட்டாள்.
23