You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 30

Quote

30

அமராவினைக் கருத்தறித்து பிரசவித்ததிலிருந்து ஆல்வின் அமுதாவிடம் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் நடந்து கொண்டான். அமராவுக்கு ஒரு நல்ல தந்தையாக இருந்தான்.

  அமராவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அக்கம் பக்கத்தினரை அழைத்து பார்ட்டி தருவது வெளியே செல்வது என்று அந்த நாளை அவர்கள் அத்தனை சந்தோஷமாகக் கொண்டாடுவர்.

ஆனால் இது எதிலும் கலந்து கொள்ளாத ஒரு ஜீவன் இருந்தது என்றால் அவனின் சித்தப்பா. எப்போதுமே அவர் அமுதாவிடம் கோபமாகத்தான் நடந்து கொள்வார். அவள் அக்கறையாகப் பேசினாலும் விசாரித்தாலும் கூட அவர் எடுத்தெறிந்துப் பேசுவார். அமராவிற்கோ அவரைக் கண்டாலே பயம். ஓடிச் சென்று ஒளிந்து விடுவாள்.

ஆல்வின் சித்தப்பாவைத் தவிர அமுதாவிற்கு வேறொரு பிரச்சனையோ குறையோ அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இல்லை. இருவரும் நெருக்கமாகவும் அன்பாகவும் வாழ்ந்தனர்.

அமுதாவின் இந்தச் சந்தோஷமெல்லாம் பல வருடங்கள் கழித்து சாராவினை மீண்டும் சந்தித்த போது தொலைந்து போனது.

அமராவின் ஆறாவது பிறந்த நாளுக்காக மகளுக்குப் புது துணி வாங்க அமுதா ஒரு துணிக் கடைக்குச் சென்ற போதுதான் சாராவை அவள் பார்க்க நேர்ந்தது. முதலில் அமுதாவின் கண்கள் தான் காண்பது நிஜம்தானா என்று சந்தேகத்துடனே தோழியை அளவெடுத்துப் பார்த்தது. அவளுடைய உடை நடை பாவனை எல்லாம் நவீனமாக இருந்த போதும் சந்தேகமே இல்லாமல் அவள் தன் தோழிதான் என்று அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்.

அடுத்த கணம் இடம் பொருள் எல்லாம் யோசிக்காமல் அவள் தன் தோழியைச் சென்று கட்டியணைத்துக் கொண்டு, “சாரா” என்று கண்ணீர் பெருக்கினாள்.

சாராவாலும் நம்ப முடியவில்லை. இத்தனையாயிரம் மைல்கள் கடந்து மீண்டும் அவர்கள் நட்பு ஒன்றிணையும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

“அம்மு” என்று சாராவும் அவளை இறுக அணைத்துக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு பின் இருவருமே அந்த ஆனந்த அதிர்ச்சியில் ஒருவாறு மூழ்கி திளைத்து மீண்டிருந்த சமயத்தில்,

“ஆமா… கிஷோர் எங்கே… உன் கூட வந்திருக்காரா?” என்று அமுதா விசாரிக்க சாராவின் முகம் களையிழந்து போனது. பதில் சொல்ல முடியாமல் அவள் மௌனமாக நிற்க,

“என்னடி பேச மாட்டுற? எங்கே கிஷோர்? உன் கூட வரலையா? நீ மட்டும் தனியா வந்தியா? நீங்க இப்போ கனடாலா இருக்கீங்களா?” என்று அமுதா கேள்விகளைத் தொடுக்க,

“ஆபோசிட்ல ஒரு காபி ஷாப் இருக்கு… வா அங்கே போய் பேசுவோம்” என்று சாரா அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

இருவரும் காபியை வாங்கிக் கொண்டு அமர, அமுதா மீண்டும் “சரி இப்போ சொல்லு… நீ எங்கே இருக்க…? உனக்கு எத்தனை குழந்தைங்க?” என்று ஆரம்பிக்க சாரா உணர்வற்ற பார்வை பார்த்தாள்.

“என்னாச்சு? ஏன் எதுவும் பேச மாட்டுற? ஒன்பது பத்து வருஷம் கழிச்சு நம்ம திரும்பியும் சந்திக்கிறோம்… ஆனா நீ என்னவோ போல இருக்க? என்னைப் பார்த்ததுல உனக்கு சந்தோஷம் இல்லையா?”

“சந்தோஷம்தான் அம்மு… ரொம்ப சந்தோஷம்” என்றவள் அமுதாவின் கைகளை எட்டிப் பிடித்துக் கொண்டு, “உன்னை விட்டுட்டு போகாம உன் கூடவே இருந்திருந்தா என் வாழ்க்கை இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்… இந்த எட்டு வருஷத்துல நான் இப்படி யோசிக்காத நாளே இல்ல” என்றாள்.

“ஏன் இப்படி சொல்ற? அப்போ கிஷோர்?” என்று அமுதா தயக்கமாக அவள் முகம் பார்க்க,

“அவன் என்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தி மும்பை கூட்டிட்டு போய் என்னை விபாசாரம் செய்ற ஒரு பொம்பளகிட்ட காசுக்காக வித்திட்டுப் போயிட்டான்… பொறுக்கி நாய்” என்று திட்ட, அமுதா அதிர்ந்தாள்.

சாரா மேலும், “அப்புறம் என் வாழ்க்கை என்னவாகி இருக்கும்னு இதுக்கு மேல நான் உனக்கு சொல்லணுமா?” என, அமுதா தோழியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்.

“அழுறதை நிறுத்து அமுதா… நான் அழற ஸ்டேஜ் எல்லாம் தாண்டி ரொம்ப வருஷமாச்சு… enjoy the rape when its inevitable… ஸோ நான் ஒரு மாதிரி இந்தத் தொழிலுக்குப் பழகிட்டேன்… பெரிய பெரிய ஸ்டேட்டஸ் ஆளுங்களை என் க்ளைன்ட்ஸா வைச்சிருக்கேன்… பெரிய பங்களா, பி எம் டப்ல்யூனு நான் ஒரு மாதிரி செட்டிலாகிட்டேன்…”

”கனடாவுக்கு என் கிளைன்ட்காகதான் வந்தேன்… டைமாகிடுச்சு நான் கிளம்பணும்… எனக்காக அவர் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு” என்றவள் படபடவெனப் பேசிவிட்டு தன் கைக் கடிகாரத்தைப் பார்க்க அமுதா கண்ணீர் உறைந்த நிலையில் தன் தோழியை அதிர்வுடன் பார்த்தாள்.

“ஆமா நீ உன்னைப் பத்தி சொல்லவே இல்லையே… நீ எப்படி இருக்க? நீ ஆசைப்பட்ட வேலை கிடைச்சுதா?” என்று சாரா கேட்க அமுதா தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பேசினாள்.

“நான் நல்லா இருக்கேன் சாரா… என் வாழ்க்கையில் நான் நினைச்சதெல்லாமே கிடைச்சிருக்கு… வேலை, ஹஸ்பென்ட், குழந்தைன்னு… சந்தோஷமா இருக்கேன்… மன நிறைவா வாழ்றேன்” என்றவள் சொல்லிவிட்டு தன் பையிலிருந்த குடும்ப புகைப்படத்தை எடுத்துக் காண்பிக்க சாரா அதனை வாங்கி பார்த்தாள். மின்னல் கீற்றென ஒரு ஏக்க உணர்வு அவள் கண்களில் எட்டிப் பார்த்து மறைந்த அதேசமயம் அதிலிருந்து அமராவின் முகத்தைப் பார்த்து,

“ஷி இஸ் க்யூட்… ஆனா இந்த முகம்… அப்படியே என் அமிர்தாவை ஐஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கு” என்றாள்.

“அமிர்தாவா?” என்று அமுதா வினவ,

“ம்ம்ம்… எஸ்” என்றவள் அவளிடமிருந்த அமிர்தாவும் அவளும் இணைந்திருந்த புகைப்படம் ஒன்றை தன் செல்பேசியில் எடுத்து காட்டினாள்.

“ஷி இஸ் மை டாட்டர் அமிர்தா… இலண்டன்ல படிக்கிறா” என்று சொல்ல அந்தப் படத்தை வாங்கிப் பார்த்த கணம் அமுதாவின் முகம் யோசனையாக மாறியது. அந்தப் புகைப்படத்திலிருந்த அமிர்தாவிற்கு பத்து பதினைந்து வயதிருக்கலாம்.

ஆனால் அவளுக்குமே அந்த முகம் மிகவும் பரிட்சயமாகத் தோன்றியது. அமராவின் படத்தையும் அமிர்தாவின் படத்தையும் ஒன்றாக வைத்து பார்த்தவள் நினைவுகளில் வந்து போனது சென்ட்டினல் தீவு.

இதுவரையில் தன் மகளிடம் அமிர்தாவின் ஜாடை இருப்பதை அவள் உணர்ந்தே இல்லை. முதல் முறையாக அது எப்படி என்ற கேள்வி எழுந்த மறுகணம் அவள் சாராவை நிமிர்ந்து பார்த்து,

“இந்த அமிர்தா உன்னோட சொந்த மகளா சாரா” என்று கேட்க,

அவள் புன்னகைத்துவிட்டு, “இல்ல… அவ எனக்கு கடவுள் கொடுத்த கிஃப்ட்” என்றாள்.

“எப்படி?” அமுதா ஆர்வமாகக் கேட்க,

“அது ஒரு பேட் இன்ஸிடென்ட்” என்று சாரா தோள்களைக் குலுக்க,

“பரவாயில்ல சொல்லு” என்றாள்.

“ப்ச்… அதெல்லாம் பெரிய கதை… நான் நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது சொல்றேன்… எனக்கு டைமாச்சு… நான் கிளம்பணும்” என்றவள் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு,

“இது என் கார்ட்… இதுல இருக்க நம்பருக்கு நைட் கூப்பிடு… நம்ம பேசுவோம்” என்று எழுந்து கொள்ள, அவள் சாராவின் கரத்தைப் பற்றி நிறுத்தினாள்.

“அமிர்தா… அந்தமான் ட்ரைப்ல் கேர்ளா?” என்று அவள் கேட்டுவிட சாராவின் விழிகள் வியப்புடன் விரிந்தன.

“ஆமா உனக்கெப்படி?” என்றவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமுதா,

“நீ எப்படி அமிர்தாவை அங்கிருந்து கூட்டிட்டு வந்த… அதெப்படி பாஸிப்பிள் ஆச்சு?” என்று வினவ மூச்சை இழுத்து விட்டுக் கொண்டவள்,

“ஒரு கிளைன்ட்காக நான் அந்தமான் வரைக்கும் போயிருந்தேன்… அப்போ இரண்டு பேரும் போட்டிங் போயிருந்தோம்… அப்பதான் இந்தப் பொண்ணைப் பார்த்தேன்… அங்கிருந்த ஒரு மரக்கட்டையைப் பிடிச்சிட்டு மிதந்திட்டு இருந்தா… பார்க்க உயிரோட இருந்த மாதிரிதான் இருந்துச்சு.”

”கிட்ட போய் பார்த்த போது அவ உடம்பல உயிர் இருந்துச்சு… உடம்பெல்லாம் இரணமா இருந்துச்சு… நாங்கதான் தூக்கி அவளைக் காப்பாத்தி ஹாஸ்பெட்டில சேர்த்தோம்.”

அப்பதான் அவ அங்கே இருக்க ட்ரைபிள் கேர்ள்னும் யாரோ அவளை ரேப் பண்ணி இருக்காங்கனு தெரிஞ்சுது… என்னால தாங்கவே முடியல… எப்படியாவது அந்தப் பொண்ணைக் காப்பாத்தி அவங்க ஆட்களோட சேர்த்திடனும்னு நினைச்சேன்.”

”அப்பதான் இன்னொரு நியூஸ் வந்துச்சு… அங்க இருந்த ஏதோ ஒரு தீவுல இருந்த ட்ரைபிள்ஸ் எல்லாம் கடற்கொள்ளையர்கள் சுட்டுக் கொன்னுட்டாதா சொன்னாங்க… ப்ச் பாவம் அந்தப் பொண்ணு யாருமில்லாத அநாதையாகிட்டா… நம்மல மாதிரியே… அதான் அவளுக்காக நான் இருக்கணும்னு நினைச்சேன்… நான் எப்படி எல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டேனோ அப்படி எல்லாம் அவளை வளர்க்கிறேன்” என்று சாரா கண்கள் கலங்க சொல்ல அமுதா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அமர்ந்திருந்தாள்.

“ஆமா உனக்கு அந்தப் பொண்ணை முன்னாடியே தெரியுமா?” என்று சாரா கேட்கவும்,

“தெரியும்… நான் ஒருமுறை என் ப்ரொஜெக்ட்காக அந்தத் தீவுக்குப் போன போது… இந்தப் பொண்ணைப் பார்த்திருக்கேன்” என்றதோடு அவள் வேறெதுவும் சொல்லவில்லை. என்னவோ அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது.

அமராவும் அமிர்தாவும் எப்படி ஒரே மாதிரியான முக ஜாடையில் இருக்க முடியுமென்ற கேள்விக்கான பதிலை அப்போது அவள் மூளை ஆராய்ந்து கொண்டிருந்தது.

சாரா தன்னுடைய கார்டைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுவிட அமுதா வீடு வந்து சேர்ந்திருந்தாள். சமையலறை வந்து அவள் தண்ணீர் பருகிக் கொண்டிருக்கும் போது ஆல்வினின் லேபரட்டரி அறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்டது.

இதுவரையில் அந்த அறைக்குள் செல்ல அவள் அனுமதிக்கப்பட்டதில்லை. காரணம் அது அருள்ராஜின் அறையும் கூட.

ஏனோ அவரை அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காததால் அவளும் அந்த அறையில் என்ன இருக்கிறது என்று எட்டிக் கூட பார்த்ததில்லை. ஆனால் இன்று அவள் மனம் பலவிதமாக யோசித்துக் குழம்பியது.

ஆல்வினும் அவன் சித்தப்பாவும் சேர்ந்து கொண்டு அவளிடமிருந்து ஏதோ ஒரு இரகசியத்தை மறைக்கிறார்களோ என்று எப்போதும் எழும் சந்தேகம் இன்று கொஞ்சம் அதிகப்படியாக அவளுக்குள் எழுந்தது.

பூட்டியிருந்த அறை கதவை உற்றுப் பார்த்தவள் உள்ளே செல்வதற்கு வாய்ப்பில்லை என்று முடிவெடுத்துவிட்டுப் பின்புறம் சிறு துவார கண்ணாடி ஜன்னல் நினைவுக்கு வர, அது வழியாக எட்டிப் பார்க்கலாம் என்று சிறு ஏணியை வெளிப்புறமாகக் கொண்டு வந்து மேலே ஏறிப் பார்த்தாள்.

என்னதான் அப்படி உள்ளே செய்கிறார்கள் என்ற ஆவலுடன் அந்தக் கண்ணாடியின் இருபுறமும் கைகளை வைத்தபடி உள்ளே எட்டி பார்க்க, அவள் திடுக்கிட்டாள்.

தான் பார்த்த காட்சி சரிதானா என்று சிலமுறைகள் அவள் உற்றுப் பார்த்து ஊர்ஜிதம் செய்த கணம் அவள் இதயம் நின்றுவிட்டது.

அமரா மயக்க நிலையில் உள்ளே படுத்துக் கிடந்தாள். உடலெல்லாம் நடுங்கிப் போனது. காலையில் அவளையும் தன்னுடன் கடைக்கு அழைத்துச் செல்வதாக அவள் ஆல்வினிடம் கேட்ட போது அவன் வேண்டாமென்று மறுத்துவிட்டான். ஆனால் இப்போது…

You cannot copy content