மோனிஷா நாவல்கள்
Amara - Episode 32

Quote from monisha on September 23, 2024, 10:52 AM32
உயிரினங்கள் முதுமை அடையும் போது உடலை இயக்கி கொண்டிருக்கும் செல்கள் தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை நிறுத்திவிடுகின்றன.
மெல்ல மெல்ல உடலின் மற்ற செல்களும் அத்தகைய நிலையை அடையும் போது உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்படைகின்றன. இந்த நிலையை மருத்துவ ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் அதுதான் செல்லுலார் செனஸன் (cellular senescence).
அமிர்தாவின் பிரதியான அமராவின் மரபணுவில் அத்தகைய இளமை காக்கும் பிரத்யேக சிறப்பிருந்ததை ஆல்வின் முன்னமே சோதித்து அறிந்திருந்தான். ஆதலால் இந்த செலுலார் செனஸன்களை சரி செய்வதற்கு அமராவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுக்கள் கொண்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சை உதவும் என்ற ஆல்வினின் கணிப்பு அருள்ராஜின் உடலில் செலுத்திச் சோதிக்கப்பட்டதில் ஒருவாறு நிரூபமணமாகியிருந்தது. அவர்களின் சிகிச்சை வேலை செய்தது. இந்த முதுமை செல்களுக்கு அவை புத்துயிர் கொடுக்கின்றன.
இந்த இரத்தணுக்களின் சிகிச்சை கிட்டத்தட்ட தொண்ணூற்று ஒன்பது சதீவதம் மனித உடல் அடையும் முதுமை நிலையைத் தாமதப்படுத்துகிறது. அதேநேரம் முதுமை அடைந்தவர்களின் செல்களை சரி செய்து இளமையை அடைய உதவுகிறது. இது ஒரு வகையில் முதல் கட்ட வெற்றிதான்.
இந்த ஆய்வின் வெற்றியின் மூலம் முதுமைக்கு சிகிச்சை உண்டு என்பது இவ்வுலகிற்கு நிரூபிக்கப்படும். இதன் மூலம் மனித இனம் இயற்கை மரணத்தை வென்றுவிடலாம். ஒரு வகையில் இதனைச் சாகாவரம் என்று கூட சொல்லலாம்.
ஆல்வின் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தான். எத்தனை வருட கனவு. போராட்டம்.
எத்தனையோ இடையூறுகளை உடைத்தெறிந்து இந்த இறுதி நிலையை எட்டியது தன்னுடைய மிகப் பெரிய சாதனை என்று கர்வமாக எண்ணிக் கொண்ட ஆல்வின் இதே களிப்பான மனநிலையோடு அமராவின் அறைக்குச் சென்றான்.
அவள் சுவரைத் தடவியபடி மெல்ல நகர்ந்து தன் படுக்கையை நோக்கி சென்று கொண்டிருந்ததைப் பார்த்தவன்,
“என்ன டைம் தெரியுமா? இன்னுமா தூங்காம இருக்க?” என்று கேட்க,
“நேரமெல்லாம் தெரிஞ்சு இன்னா ஆவ போது… இருட்டு பகல் அல்லாம் இனிமே எனக்கு ஒன்னுதானே” என்றவள் விரக்தியுடன் சொல்லிக் கொண்டே நடந்தாள்.
அவள் தவறான திசையில் நகர்வதை கவனித்தவன் அவள் கைகளைப் பற்றி, “நான் ஹெல்ப் பண்றேன்” என,
அந்தக் கணமே அசூயையுடன் அவன் கரத்தை உதறிவிட்டு, “தேவையில்ல” என்று நடந்த போது அருகே இருந்த மேஜையில் இடித்து கொண்டாள். வலி உயிர் போனது.
“ஸ்ஸ்ஸ் ஆ” என்று உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் தன் வலியைப் பொறுத்துக் கொள்ள,
“இதுக்குதான் நான் ஹெல்ப் பண்றேன்னு சொன்னேன்” என்று ஆல்வின் உரைக்க அவள் அவரைப் பொருட்படுத்தாமல் ஒரு வழியாக அந்த மேஜை இருக்கும் இடத்தை வைத்து, கணித்து படுக்கையை அடைந்திருந்தாள்.
ஆல்வின் அமராவுக்காக எடுத்து வந்து வைத்த உணவு கிண்ணம் காலியாகி இருப்பதைப் பார்த்து,
“பரவாயில்ல அமரா… இப்ப எல்லாம் ஒழுங்கா நீயே சாப்பிட்டுடுற… ம்ம்ம்… ஒரு மாதிரி நீயே வழிக்கு வந்துட்டன்னு நினைக்கிறேன்… குட்… இப்படியே இருந்தன்னா உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என,
“தப்பு கணக்கு போடாதே… நான் சாகாம இருக்கணும்னா வேளா வேளைக்கு ஒழுங்கா கொட்டிக்கணும்… அப்போதான் நீ துடி துடிச்சு சாகிறதை நான் பார்க்க முடியாட்டியும்… கேட்கவாச்சும் முடியும்” என்றவள் சீறலாகச் சொல்ல அந்த வாரத்தைகளைக் கேட்ட நொடி அதிர்ந்த ஆல்வின் பின் பயங்கரமாகச் சிரித்தான்.
“நான் சாகப் போறேனா? நான் சாகப் போறேனா?” என்று சில முறைகள் அவளைப் பார்த்து எள்ளி நகைத்தவன்,
“நான் இந்த உலகத்தை ஆளப் பிறந்தவன்… இன்னும் கொஞ்ச நாளில் இந்த ஒட்டு மொத்த மனித இனமே என்னைத் தலைல தூக்கி வைச்சு கொண்டாட போகுது… வரலாற்றில என் பேர் பதிவாகப் போகுது… பல நூறு வருஷம் ஆனாலும் என்னையும் என் பேரையும் இந்த உலகம் மறக்காது… இன்னும் கேட்டா மனுஷங்களுக்கு அமரத்துவத்தைத் தரப் போற கடவுள் நான்” என்று கர்வமாகச் சொல்ல,
“சத்தியமா அதல்லாம் நடக்காது… நீ சாவத்தான் போற… அதுவும் கேவலமா கேடுக் கெட்டுப் புழு பூத்துச் சாகப் போற” என்றவள் அழுத்தமாகச் சொல்ல அவனுக்குப் கோபமேறியது.
பளாரென்று அவளை அறைந்துவிட்டு, “என்ன சாபம் கொடுக்குறியா? நீ உன்னை என்னனு நினைச்சிட்டு இருக்க? முதல ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கோ… நீ சாதாரண மனுஷ இனம் எல்லாம் இல்ல… நீ என் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சோதனை எலி… அவ்வளவுதான்… என்னைக்கு உன் தேவை முடிஞ்சு போகுதோ… அன்னைக்கு உன் கதையை முடிச்சிட்டுப் போயிட்டே இருப்பேன்… இனிமே உன் நிலைமை தெரிஞ்சிக்கிட்ட என்கிட்ட பேசு” என்று கடுமையாக அவளைப் பார்த்து எச்சரித்துவிட்டுச் சென்றான்.
அவள் தன் கன்னங்களைத் தேய்த்தபடி அழுதாள். என்னதான் அவள் அழவே கூடாது என்று எண்ணினாலும் சில நேரங்களில் சில வார்த்தைகள் அவள் உணர்வுகளை நொறுக்கிவிடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அழுத அழுது அவள் மனமும் உடலும் சோர்வுற மெல்ல நடந்து குளியலறைக்குச் சென்று தண்ணீரில் முகத்தைக் கழுவிவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.
அதேநேரம் அமராவிடம் கர்வமாகப் பேசிவிட்டு வெளியேறிய ஆல்வின் தன் சித்தப்பாவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைச் சோதித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான்.
படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த அருள்ராஜ், “என்ன ஆல்வின்… ரிஸல்ட் எல்லாம் பாஸிட்டிவ்தானே?” என்று எதிர்பார்ப்புடன் கேட்க,
“எஸ் சித்தப்பா… எல்லாமே பக்கா பாஸிட்டிவ்… பார்த்துக்கிட்டே இருங்க… இன்னும் நீங்க இருநூறு வருஷம் வாழப் போறீங்க” என்றவன் சொல்லி முடித்து வாயை மூடுவதற்குள் அருள்ராஜின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது. அவர் தேகம் உயிரற்று அப்படியே படுக்கையில் சாய்ந்ததைக் கண்ட ஆல்வினின் முகம் வெளிறிப் போனது.
அதிர்ச்சியுடன் அவன் திரும்பி நோக்கினான்.
இரண்டு நாள் முன்பு…
போர்ட் ப்ளேயரில் அந்தத் தனி விமானம் தரையிறங்கியது. அமிர்தா இறங்குவதற்கு முன்னதாகத் தன்னுடன் எப்போதும் பயணிக்கும் உதவியாளரிடம், “எனக்கொரு பிஸ்டல் வேணும்” என,
“மேடம்” என்றவன் யோசனையுடன் பார்க்க,
“சீக்கிரமா வேணும்” என்றவள் அழுத்தமாக உரைத்தாள்.
“எஸ் மேடம்” என்றவன் தலையசைத்தான்.
கடலோரத்திலிருந்த ரிஸார்ட் ஒன்றில் அமிர்தாவும் தேவாவும் அறை எடுத்துத் தங்கினர். அங்கே வந்ததிலிருந்து அவள் முகத்திலிருந்த அதீதமான இறுக்கத்தை கண்ட தேவா அச்சத்துடன்,
“எதனாச்சும் பிரச்சனையா மேடம்?” என்று கேட்க,
“அப்படி எல்லாம் எதுவும் இல்ல… அமராவை எப்படி தேடிக் கண்டுபிடிக்கப் போறோம்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள்.
ஆனால் அவள் சொன்னதைத் தாண்டி வேறெதோ அவள் சிந்தனையை அலைக்கழிப்பதை தேவா உணர்ந்தாலும் அதற்கு மேல் என்னவென்று கேட்டு அவளை அவன் வற்புறுத்தவில்லை.
அவர்கள் அங்கே வந்து சேர்ந்து முழுவதுமாக ஒரு நாள் முடிந்துவிட்ட நிலையில் ஆல்வின் பற்றி எவ்வித தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவளுக்கு ஜாக்ஸனிடமிருந்து அழைப்பு வந்தது.
ஆல்வினின் இணையத்தள இணைப்பை வைத்து அவர்கள் குழு ஒருவாறு அவன் வசிக்கும் இடத்தைக் கண்டறிந்துவிட்டதாகத் தெரிவித்தான்.
அவர் சேட்டிலைட் அலைபேசி வழியாகவே தன் தொலைத்தொடர்புகளை மேற்கொண்டிருப்பதாகச் சொன்னவன் அந்த இடத்தைக் குறித்த லொகேஷனையும் அவள் செல்பேசி தகவல் செயலியில் பகிர்ந்து கொண்டான். அந்தத் தகவலை வைத்து அவள் விசாரித்த வரையில் அது சென்ட்டினல் தீவுக்கு வடக்கே உள்ள ஒரு சிறுத்தீவு.
சுனாமிக்குப் பிறகு அந்தத் தீவின் நிலங்கள் பெரும்பாலும் கடலில் மூழ்கிவிட்டுச் சிறு துண்டு நிலம் மட்டுமே மீதம் இருந்தது. ஆதலால் அத்தீவினைப் பாதுக்காப்பற்ற தீவு என்று அரசாங்கம் குறிப்பிட்டு அங்கு வசித்திருந்த மனிதர்களை அப்புறப்படுத்தியது.
அங்கே செல்ல அவளுக்கு இரு வழி இருந்தது. ஒன்று வான் வழியாக செல்ல வேண்டும் அல்லது கடல் வழியாகச் செல்ல வேண்டும். முதல் வழியில் எதிராளிக்கு தான் அங்கே வருவது தெரிந்துவிடலாம். கடல் வழிதான் அவள் அங்கே இரகசியமாக இறங்குவதற்குச் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தாள்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. மீனவன் ஒருவனைப் பிடித்து, “என்னை அந்தத் தீவுக்குக் கூட்டிட்டுப் போங்க” என்று கேட்க,
“கஷ்டம் மேடம்… அந்தப் பக்கமா நிறைய சுறா மீனுங்க இருக்கும்… அங்கே போட்ல போறது ரொம்ப ரிஸ்கு… உயிரைப் பணயம் வைச்சுதான் போகணும்” என்றவன் ஏதேதோ காரணங்களை உரைத்து வெகுநேரம் பிடிக்கொடுக்காமலே பேசினான்.
இறுதியாக அவள், “எவ்வளவு பணம் வேணும்?” என்று கேட்க,
அவன் சில நிமிடங்கள் மௌனமாக யோசித்துவிட்டு, “ஐம்பதாயிரம் இருந்தா பார்க்கலாம்… அதுவும் இரண்டு பேருக்கு மேல கூட்டிட்டுப் போக முடியாது” என்று தீர்மானமாகச் சொல்ல, அமிர்தா சரியென்று சம்மதித்து அன்று இரவே அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டுக்களைச் செய்ய சொன்னாள்.
பின் தேவாவும் அவளும் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து சேர்ந்த போது அவர்கள் அறை வாசலில் ஹரீஷ் நின்றிருந்தான்.
“ஹரீஷ்… நீ எப்போ வந்த?” என்றவள் வியப்புடன் கேட்க,
“என்னவோ தப்பா நடக்கப் போற மாதிரி என் மனசு கிடந்து தவிக்குது அமிர்தா… உனக்கு ஏதாவது பிரச்சனை வந்திருமோன்னு ஒரு மாதிரி பயமா இருக்கு… என்னால இந்த டென்ஷனோட சென்னைல இருக்க முடியல… ஜெயாகிட்ட பேசிட்டு உடனே கிளம்பி வந்துட்டேன்” என,
அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்த அமிர்தா, “சார் என்ன பெரிய ஹீரோவா… என்ன பிரச்சனை வந்தாலும் அப்படியே தெலுங்கு ஹீரோ மாதிரி மாஸ் ஃபைட் பண்ணிக் காப்பாத்திடுவீங்களோ?” என்று கிண்டலாகக் கேட்க,
“நான் ஹீரோ எல்லாம் இல்லமா… நார்மல் பெர்ஸன்… நீ ஒரு பிரச்சனையில இருக்கும் போது உனக்கு சப்போர்டா உன் கூட நிற்கணும்னு நினைக்கிறேன்” என்றான்.
“நீ என் கூட நிற்கணும்னு நினைக்கிறதெல்லாம் சரிதான்… பட் நாங்க போற இடத்துல நிறைய ரிஸ்க் இருக்கு ஹரீஷ்… புரிஞ்சிக்கோ… நீ உங்க வீட்டுக்கு ஒரே பையன்… வேண்டாம்” அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்க,
“என்ன ரிஸ்கா இருந்தாலும் பரவாயில்ல… நானும் உன் கூட வரேன்” என்றவன் நேராக அவள் அறையில் வந்து அமர்ந்து கொள்ள,
அவனை யோசனையாகப் பார்த்தவள், “வாலன்டியரா வந்து சுறா மீனுக்கு இரையாகப் போறியா?” என்று கேட்டாள்.
“சுறா… முதலை எது வந்தாலும் பரவாயில்ல… நீ போற இடத்துக்கு நானும் உன் கூட வருவேன்” என்றவன் பிடிவாதமாக நிற்க, அதற்கு மேல் அவனைத் தடுக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை.
அவள் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியே வந்துவிட, “அமிர்தா” என்று அழைத்தபடி அவள் அருகில் வந்து நின்ற ஹரீஷ்,
“ஆல்வின் இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சா? எங்கே இருக்காரு?” என்று கேட்க அவள் அவனிடம் விவரத்தைத் தெரிவித்தாள்.
“நீ ஏன் இந்த விஷயத்துல தனியா ரிஸ்க் எடுக்கணும்னு நினைக்கிற… பேசாம நாம போலீஸ்கிட்ட போயிடுவோம்” என்று கூற,
“எந்த ஆதாரத்தை எடுத்துக்கிட்டு நீ போலீஸ்கிட்ட போவ? அப்படியே நீ சொல்ற மாதிரி போலீஸ்கிட்ட போனாலும் அவங்க விசாரிச்சு ஆக்ஷன் எடுக்கிறதுக்குள்ள ஆல்வின் அந்தமான் விட்டுப் பறந்துடுவான்… அவன் இங்கே இருந்து போகக் கூடாது… அமரா ப்ராஜெக்ட் பத்தி ராபர்ட்கிட்ட பேசக் கூடாது” என்றவள் தீர்க்கமாகத் தெரிவிக்க,
“இப்ப என்ன சொன்ன? அமரா ப்ரொஜெக்டா?” என்று ஹரீஷ் வினவினான்.
“ஹரீஷ் ப்ளீஸ்… என்னை இப்படியே கேள்வி கேட்டுக் கொல்லாதே… நைட் கிளம்பணும்… இந்தா பக்கத்து ரூம் கீ… அங்கே போய் ஸ்டே பண்ணிக்கோ… எனக்கு டயர்டா இருக்கு நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கப் போறேன்” என்று படுக்கை அறைக்குள் புகுந்தவள் நள்ளிரவு போலதான் வெளியே வந்தாள். அவளது நடவடிக்கையைப் பார்க்கையில் அவள் எதையோ மறைக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றிய போதும் அவளாகச் சொல்லாமல் எந்தவொரு விஷயத்தையும் அவளிடமிருந்து வாங்க முடியாது என்று அமைதியாகிவிட்டான்.
அமிர்தா தயாராகி வந்த போது தேவாவும் ஹரீஷும் சோஃபாவில் அமர்ந்து ஒன்றாகப் பேசிக் கொண்டிருக்க, “கிளம்பலாமா தேவா?” என்று கேட்டாள்.
“நான் ரெடியாதாகிறன் மேடம்” என்றவன் எழுந்து கொள்ள,
“நானும் வரேன்” என்று ஹரீஷும் எழுந்து கொண்டான்.
“அதுல ஒரு பிரச்சனை இருக்கு ஹரீஷ்… அந்த போட்காரன் இரண்டு பேர்தான் அலோவ்ட்னு சொன்னான்” என்றவள் தெரிவிக்க,
“அப்படினா நானும் தேவாவும் போய் முதல என்ன நிலவரம்னு பார்த்துட்டு வரோம்” என, அவள் முகம் கடுகடுத்தது.
“நான் வருவேன்… என்னை வரக் கூடாதுன்னு எல்லாம் நீங்க சொல்ல முடியாது” என்றவள் தீர்க்கமாகக் கூற,
“அப்போ நானும் வருவேன்” என்றான் ஹரீஷ்.
அவனைக் கடுப்பாகப் பார்த்தவள், “சரி வா” என்று விட்டு தன்னுடைய உதவியாளரைச் சந்தித்துத் துப்பாக்கியை வாங்கிக் கொண்ட அதேநேரம் தன்னுடைய விரலியையும் மடிக்கணினியையும் கொடுத்து சில விவரங்களைக் கூற, அவன் அதிர்ந்தான்.
அதன் பின் மூவரும் கடற்கரைக்குச் செல்ல, அங்கே அமைதியாக அசைந்தாடிக் கொண்டிருந்த அலைகளைக் கிழித்துக் கொண்டு ஒரு சிறிய மோட்டர் போட் வந்து நின்றது.
அவன் வந்ததுமே, “என்ன மேடம்… நான் இரண்டு பேருன்னுதானே சொன்ன? மூணு பேரெல்லாம் கஷ்டம்” என்று மறுக்க,
“மேலே ஐம்பதாயிரம் கூட வாங்கிக்கோ… எங்க மூணு பேரையும் கூட்டிட்டுப் போ” என்றாள் அமிர்தா.
“இல்ல மேடம்… அது ரொம்ப ரிஸ்க்”
“தலைக்கு ஐம்பதாயிர ரூபாய்… இதுக்கு மேலயும் நீ ஒத்துக்கலனா நான் வேற ஆளைப் பிடிப்பேன்” என்றவள் அடித்துப் பேச, ஆசை இல்லாத மனிதன் யார் இருக்கிறார்கள்?
அவன் அசட்டுத்தனமாகப் புன்னகைத்துவிட்டு, “சரிங்க மேடம்… போலாம்” என்று சம்மதித்து அவர்கள் மூவரும் ஏறிய பின் போட்டை இயக்கினான்.
கடல் காற்று அமிர்தாவின் முகத்தில் மோத அவள் நினைவுகள் சென்ட்டினல் தீவை நோக்கிப் பயணித்தது. அப்படியொரு தீவு இன்னும் பெயரளவில் இருக்கிறது எனினும் அங்கே மனித நடமாட்டங்கள் இல்லையென்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இப்போதும் அந்தத் தீவிற்குள் நுழைவதில் அச்சவுணர்வு இருக்கத்தான் செய்கிறது.
வாழ்க்கையில் நிறையவே கடந்து வந்துவிட்டதில் ஆரம்பித்த புள்ளியை அவள் மறந்துவிட்டாள்.
இப்போது அவள் மீண்டும் அந்தப் பழங்குடியினப் பெண்ணாகத் தன்னை உணர ஆரம்பித்திருந்தாள். அவள் கனவில் வந்த அந்த அடர்ந்த காட்டுப் பகுதியையும் அந்தப் பச்சிளங்குழந்தையின் அழுகுரலையும் நினைவுப்படுத்திக் கொண்டாள். அன்று அவள் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் போனது. ஆனால் இன்று அப்படியொரு சந்தர்ப்பம் அவளுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது.
அமராவைக் காப்பாற்றுவதன் மூலமாக அவள் மீண்டும் அதைச் சாதிக்க முடியலாம். அவள் மனம் இருண்டிருந்த அந்தக் கடல்களின் நிசப்தத்திற்குள் தன்னைத் தொலைத்துக் கொண்டது.
அடுத்த அரை மணிநேரத்தில் அந்த மீனவன் அத்தீவில் அவர்களைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்துவிட, அவர்கள் சுற்றும் முற்றும் தேடலாய் பார்த்தனர். அங்கே நிறைய தென்னை மரங்கள் இருந்தன.
ஆனால் மனிதர்கள் வாழ்வதற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லை. சுற்றிலும் வெளிச்சமும் இல்லை. கண்களுக்கு எட்டிய வரை வீடு என்று எதுவும் தென்படவில்லை. தூரத்தில் ஒரு இடிந்த மண்டபம் மட்டுமே தன்னந்தனியே நின்றிருந்தது.
“நாம இங்கே ஆல்வினை எப்படி தேடிக் கண்டு பிடிக்கப் போறோம்?” என்று ஹரீஷ் கேட்க, அமிர்தா தன் ஜெர்கின்னில் இருந்து இரண்டு வகை செல்பேசியினை எடுத்தாள்.
“இது சேட்டிலைட் ஃபோன்தானே?” என்று ஹரீஷ் கேட்க,
“ம்ம்ம்ம்… இந்த ஐ லேண்ட்ல சுத்தமா சிக்னல் கிடைக்காது” என்று தெரிவித்தவள் நேரடியாக செயற்கை கொள் மூலமாக இயங்கும் பிரத்தியேக அலைபேசியின் உதவியுடன் தன்னுடைய மற்றுமொரு ஆண்ட்ராய்ட் பேசியின் இணையத்தளத்தை இயக்கி அந்த இடம்தானா என்று ஊர்ஜிதப்படுத்தினாள்.
மேலும் ஜாக்ஸன் அனுப்பிய தகவல்களை வைத்து அங்கிருந்து ஆல்வினின் வசிப்பிடம் எத்தனை தூரம் என்று அறிந்துவிட்டு,
“இங்கே இருந்து சரியா டூ ஹன்டிரன்ட் மீட்டர்ஸ் தொலைவிலதான் இருக்கு அந்த இடம்” என,
“மேடம்… தூரத்துல ஒரு வீடு லைட் எரியுற மாதிரி தெரியுது” என்று தேவா சுட்டிக் காட்ட, அமிர்தாவின் முகம் பிரகாசித்தது.
“அது சரி… ஆனா அந்த வீடுதானா?” என்று ஹரீஷ் கேள்வி எழுப்ப,
“இங்கே வேற எங்கயும் வெளிச்சம் இல்ல… கண்டிப்பா அதுவாதான் இருக்கும்” என்றபடி அமிர்தா தேவா காட்டிய திசையில் நடக்க, மூவரும் ஒரு வழியாக அந்த வீட்டினை அடைந்தனர்.
அவர்கள் வந்து சேர்ந்த சாலையில் வீடுகள் வரிசையாக இருந்தன. மற்றொரு முனையில் சாலை துண்டிக்கபட்டு கடலலைகள் சீறிக் கொண்டிருந்தன. எந்த வீட்டிலும் ஆட்கள் வசிப்பதற்கான அறிகுறிகள் இல்லை.
அவர்கள் வந்தடைந்த வீடு பார்க்க கூடாரம் போல உயரமாக இருந்தது. மேலும் அங்கே சூரிய சக்தியின் மூலமாக மின்விளக்குகள் எரிவதும் தெரிந்தது.
ஹரீஷ் முன்னெச்சிரிக்கையுடன், “உள்ளே எத்தனை பேர் இருக்காங்கனு தெரியாம நாம தனியா போய் மாட்டிக்க வேண்டாம்… முதல நிலைமையைத் தெரிஞ்சிக்கலாம்” என, அவளும் அவன் சொல்வதை ஆமோதித்துவிட்டு,
“அப்படினா ஒன்னு பண்ணுங்க… இந்த வீட்டோட ஜன்னல் வழியா உள்ளே யாரு இருக்கா என்னன்னு எட்டிப் பார்த்துட்டு வாங்க” என்று அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தாள்.
இருவரும் அந்த பங்களாவின் வெளிவாயிலைச் சுற்றி நோட்டமிட்டனர்.
அனைத்து ஜன்னல்களும் திரைச்சீலைகளால் மூடப்பட்டிருந்தது. மேலிருந்த ஒரே ஒரு சிறு துவாரம் போலிருந்த ஜன்னல் மட்டும் கண்ணாடி உடைந்த நிலையில் இருந்தன.
ஹரீஷ் அதனைச் சுட்டிக் காட்டவும் தேவா மேலே பார்த்துவிட்டு, “ரொம்ப உயரத்துல இருக்கு… ஏறிப் பார்க்க ஏதாச்சும் வேணும்” என்றான்.
“என் தோள் மேல ஏறி பாரு” என்று ஹரீஷ் தெரிவிக்கவும் தேவா தயக்கத்துடன், “இல்ல நீங்க வேணா என் மேல ஏறுங்க” என,
“இப்போ அதெல்லாம் நமக்கு யோசிக்க நேரம் இல்ல… உனக்குதான் ஆல்வினை நல்லா தெரியும்… நீ ஏறி பாரு” என்று ஹரீஷ் குனிந்து அவன் தன் தோளில் ஏறிக் கொள்ள செய்தபின் மெல்ல எழுந்து நிற்க தேவா சுவரைப் பிடித்தபடி மெல்ல நிமிர்ந்து அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.
அது குளியலறை போன்று தெரிய, உள்ளே யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அவன் மூச்சை இழுத்துவிட்டு இறங்கிவிட எத்தனித்த போது உள்ளே தட்டுத்தடுமாறி ஒரு பெண் நுழைந்தாள்.
அவளிடமிருந்து ஒரு மெல்லிய விசும்பல் சத்தம் வெளிவந்தது. உயரத்திலிருந்து பார்க்கும் போது அவள் தலை மட்டும்தான் தெரிந்தபோதும் அந்தப் பெண்ணின் வடிவம் அப்படியே அமராவை ஒத்திருந்தது. அவன் உற்றுக் கவனித்தான்.
அவள் முகத்க்தை கழுவினாள். பின் திரும்பி மெல்ல நடந்து கதவருகே செல்வதற்குப் பதிலாகச் சுவரில் இடித்துக் கொண்டு, “அம்மா” என்று அலற, அவள் குரல் அவனுக்குத் துல்லியமாகக் கேட்டது.
அது அமராவேதான். ஒரு உத்வேகத்தில் அவளைக் குரல் கொடுத்து அழைக்க எண்ணியவன் சட்டென்று தன் மனதை மாற்றிக் கொண்டான். அவளோ தலையைத் தேய்த்துக் கொண்டுவிட்டுச் சுவரைத் தடவிப் பார்த்துக் கதவினைக் கண்டறிந்து வெளியேறவும் தேவாவும் ஹரீஷின் தோள் மீதிருந்து இறங்கினான்.
அவன் கண்கள் கலங்கி இருப்பதைப் பார்த்த ஹரீஷ், “அமராவைப் பார்த்தியா?” என்று கேட்க, வார்த்தை வராமல் தலையை மட்டும் அசைத்தான்.
“அமரா நல்லா இருக்கா இல்ல… நீ ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று ஹரீஷ் வினவ,
“அது… அவ தட்டுத் தடுமாறி நடந்து போனதல்லாம் பார்த்தா ஏதோ அவளுக்குக் கண்ணு தெரியாத மாறி” என்றவன் அடுத்த வார்த்தை சொல்லாமல் தவிக்க,
“நோ நோ… அப்படி எல்லாம் இருக்காது… நீ அமராவைப் பார்த்துட்ட இல்ல… கம்மான் நம்ம முதல் வேலையா அவளைக் கூட்டிட்டு வந்திருவோம்” என்று ஹரீஷ் நம்பிக்கையுடன் சொல்லும் போதே துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
அவர்கள் இருவரும் பதறியடித்து வீட்டிற்குள் நுழைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடிக்க ஹரீஷும் தேவாவும் மிரட்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு விரைந்தனர். அமிர்தா வெளியே இல்லை.
வேகமாக வீட்டிற்குள் நுழைந்து இருவரும் தேடி வந்தடைந்த இடத்தில் அமிர்தா நின்றிருப்பது தெரிய, அவள் கரத்தை அழுத்திப் பிடித்திருந்தார் ஆல்வின். இருவருக்கு இடையிலும் ஏதோ போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் இன்னதென்று கணிப்பதற்குள் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்த சில நொடிகளில் ஆல்வினின் உடல் உயிரற்று சரிந்தது.
இருவருமே அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்வுற்று நிற்கும் போது அமிர்தாவும் கீழே சரிய போக, பின்னே நின்றிருந்த ஹரீஷ் “அமிர்தா என்னாச்சு?” என்று ஓடி வந்து அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
அவள் வயிற்று பகுதியிலிருந்து குருதிப் பெருகி வெளியேற துவங்கியது.
32