மோனிஷா நாவல்கள்
Anbin Vazhiyathu - Episode 20
Quote from monisha on November 10, 2024, 8:43 PM20
Whoever is happy will make others happy
நான் மதிக்குட்டியை அவளுடைய வகுப்பில் விட்டுவிட்டுத் திரும்பி வந்த காரை எடுக்கவும் , “அன்பு” என்ற அழைப்பு கேட்டது. நிரஞ்சனாவின் குரல். நான் திரும்பிப் பார்க்க விழையவில்லை.
கார் கதவைத் திறக்கப் போக, “அன்பு” என்று மீண்டும் அழைக்க அவள் புறம் கடுப்புடன் திரும்பி, “நான்தான் உன்னை அவாயிட் பண்றேன்னு தெரியுதுல... அப்புறம் எதுக்குத் திரும்பத் திரும்ப கூப்பிட்டுட்டுப் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்ற” என்றேன்.
“இல்ல அம்மா... கொஞ்சம் உடம்பு முடியாம இருக்காங்க... அப்பாவைப் பார்க்கணும்னு விருப்பப்படுறாங்க... அதான்” என்றவள் இழுக்க,
“சொத்தெல்லாம் வேணாம்னு சொன்ன போதே நினைச்சேன்... ஏதோ பெருசா ப்ளான் பண்ணுவீங்கனு” என்று நான் எகத்தாளமாகக் கேட்கவும்,
“நீ நினைக்குற மாதிரி ப்ளான் எல்லாம் எதுவும் இல்ல... உண்மையிலேயே அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல... அப்பாவைப் பார்க்கணும் பேசணும்னு நினைக்குறாங்க... மத்தபடி இப்பவும் சொல்றேன்... எங்களுக்கு எந்தச் சொத்தும் வேண்டாம்” என்று கண்களில் கண்ணீருடன் பேசினாள்.
இவள் கண்ணீரை நம்பலாமா? நான் அவளைப் பார்வையால் அளவெடுக்க,
“அன்பு ப்ளீஸ்... அப்பாவை ஒரு தடவை வந்து அம்மாவைப் பார்க்கச் சொல்லு” என்று கெஞ்சினாள். நான் அவள் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல்,
“நீயே அவருக்கு ஃபோன் பண்ணி பேசு... இதுல என்னை ஏன் இழுத்து விடுற” என்றேன்.
“அப்பா எங்க நம்பரை பார்த்தாலே கட் பண்றாரு அன்பு” என்றவள் கவலையுடன் சொல்ல,
“நீ சொன்ன கேவலமான பொய்க்கு வேற என்ன ரியாக்ஷனை அவர்கிட்ட இருந்து நீ எதிர்பார்க்குற?” என்று கேட்டு நான் திரும்பி முறைத்தேன்.
“தப்பு எல்லாம் என் பேர்லதானே... எங்க அம்மா என்ன பண்ணாங்க அன்பு” என்றவள் இறைஞ்சுதலாகப் பேச, எனக்கு அவள் மீதும் அவள் அம்மா மீதும் துளி கூட இரக்கம் வரவில்லை.
“அப்படி பார்த்தா எங்க அம்மா என்னடி தப்பு பண்ணாங்க... அவங்களுக்கு ஏன் அவ்வளவு பெரிய தண்டனை... ஏன் எங்க அம்மா சாகுற காலத்துல அவங்க கூட மட்டும் எங்க அப்பா இருந்தாரா என்ன?” என்று அதிரடியாகக் கேட்ட நான், “என் கண்ல படாம ஒழுங்கா போயிடு” என்று திரும்பி கார் கதவைத் திறக்கப் போனேன்.
“நீ அன்புதானா? என்னால நம்ப முடியல” என்றவள் கேட்ட நொடி எனக்குத் தூக்கிவாரி போட்டது. உடனடியாக என் முகத்தில் உண்டான அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு நிதானமாகத் திரும்பிய நான்,
“வாட் டூ யூ மீன்?” என்றேன்.
“அறிவு செத்தப் பிறகு நீயும் அவனை மாதிரியே மாறிட்டியோன்னு தோணுது... அவன் கண்ணுல தெரியுற வஞ்சமும் கோபமும் உன் கண்ணுல இப்போ தெரியுது” என்றவள் தெளிவாகப் பேச, எனக்குதான் கதிகலங்கியது. ஆனால் காட்டிக் கொள்ளாமல்,
“தெரியத்தான் செய்யும்... ஏன் னா நானும் அவனும் வேற வேற இல்ல... அவன் என் ட்வின் பிரதர்... நீ அவன் பேர்ல போட்ட கேவலமான பழியை அவனால மட்டும் இல்ல... என்னாலயும் இப்பவும் மன்னிக்கவும் முடியல மறக்கவும் முடியல” என்றேன்.
“ஆமா... அவன் உன் ட்வின் பிரதர்... அதான் நீ அவன் பக்க இருக்க நியாயதத்தை மட்டும் பார்க்குற... ஆனா என் பக்கமும் எனக்கான நியாயம் இருக்கு அன்பு... அதை யாரும் புரிஞ்சிக்க மாட்டுறீங்க” என்றவள் வருத்தமாகச் சொல்ல நான் அலட்சியமாக உதட்டைச் சுழித்து,
“அதென்ன உன் பக்கம் இருக்க உனக்கான நியாயம்... சொல்லேன் கேட்போம்” என்றேன்.
அப்படி என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்று நான் கைக் கட்டி அவளை ஆழ்ந்து பார்த்தேன்.
அவள் சோர்ந்து களைத்தப் பார்வையுடன், “காலேஜ்ல... அறிவும் நானும் நல்லா ஃபிரண்டாஸாதான் பழகினோம்... ஆனா ஒரு கட்டத்துல அவனுக்கு என் மேல ஒரு மாதிரி ஈர்ப்பு உருவாகிட்டுதை என்னால கெஸ் பண்ண முடிஞ்சுது...”
”ஏன்? எனக்குமே கூட அவன் மேல கொஞ்சமா ஃபீலிங்ஸ் ஏற்பட்டதும் உண்மை” என்றவள் தயக்கத்துடன் கடைசி வாக்கியத்தை முடித்த போது நான் ஆச்சரியத்தில் விழிகள் விரிக்க அவள் தொடர்ந்தாள்.
“பட் அந்த உணர்வு எல்லாம் எங்க அம்மாவுக்கும் உங்க அப்பாவுக்கும் இருக்க ரிலேஷன் தெரிஞ்ச போது சிதைஞ்சு போச்சு... நானுமே ஷாக் ஆனேன்... அழுதேன்... எங்க அம்மாகிட்ட கோபப்பட்டேன்... சண்டைப் போட்டேன்...”
”அப்ப எங்க அம்மா சொன்னதுதான் என் மனசை ரொம்ப பாதிச்சுது... எங்க அப்பா கூட அம்மா ஒரு நாள் கூட சந்தோஷமா வாழ்ந்த்தில்லன்னாங்க... அப்பா அவ்வளவு மெண்டல் டார்ச்சர் கொடுத்திருக்காருன்னு அம்மா சொன்ன போது நான் உடைஞ்சு போயிட்டேன்... அப்பானா எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனா அவர் எங்க அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனா இல்லன்னு அவங்க சொல்லித்தான் தெரிஞ்சிக்கிட்டேன்...”
”அப்பா செத்த பிறகுதான் எங்க அம்மாவுக்கு நிம்மதியே ஏற்பட்டுச்சுன்னாங்க... அப்புறம்தான் ஆஃபிஸ்ல உங்க அப்பாவைப் பார்த்து அம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது... ஆனா எதுவும் திட்டம் போட்டு எல்லாம் நடக்கல.”
”அம்மாவோட காயப்பட்ட மனசுக்கு உங்க அப்பா ஒரு மருந்தா இருந்திருக்காரு... அது தப்பா சரியாங்குறதைத் தாண்டி எனக்கு எங்க அம்மாவோட சந்தோசம் பெருசா தெரிஞ்சுது... அதான் அவங்க கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்.”
”ஆனா உங்க வீட்டுக்கு வந்த பிறகு அறிவு என்னை ரொம்ப கேவலமா பார்த்தான்... ஒவ்வொரு தடவை அவன் என்னை க்ராஸ் பண்ணிப் போகும் போதும்... அவன் என்னைப் பார்த்தப் பார்வை இருக்கு இல்ல... ஸோ க்ரூவல்... நான் ஏதோ அவன் மனசுல ஆசையை வளர்த்துத் துரோகம் பண்ணிட்ட மாதிரி பார்த்தான்”
”பட் அறிவு யோசிச்ச மாதிரி சத்தியமா நான் திட்டம் போட்டு எல்லாம் அவன் கூடப் பழகவோ பேசவோ இல்ல... அவன் கூட ஃப்ரண்டா பழகிட்டு இருந்த போது எனக்குமே அம்மா அப்பா பழக்கத்தைப் பத்தி எதுவும் தெரியாது... அவனைப் போல நானுமே காயப்பட்ட ஒரு ஜீவன்தான்... ஆனா அதை அவன் கடைசி வரை புரிஞ்சிக்கவே இல்லை.”
”என் பக்க நியாத்தை அவன் கேட்கவும் தயாரா இல்ல... அதான் உன்கிட்ட பேசுனா அவனுக்குப் புரிய வைப்பன்னு நினைச்சேன்... ஆனா உன்னையும் என்கிட்ட பேச விடாம பண்ணிட்டான்.”
”அதுக்கு அப்புறம்தான்... நானே நேரடியா அவன்கிட்ட போய் பேசுனேன்... என்ன பிரச்சனைனு கேட்டேன்.. ஆனா அவன் என்கிட்ட பொறுமையா பேசல... இன்ஸல்ட் பண்ற மாதிரி நடந்துக்கிட்டான்... பேசுனான்... என்னால டாலரேட் பண்ண முடியல...”
”அதான் நானும் கொஞ்சம் வார்த்தையை விட்டுட்டேன்... பதிலுக்கு அவன் என்னை அடிச்சிட்டான்... அவன் அடிச்ச கோபத்துல அவனை ஏதாவது பண்ணியே ஆகணும்னுகிற வேகத்துலதான் கீழே வந்து தப்பா தப்பா அவன் பேர்ல பழியைப் போட்டேன்.”
”நான் செஞ்ச தப்போட தீவிரத்தை அப்பா அறிவை வீட்டை விட்டு அனுப்பும் போதுதான் உணர்ந்தேன்... நான் உண்மையிலேயே அதை எதிர்பார்த்துச் செய்யல...”
”எல்லாம் நான் செஞ்ச பைத்தியகாரத்தனத்தாலதான்... ஆனா அதுக்கு அப்புறமும் அந்தத் தப்பை என்னால ஒத்துக்கவும் முடியல... சரி செய்யவும் முடியல அன்பு... அப்பாகிட்ட உண்மையைச் சொன்னா எங்க அம்மாவுக்குக் கிடைச்சு இருக்க இந்த வாழ்க்கையும் சந்தோஷமும் பறிப்போயிடும்னு தோனுச்சு... அதான் நான் சொல்லவே இல்ல.”
”இப்பவும் நான் செஞ்சது தப்பு இல்லன்னு உன்கிட்ட ஆர்க்யூ பண்ணல... ஆனா நான் அப்படி செஞ்சதுல என்னோட உணர்வுகளுமே காயப்பட்டது உண்மைன்னு சொல்றேன்...”
”இப்பவும் அறிவுக்கிட்ட இதெல்லாம் சொன்னா புரிஞ்சிக்குவான்னு நான் நம்பல... ஆனா மத்தவங்க பக்கம் நின்னு யோசிக்குற உன்னால என் எமோஷன்ஸ் புரிஞ்சிக்க முடியும்னு நம்பிதான் சொல்றேன்.”
”மத்தபடி என்னை நீ மன்னிக்க எல்லாம் வேண்டாம்... எனக்கு வேண்டியது எல்லாம் அப்பா அம்மாவை வந்து பார்த்துப் பேசுனா மட்டும் போதும்.”
”ப்ளீஸ் அன்பு... அப்பாகிட்ட சொல்லு” என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொண்டுவிட்டு அவள் கிளம்பிவிட்டாள்.
சில நொடிகள் காரில் சாய்ந்தபடி யோசித்துக் கொண்டு நின்ற நான் பின் காரில் ஏறி அலுவலகத்திற்குக் கிளம்பினேன். மூளைக்குள் நிரஞ்சனா பேசியது ரிப்பீட் மோடில் ஓடிக் கொண்டே இருந்தது
ஏதோ ஒரு விதத்தில் அவள் கோபத்தை நானுமே தூண்டிவிட்டுத் தவறு செய்திருக்கிறேனோ என்று தோன்றியது.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் பல கோணங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் நம்முடைய கோணத்திலிருந்துதான் அந்தப் பிரச்சனையை அணுகிறோம். அதில் நமக்கான நியாயத்தை மட்டும்தான் நாம் பேசுகிறோம்.
மற்றவர்களின் நியாயங்களும் கோணங்களும் நமக்குத் தெரிவதும் இல்லை. தேவைப்படுவதும் இல்லை. எனக்கு என்று இல்லை. எல்லோருக்குமே அப்படித்தான். ஆனால் காரணமே இல்லாமல் தன் தவறை உணர்ந்துவிட்டவளை இன்னும் வெறுத்துக் கொண்டு இருப்பது நியாயமா என்று என் மனம் கேட்டது.
உடனடியாக என் செல்பேசி எடுத்து அப்பாவிற்கு அழைத்தேன்.
“இப்பதானே வீட்டுல இருந்து கிளம்புன... ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றவர் கேட்க,
“நிரஞ்சனா அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்... போய் பார்த்துட்டு வாங்க” என்றேன்.
“அது நான்?” என்றவர் தயங்க, “போயிட்டு வாங்க பா” என்று விட்டு அலைப்பேசியைத் துண்டித்த நான் அலுவலகத்தைச் சென்றடைந்தேன்.
இருப்பினும் அன்றைய வேலைகள் எதிலும் முழுமையாக என்னால கவனம் செலுத்த முடியவில்லை. மாலை விரைவாகவே வீட்டிற்குத் திரும்ப, அந்நேரம் அப்பா தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், “ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்ட” என்று விசாரிக்க,
“ஒரு மாதிரி மூட் அப்செட்டா இருந்தது... ஒர்க்ல கான்சென்டிரேட் பண்ண முடியல... அதான் கிளம்பி வந்துட்டேன்” என்ற நான்,
“சரி அதை விடுங்க ... நீங்க போய் பார்த்துட்டு வந்தீங்களா” என்று கேட்டேன்.
“போனேன்... ரொம்ப முடியாமதான் இருக்கா” என்றவர் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அப்பாவின் மனதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
“பேசாம அவங்கள இங்கேயே வரச் சொல்லிடுங்க... எப்பவோ நடந்த விஷயத்தை மனசுல வைச்சுக்கிட்டுக் கோபம் பகைன்னு இருக்கிறதால என்னபா கிடைக்கப் போகுது நமக்கு” என்றதும் அப்பா ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து,
“நிஜமாவா சொல்ற?” என்று கேட்டார்.
“ம்ம்ம்... ஆமா வரச் சொல்லுங்க” என்று விட்டு என் அறைக்குச் சென்றேன். மஹாவையும் மதியையும் பார்த்தப் பிறகுதான் என் மனநிலை கொஞ்சம் சரியானது.
அன்று மதியழகியையும் மஹாவையும் அழைத்துக் கொண்டு மாலிற்குச் சென்றேன். களைத்துச் சலித்துப் போகுமளவுக்குச் சுற்றினோம். சந்தோஷமாகக் களித்தோம்.
மஹாவிற்கு விதவிதமான உடைகள் மதியழகிக்கு விருப்பட்ட பொம்மைகள் என்று அனைத்தையும் வாங்கிக் கொண்டு பின் உணவகத்திற்குச் சென்று பிடித்தமான உணவுகளை வரவழைத்து உணடுவிட்டு காரில் வீட்டிற்குத் திரும்ப, மதி அப்படியே மஹாவின் மடியில் படுத்து உறங்கிவிட்டிருந்தாள்.
“இரு... நான் மதியைத் தூக்கிக்கிறேன்” என்று இறங்கி வந்து அவள் உறக்கம் கலையாமல் தோள் மீது போட்டுக் கொள்ள, மஹாவோ நாங்கள் வாங்கிய பொருட்கள் உடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாள்.
அசங்காமல் மதியழகியைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நான் நிமிரவும் மஹா என்னைப் பின்னோடு அணைத்துக் கட்டிக் கொண்டு,
“நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள். அவள் குரலிலிருந்த குதூகலம் என்னையும் தொற்றிக் கொண்டது.
“வெளியே போயிட்டுச் சுத்திட்டு வந்ததுல மேடம் ரொம்ப ஹாப்பியோ” என்று கேட்டுக் கொண்டே அவள் கையைப் பிரித்து என் புறம் இழுத்துத் தோளோடு இழுத்து அணைத்துக் கொள்ள,
“அது மட்டும் என் சந்தோஷத்துக்குக் காரணம் இல்ல” என்றவள் சொல்ல அவள் கண்களை நேராகப் பார்த்தேன். அந்த விழிகள் அழகாய் மிளிர்ந்தன.
“வேற என்ன?” என்று நான் கேட்கவும் தன் வலது கரத்தை மூடியபடி தூக்கிக் காட்டினாள்.
“என்ன இருக்கு இதுல?” என்று நான் யோசனையுடன் கேட்டதும் அவள் தன் விரல்களை ஒவ்வொன்றாகப் பிரித்தாள்.
“என்னடி இருக்கு?” என்று பொறுக்காமல் கேட்கவும் அவள் திறந்து காட்டினாள். நான் அதிசயித்து அவள் கைகளிலிருந்ததைப் பார்க்க,
“நீங்க அப்பாவா ஆகப் போறீங்க அன்பு” என்றவள் சொன்ன நொடி என் உடல் முழுவதும் சிலிர்த்தடங்கியது. அது போன்றதொரு உணர்வை நான் என் வாழ்நாளில் உணர்ந்ததே இல்லை.
அந்தக் கணமே மஹாவை வாரி அணைத்துக் கொண்டேன். முகமெல்லாம் முத்தமிட்டேன். அவள் என் மார்பில் ஒண்டிக் கொள்ள, நான் அவளை இறுக என்னுடன் பிணைத்துக் கொண்டேன். நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது.
மதியழகி என்னை அப்பா என்று விளிக்கும் போதெல்லாம் தந்தை என்ற உணர்வின் ஆழத்தையும் பொறுப்பையும் நான் உணர்ந்திருக்கிறேன்தான். ஆனால் மஹா என் உயிர் துளியைச் சுமப்பதும் அதற்கு உயிரும் உருவமும் தரப்போவதையும் எண்ணும் போதே என் உள்ளமெல்லாம் பூரிக்கிறது.
வருத்ததிலும் வேதனையிலும் கூடப் பெரிதாகக் கண்ணீர் சுரக்காத என் விழிகள் இப்போது அதீத சந்தோஷத்தில் பெருகி ஊற்றியது.
20