மோனிஷா நாவல்கள்
Anbin Vazhiyathu - Episode 7

Quote from monisha on October 16, 2024, 5:32 PM7
‘Its better to be a lion for a day than a sheep all your life’
அன்புவின் உடலை எரித்து மூன்று நாட்கள் கடந்துவிட்டன. ஆறுதல் சொன்னவர்கள் ஒவ்வொருவராகக் களைந்துச் சென்ற பின் இறுதியாக சிவா மட்டும் எஞ்சி இருந்தான்.
“உனக்கு இங்க இருக்க ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சுனா நீ வேணா நம்ம வீட்டுல வந்து இருடா” என்று சொல்ல, “வேண்டாம் சிவா” என்று நான் மறுத்துவிட்டேன்.
அவனும் கிளம்பிப் போகத் தயாராக இருந்தான். ஆனால் நான் அவனை என்னுடன் தங்கி இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
ஒரு வகையில் மஹாவுடனான தனிமையைத் தவிர்ப்பதற்காகவே அவனை இருக்கச் சொன்னேன். எல்லாவற்றையும் அவசரக் கெதியில் செய்து முடித்தாகிவிட்டது. ஆனால் அதை எல்லாம் இப்போது சரியான முறையில் சீர்ப்படுத்த வேண்டும்.
மஹாவும் நானும் பரஸ்பரம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறவர்கள். அப்படியானவளிடம் எப்படி பொய்யாக நடிக்க முடியும்? அதெப்படி சாத்தியமாகும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் சாத்தியப்படுத்தி ஆக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல், ‘அன்பப்பா அன்பப்பா’ என்று என்னுடன் ஆசையாகவும் அன்பாகவும் பழகும் அந்தக் குட்டிப் பெண்.
குழந்தைகளுடன் பழகுவதிலும் கூட எனக்குப் பெரிதாகப் பரிட்சயம் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எப்படி இவர்கள் இருவரை கையாளப் போகிறேன் என்று பயமாக இருந்தது. இரண்டு நாட்கள் எப்படியோ சிவாவை வீட்டில் வைத்து ஓட்டிவிட்டேன். ஆனால் இன்று அவன் அம்மா ஊரில் இருந்து வருவதாகச் சொல்லி அவனும் கிளம்பிவிட்டான்.
படுக்கை அறையில் நானும் அன்புவும் தனித்தனியாக இருக்கும் ஒற்றைக் கட்டில்களில் படுத்துக் கொள்வோம். நேற்று வரை சிவா என்னுடன் இருந்ததால் நான் அவனுடன் ஹாலில் படுத்துக் கொண்டேன். மஹாவும் பாப்பாவும் அறைக்குள் படுத்துக் கொண்டனர்.
ஆனால் இன்றும் நான் வெளியே சென்று படுத்தால் மஹாவுக்கு என் மீது சந்தேகம் வந்துவிடலாம். ஆதலால் இன்று நான் அவர்களுடன்தான் படுத்துக்கொள்ள வேண்டும்.
இன்னமும் அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் எனக்குத் தெரியாது. மஹா அவளை, ‘குட்டிமா’ என்றுதான் அழைக்கிறாள். அதுவும் நிறைய நேரங்களில் தங்கம் செல்லம் அம்மு என்றுதான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். எல்லாவற்றிற்கும் மேல் அன்பு அவளை எப்படி அழைப்பான் என்றும் எனக்குத் தெரியவில்லை. இரண்டு நாளாக நான் ஒருவாறு சமாளித்துவிட்டேன்.
எப்படியோ இன்றைய நாளும் சுமுகமாக முடிந்துவிட்ட திருப்தியில் நான் என் படுக்கையில் விழ, “அப்பா கதை சொல்லுங்க” என்று என் மீது தாவி ஏறிக் கொண்டாள் அந்தச் சின்னவள்.
‘கதை சொல்வதா? நான் சொல்லும் கதை எல்லாம் படுஉக்கிரமாக இருக்கும். இவள் வயதிற்குப் பொருந்தாது’ என்று எண்ணும் போதே,
“அப்பாவைத் தொல்லை பண்ணாத அம்மு... வா நான் கதை சொல்றேன்” என்று மஹா மகளைத் தூக்கிக் கொண்டு அருகே இருந்த அன்புவின் கட்டிலுக்குப் போய்விட்டாள்.
அவர்கள் இருவருக்கும் அந்த ஒற்றைக் கட்டில் ஓரளவு போதுமானதாக இருந்தது.
“நான் அன்பப்பாக்கிட்டதான் கதை கேட்பேன்” என்று அவள் அடம் பிடிக்க மஹா என் முகம் பார்க்க, நான் தயக்கமாக அவளை ஏறிட்டேன்.
“நான் இன்னைக்கு ஒரு நல்ல சூப்பரான கதை சொல்றேன்... என் செல்லம் இல்ல, பட்டு இல்ல... என் அம்மு இல்ல” என்று கொஞ்சிக் கெஞ்சி மகளை அருகே படுக்க வைத்துக் கொண்டாள்.
‘இவள் மகளைப் பெயரிட்டே கூப்பிட்ட மாட்டாளா? என்ன பெயராக இருக்கும்’ என்று நான் குழம்பிக் கொண்டிருக்கும் போதே மஹா சாய்வாக ஒற்றைக் கையில் தலையைத் தாங்கிக் கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தாள்.
முதலில் சிணுங்கினாலும் பின் அவள் மஹாவிடம் அமைதியாகக் கதை கேட்கும் மனநிலைக்குப் போய்விட்டாள்.
“சரி சொல்றேன்... ஆனா நீ கதை கேட்டதும் தூங்கிடணுமா... தொல்லை பண்ணக் கூடாது... புரிஞ்சுதா” என்ற உடன்படிக்கையுடன் ஆரம்பித்த மஹா,
“ஒரு பெரிய காடு... அங்கே நிறைய மிருகங்கள் எல்லாம் வாழ்ந்து வந்துச்சாம்” என்று அதர பழைய முறையில் ஒரு கதையை ஆரம்பித்தாள். நான் மல்லாந்து படுத்துக் கொண்டு மின்காற்றாடியைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் குரல் காற்றோடு கலந்து என் காதுகளில் விழுந்தது.
“சிங்கம் புலி மாதிரியாம்மா?” என்று குட்டிமா இடையிட,
“ம்ம்ம் ஆமா... சிங்கம் புலி மான் குரங்கு நரி முயல்... இப்படி நிறைய மிருகம்” என்று மஹா அழகாக அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே தன் கதையைத் தொடர்ந்தாள். என்னை மறந்து நானும் அவள் கதையில் ஆழ்ந்தேன்.
“அப்போ அந்தக் காட்டுல இருந்த நரி... பக்கத்துல இருந்த ஒரு கிராமத்துக்கு உணவு தேடிப் போச்சாம்... அப்படி தேடிப் போயிட்டு இருக்கும் போது அந்தக் கிராமத்துல இருந்த நாய்ங்க எல்லாம் இந்த நரியைத் துரத்த ஆரம்பிச்சிடுச்சான்... பயந்து ஓடி வந்த நரி அங்கே நீல சாயம் கலந்து வைச்சிருந்த தொட்டில விழுந்திடுச்சாம்”
“அச்சச்சோ பாவம் அந்த நரி” என்று குட்டிமா பரிதாபப்பட்டு உச்சுக் கொட்டிய போது என் இதழ்களில் மெலிதாகப் புன்னகை அரும்பியது.
“அப்புறம் அந்த நரி அந்த நீல சாயத்தோடவே காட்டுக்குள்ள போகவும்... எல்லாரும் பயந்துட்டாங்க... ஏதோ புதுசா ஒரு மிருகம் வருதுடா டோய்னு”
“அப்புறம் என்னாச்சு?”
“அந்தத் தந்திரமான நரி அவங்க பயத்தை எல்லாம் பயன்படுத்திக்க ஒரு திட்டம் போட்டுச்சு”
“திட்டமா?”
“ஆமாம் திட்டம்தான்... எல்லார்கிட்டயும் நான்தான் கடவுளோட தூதன்னு சொல்லி நம்ப வைச்சு... அங்கிருந்த மிருகங்க எல்லோர் மூலமாகவும் தனக்குத் தேவையான எல்லாத்தையும் அதிகாரமா கேட்டு வாங்கிக்குச்சு.”
”அது மட்டும் அந்த நரி செய்யல... அந்தக் காட்டுல இருந்த மத்த நரியையும் துரத்தி விட்டுருச்சு”
“ம்ம்ம்”
“ஏன் னா இதுவும் நரிதானே... அந்த நரிங்க... இதை அடையாளம் கண்டுபிடிச்சிட்டா?”
“ம்ம்ம்”
“இப்படியே சுகபோகமா வாழ்ந்திட்டு இருந்த அந்த நீலச்சாய நரி ஒருநாள் செமையா மாட்டிக்குச்சு”
“மாட்டிக்குச்சா?”
“ம்ம்ம்ம்... ஆமா மாட்டிக்குச்சு... அதோட கெட்ட நேரம்... காட்டுல அன்னைக்கும் சரியான இடி மின்னல் மழை... அப்பன்னு நரிங்க கூட்டம் எல்லாம் ஊளையிட பதிலுக்கு நம்ம நீலச்சாயத்துல இருந்த நரியும் ஊளையிட்டுடுச்சு”
“ஊளை எப்படி இடுவாங்க?” என்று மகள் கேட்டு வைக்க,
“அது வந்து” என்று தயங்கிய மஹா பின் சிரமப்பட்டு மகளுக்காக ஊளையிட்டுக் காட்டினாள். என் உதட்டில் வழிந்த சிரிப்பை அமைதியாகப் பல்லைக் கடித்து அடக்கிக் கொண்டேன்.
“சரி சரி... அப்புறம் என்னாச்சுன்னு கேளு” என்றவள் தொடர்ந்து, “அந்த நரி மழைல நனைஞ்சு அதோட நீல சாயம் மொத்தமும் வெளுத்துப் போச்சு... இராஜா வேஷமும் கலைஞ்சு போச்சு” என்று மஹா ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குட்டிமா கொட்டாவி விட,
“அப்புறம் அந்த நரியை மத்த மிருகம் கொன்னுடுச்சு” என்று மஹா கதையை முடித்தாள்.
“ம்ம்ம்” என்று குட்டிமாவின் குரல் சுருதி இறங்க,
“கதை புரிஞ்சுதா குட்டிமா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம் புரிஞ்சுது” என்று தூக்கக் கலக்கத்துடன் குட்டிமா சொல்ல,
“என்ன புரிஞ்சுது?” என்று மஹா மகளைத் துருவினாள்.
“புரிஞ்சுது...மா” என்று குட்டிமாவின் கண்கள் சொருகவும்,
“அந்த நரியோட நிலைமை என்னாச்சுப் பார்த்த இல்ல... அதுக்குதான் பொய் சொல்லக் கூடாது யாரையும் ஏமாத்தக் கூடாது... சரியா?” என்று மஹா பழைய பாணியில் கதைக்குக் கருத்து வேறு சொல்லி முடித்திருந்தாள்.
“உஹும் பொய் சொல்லமாட்டேன்” என்று குட்டிமா விட்டால் போதுமென்று அரைகுறை தூக்கத்திலேயே சொல்லிவிட்டு அடுத்த சில நொடிகளில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்து உறங்கிவிட, மஹா மகளைத் தட்டிக் கொண்டே அவளும் உறங்கிப் போய்விட்டாள்.
கொடுத்து வைத்தவர்கள். படுத்த மாத்திரத்தில் உறங்கிவிட்டார்கள். எனக்குதான் தூக்கம் வரவில்லை. சில நாட்களாகவே தூக்கம் எனக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
அந்த நீலச்சாய நரியின் கதையுடன் மஹா சொன்ன கருத்து நினைவுக்கு வந்தது. பொய் சொல்லக் கூடாதாம். ஏமாற்றக் கூடாதாம்.
பொய் சொல்லாமல் இருந்திருந்தால் அந்த நரி இராஜாவாக வாழ்ந்திருக்க முடியுமா? உண்மையில் அது நீலச்சாயத்தைத் தேடிப் போய் விழவில்லை. அந்த நரி தனக்கு அமைந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. அவ்வளவுதான்.
அதில் தவறு ஒன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கொஞ்ச நாட்கள் வாழ்ந்தாலும் அது இராஜாவாகச் சுகபோகமாக வாழ்ந்தது.
பல வருடங்கள் அடிமையாக வாழ்வதற்கு ஒரே ஒரு நாள் இராஜாவாக வாழ்ந்து செத்துப் போகலாமே. அதற்குப் பொய் புரட்டு என்ன எதை வேண்டுமானாலும் சொல்லலாம். செய்யலாம்.
யோசித்துக் கொண்டே நான் திரும்பிப் பார்க்க மஹா குட்டிமாவை அணைத்துக் கொண்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
மெதுவாக எழுந்து வெளியே வந்தேன். தனியாக என் பையில் மறைத்து வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்துக் கொண்டு வாயிற் கதவை வெளித் தாழ்ப்பாள் போட்டுவிட்டு மாடிக்குச் சென்றேன்.
சிகரட்டை பற்ற வைத்துப் புகைத்த போது ஏகாந்தமாக ஒரு உணர்வு. அமைதியாக அந்த இரவையும் குளிரையும் உணர்ந்தபடி இழுத்து நான் புகை விடும் போது அசம்பாவிதமாக ஒரு சிரிப்புச் சத்தம்.
பதறிக் கொண்டு நான் சிகரெட் துண்டை நழுவ விட்ட பிறகுதான் கவனித்தேன்.
‘சை! இவனா?’ என்று அலட்சியமாக மீண்டும் புதிதாக ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்துக் கொண்டே,
“எங்க போன நீ?” என்று கேட்டேன்.
“உன்னை விட்டுட்டு எங்கே போயிட போறேன்?” என்றான் அவன்.
“நான் உன்னைத் தேடுனேன் தெரியுமா?”
“நீ என்னைத் தேடுன மாதிரி... நானும் உன்னைத் தேடுனேன்... தெரியுமா?” என்றவன் நக்கலை முதலில் நான் புரிந்து கொள்ளவில்லை.
“நான் எங்க போனேன்? இங்கதானே இருக்கேன்?” என,
“நீ இங்கதான் இருக்க... ஆனா யாரா இருக்க?” என்று கேட்டான்.
நான் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அலட்சியமாகச் சிரித்தேன்.
“உனக்கு நீயே கொள்ளி வைச்சுட்டு எப்படிடா உன்னால சிரிக்க முடியுது?” என்று அவன் தீவிரமாக கேட்ட போது மீண்டும் நான் சத்தமாகச் சிரித்தேன்.
“எப்படியொரு காரியத்தைச் செஞ்சி இருக்கன்னு உனக்குத் தெரியுதா அறிவு?”
“நான் இப்போ அறிவு இல்ல... அன்பு” என்று அமைதியாகப் பதில் சொல்ல,
“அப்போ நான் யாரு?” என்று அவன் என்னை முறைத்தபடி கேட்டான்.
“நீ அன்பு இல்ல... என் ஹெலோசினேஷன்... அன்பு மாதிரி என்கிட்ட பேசிட்டு இருக்க என் மனசாட்சி” என்று நான் தெளிவாகச் சொல்ல,
“சரி நான் உன் மனசாட்சினா என்னை நீ எப்படி ஏமாத்த முடியும்... எனக்குதான் தெரியுமே நீதான் அறிவுன்னு” என்று கேட்டான்.
“நான் அறிவு இல்லன்னு ஆன பிறகு என் மனசாட்சி நீ மட்டும் எப்படி அறிவா இருக்க முடியும்... நீயும் இனிமே அன்புதான்”
“அன்பு அன்புன்னு உன்னை நீயே சொல்லிக்கிட்டா மட்டும்... நீ அன்பு ஆகிட முடியாது... முக்கியமா மஹாகிட்ட நீ பொய் சொல்றது நியாயம் இல்ல” என்றான்.
“நியாயம் இல்லைதான்... ஆனா எனக்கு வேற வழியும் இல்ல”
“இது தேவை இல்லாத வேலை... நீ அன்புவா மாற வேண்டிய அவசியம் எதுவும் இல்ல... உனக்குன்னு ஒரு அங்கீகாரம் இருக்கு... அதை நீ இப்போ தொலைச்சிட்டு நிற்குற”
“நான் அப்படி யோசிக்கல”
“அறிவு அறிவுன்னு உன் பேர் சோஸியல் மீடியால எல்லாம் ட்ரெண்டாகிட்டு இருக்கு... எல்லோரும் நீ எழுதுன நாவலைப் பத்தியும் உன்னைப் பத்தியும்தான் பாராட்டிப் பேசிட்டு இருக்காங்க... எழுத்தாளன்குற உன்னோட அங்கீகாரத்தை நீ இப்போ இழந்துட்டு நிற்குறது உனக்குப் புரியுதா இல்லையா?” என்று சீறலாகக் கேட்டான்.
நான் ஏளனமாக உதட்டைச் சுழித்துவிட்டு, “உனக்குதான் புரியல... நாம உயிரோட இருந்தா ஒரு ஈ காகா கூட நம்மல தேடி வராது... அதுவே செத்து போயிட்டா... ப்ச்...”
”இந்த உலகமே அப்படித்தான்... உயிரோட இருக்க எவனையும் கொண்டாடாது... பாராட்டிப் பேசாது... பாரதியாரைக் கூடச் செத்தப் பிறகுதானே அவரையும் அவர் கவிதையையும் கொண்டாடினாங்க... ஆனால் அவர் உயிரோட இருக்கும் போது அவருக்கு என்ன கிடைச்சுது? ”
”இன்னைக்கு அவருக்குக் கிடைச்சிருக்க இந்தப் பேரும் புகழும் அன்னைக்கே அவருக்குக் கிடைச்சிருந்தா அந்த மனுஷன் சந்தோஷப்பட்டு இருப்பாரு இல்ல... பல நேரங்களில் எழுத்தாளனோட மதிப்பு அவன் வாழும் போது புரியுறது இல்ல... செத்தப் பிறகுதான் பாராட்டுவாய்ங்க... அப்புறம் அவார்ட் எல்லாம் கொடுப்பாங்க”
”ஆனா என் விஷயத்துல நான் சாகல... ஐம் ஸ்டில் ஹியர்... இவங்க பேசறதைப் புகழ்றதை எல்லாம் நான் கேட்டுட்டு இருக்கேன்.”
”இது எவ்வளவு பெரிய விஷயம் இல்ல... இப்படி யாருக்காச்சும் கிடைக்குமா... நான் இப்பதான் ரொம்ப லக்கியா ஃபீல் பண்றேன்” என்று நான் பேசுவதை அவன் அமைதியாகக் கேட்டிருந்தான். அடுத்த வார்த்தை பேசவில்லை. என்னை கார்னர் செய்ய அவனுக்கு இருந்த ஒரே காரணமும் புஸ்ஸன்று போய்விட்டது.
“என்ன சைலன்ட் ஆயிட்ட? உனக்குப் பேசுறதுக்கு பாயின்ட் இல்லயா?” என்று நான் நக்கலாகச் சிரித்துக் கொண்டே கேட்க,
“நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சிக்க மாட்டுற அறிவு... உன்னால அன்புவா வாழ முடியாது... அது ரொம்ப கஷ்டம்” என்றவன் நிதானமான குரலில் என்னை எச்சரிக்கை செய்தான். நான் அசைந்துக் கொடுக்கவில்லை.
“அப்படியா... பார்க்கலாம்” என்று நான் அலட்சியத்துடன் பதில் சொல்ல,
“ம்ம்ம் பார்ப்போம்” என்றவன் கண்கள் என்னை ஒரு மாதிரி பரிதாபத்துடன் பார்த்தது. நான் பொருட்படுத்தவில்லை.
மற்றொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துவிட்டு நிமிர்வதற்குள் ஆளைக் காணவில்லை. போய்விட்டான். திடீர் திடீரென்று அன்புவாக வந்து நிற்கும் அந்தக் கற்பனை ரூபத்தின் நோக்கம் என்ன? எனக்குப் புரியவில்லை.
அந்த சிகரெட்டையும் முழுவதுமாக ஊதித் தள்ளிவிட்டு கதவைத் திறந்து அறைக்குள் வந்தேன். மஹாவும் குட்டிமாவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
தெரு விளக்கின் மஞ்சள் வெளிச்சம் கண்ணாடி ஜன்னல் வழியாக மஹாவின் முகத்தில் பட்டு மினுமினுத்தது. இந்தப் பெண் தூங்கும் போது கூட அழகாக இருக்கிறாள்.
இவள் அருகில் எத்தனை நாளைக்கு நான் கட்டுப்பாடுடன் இருக்க முடியும் என்று தெரியவில்லை.
சத்தம் வராமல் ஜன்னல் திரைச்சீலைகளை மூடிவிட்டு வந்து என்னிடத்தில் படுத்துக் கொண்டேன். அன்பு இருந்த இடத்தில் இப்போது அவர்கள் இருக்கிறார்கள். இது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். இல்லையெனில் நான் தனியாகக் கிடந்து தவித்திருக்க வேண்டும். என் சோகத்தையும் துயரத்தையும் கூட எவரும் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்.
இப்படி யோசித்துக் கொண்டே சில நிமிடங்களில் என்னை மறந்து நான் உறங்கிப் போனேன். ஆனால் ஒரு மணிநேரம் கூட எனது உறக்கம் நீடிக்கவில்லை.
அம்மா அழுது வடிந்த முகத்துடன், ‘உன்னாலதான்டா... உன்னாலதான் எனக்கு இவ்வளவு கஷ்டமும்’ என்று திட்டுகிறார்.
அப்பா பெல்டால் அடிக்கிறார். அடித்துக் கொண்டே, ‘அன்பு எப்படி இருக்கான் பாரு... நீ மட்டும் ஏன் டா இப்படி இருக்க?’ என்று கேட்கிறார். அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் போது,
தேவிகா, ‘எனக்கு ஒரு முடிவு சொல்லுங்க... எத்தனை நாளைக்கு நாம இப்படியே இருக்கிறது?’ என்று அப்பாவிடம் தன் உரிமையை அடித்துக் கேட்கிறார்.
அதற்குள் நிரஞ்சனா முதலை கண்ணீருடன், ‘இவன் என்னைக் கெடுக்கப் பார்த்தான்’ என்று பழிப் போடுகிறாள்.
‘இல்லை இல்லை’ என்று நான் கதறுகிறேன். அப்பா என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகிறார்.
அங்கே... அன்புவின் சிதைந்த உடல் கிடக்கிறது. நான் கத்திக் கதறுகிறேன். எதிரே அந்த பிணவறை மனிதன் கோரமாகச் சிரிக்கிறான்.
‘நீங்க இரட்டையா... நான் கூட பேய்னு நினைச்சிட்டேன்’ என்கிறான். நான் பதில் சொல்லாமல் அன்புவின் முகத்தைப் பார்க்கிறேன். இப்போது அவன் கை கால்கள் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றன.
‘நான் நல்லாதான்டா இருக்கேன்’ என்று அவன் எழுந்து அமர்ந்து கொள்கிறான். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
‘எங்கே என் மஹா... எங்கே... எங்கடா?’ அவன் குரல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்குள் மஹா அங்கே வருகிறாள். நான் வராதே என்று கைக் காட்டுகிறேன். அதற்குள் அவள் வந்து விடுகிறாள்.
அன்பு அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியைப் பார்த்துவிட்டுக் கொதிப்படைகிறான். அவன் கண்கள் சிவக்கவும் என்னைப் பயம் பற்றிக் கொள்கிறது.
நான் பின்வாங்குவதற்குள். ‘அடப்பாவி... அவ என் லவர்டா’ என்றவன் உக்கிரமாக என்னை நெருங்கி, என் சட்டையைப் பிடித்து உலுக்குகிறான். என்னால் அசைய முடியவில்லை.
‘சாரி அன்பு... எனக்கு வேற வழித் தெரியல’ என்று நான் சொல்லவும் அவன் கோபம் அதிகரித்துவிடுகிறது.
‘சை! எவ்வளவு கேவலமான காரியத்தைப் பண்ணிட்டு என்கிட்ட சாரி வேற கேட்குறியாடா நீ’ என்றவன் கரங்கள் என் சட்டையிலிருந்து என் கழுத்திற்கு இடமாறி விடுகிறது.
அடுத்த நொடி, ‘சாவுடா’ என்று உக்கிரமாகக் கத்திக் கொண்டே என் கழுத்தை நெறிக்கிறான்.
‘அன்பு விடு... விடு... எனக்கு வலிக்குது... எனக்கு மூச்சு முட்டுது’ என்று நான் மூச்சுக்காகத் திணற, அவன் இன்னும் இன்னும் அழுத்தி நெறிக்கிறான். என்னைக் கொல்லாமல் விட மாட்டான் என்று தோன்றியது. அவ்வளவுதான். நான் செத்துவிடப் போகிறேன் என்று எண்ணும் போது,
மென்மையாக ஒரு கரம் என் கன்னங்களைப் பற்றுகிறது. நெற்றியைத் தடவுகிறது. ஒரு பெண் குரல் காற்றில் கலந்து வந்து என் செவியைத் தீண்டிய கணம் காட்சிகள் எல்லாம் மறைந்துவிட்டன.
பிரேமியா என்று நான் எண்ணுகையில் “அன்பு... என்னாச்சு அன்பு?” என்றாள். இவள் பிரேமி இல்லை. பின்பு யார் இவள்?
அன்பு என்று அழைக்கிறாள்... ஆன்... நினைவு வந்து விட்டது. அவள் மஹா. அன்புவின் காதலி... இல்லை. இப்போது அவள் என் மனைவி... அன்புவாக இருக்கும் என் மனைவி... அப்படி எனில் நான் அன்பு.
“அன்பு என்னாச்சு?” மீண்டும் மீண்டும் மஹா பதட்டத்துடன் அழைக்கிறாள்.
நான்தான் இப்போது அன்பு... அவள் என்னைத்தான் அழைக்கிறாள்.
அந்த நொடியே நான் அவசரமாக விழித்துக் கொள்ள, மஹாவின் மூச்சுக் காற்று என் முகத்தில் மோதியது. அவள் கண்கள் என்னை அக்கறையுடன் பார்த்திருந்தன. கண்ணாடி வளையல்கள் குலுங்கும் அவள் கரம் என் கன்னங்களைப் பற்றியிருந்தன.
கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் நான் தன்னந்தனியாக மிதந்து கொண்டிருந்தேன்.
7