மோனிஷா நாவல்கள்
Anbin Vazhiyathu - Prefinal Episode
Quote from monisha on November 13, 2024, 5:44 PM22
Lying in loving arms is heaven on earth
அந்தப் பிரபலமான மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்த அறையில்தான் அனுஷயா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். பெரிய காயமெல்லாம் இல்லை. ஆனால் இடித்ததும் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு அவள் மயங்கிவிட்டது எனக்குக் கொஞ்சம் வசதியாகப் போய்விட்டது.
அவளைத் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்ப்பித்துவிட்டேன். இந்த நிலையில் அவளைப் பார்க்கக் கொஞ்சம் பரிதாபகரமாகதான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? அமைதியாகச் செல்லும் என் பாதையில் அவள் குறுக்கிட்டிருக்கக் கூடாது. என் வாழ்க்கையின் ஒட்டுமொத்த அமைதியைக் குலைக்க முற்படுவதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?
இதைத் தவிர எனக்கு வேறு வழியும் தெரியவில்லை.
‘வழி தெரியலன்னு நீ செஞ்ச இந்தக் காரியத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது அறிவு’ அன்புவின் குரல் கண்டனமாக ஒலித்தது. திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் இல்லை.
‘இவ்வளவு நாள் கழிச்சு இப்போ எதுக்கு வந்து என் உயிரை எடுக்குற’ என்றேன் எரிச்சலுடன்.
‘யாருப்பா உயிரை எடுக்குறா... நானா இல்ல நீயா? அனுவைக் கொலை பண்ற அளவுக்குப் போயிருக்கியே... உனக்கே நியாயமா இருக்கா நீ செஞ்சது?’
‘ஏ... ஷட் அப்... கொலை எல்லாம் இல்ல... ஜஸ்ட் அவளைத் தடுக்கணும்னு நினைச்சு அவ வண்டியை இடிச்சேன்... கீழே விழுந்து தலையில அடிப்பட்டிருச்சு... அவ்வளவுதான்... மத்தபடி டாக்டரும் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாரு’
‘சமாளிக்காதே... என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்புதான்’ என்றவன் அழுத்தி சொல்ல நான் கோபத்துடன்,
”என்னடா தப்பு... அவ என் வாழ்க்கைல தேவை இல்லாம தலையிட்டு என் நிம்மதியைக் குலைக்கப் பார்ப்பா... என்னை என்ன அமைதியா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கச் சொல்றியா... அதான் அவ வண்டியைத் தட்டினேன்... இப்பவும் நான் சொல்றதை அவ கேட்கலனா கொலை கூடப் பண்ணுவேன்” என்று நான் சொல்லி முடிக்கும் போது ஓர் ஆழ்ந்த அமைதி.
அன்புவின் குரல் ஒலிக்கவில்லை. அதற்குப் பதிலாக அனுஷயா முனகினாள். அவளது மயக்கம் தெளிவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. மெதுவாக அவள் முன்னே சென்று நின்ற நான், “அனு” என்றேன்.
சிரமப்பட்டு விழிகளைத் திறந்து பார்க்க முயன்று கொண்டிருந்தாள்.
“அனு” என்று மீண்டும் அழைத்தேன். கண்களைத் திறந்தவள் என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியும் கோபமும் அடைய, இந்த உணர்ச்சிகள் எல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
“டேய் பொறுக்கி... சீட்... ஃபிராடு” என்று அவள் வசைப்பாட ஆரம்பிக்க,
“ம்ம்ம் அப்புறம்” என்றேன் எகத்தாளமான புன்னகையுடன்.
“ஸ்கவுன்டிரல்... நீதானே என் வண்டியை இடிச்சு என்னைக் கொல்ல பார்த்த.... உன்னை விட மாட்டேன்டா” என்றவள் ஆவேசத்துடன் எழுந்து கொள்ளப் பார்த்து முடியாமல், “ஆ அம்மா” என்று காலைப் பிடித்தபடி மீண்டும் அமர்ந்துவிட்டாள்.
“என்னாச்சு?”
“ஆஅ... வலிக்குது... எல்லாம் உன்னாலதான்... உன்னை விடமாட்டேன்” என்றவள் எழ முடியாமல் வலியுடன் அமர்ந்து கொள்ள,
“நான் உன்னைக் கொல்லப் பார்த்தேன்... அது இதுன்னு கத்தாம இருந்தன்னா நர்ஸ கூப்பிடுறேன்” என்றேன் நிபந்தனையுடன்.
“நீதான் என்னைக் கொல்லப் பார்த்த... நான் அப்படிதான்டா சொல்லுவேன்” என்றவள் அழுத்தமாகக் கூற,
“அநாதையா ரோட்ல விழுந்து கிடந்தன்னு பாவம் பார்த்து ஹாஸ்பிட்டல்ல கொண்டாந்து சேர்த்தா... என்னையே கொல்லப் பார்த்தேன்குறியா?” என்று அவளிடம் பேசிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் நான் அமர,
“ஏய் ஃபிராடு... நடிக்காதேடா...நீதான் பின்னாடி வந்து என் வண்டியை இடிச்சுத் தள்ளி இருக்க... எனக்குத் தெரியும்” என்றவள் உறுதியாகச் சொன்னாள்.
நான் சத்தமாகச் சிரித்துவிட்டுப் பின், “சரிதான்... நான்தான் இடிச்சு தள்ளினே... இப்ப என்னங்குற? என் மேல கேஸ் போடப் போறியா? ஆமா யார் பேர்ல போடுவ... அன்பு பேர்லயா இல்ல அறிவுங்குற பேர்லயா... ஒரு வேளை அறிவு பேர்ல போட்டா அந்த கேஸ் நிற்குமா? செத்துப் போனவன் எப்படி கார் ஓட்டிட்டு வந்து உன்னை இடிச்சான்னு கேட்கமாட்டாங்களா அனு?” என்று நான் கடகடவென்று பேசியதில் அவள் கண்கள் உஷ்ணமாக மாறியது.
“நீதான் அறிவுன்னு என்னால ப்ரூஃப் பண்ண முடியாதுன்னு நினைக்குறியா? இப்பவே உன்னைப் பத்தின எல்லா உண்மையையும் கிரி சார்கிட்ட சொல்றேனா இல்லையானு பாரு... ஆமா என் ஃபோன்... என் பேக்... அதெல்லாம் எங்க?” என்றவள் பரபரப்புடன் தேட,
“ரிலேக்ஸ்... உன் ஃபோன் பேக் எல்லாம் என்கிட்டதான் பத்திரமா இருக்கு” என்று நான் நிதானமாகக் கூறவும் அவள் சீற்றமானாள்.
“அதெல்லாம் நீ எடுத்து வைச்சுக்கிட்டா உன்னைப் பத்தின உண்மையை என்னால சொல்ல முடியாதுன்னு நினைக்குறியா... இப்பவே கத்திக் கூப்பாடுப் போட்டு... உன் முகத்திரையைக் கிழிக்குறனா இல்லையான்னு பாரு”
“அவ்வளவு எல்லாம் நீ ஸ்ட்ரைய்ன் பண்ண வேண்டாம்...நானே உன் பேக், ஃபோனை எல்லாம் கொடுத்திடுறேன்... அதுக்கு முன்னாடி நான் சொல்றதை நீ கொஞ்சம் பொறுமையா கேட்டா போதும்”
“நீ சொல்றதை எதுக்குடா நான் கேட்கணும்... முடியாது... கேட்கமாட்டேன்... இப்போ என் ஃபோனை நீ கொடுக்கப் போறியா இல்ல” என்றவள் எச்சிரிக்கையாக என்னைப் பார்க்க,
“கொடுத்தா என்ன பண்ணுவ? நான் அன்பு இல்ல அறிவுங்குற உண்மையை எல்லார்கிட்டயும் சொல்லுவ... அப்படிதானே?” என்று கேட்டபடி நான் எழுந்து அவள் அருகே வரவும்,
“என்னடா மிரட்டிப் பார்க்குறியா?” என்றாள்.
“அதெல்லாம் இல்ல... அப்படி நீ என்னைப் பத்தின உண்மையைச் சொல்றதால உனக்கு என்ன கிடைக்கப் போகுது அனு?” என்று கேட்டு அவளை ஆழமாகப் பார்த்தேன்.
அவள் என்னை முறைத்தபடி, “கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அன்புன்குற பேர்ல எல்லோரையும் ஏமாத்திட்டு சீட் பண்ணிட்டு இருக்க... முக்கியமா மஹாவை ஏமாத்தி அவ கூட குடும்பம் நடத்திட்டு... சை! எவ்வளவு கேவலமான ஜென்மம்டா நீயெல்லாம்” என்று கொதித்தாள்.
“நான் யாரையும் ஏமாத்தணும்னு நினைக்கல அனு... செத்துப் போன ஒருத்தனோட அடையாளத்தை நான் பயன்படுத்திக்கிட்டேன்... அன்புவா வாழணும்னு ஆசைப்பட்டேன்... அவ்வளவுதான்...”
”இதுல மஹாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுது எல்லாம் தற்செயல்தான்... ப்ளான் பண்ணி அவ வாழ்க்கையைக் கெடுக்கணும்னோ ஏமாத்தணும்னோ நான் செய்யல” என்று பொறுமையாகவே அவளுக்கு நான் எடுத்துரைக்க என்னைக் கடுப்புடன் ஏறிட்டவள்,
“நீ இப்படி டிராமட்டிக்கா பேசுனா நான் ஏமாந்துடுவேன்னு நினைச்சியாடா பொறுக்கி” என்றவள் கொஞ்சமும் இறங்கி வராமல் தான் பிடித்தப் பிடியில் நின்றாள்.
நான் உடனே என் கைப்பேசி எடுத்து நானும் மஹாவும் மதிக்குட்டியும் ஒன்றாக இணைந்திருந்த படங்களை எல்லாம் வரிசையாக அவளிடம் நகர்த்திக் காண்பித்து,
“இதெல்லாம் பார்த்தா உனக்கு டிராமா மாதிரி இருக்கா அனு? மஹா கண்ணுல இருக்க சந்தோஷம் பொய்யா தெரியுதா...? நீயே சொல்லு?” என, அந்தப் படங்களை எல்லாம் பார்த்தவள் சட்டென்று மௌனமாகிவிட்டாள். அவள் முகத்தில் குழப்பம் படர்ந்தது.
“நான் அன்பு இல்லங்குறது உண்மைதான்... ஆனா அன்பு இருந்தா அவளை எப்படி எல்லாம் பார்த்துப்பானோ அப்படிதான் நானும் அவளைப் பார்த்துக்கிறேன்... அன்புவோட இடத்துல இருந்து மதிக்குட்டிக்கு ஒரு நல்ல அப்பாவா இருக்க முயற்சி செய்றேன்.”
”எல்லாத்துக்கும் மேல அவங்க கூட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நானும் சந்தோஷமா இருக்கேன் அனு... என் வாழ்க்கைல கிடைக்காத அன்புவை மஹா மதி மூலமா அனுபவிச்சு வாழ்ந்திட்டு இருக்கேன்.”
”எனக்கு அவங்க வேணும் அனு... அதேபோல அவங்களுக்கும் நான் வேணும்” என்று நான் திட்டவட்டமாகக் கூற,
“நீ என்ன சொன்னாலும்... நீ மஹாவை ஏமாத்திட்டு இருக்க அறிவு” என்றவள் உறுதியாகக் கூறினாள்.
“ஆமா நான் ஏமாத்திட்டுதான் இருக்கேன்... இந்தா உன் ஃபோன்... அவளுக்கு ஃபோன் பண்ணி உண்மையைச் சொல்லு... அன்பு செத்துட்டான்னு சொல்லு... நான்தான் அறிவுன்னு சொல்லு... ம்ம்ம் சொல்லு” என்று அவள் கைப்பேசியை நீட்டினேன்.
“எமோஷனலா பேசி என்னை லாக் பண்ணிப் பார்க்குறியா?” என்று கேட்டாள்.
“சத்தியமா இல்ல... நான் அறிவுங்குற உண்மை யாருக்குமே இங்க எந்த நல்லதையும் செய்யாதுன்னு சொல்றேன்... முக்கியமா மஹாவுக்கு... அன்பு செத்துட்டான்னு தெரிஞ்சா அவளால தாங்க முடியுமா? இப்போ அவ முகத்துல இருக்க மொத்த சந்தோஷமும் ஒன்னும் இல்லாம ஆகிடாதா?” என்று கேட்க, அனு தலையைப் பிடித்துக் கொண்டாள்.
என்ன செய்வதென்று அவள் குழம்பவும் நான் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டு பேசினேன்.
“கல்யாணம் குடும்பம் எல்லாத்தையும் இத்தனை நாளா முட்டாள்தனம்னு நினைச்சிட்டு இருந்தேன் அனு... ஆனா அது அப்படி இல்ல... கல்யாணத்துல ஒரு பிடிப்பு இருக்கு... அன்பு இருக்கு... காதல் இருக்கு... நம்மை இன்னும் இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்துற மாதிரியான நம்பிக்கை இருக்கு.”
”தனியா வாழுறதுல ஒரு சுதந்திரம் இருந்தாலும்... குடும்பமா வாழுறதுலதான் ஒரு நிறைவு இருக்கு... நமக்குன்னு ஒருத்தர் இருக்காங்கன்ற ஓர் உணர்வு இருக்கு.”
”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை எமோஷனலா லாக் பண்றியான்னு கேட்ட இல்ல... அப்படி லாக்காகி இருக்கிறது உண்மைலயே நான்தான்... குடும்பம் காதல்ங்குற எமோஷன்ல நான் இப்போ முழுசா மட்டிக்கிட்டு இருக்கேன் அனு... இனிமே மஹாவும் மதியும் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது... அவங்க இல்லாம எனக்கு இதுக்கு அப்புறம் எதுவுமே இல்ல” என்றேன்.
அவள் என்னை ஆச்சரியமாகப் பார்த்து, “நீ பேசுறதை எல்லாம் பார்த்தா எனக்கே இப்போ குழப்பமா இருக்கு... நீ அன்புவா அறிவுவான்னு” என்றாள்.
“எனக்கு எந்தக் குழப்பமும் இல்ல அனு... நான் அன்புதான்... இனி என் வாழ்க்கை முழுசுக்கும் அன்புவாவே வாழ்ந்து அன்புவாவே செத்துப் போகணும்னுதான் ஆசைப்படுறேன்” என,
“நீ என்ன சொன்னாலும் நீ செய்றது சரின்னு இப்பவும் என்னால ஒத்துக்க முடியல” என்றாள்.
“நான் செய்றது சரியா இல்லாம இருக்கலாம்... ஆனா அது யாருக்கும் எந்த வகையிலும் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத போது அது தப்பும் இல்லைதானே?” என்று நான் கேட்க,
அவள் என்னை ஆழ்ந்து பார்த்து, “சரி ஓகே... நீ சொல்றபடி தப்பு இல்லன்னே வைச்சுப்போம்... ஆனா மஹாவுக்கு என்னைக்காவது இந்த உண்மை தெரிஞ்சிடுச்சுனா? அவ இதை எப்படி ஏத்துக்குவா...? அவளால் எப்படி இதைத் தாங்க முடியும்...? அன்புவுக்கும் அவளுக்கும் இடையில இருந்த காதலை நான் நேரடியா பார்த்திருக்கேன்” என்றாள்.
“நீ வெறும் பார்த்திருக்க அனு... ஆனா அந்தக் காதலை அணு அணுவா மஹா மூலமா நான் உணர்ந்து அனுபவிச்சிட்டு இருக்கேன்... மஹா எவ்வளவு தூரம் அன்புவை நேசிக்கிறான்னு எனக்கு நல்லா தெரியும்... அதனாலதான் இந்த உண்மை மஹாவுக்குத் தெரியவே கூடாதுன்னு நினைக்கிறேன்” என்றேன்.
“தெரிய கூடாதுன்னு நீ நினைக்கலாம்... ஆனா அது?” என்று அனு பேசி முடிப்பதற்குள்,
“தெரிய கூடாது அனு... நான் தெரிய விடமாட்டேன்” என்றேன்.
அதன் பின் அவள் எதுவுமே பேசவில்லை. யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
“உன்னை நான் இடிச்சு ஆக்ஸிடென்ட் பண்ணது தப்புதான்... ஆனா இன்டன்ஷனலா செய்யல... மஹாகிட்ட உண்மையைச் சொல்லிடுவியோன்னு பயத்துலதான் அப்படி பண்ணிட்டேன்... ஐம் சாரி” என்ற விட்டு வெளியே சென்று செவிலியரை அழைத்து வந்தேன்.
அவர் அனுவின் காலைச் சோதித்துக் கொண்டிருக்கவும், நான் அறைக்கு வெளியே வந்து அனுஷயா உடன் தங்கி இருக்கும் அவள் காதலன் உதய்க்குத் தகவல் தெரிவித்து அவனை வரவழைத்தேன்.
அதேசமயம் மருத்துவரும் வந்து சோதித்துப் பார்த்துவிட்டு அவள் குதிகாலில் வலி இருப்பதைக் கண்டறிந்து, “சுளுக்கு மாதிரிதான் இருக்கு... எதுக்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துடலாம்” என்றார்.
எக்ஸ் ரேவில் பார்த்த போது எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று தெரிய வந்த போதும் அனுவால் இயல்பாக நடக்க முடியாததால் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி இருக்கட்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன் பின் நான் அனுவிடம், “நாளைக்கு வரேன் அனு... பார்த்துக்கோ” என, அவள் தலையை மட்டும் அசைத்தாள்.
அவள் என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி விடமாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதன் பின் மீண்டும் அலுவலகத்திற்குச் சென்ற நான் தேங்கி இருந்த வேலைகளை எல்லாம் முடிப்பதற்குள் இரவு ரொம்பவும் தாமதமாகிவிட்டது.
நடுநிசியில்தான் புறப்பட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அந்த நேரத்திலும் அப்பா எனக்காக முகப்பறையில் காத்திருந்தார்.
“என்னப்பா தூங்கலயா நீங்க?”
“அனு விஷயம் என்னாச்சுபா?” அவர் கவலையுடன் விசாரிக்க, இப்போதெல்லாம் எவ்வளவு தூரம் எனக்காக யோசிக்கிறார் என்று எண்ணிய போது என் மனம் நெகிழ்ந்தது. அவரை அருகே அமர்த்தி நடந்தவற்றை முழுவதுமாகக் கூறினேன்.
“என்னடா இப்படி பண்ணிட்ட?” என்றவர் அதிர்ச்சியுடன் என்னை நோக்க,
“வேற என்னப்பா ஆப்ஷன் இருந்தது என்கிட்ட? சைலன்டா பேசுனா யாருக்கும் புரிய மாட்டேங்குது... வொயலன்டா பேசுனதானே புரியுது.” என,
“உண்மையிலேயே அனு புரிஞ்சிக்கிட்டாளா?” என்று அப்பா சந்தேகத்துடன் வினவினார்.
“புரிஞ்சிக்கிட்டாளோ இல்லையோ... அவளுக்கு மஹா மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு... அதனால மஹாவுக்கு விஷயம் தெரியறதையும் அவ கஷ்டப்படுறதையும் விரும்பமாட்டா” என்றேன்.
“எனக்கு இருந்தாலும் பதட்டமாதான் இருக்கு”
“டென்ஷனாகாம தூங்குங்க... பார்த்துக்கலாம்” என்று சமாதானம் கூறிவிட்டு நான் படிக்கட்டு ஏறப் போகவும்,
“அன்பு... சொல்ல மறந்துட்டேன்... ரஞ்சு ஃபோன் பண்ணா” என்றவர் சொல்ல,
“என்னவாம்?” என்று திரும்பி நின்று அவரிடம் கேட்டேன்.
“தேவியை ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களா?”
“ரொம்ப சீரியஸா?”
“பிபி ரைஸாகிடுச்சாம்... மத்தபடி சீரியஸா எல்லாம் ஒன்னும் இல்ல”
“அவங்கள இங்கேயே வந்து இருந்துக்க சொல்லுங்கன்னு சொல்ல சொன்னேன் இல்லபா”
“எனக்கு வேண்டாம்னு தோனுது... அவங்க தனியா இருக்கிறதுதான் நல்லது... வேணும்னா நான் போய் பார்த்துட்டு வந்துக்கிறேன்” என்றார்.
“அப்புறம் உங்க இஷ்டம்... நீங்க வேணா... நாளைக்கு ஹாஸ்பிட்டல்ல போய் பார்த்துட்டு வாங்க... மஹாவையும் வேணா கூட்டிட்டுப் போங்க” என,
“ம்ம்ம் சரி” என்றார்.
நான் என் அறைக்கு நடந்தேன். மஹா தூங்கி இருப்பாளா? நேற்று இரவும் வீட்டிற்கு வரவில்லை. இன்றும் தாமதமாகிவிட்டது. கோபமாக இருப்பாளோ?
மெல்ல நான் அறைக் கதவைத் திறக்க படுக்கையில் மதி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். திரும்பிப் பார்க்க மஹா சோஃபாவில் அமர்ந்தபடி தலையைச் சாய்த்துக் கண்ணயர்ந்திருக்க, எனக்காகக் காத்து கொண்டிருந்ததில் களைத்து அப்படியே உறங்கி விட்டிருக்கிறாள் என்று புரிந்தது.
இப்படி நமக்காக ஒருவர் காத்திருப்பதுதான் இந்த உறவுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் இருக்கும் போதை. சத்தமில்லாமல் உடையை மாற்றிக் கொண்டு அவள் அருகே சென்று அமர்ந்தேன். அவளை எழுப்ப மனம் வரவில்லை. உறங்கும் போது கூடப் பார்க்க அத்தனை இரசனையாக இருந்தாள்.
சில நிமிடங்கள் கன்னத்தில் கை வைத்து அவள் அயர்ந்து உறங்குவதை இரசித்திருந்த நான் மெல்ல அவள் இதழ்களை நெருங்கி முத்தமிடவும் விழித்துக் கொண்டவள்,
“ம்ம்ம்... அன்பு... என்ன இது?” என்று என் தோளைப் பற்றித் தள்ளினாள்.
“தூங்கும் போது கூட அழகா இருக்கியே... என்னை என்னடி பண்ணச் சொல்ற?” என்று அவளை மீண்டும் நான் நெருங்க,
“போதும் போதும்... நான் கோபமா இருக்கேன் போங்க” என்று விலகி அமர்ந்தாள்.
“அதான் தெரியுமே... அதா....ன்ன்ன்ன் உன்னைக் கிஸ் பண்ணி உன் கோபத்தைக் குறைக்கலாம்னு” என்று கிறக்கத்துடன் அவளை மீண்டும் நெருங்கிச் செல்லவும்,
“ஏன் லேட்டுன்னு முதல சொல்லுங்க?” என்று முறைப்புடன் தள்ளி அமர்ந்து கொண்டாள்.
“கொஞ்சம் ஆஃபிஸ் வேலை மஹா... சாரி” என்று நான் இறைஞ்ச,
“உங்களுக்கு ஆஃபிஸ்தான் இப்ப எல்லாம் முக்கியமா போச்சு... நானும் மதியும் இப்போ இரண்டாம் பட்சமா போயிட்டோம் இல்ல” என்றவள் குரல் வருத்ததுடன் இறங்கியது.
“யார் சொன்னா அப்படின்னு... நீங்க இரண்டு பேர்தான் எனக்கு ஃபர்ஸ்டு... உங்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்ல” என்று நான் சொன்ன போதும் மஹா சமாதானம் அடைவதாக இல்லை.
“உங்க பொண்ணு எவ்வளவு நேரம் அப்பா எப்போ வருவாரு எப்ப வருவாருன்னு கேட்டு என் உயிரை எடுத்தா தெரியுமா? அவளைச் சமாளிக்குறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சு... இதுல இந்த ஃபோன் வேற வேலை செய்யல... தெரியுமா?” என்றவள் முகத்தை சுருக்கிக் குறைப்பட்டுக் கொள்ள,
“ஃபோன் வேலை செய்யலயா... எங்க உன் ஃபோனைக் கொடு” என்று கேட்டேன்.
“அது வேலை செய்யாட்டிப் போது... நீங்க இனிமே இப்படி லேட்டா வராதீங்க அன்பு” என்றவள் வருத்தமாக சொல்லியபடி நெருங்கி வந்து என் தோளில் சாய்ந்து கொண்டாள். நான் அவள் தோள் மீது கைப் போட்டு அணைப்பாகப் பிடித்துக் கொண்டு,
“சாரி மஹா... இனிமே லேட்டா வரவே மாட்டேன்... ப்ராமிஸ்” என்றேன்.
“அப்புறம் நைட்டு வெளியே தங்கவும் கூடாது” என்றவள் என்னை நிமிர்ந்து பார்த்து அதிகாரமாகக் கூற,
“ஆர்டர் மேடம்... தங்கல” என்றதும் அவள் முகத்திலிருந்து இறுக்கம் தளர்ந்தது. என்னைக் காதலுடன் ஏறிட்டு, “லவ் யூ” என்று என் கழுத்தைக் கட்டிக் கன்னத்தில் முத்தமிட,
“லவ் யூ டூ மஹா” என்று நானும் அவள் நெற்றியில் என் இதழ்களைப் பதித்தேன்.
“ஆமா கேட்கவே மறந்துட்டேன் சாப்பிட்டீங்களா?”
“ஆஃபிஸ்லயே சாப்பிட்டேன்”
“சரி சரி... நீங்க டயர்டா இருப்பீங்க... வாங்க படுக்கலாம்” என்றவள் எழுந்து கொள்ள அவள் கரத்தை அழுத்திப் பற்றி இழுத்து என் மடியில் சரித்துக் கொண்டு,
“நான் டயர்டா இல்ல... நீ டையர்டா இருக்கியா என்ன?” என்று கல்மிஷமாகக் கேட்டேன்.
அவள் அதே கல்மிஷத்துடன், “நீங்க பக்கத்துல இருக்கும் போதா?” என்ற கண் சிமிட்டிப் புன்னகைத்து என்னை அவள் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, நான் அவள் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்தேன்.
இதுபோன்றதோர் அன்பிற்காகவும் அணைப்பிற்காகவும் பல நூறு உண்மைகளை மறைக்கலாம். பல நூறு பொய்களைக் கூடக் கூறலாம். அவள் மடியில் கிடக்கும் ஒவ்வொரு நொடியும் நான் மறித்து மீண்டும் புதிதாக உயிர்தெழுகிறேன்.
22