மோனிஷா நாவல்கள்
Aval Draupathi Alla - 27
Quote from monisha on November 15, 2020, 10:28 PM27
அவர்களின் திருமணம்
அமலாவும் நதியாவும் அந்த புத்தம்புது வண்ணமயமான ஆடைகளை வெகு ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே நேரம் அந்த உடை எதற்காக என்ற குழப்பமும் அவர்கள் மனதில் தோன்றியிருந்தது.
"எதுக்கு க்கா இம்மா விலையில எங்களுக்கு டிரஸு.... நிஜமாவே இது எங்களுக்குத்தானா?" என்று அவர்கள் சந்தேகமாய் கேட்க,
வீரா சிரத்தையின்றி, "ஹ்ம்ம்" என்று தலையசைக்க,
அவள் பார்வையும் எண்ணமும் அங்கே இல்லை. முகத்தில் ஒருவித சோர்வு. கிட்டதட்ட உணர்வற்ற நிலையில் அவள் அமர்ந்திருந்தாள்.
"அக்கா" என்று சின்னவள் வீரா தோள்களைக் குலுக்க,
தூக்கத்திலிருந்து விழித்தவள் போல இருவரையும் அதிர்ந்து பார்த்தாள் வீரா!
"என்னாச்சு க்கா உனக்கு?!" என்று இரு சகோதரிகளும் அஞ்சிய தோரணையில் அவளிடம் வினவ, அவளால் உடனடியாய் பதிலுரைக்க முடியவில்லை. அவள் இன்றல்ல. கிட்டதட்ட ஒரு வாரமாய் அப்படித்தான் இருந்தாள். ஆனாலும் தங்கைகளிடம் மட்டும் ரொம்பவும் இயல்பாக இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் அவர்கள் இல்லாத சமயங்களில் எதையாவது வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். சாரதியிடம் சம்மதம் தெரிவித்ததைக் குறித்து அவளுக்குள் பெரிய போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் அந்த முடிவை மறுக்கவோ மாற்றவோ அவள் யோசிக்கவில்லை. தீர்க்கமாய் யோசித்தே இந்த முடிவுக்கு வந்திருந்தாள்.
அதுவும் சாரதியின் குணநலன் பற்றியும் அவன் பிடிவாதம் குறித்தும் இத்தனை நாளில் அவள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள். அவன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வரவும் மாட்டான். விட்டுக் கொடுக்கவும் மாட்டான்.
அதேநேரம் அவனை எதிர்த்துக் கொண்டால், அது தன் தங்கைகளுக்கும் பிரச்சனையாய் முடிந்துவிடுமோ என்ற அச்சமே அவளை சம்மதிக்க வைத்தது. அதுவும் அரவிந்த் பேசியதைக் கேட்ட மறுகணமே, தான் பிறரின் தயவில் அடைக்கலமாக வாழ்வதைக் காட்டிலும் சாரதியின் உறவை ஏற்றுக் கொள்வதே உசிதமென்று தோன்ற, உடனடியாய் ஒரு ஆவேசத்தில் அவனிடம் சம்மதம் சொல்லிவிட்டாள்.
ஆனால் இப்போது அவனைப் போன்ற ஒருவனைக் கணவன் என்ற உறவுமுறையில் பார்ப்பதைப் பற்றி யோசிக்கும் போதே குலைநடுங்கியது.
அதுவும் மறுநாள் திருமணம் என்ற பட்சத்தில் அவளால் அதற்கு மேல் இயல்பாக இருப்பது போன்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்க முடியவில்லை. அதுவும் தங்கைகளின் கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்லியே தீர வேண்டிய கட்டாயம். என்ன செய்வாள் அவள்?
தன் சகோதரிகளை ஆழ்ந்து பார்த்து, "டிரஸ் உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுக்கிதா?" என்று வினவினாள்.
"அதல்லாம் நல்லாதான் இருக்கு" என்று நதியா சொல்லிவிட்டு
"நீ இன்னாத்துக்கு ஒரு மாறிகீற... அத முதல்ல சொல்லு?" என்று கேட்கவும், "நல்லாதான் டி கீறன்" என்று வீரா பதிலளிக்க,
"பொய்" என்றாள் அம்மு அழுத்தமாக!
"ஆமா க்கா உனக்கு இன்னாவோ பிரச்சனை... எங்ககிட்ட சொல்லாம மறைக்கிற" என்றாள் நதியாவும்!
வீரா இருவரின் முகத்தையும் சற்றே தயக்கமாய் நோக்கி,
"பிரச்சனைனு எல்லாம் ஒண்ணும் இல்ல ... ஆனா உங்க ரெண்டு பேர்கிட்டையும் ஒரு மேட்டர் சொல்லணும்.... அதான் எப்படி " என்று இழுத்துக் கொண்டிருந்தாள்.
"இன்னா மேட்டரு... எங்க கிட்ட சொல்லறதுக்கு உனக்கு இன்னா தயக்கம்" என்று நதியா பார்வையாலேயே அவளை முற்றுகையிட்டாள்.
"நான் சொல்றேன்... ஆனா நீங்க என்ன தப்பா எடுத்துக்கக் கூடாது" என்றதும்,
"அய்யோ!! கடுப்பாக்காத க்கா... மேட்டரை சொல்லு" என்று இருவரும் ஆர்வமாய் தன் தமக்கையின் முகத்தை உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி என்னதான் அவள் சொல்லப் போகிறாள் என்று!
"அது... எனக்கும் சாரதி சாருக்கும்" எச்சிலை விழுங்கியபடி, "நாளைக்குக் கல்யாணம்" என்று சொல்லி முடித்து அவர்கள் இருவரின் முகத்தில் தென்பட்ட உணர்ச்சிகளை வீரா ஆராய்ந்து பார்க்க,
அவர்களோ அவள் சொன்னதைக் கேட்ட மறுகணமே ஷாக்கடித்த நிலையில் அப்படியே உறைந்திருந்தனர். அதேநேரம் அவர்களுக்கு இடையில் நடந்து கொண்டிருந்த சம்பாஷனையைக் கதவு வழியாக ஆர்வக்கோளாறில் ஒட்டுகேட்டுக் கொண்டிருந்த தெய்வானை கையில் வைத்திருந்த பாத்திரத்தை அதிர்ச்சியில் படாரென்று கீழே போட்டுவிட்டார்.
அந்த நொடி வீரா என்னவோ ஏதோவொன்று பதறிக் கொண்டு கதவைத் திறக்க, "ஏன்ன்ன்ன்னா... இந்த கர்மத்தைக் கேட்டேளா?!!" என்று ஆரம்பித்து சாரங்கபாணியின் காதில் விஷயத்தை கடகடவென தெய்வானை ஓத, அவர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்!
வீராவை இருவரும் துச்சமாய் ஒரு பார்வை பார்க்க, அந்தப் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரியாமல் இல்லை.
தெய்வானை மேலும் தன் கணவனிடம், "உங்க அண்ணன் மவனுக்கு சுத்தமா மூளையே இல்லயான்னா? என்ன ஜாதியோ... குலமோ... இவளைப் போய் கட்டிக்கப் போறானாம்... கர்மம் கர்மம்... எல்லாம் ரத்தம்... புத்தி... அப்படியே இருக்கு" என்று புலம்பித் தீர்க்க, வீரா எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் வெறுமையாய் பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஆனால் நதியாவும் அமலாவும், "அந்த மாமி... ஓவரா பேசுது க்கா" என்று பொறும, "ப்ச்... விடுங்கடி" என்றவள் கண்ணசைத்து அவர்களை உள்ளே வரச் சொன்னாள்.
அப்போது, "என்ன பத்திதான் ஏதோ பேசிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு" என்று சாரதி கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய, "கடன்காரன்! மூக்குல வேர்த்த மாதிரி வந்துட்டானே!"
தெய்வானை பதட்டத்தோடு தன் கணவனின் அருகாமையில் சென்று மறைந்து கொண்டுவிட்டார். அமலாவும் நதியாவும் வாயை மூடி சிரித்துக் கொண்டே, "மாமி சாரைப் பார்த்ததும் அப்படியே பம்முது" என்றனர்.
"ஏதோ ரத்தம்... புத்தினெல்லாம்... கேட்டுச்சு... யாரைப் பத்தி" என்றான்.
தெய்வானை சாரங்கபாணி இருவரின் முகத்திலும் பதட்டம் குடிகொள்ள, சாரதி விடாமல் அவர்களைக் கூர்ந்து பார்த்தான்.
"ஒண்ணுமில்ல சார்... சும்மாதான் மாமி பேசிட்டிருந்தாங்க" என்று வீரா பின்னிருந்து பதிலளிக்க, அவன் பார்வை அவர்களை விடுத்து அந்த சகோதரிகளின் புறம் திரும்பியது.
அவர்களை ஆழ்ந்து பார்த்தவன், "சரி அது போகட்டும்... நான் சொல்ல வந்தத சொல்லிடறேன்....நாளைக்கு மார்னிங்... ஷார்ப் டென்னோ கிளாக் ரெடியா இருங்க... ரெஜிஸ்டர் ஆபீஸ் போகணும் " என்க,
வீரா பதிலேதும் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்தாள்.
பின்னர் சாரதி அமலாவையும் நதியாவையும் பார்த்து, "உங்க ரெண்டு பேருக்கும் டிரஸ் பிடிச்சிருக்கா? இல்லன்னா சொல்லுங்க... உடனே மாத்திடலாம்... நான் உங்க அக்காகிட்ட சொன்னேன்... உங்களையும் கூட்டிட்டு போய் எடுக்கலாம்னு... அவதான் வேண்டாம்னு சொல்லிட்டா" என்றதும் இருவரும் வீராவைப் பார்க்க, அவள் தவிப்போடு தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
"வாட்... பிடிச்சிருக்கா இல்லையா?" என்று சாரதி அவர்களை நோக்கி அழுத்தமாய் கேட்கவும், "ஆன் பிடிச்சிருக்கு சார்" என்று இருவரும் ஒரு சேர அச்சத்தோடு பதிலளித்தனர்.
"தட்ஸ் குட்... அன்ட் ஒன் மோர் திங்... உங்களுக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோங்க... மேல என் பெட் ரூம் ஆப்போசிட்ல இருக்குற ரூமை க்ளீன் பண்ண சொல்லியிருக்கேன்... அங்க ஷிப்ட் ஆயிடுங்க" என்றதும் வீரா பதறிக் கொண்டு,
"இல்ல சார்... இன்னைக்கு வேணாம்... நாளைக்கு" என்றாள்.
"ப்ச்... மார்னிங் ரெடியாகனும்ல... சொல்றதைக் கேளு... அங்க ஷிப்ட் ஆயிடுங்க" என்றவன் சொல்லிவிட்டு வெளியேற,
அவன் பின்னோடு சென்ற சாரங்கபாணி, "பார்த்தா" என்று சற்றே சீற்றமாக அழைத்தார். தெய்வானை கணவனின் கரங்களைப் பிடித்து தடுத்து,
'ஏன்னா போற சனியனை வான்னு கூப்பிடுறேள்" என்று மெலிதாக சொல்ல,
சாரதி முறைத்தபடி, "பார்த்தான்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது" என்று கேட்டான்.
"அது இருக்கட்டும்... நீ முதல்ல... நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு" என்றதும், "வேணா ன்னா... அவன் எதாச்சும் எடக்கு முடக்கா பேசுவான்" என்று தெய்வானை சாரங்கபாணியிடம் எச்சரிக்க,
"நீ சத்த நேரம் சும்மா இரு... நான் அவனான்ட கொஞ்சம் பேசணும் " என்றார்.
'எப்படியோ வாங்கி கட்டிக்கட்டும், நமகென்னத்துக்கு' என்றபடி தெய்வானை நொடித்துக் கொண்டு ஒதுங்க,
சாரங்கபாணியோ, "ஏன்டா? ... நம்மவாளேயே... அழகா லட்சணமா ஒரு பொண்ணு கூட கிடைகலையாடா நோக்கு... போயும் போயும்" என்றவர் மேலே பேசாமல் உள்ளூர ஏதோ முனகினார்.
சாரதி அவரை ஆழ்ந்து பார்த்தான். சில நொடிகள் நிதானித்து,
"சித்தப்பா... அழகா லட்சணமான்னா... நம்மவா இல்ல... நிறையவாள நான் கட்டிக்குவேன்... ஆனா நேக்குப் பிடிச்சவா... வீரா மட்டும்தான்... உங்க அவாக்காக எல்லாம் நான் அவாள விட்டுத் தர முடியாது... நம்ம பாஷையில சொல்லணும்னா அவாதான் என் ஆம்படையாள்" என்று தெளிவாய் உரைத்தவன்,
"இதுக்கு மேலே வீராவைப் பத்தி நீங்க ரெண்டு பேரும் தரைகுறைவா பேசுனீங்க... அப்புறம்" என்று நிறுத்தி அவன் பார்த்த பார்வையில் இருவரும் கப்சிப்பென்று வாயைமூடிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்.
வாசலில் ஓரமாய் நின்று இந்தக் காட்சியைப் பார்த்த நதியாவும் அமலாவும் பூரித்துப் போய் அவசரமாய் அறைக்குள் நுழைந்து,
தனியே யோசனையில் அமர்ந்திருந்த வீராவிடம்,
"அக்கா... சாரதி சார் கெத்துனா கெத்து செம்ம கெத்து... எங்களுக்கு டபுள் ஓகே" என்றபடி இருவரும் போட்டி போட்டு வீராவின் கழுத்தைக் கட்டி கொண்டு அவளை மூச்சுதிணற வைத்தனர். அவர்களின் சந்தோஷத்தைப் பார்த்தவளுக்கு ஒரு பக்கம் நிம்மதி உண்டானாலும் அது நீடிக்குமா என்ற கலக்கமும் இருந்தது.
அடுத்த நாள் காலை சாரதி புறப்பட்டு தயாராகி சோபாவில் அமர்ந்து பேசியை காதோடு வைத்து அளவளாவிக் கொண்டிருக்க, அமலாவும் நதியாவும் புது உடையில் தயாராகி இறங்கி வந்தனர்.
அவன் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டு, "ரெடியா போலாமா?" என்று எழுந்து கொண்டு வினவ,
"ரெடி மாமா... போலாம்" என்றனர்.
முன்னே நடந்தவன் சட்டென்று அவர்கள் புறம் திரும்பி, "என்னன்னு கூப்டீங்க?" என்று கேள்வி எழுப்ப,
அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அச்சம் கொண்டனர்.
நதியா தயங்கித் தயங்கி, "இல்ல... அக்கா வூட்டுகாரை மாமான்னு" என்றவள் இழுக்கவும் அவர்களைப் பார்த்து அவன் முறுவலித்தான்.
அவர்கள் இருவரின் முகத்திலும் புன்னகை அரும்ப சாரதி அவர்கள் தோள்களைத் தட்டி, "சரி சரி... போய் கார்ல உட்காருங்க" என்றான்.
அவர்கள் சென்றதும் சாரதியின் மனம் ஏதோ செய்தது. புதிதாய் ஓர் உணர்வு அவனை ஆட்கொள்ள, விழியோரம் துளியளவில் கண்ணீர் ஒதுங்கி நின்றது. அதனை துடைத்துக் கொண்டிருக்கும் போது வீராவும் இறங்கி வந்தாள்.
தங்க நிற சரிகை தரித்த சிவப்பு வண்ண சேலையை அவள் உடுத்தி வர, அவள் மேனியும் அதனோடு சேர்ந்து தங்கமென மின்னிக் கொண்டிருந்தது.
அவள் வதனத்தில் அளவான அலங்கரிப்பும், தேகத்தில் ஆடம்பரமில்லாமல் சிற்சில தேவைக்குரிய ஆபரணங்களை மட்டுமே பூட்டி... திருத்தமான அழகு பாவையாய் வந்து நின்றவளை விழி எடுக்காமல் அவன் வியப்புக்குறியோடு பார்த்திருக்க,
"போலாமா சார்" என்று கேட்டபடி அழகு பதுமையாய் அவன் முன்னே வந்து நின்றாள். அவன் சிரமப்பட்டு தன்னிலை மீட்டுக் கொண்டு,
"யா போலாம்" என்று முன்னே சென்று காரை ஸ்டார்ட் செய்ய வீராவும் அவன் தங்கைகளோடு பின்னிருந்த இருக்கையில் அமர முற்பட்டாள்.
"நீ முன்னாடி உட்காரு க்கா" என்றனர் இருவரும்!
வீரா அவர்களிடம் சமிஞ்சையால் மிரட்டி முடியாது என்று சொல்ல, "வீரா... கம் இன் ஃப்ரென்ட்" என்றான் சாரதி.
அவள் தவிப்போடும் கொஞ்சம் கடுப்போடும் மூச்சை இழ்த்துவிட்டுக் கொண்டு முன்னே சென்று அமர, அவனோ அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவளை ஆசைதீர ரசித்தபடி காரை இயக்கிக் கொண்டு வந்தான்.
அவன் பார்வையை உணர்ந்தவள், தவிப்போடு ஜன்னலைத் துளைத்து வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்.
கார் ரெஜிஸ்டர் ஆபீஸில் சென்று நிற்க அங்கே சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தயார் நிலையில் கணேஷ் காத்திருந்தான். சாரதி காரை நிறுத்திவிட்டு அவர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
வீராவிற்கு பதட்டம் கூட சாரதியிடமோ திருமணத்திற்கு உண்டான எந்தவித அறிகுறியும் இல்லை. உடைபாணியில் கூட ரொம்பவும் இயல்பாகவே பேண்ட் ஷர்ட் அணிந்திருக்க,
"என்ன சார்? பார்மல்ஸ்ல வந்திருக்கீங்க... கொஞ்சம் டிரெடிஷ்னலா வந்திருக்கலாமே" என்றான் கணேஷ் .
"எதுக்கு? முடிச்சிட்டு மீட்டிங் போகணும்ல... சீக்கிரம் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிக்கச் சொல்லு... டைம் இல்ல... கிளம்பணும்" என்றான்.
அதற்கு பிறகு ஏற்பாடுகள் துரிதமாய் நடக்க, அவர்களின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஏதோ முடிந்தது.
இருவரும் கையெழுத்திட, அங்கிருந்த பதிவாளர், "ஓகே... இப்போ மாலையை மாத்திகோங்க" என்றார்.
"அதெல்லாம் நெசசரியா என்ன? சைன் போட்டா போதாதா?" என்று கேட்க பதிவாளர் தொடங்கி வீரா வரை எல்லோரும் அதிர்ச்சியாக கணேஷ் சாரதியின் காதோரம்,
"நான் அதுக்குதான் அப்பவே மாலை தாலி எல்லாம் வாங்கிட்டு வரேன்னு சொன்னேன் சார்" என்றான்.
"ப்ச்... அதெல்லாம் தேவையில்ல கணேஷ்... இட்ஸ் ஜஸ்ட் பார் பார்மலிடீஸ்... சைன் போட்டா போதும்... மேரேஜ் ஓவர்" என்றவன் மேலும் பதிவாளரைப் பார்த்து, "அப்படித்தானே சார்" என்று கேட்க,
அவர் முகம் சுணங்கியது. "விளங்கிடும்" என்று வாய்க்குள் முனகிவிட்டு,
"அதெல்லாம் உங்க இஷ்டம் தம்பி" என்றதும், சாரதி வீராவைப் பார்த்து புறப்படலாம் எனத் தலையசைக்க, அவளால் நடப்பவை எதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, அவளின் முகம் அதற்கான எந்தவித அறிகுறியையும் காட்டிக் கொள்ளாமல் மறத்த நிலையில் இருந்தது.
சாரதி வெளியே வந்ததும் வீராவைப் பார்த்து, "எனக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு... நான் கணேஷோட ஆபீஸ் கார்ல போயிடுரேன்... நீ காரை எடுத்துட்டு தங்கச்சிகளை கூட்டிட்டு வீட்டுக்கு போயிடு" என்றவன் சாவியை அவளிடம் கொடுக்க அதனைப் பெற்றுக் கொண்டவள்,
தீயாய் கனன்று கொண்டிருந்த கோபத்தை அவளுக்குள் மறைத்துக் கொண்டு தங்கைகளை அழைத்துக் கொண்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள்.
"ஓகே நாம போலாமா?" என்று சாரதி கணேஷிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது,
அரவிந்த் சீற்றமாய் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு, "எங்கடா என் வீரா?" என்றான். கணேஷ் உடனடியாய் உள்புகுந்து அரவிந்தை விலக்கிவிட,
"ப்ச்... என்ன அரவிந்த் நீ?... கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா எங்க கல்யாணத்துக்கு சாட்சிக் கையெழுத்தாவது போட்டிருக்கலாம்ல" என்று சொல்லி சாரதி அவனைப் பார்த்து எகத்தாளமாய் புன்னகைத்தான்.
அரவிந்த் அந்த நொடியே நொறுங்கிப் போனான். அவன் அதிர்ச்சியில் ஊமையாகிட சாரதி மேலும், "விடு தம்பி... வீரா இல்லன்னா மீரா... இவளை விட பெட்டரா வேற ஒரு பெட்ரமாக்ஸ் உனக்குக் கிடைக்கும்... சியர் அப் மேன்" என்றபடி அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான்.
அரவிந்த் அவன் கரத்தை உதறித் தள்ளி ஆக்ரோஷமான நிலையில், "ஐ வில் கில் யூ" என்க,
"முடிஞ்சா ட்ரை பண்ணு... ஆல் தி பெஸ்ட்" என்று அலட்சியமாய் உரைத்துவிட்டு, "கணேஷ் கிளம்பலாம்" என்றான்.
"மாட்டேன்டா. ம்ஹும்... நான் உன்னைக் கொல்ல மாட்டேன்... நீ உயிரோட இருந்து கதறணும்... கதற வைக்கிறேன்... மரணத்த விட கொடூரமான வலியைக் கொடுக்குறேன் டா உனக்கு" என்றவன் சொடக்கிட்டு ஆவேசமாய் சவால்விட,
"டேய்... நீ இப்படி சவால் விடற நேரத்தில... கொஞ்சமாச்சும் உன் பிசினஸ பார்த்தன்னா உருப்புடுவ" என்று சாரதி அலட்சிய தொனியில் சொல்லிவிட்டு, "வா கணேஷ்" என்று சொல்லி அங்கிருந்து புறபட்டுவிட்டான்.
ஆனால் அரவிந்தால் அங்கிருந்து ஓரடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என்றாவது ஒரு நாள் வீரா தனக்கு உரித்தானவளாகி விடுவாள் என்ற எண்ணம் இன்றோடு சாரதியால் மண்ணோடு மண்ணாய் போனதே!
அந்தத் தோல்வியை ஜீரணித்துக் கொள்ளுமளவுக்கான சக்தி அவனுக்கில்லை. அவன் உலகம் அங்கே அந்த நொடி தன் சுழற்சியை நிறுத்திக் கொண்டுவிட்டது.
சாரதியின் அலுவலகம். அவன் வேலையில் படுமும்முரமாய் முழ்கியிருக்க, "சார் ரொம்ப லேட்டாயிடுச்சு" என்றான் கணேஷ்!
சாரதி தன் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு, "ப்ச்... இட்ஸ் ஜஸ்ட் நைன்" என்று அலட்சியமாய் சொல்ல,
"சார் இன்னைக்கு உங்களுக்கு... ஃப்ர்ஸ்ட் நைட்" என்று தயங்கித் தயங்கி சொல்லி முடித்தான் கணேஷ்.
சாரதி அப்போது ஆர்வமாய் லேப்டாப்பில் இருந்து தலையை நிமர்த்தி, "ஓ!! அப்படி ஒன்னு இருக்கோ?" என்று முகவாயைத் தடவி யோசித்தவனுக்கு வீராவின் முகம் மின்னலடித்தது போல் கண்முன்னே தோன்றி மறைய,
அவனின் வேலைகள் யாவும் அவன் எண்ணங்களைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டன. அந்த நொடி அவள் மட்டுமே முழுமையாய் அவன் கருத்திலும் நினைப்பிலும் நின்றாள்.
அமலாவும் நதியாவும் காரில் புறப்பட்டதிலிருந்து வீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.
"மாமா உன் கழுத்துல ஏன் க்கா தாலி கட்டல" என்றவள் வினவ,
"ப்ச்... சாரதி சாருக்கு இதுல ல்லாம் நம்பிக்கை இல்ல... விடு" என்று வீரா பதிலுரைத்து சமாளிக்க, "போ க்கா.. உன் கல்யாணத்த பார்க்க நாங்க எவ்ளோ ஆசையா இருந்தோம்... எல்லாம் ஊத்திகுச்சு" என்று சொல்லி அமலா நொடித்துக் கொண்டாள்.
வீரா முடிந்தளவு ஏதேதோ சொல்லி அவர்களை சமாளிக்க, அவர்கள் சந்தேகங்களோ அத்தனை எளிதில் தீர்ந்தபாடில்லை.
வீராவின் மனம் ஏற்கனவே காயப்பட்டிருக்க, அவர்களின் கேள்விகளும் வார்த்தைகளும் அவளை மேலும் மேலும் காயப்படுத்திக் கொண்டிருந்தன.
எந்நிலையிலும் தங்கைகள் முன்னிலையில் உடைந்துவிடக் கூடாது என்று வீரா தன் உணர்வகளைப் பெரும்பாடுபட்டு சிறைப்படுத்தி வைத்திருந்தாள். ஆனால் அவர்கள் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் அவள் மனோதிடம் தகர்ந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.
அதற்கேற்றாற் போல் படுக்கும் தருவாயில் மீண்டும் நதியா,
"நீயாச்சும் மாமாகிட்ட... சொல்லியிருக்கலாம்ல... கோவிலுக்கு கூட்டிட்டுப் போய் தாலி கட்ட சொல்லி" என்று நதியாஆரம்பிக்க,
"ஆமா... சொல்லியிருக்கலாம்" என்றாள் அமலா. வீராவின் பொறுமை சுக்குநூறாய் உடைந்தது.
"இப்போ இரண்டு பேருக்கும் இன்னா பிரச்சனை?" என்று சீற்றமாய் கேட்டவள் மேலும்,
"சும்மா தாலி தாலினு ... ஏன்டி தாலிய கட்டின்னு அழுவுறீங்க... பெரிய தாலி... நம்ம அப்பன்னு ஒரு சோமாரி இருந்தானே... அவன் நம்ம அம்மா கழுத்தில தாலியக் கட்டித்தானே கல்யாணம் பண்ணிக்கினான்... அப்படி இன்னாடி அம்மாவை வாழ வைச்சுட்டான்... நம்ம மூணு பேரையும் புள்ளையா குடுத்தான் அவ்ளோதான்... மத்தபடி ஒரு ஆணியும் புடுங்கல...
அப்புறம் பக்கத்துக்கு வூட்டுல இருந்துச்சே... அது பேர் என்ன... ஆன்... மஞ்சுளா... எவனையோ காதலிச்சு முறைப்படி தாலியெல்லாம் கட்டிதான் கல்யாணம் பண்ணிக்கின்னு போச்சு... இன்னா ஆச்சு... இரண்டே மாசத்துல அவ மாமியார் அவளைத் துரத்தி உட்டுட்டு அவ புள்ளைக்கு வேற கல்யாணம் பண்ணிடல... அப்புறம் இன்னாடி தாலி.... மண்ணாங்கட்டினு...
முதல்ல ஒரு விஷயத்த ரெண்டு பேரும் புரிஞ்சுக்கோங்க... சாரதி சார்... என் கழுத்துல தாலி கட்டல ... ஆனா அவர் என்னை ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணினுகிறாரு... இனிமே அவரே நினைச்சாலும் அதை மாத்த முடியாது ... நான்தான் இந்த ஜென்மத்துல அவரோட பொண்டாட்டி"
தங்கைகளை சமாளிக்கவே பேச ஆரம்பித்தவள்... பின்னர் பேசப் பேச தன்னையும் அறியாமல் அவள் வேதனைகளைக் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
அமலாவும் நதியாவும் வீராவின் பேச்சைக் கேட்டு சில நொடிகள் அப்படியே மௌனநிலையில் இருந்தனர்.
வீரா படபடத்துப் போய், "ஏ... இன்னங்கடி மூஞ்சிய தூக்கி வைச்சுக்கினீங்க... நான் பேசுனதைக் கேட்டு கோவிச்சுகினீங்களா?" என்று அவர்களின் அமைதியைப் பார்த்து துணுக்குற,
இருவரும் அந்த நொடி சத்தமாய் சிரிக்கத் தொடங்கினர். அவர்கள் வீராவைப் பார்த்து, "உனக்கு மாமா மேல செம்ம லவ்வு க்கா... அதான் அவரை விட்டுக் கொடுக்கமா பேசுற" என்று நதியா சொல்ல,
வீரா கடுப்பாய், "செம்ம லவ்வு... யாருக்கு... எனக்கா?" என்று தலையிலடித்துக் கொண்டாள்.
"சும்மா நடிக்காத க்கா... எப்பவும் அந்தாளு இந்தாளுன்னுதானே சொல்லுவ... ஆனா இப்போ பேசும் போது அவரு இவருன்னு... ஹ்ம்ம்ம்...ஹ்ம்ம்" என்று நதியா கிண்டலடிக்க,
"ஆமாம் ஆமா... நான் கூட கவனிச்சேன்" அமலா வெட்கப்பட்டு சிரித்தாள்.
"அட ச்சே... நிறுத்துங்கடி" என்று வீரா கோபமுற,
அவர்கள் இருவரும் விடாமல் அவளை ஓட்ட, கொஞ்சம் ரணகளமாகவும் குதூகலமாகவும் அந்த சுழ்நிலை மாறியிருந்தது. அவர்கள் பேசியவற்றில் அவளுக்கு சுத்தமாய் உடன்பாடே இல்லையென்றாலும் தன் தங்கைகளின் மலர்ந்த முகங்கள் அவள் மனதை சற்றே அமைதியடைய செய்திருந்தது.
"ஏன் க்கா... மாமா இன்னும் வரல?" என்று நதியா கேட்கவும் மீண்டும் வீராவின் சந்தோஷமெல்லாம் முழுவதுமாய் பறிபோன உணர்வு!
"ஆபீஸ் வேலைன்னு போகும் போது சொல்லிட்டுதானே போனாரு... முடிஞ்சதும் வருவாரு" என்று வீரா இறங்கிய தொனியில் தன் தங்கைகளிடம் சொல்ல,
அவள் மனநிலை புரியாமல், "மாமாவ பார்க்காம அக்காக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் போல" என்றாள் நதியா மறுபடியும்.
"இதுக்கு மேல எதனாச்சும் பேசுனீங்க... ஒரே மிதிதான்... கம்னு படுங்கடி" என்று மிரட்டலாய் வீரா உரைக்க கப்சிப்பென்று இருவரும் படுக்கையில் போர்வைக்குள் அடங்கினர்.
வீராவும் பெருமூச்செறிந்து படுக்கையில் அவர்கள் அருகாமையில் அமர்ந்து கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டிருக்க, "அக்கா" என்று தலையை வெளியே நீட்டிய அமலா,
"மாமா மறந்துட்டாரா?... இன்னைக்கு உங்களுக்கு ப்ஃர்ஸ்ட் நைட்ல" என்றாள்.
"ஆமா ல" என்று நதியாவும் எட்டிப் பார்த்தாள்.
"அடிங்க... ரொம்ப முக்கியம்" என்று வீரா அங்கிருந்த தலையணையை எடுத்து அவர்களை மொத்தி வைக்க, மீண்டும் இருவரும் போர்வைக்குள் பதுங்கிக் கொண்டனர்.
ஆனாலும் அவர்கள் உள்ளூர ரகசிய பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க, "அடங்க மாட்ராளுங்களே!!" என்று வீரா போர்வையின் வழியாக அவர்கள் இருவரின் காதுகளையும் திருகினாள்.
"அக்கா வேணா வேணாம்" என்று கதறியவர்கள் அத்தோடு நிசப்தமாகி சில நிமிடங்களில் உறக்க நிலைக்கும் போய்விட்டனர்.
அதற்குப் பிறகு அந்த அறையில் ஓர் மயான அமைதி பீடித்துக் கொள்ள, வீராவின் விழிகளிலோ உறக்கத்திற்கான எந்தவித அறிகுறியுமே தென்படவில்லையென்றுதான் சொல்ல வேண்டும்.
கால்களை மடித்தபடி அமர்ந்திருந்தவள் வெறிக்க வெறிக்க அந்த அறையை சுற்றிப் பார்த்திருந்தாள்.
அந்த அறையின் ஆடம்பரம் அவளை வெகுவாய் மிரட்டிக் கொண்டிருக்க, அவள் குடித்தனம் இருந்த அந்த ஒற்றை வீட்டிற்கே திரும்பிப் போய்விட முடியாதா என்ற இனம் புரியாத ஏக்கமும் அவளை வாட்டிக் கொண்டிருந்தது.
அவளை ஏதோ ஓர் உணர்வு அச்சுறுத்திக் கொண்டிருக்க, அது இன்னதென்று அவளால் வறையறுக்க முடியவில்லை இப்போதைக்கு அவளின் ஓரே தவிப்பு அந்த இரவை எப்படி கடக்கப் போகிறோம் என்பது மட்டும்தான்!
சரியாய் அந்த நொடி காரின் ஹார்ன் சத்தம் மெலிதாய் ஒலிக்க, அவள் பதட்டத்தோடு எழுந்து ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கினாள். அவனேதான்!
அவன் காரிலிருந்து இறங்கி வருவதைப் பார்த்த மாத்திரத்தில், அவளின் தைரியம் மொத்தமும் ஆட்டம் கண்டுவிட்டது. வேகவேகமாய் அறையின் விளக்கை அணைத்துவிட்டு தங்கைகளோடு படுக்கையில் சரிந்தாள்.
'ஆல் இஸ் வெல்' அவள் எப்போதும் ஜெபிக்கும் தாரக மந்திரத்தை முணுமுணுத்தபடி விழிகளை மூடிக் கொள்ள,
அவள் மனமோ பயத்தோடு விழித்துக் கொண்டுதான் இருந்தது. சில நிமிடங்கள் எந்தவித சத்தமுமின்றி ஆள் அரவமே இல்லாமல் இருந்தது.
ஆனால் அந்த அமைதியை உடைத்துக் கொண்டு தடதடவென அறைக் கதவு தட்டும் ஓசை கேட்க, அவளுக்கும் உள்ளூர தடதடத்தது. அவன்தான் என்பதை அறிந்தவள், கொஞ்ச நேரம் தட்டிவிட்டு அவனே போய்விடுவான் என எண்ணும்போது,
வீரா என்று சாரதியின் அழைப்புக் குரலும் கேட்டது. அவள் அப்போதும் அசைந்து கொடுக்காமல் விழிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.
ஆனால் அவன்தான் விடாக்கொண்டனாயிற்றே. அடுத்ததாய் அந்த அறையில் இருந்த இன்டர்காம் சத்தமிட்டது. என்னவரினும் அவன் நினைத்ததை சாதித்தே தீரவேண்டுமென்ற பிடிவாதம் அவனுக்கு எப்போதும்.
வீரா அடித்துப்பிடித்து எழுந்து தன் தங்கைகள் இருவரையும் பார்த்து எங்கே அவர்கள் விழித்துக் கொள்வார்களோ என்று பதறிக் கொண்டு அதனை ஏற்றவள் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க,
"வீரா" என்றழைத்தான் சாரதி. "ஹ்ம்ம்" என்றாள் அவள்.
எங்கே பேசினால் அவள் குரலின் நடுக்கம் அவனுக்குத் தெரிந்துவிடுமோ என்ற அச்சம்!
"ரூமுக்கு வா... ஐம் வெய்டிங் பாஃர் யூ" என்று அதிகாரத் தொனியில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான். ஏற்கனவே அவன் மீதான கோபம் அவளுக்குள் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. இப்போது அவனின் அழைப்பு அதனை வெடிக்கச் செய்திருக்க,
எழுந்தமர்ந்தவள் சில நொடிகள் அவளை அவளே திடப்படுத்திக் கொண்டாள். செல்வதற்கு முன்னதாக கண்ணாடியில் தன்னைத்தானே உற்றுப் பார்த்துக் கொண்டவள்,
அவள் அணித்ருந்த புடவையைக் கழற்றிவிட்டு, தேடி எடுத்து ஒரு கழுத்தொட்டிய முழு கை டிஷர்டையும் நைட் பேன்டையும் அணிந்து கொண்டாள். அதோடு அவள் காது கழுத்திலிருந்த ஆபரணங்கள் அனைத்தையும் களைந்தாள்.
அதன் பின்னர் அவன் அறை நோக்கி அவள் செல்ல, சாரதியோ தன் படுக்கை மீது ஒற்றை காலை மடித்துக் கொண்டு அவள் வருகைக்காக ஆவலாய் காத்திருந்தான்.
வீரா வாசற்கதவை தாண்டாமலே, "எதுக்கு சார் கூப்புட்டீங்க?" என்று கேட்கவும் அவன் முகத்தில் ஒரு அலட்சியப் புன்னகை!
எழுந்து அவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தவன், ஆராய்ந்து அவளையும் அவள் அணிந்திருந்த உடையையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டான். அவள் தன் அலங்காரங்கள் மொத்தத்தையும் துடைத்தெறிந்து விட்டல்லவா வந்திருந்தாள்.
அவள் அந்த உடையில் நின்று கொண்டிருந்த விதத்தில் அவளை புதிதாய் பார்பவர்கள் அவளை நிச்சயம் ஆணென்றே எண்ணிக் கொள்வர்.
"உன்னோட இந்த சிம்ப்ளிசிட்டிதான் என்னை ரொம்ப அட்ரேக்ட் பண்ணுது வீரா" என்றவன் சொல்லி அவளை ஆழ்ந்து ரசிக்க,
அவளுக்கு எரிச்சலாய் வந்தது. தான் என்ன செய்தாலும் அதனையும் அவனுக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்ளும் அவனை என்ன செய்வது.
உள்ளமெல்லாம் எரிமலையாய் தகித்துக் கொண்டிருக்க அவனை ஏறிட்டும் பார்க்காமல்,
"எனக்கு தூக்கம் வருது... சீக்கரம் இன்னா மேட்டருன்னு சொல்லுங்க... நான் போகணும்" என்றவள் விட்டால் ஓடிவிடலாம் என்ற நிலையில் தவிப்புற,
"எங்கே போகப் போற... இனிமே இதுதான் உன் ரூமும்... கம் இன்ஸைட்" என்றவன் அவள் தோள்களை அணைத்தவாறு அறைக்குள் அழைத்து வந்துவிட்டான். அவள் பட்டென அவன் கரத்தை உதறிவிட்டு வெளியேற எத்தனிக்க, அவனோ அறைக்கதவை மூடிவிட்டு அதன் மீது சாய்வாய் நின்று கொண்டான்.
"இப்ப இன்னா சார் வேணும் உனக்கு" தவிப்பாய் அவனைப் பார்த்து எச்சிலை விழுங்கிக் கொண்டு கேட்க, "யூ... டார்லிங்" என்றான்.
அவன் சொல்லிய விதத்திலும் அவன் உதட்டில் வழிந்தோடிய புன்னகையிலும் அவன் கூர்மையான பார்வையிலும் அவளை அடைந்துவிட வேண்டுமென்ற அதிதீவரம் இருந்தது.
"அது நடக்காது... வழி விடுங்க... நான் போகணும்" அவன் விழியைப் பார்த்து அவள் திடமாகச் சொல்ல, "ஏன் முடியாது? நம்ம இப்போ மேரிட்தானே" என்றபடி அவள் இடையை அவன் வளைத்துக் கொள்ள முற்பட்டபோது பின்னோக்கி நகர்ந்தவள்,
"மேரிடா... மண்ணாங்கட்டி" என்றாள் பல்லை கடித்துக் கொண்டு!
"இப்போ என்ன கோபம் உனக்கு? என்னாச்சு?!" என்றவன் சற்றும் பதட்டமே இல்லாமல் அவளைப் பார்த்து தன் கரங்களை கட்டிக் கொண்டு கேட்க, அவளுக்குப் படபடப்பானது.
"இப்போ வழி விடப் போறீங்களா இல்லயா?!" கட்டுங்கடங்கா சீற்றத்தோடு அவனைப் பார்த்து அவள் கத்த,
அவன் அசராமல், "முடியாது... நமக்கு இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் நைட்... அன்ட்... ஐ நீட் யூ ரைட் நவ்" என்று தீர்க்கமாய் முடித்தான்.
27