You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 28

Quote

28

பீதியடைந்தாள்

சாரதி சொன்னதைக் கேட்ட வீராவின் உள்ளம் கொதிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அத்தனைக் கோபம்! கூடவே அடங்காவெறியும்...

சாரதி அவள் எண்ணத்தைப் பார்வையாலேயே கணித்தவன், "இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி முறைக்கிற... நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கவே ஒத்துகிட்ட... இதெல்லாம் அப்புறம் ஜஸ்ட் யூஸ்வல்தானே!" என்று இயல்பாய் உரைத்தான்.

அவள் மௌனமாய் பேசாமல் தலைகவிழ்ந்து நிற்க,

சாரதி அவளை யோசனைக்குறியோடு பார்த்து, "இப்ப என்ன... ஃப்ர்ஸ்ட் நைட் வேணாம்னு சொல்லப் போற... அதானே!" என்று அலட்சியமாய் அவன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"நான் வேணான்னு சொன்னா... என்னை நீ வுட்ருவியா சார் ?" என்று வினவினாள்.

"வேணான்னு நீ சொல்லவும் கூடாது... நான் உன்னை விடவும் மாட்டேன்... செக்ஸ்ங்கிறந்தை தாண்டி ... நமக்குள்ள ஏற்பட்டிருக்கிற... இந்த ரிலேஷன்ஷிப் நிரந்தரமா இருக்கணும்... எவர் அன் எவர்... தட்ஸ் இட்" என்றான்.

"சத்தியமா நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியல சார்... ஆனா ஒண்ணு மட்டும் புரியுது... நீ நெனச்சது உனக்கு நடக்கணும்... அதுவும் இப்பவே... அப்படிதானே?!" அவள் கொந்தளிப்போடு வார்த்தைகளை கடித்துத் துப்ப,

அவன் கொஞ்சமும் அவள் கோபத்தை மதியாதவனாய், "எஸ்... இப்பவே நடக்கணும்" என்றபடி அவளை நெருங்கி கிறக்கத்தோடு அவள் கன்னத்தை  வருடத் தொடங்கினான்.

அவனின் தொடுகைக்கான எந்தவித எதிர்வினையும் காட்டாமல், "அன்னைக்க்கு என் உயிரைப் பணயம் வெச்சு உன் உயிரைக் காபத்தினேன் பாரு... என்னையெல்லாம்... செருப்பால அடிச்சுக்கணும்" உணர்ச்சியற்ற பார்வையோடு அவனை ஏறிட்டுப் பார்த்து பல்லை கடித்துக் கொண்டபடி அவள் கூறவும்,

"என்ன சொன்ன?" என்று சாரதி துணுக்குற்று அவளை ஊடுருவிப் பார்த்தான்.

"நான் என்ன சொன்னா... உனக்கென்ன... நீ என்ன செய்ய வந்தியோ செய்" என்றவள் எரிச்சலோடு பதிலுரைத்தாள்.

சாரதி அந்த நொடியே அவளை விட்டு விலகி நின்று அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான். அவள் மனநிலையை ஆராயும் நோக்கில்!

வீரா எள்ளலாய் சிரித்து, "இன்னா சார் பார்த்துட்டே நிக்கிற... ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு நல்ல நேரம் வரலையோ?!" என்றவள் மேலும்,

"ச்சே! நான் ஒரு லூசு... நீதான் கல்யாணத்துக்கே நல்ல நேரம் பார்க்காத ஆளாச்சே... இதுக்கா பார்க்க போற" என்று தலையிலடித்து கொண்டாள்.

சாரதி அவளை மௌனமாய் பார்க்க, "ஆமா சார்... ஒண்ணு கேட்கணும்... நீ பண்ணதுக்கு பேர் கல்யாணமா?" என்றதும்,

அவளை ஏற இறங்கப் பார்த்தான் சாரதி!

"ஏன்? ஊரைக் கூட்டி எக்கச்சக்கமா செலவு பண்ணாதான் கல்யாணமா... அதெல்லாம் என்னைப் பொறுத்த வரைக்கும் நான்ஸென்ஸ்...  அட்டர் நான்ஸென்ஸ்... டைம் வேஸ்ட்... எனர்ஜி வேஸ்ட்... மணி வேஸ்ட்" என்று படபடவென சொல்லியவன் அவளை யோசனையாய் பார்த்து,

"ஓ! உங்களுக்கெல்லாம் தாலி கட்டினாதான் கல்யாணம்ல... சரிவிடு... பெருசா பத்து சவரன்ல வாங்கி உன் கழுத்தில ஒண்ணு போட்டு விடுறேன்... போட்டுக்கோ” என்றான் இளப்பமாக!

"கடமைக்குன்னு அப்படி ஒரு தாலி எனக்கு வேண்டாம்" என்றவள் உடனடியாய், "ஆனா ஃப்ர்ஸ்ட்  நைட் வேணும்... அதானே நமக்கு முக்கியம்" என்று எளக்காரமாய் அவனைப் பார்த்து சிரித்தாள்.

சாரதி அவளைக் குழப்பமாய் பார்க்க, அவளோ நேராய் அவன் படுக்கையில் சென்று சம்மேளம் போட்டு அமர்ந்து கொண்டு அங்கிருந்த தலையணையை வசதியாய் மடியில் வைத்துக் கொண்டாள்.

அவள் செய்கைகளை விசித்திரமாய் பார்த்துக் கொண்டு அவன் நிற்க, "இன்னாத்துக்கு சார் அங்கேயே நிற்கிற... வா... வந்து உட்காரு... நமக்கு இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் நைட்" என்றாள்.

சாரதி அவளைப் புரியாமல் பார்த்துக் கொண்டே நடந்து வர அவள் அவனிடம், "எனக்கு ஒரு டவுட்டு... இது எனக்கு ஃப்ர்ஸ்ட்  நைட்... உனக்கு எத்தனாவுது நைட்டு சார்" என்றாள்.

அவன் பதிலுரை பேசாமல் அவளையே ஆழ்ந்து பார்க்க,

"ஞாபகத்துல இல்லையோ?! அதானே... ஒண்ணு ரெண்டுன்னு இருந்தா... ஞாபகத்துல இருக்கும்... உனக்குதான் கணக்கு வழக்கே இல்லையே... சரி அத விடு சார்... நமக்கு இன்னைக்கு ஃப்ர்ஸ்ட்  நைட்... இல்ல எனக்கு ஃப்ர்ஸ்ட்  நைட்... உனக்கு ஏதோ ஒரு நைட்டு" என்றாள் புன்னகைவழிய... அவள் அதோடு விடாமல்,

"ஆமா சார்?  உங்க அம்மா அப்பா உன்னை விட்டுட்டு போயிட்டாங்கன்னு சொன்னல்ல... நீ இப்படி தருதலையா ஆயிடுவேன்னு முன்னாடியே தெரிஞ்சு உன்னை விட்டுப் போனாங்களா இல்ல அவங்க உன்னை விட்டுட்டு போனதால நீ இப்படி ஆயிட்டியா?!" என்றவள் கேட்க,

"வீரா" என்று சாரதி ரௌத்திரமானான். 

"ஏன் சார் டென்ஷனாவுற... நமக்கு இன்னைக்கு ஃப்ர்ஸ்ட் நைட்" என்றாள். வீரா பேசப் பேச சாரதிக்குக் கடுப்பேற, அவன் முகம் தீவிரமான பாணியில் மாறியிருந்தது.

அவன் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கவும், வீரா தடலாடியாய் எழுந்து அவன் வாயில் வைத்த சிகரெட்டைத் தூக்கி வீசினாள்.

"என்னடி திமிரா?!"என்று அவளிடம் எகிறிக் கொண்டு வந்தான்.

"அதெல்லாம் இல்ல சார்... எனக்கு அந்த வாசனையே பிடிக்காது... குமட்டும்... நீ எப்ப பாரு அத வேற தூக்கி வாயில வைச்சின்னு இருப்பியா... எனக்கு படா பேஜாரா இருக்கும்... என்ன? அப்போ நான் உன் டிரைவரு ... வேற வழியில்லாம சகிச்சினிருந்தேன்... ஆனா இப்போ நான் உன் பொண்டாட்டி... தாலி கட்டாத பொண்டாட்டி" என்றவள் அழுத்திச் சொல்லி அவனைப் பார்த்து எகத்தாளமாக புன்னகைத்தாள்.

"வேணாம்... ஓவரா பேசிட்டிருக்க" என்று இறுக்கமான பார்வையோடு அவளை முறைத்தான்.

அவள் கேலியான சிரிப்போடு, "இதுவே உனக்கு ஓவரா... அப்போ என் ஸ்டைல்ல நான் இறங்கிப் பேசுனா... நீ இன்னா ஆவ" என்று கேட்க,

"வீரா... இதோட நிறுத்திக்கோ" என்றான்.

"ஏன்... கடுப்ப்ப்ப்பாவுதா?" என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டவள் மேலும்,

"நீ செஞ்தெல்லாம் கூட எனக்கு அப்படிதான்டா இருக்கு... என்னையும் என் தங்கசிங்களையும் கூட்டினு வந்து வீட்ல வைச்சிட்டு... நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லி மிரட்டுற...

சரின்னு நானும் வேறவழியில்லாம ஒத்துகிட்டேன்... அப்புறம் என்னாடான்னா கல்யாணம்னு கூட்டின்னு போய் கையெழுத்துப் போட சொன்ன... சரி போய் தொலையுதுன்னு அதையும் போட்டேன்... இப்ப என்னடான்னா படுங்குற...

என்னை என்னடா நினைச்சிட்டிருக்க நீ... உன் கடையல கலர் கலரா ட்ரஸ்சு போட்டுகின்னு நிக்குமே... பொம்மைங்க... அப்படின்னு நினைசுக்கின்னியா" என்றவள் அப்போழுது முழுமையாய் ஆக்ரோஷ நிலைக்கு மாறி சாரதியின் சட்டையை கொத்தாய் பிடித்துக் கொண்டு நின்றாள்.

"சட்டையில இருந்து கையை எடு டீ" அவன் உக்கிரமாய் அவளின் பிடியையும் அவளையும் பார்க்க,

"ஏன்? அசிங்கமா இருக்கா... ம்ம்ம்..." என்று பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்து, "நீ என் கன்னத்தை தொட்டியே... அப்போ எனக்கு எவ்ளோ அருவருப்பா இருந்துச்சு...  தெரியுமா?" என்று சொல்லி அவள் பார்த்த பார்வையில், அவன் கோபம் உச்சபட்ச நிலையை எட்டியது.

அவள் கரத்தை சாரதி தன் சட்டையிலிருந்து ஆவேசமாய் பிரித்து தள்ளிவிட்ட வேகத்தில் அவள் தூரமாய் சென்று விழ, படுக்கையருகில் இருந்த மேஜையில் அவள் பின்னந்தலை இடிப்பட்டு மயங்கிவிட்டாள்.

சாரதி அவள் நிலையைக் கவனியாமல் விறுவிறுவென அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டான். விடிந்து சூரிய கதிர்கள் அவளை தொட்டுத் தீண்டவும் உணர்வுபெற்று விழித்துக் கொண்டவள், தலைப்பாரம் தங்காமல் இரு கரங்களால் அழுத்திப் பிடித்துக் கொண்டாள். நடந்தவை யாவும் அவள் கண்களின் முன்பு காட்சிகளாய் அரங்கேறவும்,

எழுந்தமர்ந்து அந்த அறையை சுற்றும் முற்றும் பார்க்க, எதிரே இருந்த மேஜையிலிருந்து ஆஷ் ட்ரே... சிகரெட் துண்டுகளால் நிரம்பி வழிய பீதியடைந்தாள்.

அவன் அப்போது இரவு முழுவதும் இங்கேதான் என்ற எண்ணம் எழ அவள் உள்ளம் படபடத்தது. சாரதியை பார்வையாலேயே தேடியவள் அவன் அங்கே இல்லை என்று தெரிந்ததும் லேசாய் நிம்மிதிபெற்றுக் கொண்டாள்.

அப்போதுதான் அவள் உணர்ந்தாள். தான் அவன் படுக்கையில்தான் படுத்திருக்கிறோம் என்று. அவசரமாய் எழுந்து கொண்டவளுக்கு உடல் முழுவதும் கூசிய உணர்வு! அந்த அறையைவிட்டு துரிதமாய் வெளியேறி தங்கைகளைக் காண அவள் செல்ல, அந்த அறையின் படுக்கையில் அவர்கள் இல்லை.

"அம்மு... நதி..." என்று குரல் கொடுத்துக் கொண்டே அந்த அறை முழுவதும் ஆராய்ந்தாள். அவர்கள் அங்கே இருக்கும் அறிகுறியே இல்லை. அதன் பின்னர் மாடி... தோட்டம்... மற்ற அறைகள் என அவள் தேடாத இடமே இல்லை.

அமலா நதியவோடு சேர்த்து சாரதியும் இல்லையென்பதை உணர்ந்தவளுக்கு பலவிதமான பயங்கரமான கற்பனைகள் அச்சுறுத்தியது.

மீண்டும் வாசலுக்கு ஓடி அவன் காரைப் பார்த்தவளுக்கு நெஞ்சே இரண்டாய் பிளந்த உணர்வு!

அங்கே அவனின் காரும் இல்லை. அமலாவும் நதியாவும் வீட்டில் இல்லை. கட்டுக்கடங்காமல் அவள் எண்ணங்கள் அதிவேகமாய் ஓட்டமெடுக்க, அவளுக்கு என்ன செய்வது என்று ஒன்றும் விளங்கவில்லை.

அப்போது தெய்வானை துளசி மாடத்தை சுற்றி பூஜை செய்து கொண்டிருக்க, "மாமி மாமி மாமி... என் தங்கச்சிங்கள... பாத்தீங்களா?" என்றவள் அழைத்துக் கொண்டே ஓடிவந்து மூச்சிரைத்தபடி கேட்டுக் கொண்டே அவர் முன்னே வந்து நின்றாள்.

"உன் தங்கிச்சிங்கள... உன்னாண்ட சொல்லமலே கூட்டிண்டு போய்ட்டானா" என்று கேட்டவர் அவளை ஏளனமாய் பார்த்து,

"காசை பார்த்துட்டு... ஈஈஈன்னு இளிச்சிண்டு... அவன் பின்னாடி போனே இல்ல... இதெல்லாம் தேவைதான்டி உனக்கு... அந்த கடன்காரன் வேற கடஞ்செடுத்த பொறுக்கி... அவன் உன் தங்கச்சிங்கள" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"அய்யோ!!! மாமி போதும்" என்று செவிகளை மூடிக் கொண்டாள்.

அதன் பின் தெய்வானை அவளை இளக்காரமாய் பார்த்துவிட்டு, ஏதோ புலம்பிக் கொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டார். வீரா அவர் சொன்னதைக் கேட்ட நொடி உள்ளூர சுக்குநூறாய் நொறுங்கியிருந்தாள். அப்படியே அவள் புல்தரையில் மண்டியிட்டு முகத்தைப் புதைத்து உடைந்தழுது கொண்டிருக்கும் போதே, சாரதியின் கார் வாயிலைத் தாண்டி உள்ளே நுழையும் சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தைக் கேட்டு வீரா அவசரமாய் முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து கொள்ள, சாரதி தன் காரை நிறுத்திவிட்டு விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டான். நதியாவும் அமலாவும் அவனுடன் வந்திருப்பார்கள் என்று அவள் எதிர்பார்க்க, அவளுக்கு ஏமாற்றமே மிச்சமாய் இருந்தது. அவள் மேலும் பதட்டமடைந்து அவன் பின்னோடு செல்லும் போதே,

அவனோ, "முத்து.... ரூமுக்கு காபி எடுத்துட்டு வா" என்று கூலாக சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

வீரா அவன் அறைக்குள் படபடப்போடு நுழைய, அவளைப் பார்த்தும் பார்க்காதவன் போல அங்கே மேஜை டிராவினுள் அடுக்கியிருந்த ஃபைல்களைப் புரட்டி ஏதோ தேடிக் கொண்டிருந்தாள்.

"என் தங்கச்சிங்க எங்க?" என்று வீரா அவன் பின்னோடு நின்று அழுத்தமாய் கேட்க அவன் அவளை திரும்பி அலட்சியமாய் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.

"என் தங்கச்சிங்க எங்கடா?" அவன் அருகாமையில் வந்து நின்று அவள் உக்கிரமாய் கேட்க,

சாரதி தன் சட்டைப் பாக்கெட்டை துழாவிப் பார்த்து, "ம்ஹும்...  இல்லையே" என்றதும் வீரா ரௌத்திர நிலையில் அவன் சட்டையைப் பிடித்து,

"என்னடா கிண்டலா... எங்கடா என் தங்கச்சிங்க?"  என்று கேட்டு முறைத்தாள்.

அவனும் பதிலுக்கு அவளைக் கோபமாய் முறைத்து, "ஆமான்டி... நான்தான்டி வைச்சிருக்கேன்... இப்ப என்னாங்கிற" என்று சொல்ல அவள் உறைந்த நிலையில் அவனை அதிர்ச்சிகரமாய் பார்க்க,

சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து அதனை புகைத்துக் கொண்டே, "என்னடி பொண்டாட்டி?! அப்படியே  ஸ்டன்னாயிட்ட... என்ன? பேச வார்த்தை வரல" என்று எகத்தாளமாய் கேட்டான்.

"என் தங்கச்சிங்களுக்கு எதாச்சும் ஆச்சு... உன்னைக் கொன்னுடுவேன்டா" என்று வீரா கோபாவேசமாய் எச்சரிக்க,

"டூ இட்... தோ..... அந்த ஃபிளவர் வாஷை எடுத்துக்கோ... ஒரே ஷாட்தான்...  அடிச்சா ஆள் காலி" என்று சொல்லி அசராமல் அவளைப் பார்த்து சிரித்தான். 

"நீ செய்றது சரியில்ல" அவள் குரலின் திடம் உடைய,

"நீ செஞ்சது மட்டும் சரியாடி" என்று கேட்டான். அவன் பார்வையில் அத்தனை உஷ்ணமும் கோபமும்! அவள் பதட்டத்தோடு அவனை நோக்க,

"சாதாரணமா நெருப்புல கை வைச்சாலே சுடும்... நீ என்னடான்னா டன் டன்னா அதுல கெரோஸீனை ஊத்திட்டு தொட்டுப் பார்க்குறியே... அறிவு இருக்காடி உனக்கு... ஏற்கனவே நான் சொல்லி இருக்கேன்... எனக்கு நல்லது கெட்டது எது செஞ்சாலும் நான் அதையே பத்து மடங்கு திருப்பி செஞ்சிருவேன்... மறந்துட்டியா?!" என்றவன் சொல்ல வீரா அவன் சட்டையை விடுத்துவிட்டு பின்னோடு நகர்ந்தவள்,

"நான்தானேடா தப்பு செஞ்சேன்... தில்லு இருந்தா... மவனே உன் வீரத்தையும் கோபத்தையும் என் மேல காமிடா ...... *******" என்றாள்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content