You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 31

Quote

31

இவன் நல்லவன்

இருவரும் காரில் பயணிக்கத் தொடங்கிய நொடியிலிருந்து கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் குறைந்த பட்சம் பத்து முறையாவது சாரதியின் பார்வை வீராவைத் தொட்டு மீண்டது. அதிக பட்சம் எத்தனை முறையென்றெல்லாம் கணக்கு வழக்கே இல்லை!

காந்தமாய் அவனை அவளிடம் ஏதோ ஒன்று கட்டியிழுத்துக் கொண்டிருந்தது. அவள் மீது மலையளவு கோபம் இருந்தாலும் அதனை மூழ்கடிக்கும் அளவுக்காய் மோகம் உள்ளூர பொங்கிக் கொண்டிருந்தது அவனுக்கு!

இதுவரை அவளை ஏதோ பெயரளவில் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற அவனின் மனநிலை மாறி அவளை அடைந்தே தீரவேண்டுமென்ற காமத்தீ... காட்டுத் தீயாய் அவனுக்குள் பரவத் தொடங்கியிருந்தது.

அதே நேரம் வீரா அவன் பார்வையில் தளும்பிக் கொண்டிருக்கும் எண்ணங்களைக் கணிக்க முடியாதவள் அல்ல. இருந்தும் அவனைக் கண்டும் காணாதவளாய் இயந்திரத்தனமாய் சாலையை மட்டும் பார்த்து காரை ஒட்டிக் கொண்டுவந்தாள்.

வெறுமையாய் கிடந்த அவள் முகத்தையும்... உணர்ச்சியற்று கிடந்த அவள் விழிகளையும் ஆழ்ந்து பார்த்தபடி, “எப்பவும் எதாச்சும் அதிகபிரசங்கித்தனமா பேசிட்டு வருவ... இப்போ என்னாச்சு? அப்படியே சைலண்டா வர” என்று கேட்டான் சாரதி!

“நான் பேசுனாதான் உனக்கு டென்ஷனாவுதே... அதான் உன்னை டென்ஷன் படுத்த வேணாம்னு கம்முனு வர்றேன்”

“இது உலக மகா நடிப்புடா சாமி” என்று சொல்லி சாரதி சிரித்துவிட்டு,

“ஆமா எந்த தைரியத்தில... நீ என்கூட வர்ற” என்று கேட்டான் எகத்தாளமாக!

“எந்த தைரியத்தில நீ என்னைக் கூட வர சொன்னியோ... அதே தைரியத்துலதான்” என்றவள் சொல்லி அலட்சியமாய் அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“உனக்கு உடம்பு முழுக்க திமிரு டி” என்றான் அவன்!

“ஏன்? உனக்கில்ல” என்றவள் பதிலுக்கு அவன் புறம் திரும்பிக் கேட்க,

“இன்னைக்கு பாத்துடலாம்... யாருக்கு திமிரு அதிகமா இருக்குன்னு?” என்றவன் அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தான்.

வீராவோ சிறுநகைப்போடு அவனைப் பார்த்துவிட்டு வண்டி ஓட்டும் வேலையில் மும்முரமானாள்.

சாரதிக்கு அவளின் அந்த அமைதி ஆச்சரியத்தை உண்டாகியது. மனதில் ஏதோ அவள் பெரிதாக யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதாக அவன் உணர்ந்தாலும்... தன்மனநிலையை மாற்றிக் கொள்ளும் நிலையில் அவனில்லை.

என்ன நடந்தாலும் வீராவிடம் தன உரிமையை நிலைநாட்டிக் கொண்டே தீர வேண்டுமென்பதில் சாரதி உறுதியாய் இருந்தான்.

கார் ரிசார்ட் வாசலை அடையவும்,

 சாரதி இறங்கிவிட்டு, “பேக் எடுத்துட்டு ரூமுக்கு வா” என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு ரிஸார்ட்டிற்குள் முன்னேறி நடக்க, வீரா பேகை எடுத்துக் கொண்டு அவன் அறைக்குச் சென்றாள். அறைக்குள் வந்ததும் பேகை ஓரமாய் வைத்துவிட்டு அவள் சாரதியை நோக்கி,

 "இன்னா சார்.... யாரையாச்சும் கூட்டின்னு வரணுமா... இல்ல எதனாச்சும் போய் வாங்கின்னு வரணுமா?" என்று வினவ,

அவளை ஏறஇறங்கப் பார்த்தவன், "நீதான் என் கூட வந்திருக்கியே.... ப்ச்... அப்புறம் வேறயாராச்சும் எதுக்கு?" என்றான்.

அவள் சிறிதும் சலனமின்றி அவனை பார்த்துக் கொண்டு நிற்க கதவை மூடிவிட்டு திரும்பியவன், "ஏதாச்சும் நான்சென்ஸ் மாதிரி பேசுறது... இல்ல இந்த ரூம்ல இருக்குற பொருளையெல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கிறதுன்னு தேவையில்லாத சீனல்லாம் க்ரீயட் பண்ணிட்டிருக்காதே" என்றபடி அவளை அவன் நெருங்கி வர,

"நீ இப்படியெல்லாம் விவகாரமா யோசிப்பேன்னு நான் நினைச்சேன்" அலட்டிக் கொள்ளாமல் அவனை நேர்கொண்டு பார்த்து உரைத்தாள்.

"அப்போ தெரிஞ்சே வந்திருக்க"

"தெரிஞ்சுதான் வந்தேன்... போகாதேன்னு சொன்னா நீ கேட்கவா போற... அதான் நீ கூப்பிட்டதும் நான் உன் கூட வந்தேன்" என்றவள் சொல்லி அவனை அளவெடுத்துப் பார்க்க,

“நீ ஏன் என்னைப் போகாம தடுக்கணும்?” என்று கேட்டு புருவங்களை நெறித்தபடி அவளை நோக்கினான்.

“இதுவரைக்கும் நீ எப்படி வேணா இருந்திருக்கலாம்... ஆனா இனிமே நீ இங்க வரக் கூடாது... நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்” வெகுஇயல்பாய் சொல்லியவளை கேலிப் புன்னகையோடு பார்த்து,

"ஓ! பொண்டாட்டிங்கிற உரிமையை மேடம் நிலை நாட்டுறீங்க” என்று வினவ,

“ஹ்ம்ம்... அப்படியும் வைச்சுக்கலாம்” என்று தோள்களைக் குலுக்கினாள் வீரா.

“நீ சொல்லிட்டா... நான் கேட்டுருவேனா?”

“கேட்டுத்தான் ஆகணும்... வேற ஆப்ஷனே இல்ல” என்றாள்.

அவன் முறுவலித்து, “அப்போ நீதான் ஒரே ஆப்ஷனுங்கிற” என்றவன் சூட்சமமாய் அவளை மேலிருந்து கீழாக ஊடுருவிப் பார்த்துவிட்டு,

“எனக்கு ஓகேதான்” என்றவன் சொல்லி அவள் இடையோடு அவளைத் தன்புறம் இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஏற்கனவே அவன் மனம் அவளை அடைந்துவிடுவதில் படுதீவிரமாய் இருக்க, அவளின் மீதான அவன் பிடியோ அவள் விலகிவர முடியாதளவுக்கு அத்தனை அசாத்தியமாய் இருந்தது.

அவளோ தவிப்புற்று, “யோவ் விடுய்யா” என்க,

“முடியாது... திஸ் டைம்... ஐ நீட் யூ இல்ல டார்லிங்... ஐ டேக் யூ” என்றான். அதோடு அவனோ அசுர வேகத்தில் அடுத்த நிலைக்கு முன்னேறி அவளைத் தன் கரத்தில் ஏந்திக் கொண்டான். அவள் சங்கடமாய் உணர்ந்து,

 “யோவ் யோவ்... இறக்கி விடு ய்யா” என்க, அவனோ அவள் சொல்வதிற்கு செவிசாய்க்காமல் அவளைப் படுக்கைக்கு எடுத்துச் செல்ல,

“அய்யோ... சொல் பேச்சைக் கேளுய்யா... எனக்கு இன்னைக்கு  பீரியட்ஸ்... அதுவும் முதல் நாள் வேற” என்று அவள் சொல்லி முடிக்க, அதிர்ந்து அவளை நொடிப் பொழுதில் கீழே இறக்கிவிட்டு, “ஏ... நிஜமாவாடி” என்று படபடப்பாய் கேட்டான்.

“பின்ன... இதுல போய் பொய் சொல்வேனா” என்றவள் அவனை விட்டு விலகி வந்து நின்று கொண்டாள்.

அவளை முறைத்துப் பார்த்து, “இந்த மாதிரி நேரத்துல போய் என் கூட வந்திருக்க... உனக்கு அறிவிருக்கா?” என்றவன் வினவ,

“ஏன்? வந்தா என்ன? நீ எனக்கு... தாலி கட்டலனாலும் புருஷன் தானே” என்றவள்  அலட்சியமாய் கேட்டாள்.

“சத்தியமா... உனக்கு தில்லு ரொம்ப ஜாஸ்திடி... உன்னை மாதிரியெல்லாம் நான் எவளையும் பார்த்ததில்ல... அதுவும் நான் இன்னைக்கு இருந்த கடுப்புக்கு உன்னை ஏடாகூடமா எதாச்சும் பண்ணியிருந்தேன்னா” என்று கேட்டவனின் முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ஏடாகூடமா... அதுவும் நீ... சும்மா காமெடி பண்ணாத... அந்த மாதிரியெல்லாம் நீ பண்ற ஆளா இருந்தா... நேத்து நான் உன்னை அவ்ளோ பேச்சு பேச்சிட்டு மயக்கம் போட்டு விழுந்தேனே... அப்பவே பண்ணியிருப்ப... இல்லாட்டி காலைல தங்கச்சிங்கள காணோம்னு அவ்ளோ கலாட்டா பண்ணேனே... அப்பவாச்சும் பண்ணியிருப்ப” என்றதும்

“இப்ப என்ன? பண்ணலன்னு ரொம்ப வருத்தமா இருக்கோ?” என்று ஆழ்ந்த பார்வையோடு கேட்டான்.

“ம்ஹும்... நீ அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்னு சொல்றேன் ”

“என் நேரம்” என்று தலையிலடித்துக் கொண்டு  அவளைக் கடுப்பாய் பார்த்தவன் சிகரெட்டை எடுத்து வாயில் நுழைத்துப் பற்ற வைத்தான்.

அந்த நொடியே அவனைச் சீற்றமாய் பார்த்தவள்,  “ஏன்யா? உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? அத எப்ப பாரு தூக்கி வாயில வைச்சுக்கணுமா” என்று கேட்க,

“என் வாய் என் சிகரெட்... உனக்கென்ன?” என்று பதிலுக்கு அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

“நீ விடற புகை எனக்கும்தான்ய்யா வருது... அத பிடிச்சு உன் ஆயுச குறைச்சுக்கிறது பத்தாதுன்னு... என் ஆயுச வேற ஏன்யா குறைக்கிற... கண்ட கண்ட நோயெல்லாம் வந்து நீ வேணா அல்பாயுசுல செத்து போ... நான் ஏன்யா சாவணும்?” பட்டாசு போல அவள் பொரிந்து தள்ள சாரதி அவளை முறைத்துப் பார்த்து,

“எனக்குத் தேவை... இன்னுமும் தேவை... இதுக்கு மேலையும் தேவை... சனியனைத்  தூக்கி பனியன்ல போட்டுக்கின மாதிரி... உன்னைக் கூட கூட்டின்னு வந்தேன் பாரு... என்னை” என்று கடுப்பானவன்,

“ச்சே... நான் வெளிய போய் பிடிச்சுக்கிறேன்... போதுமா?!” என்று அறையை விட்டு வெளியேறப் பார்த்தான்.

“அதெல்லாம் அப்புறம் பிடிச்சுக்கலாம்... எனக்கு ரொம்ப பசிக்குது... சாப்பாடு ஆர்டர் பண்ணேன்” என்றாள்.

“இப்ப என்ன சொன்ன?” அதிர்ச்சியோடும் கோபத்தோடும் அவள் புறம் வந்து கைக்கட்டி நின்று அவன் கேட்க, “பசிக்குதுன்னு சொன்னேன்... அதுக்கு ஏன்யா இப்படி முறைக்கிற?” என்றாள். 

“பின்ன... திமிரெடுத்துப் போய் உன் தங்கச்சி சாப்பிட கூப்பிட்ட  போது... வேணான்னு சொன்னதில்லாம... அந்த பசங்களையும் வீம்புக்குன்னாலும் சாப்பிட விடல... இப்போ நீ மட்டும் சாப்பிடணும்?” என்று அவன் கேட்கவும்,

“எல்லாம் அவங்கள சமாதானப்படுத்தி நான் சாப்பிட வைச்சிட்டுதான் வந்தேன்... ஆனா எனக்கு இப்போ பசிக்குது... ஏன்? ஒரு சாப்பாடு ஆர்டர் பண்றதுல உன் சொத்தாய்யா கரைஞ்சிடப் போவுது... ஓவரா பேசுற... கட்டின பொண்டாடிக்கு... ச்சே! நீதான் தாலி கட்டல இல்ல...ஆனாலும் பொண்டாட்டிதானே ” என்றவள் சொல்லிக் கொண்டே போக,

“அம்மா தாயே! நிறுத்துறியா... சாப்பாடு ஆர்டர் பண்ணனும் அவ்ளோ தானே... பண்ணித் தொலைக்கிறேன்” என்றவன்,

அந்த அறையின் தொலைப்பேசி எடுத்து ஆர்டர் செய்ய,  “உனக்கும் சேர்த்து சொல்லு... நீயும் சாப்பிடல இல்ல” என்றாள் அவள்.

அவளை யோசனையாய்  பார்த்தவன் அவனுக்கும் சேர்த்தே உணவு வரவழைத்தான். பின்னர் இருவரும் சேர்ந்து உணவு உண்ண அவளோ சிரமப்பட்டு சாப்பிட முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கவும் அவளைச் சந்தேகமாய் பார்த்து,

“உண்மைய சொல்லு... நீ வீட்ல சாபிட்டதானே... எனக்காகதானே ஃபுட் ஆர்டர் பண்ண சொன்ன” என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் அவனைத் தயக்கமாய் பார்த்துத் தலையசைத்து ஆமோதிக்கவும்,  “நான் எக்கேடு கெட்டுப் போனா உனக்கென்னடி?” என்றவன் சினத்தோடு அவளை நோக்க,

“எனகென்ன?... எனக்கு ஒண்ணுமில்ல... ஆனா நான் டிரைவரா உன்கிட்ட வேலை செஞ்ச காலத்துல நான் சொல்லாமலே பசில இருக்கேன்னு புரிஞ்சுக்கிட்டு எத்தனையோ தடவை எனக்கு நீ சாப்பாடு வாங்கி கொடுத்திருக்க... அந்த நன்றிதான்... மத்தபடி உன் மேல எனக்கு எந்த அக்கறையும் இல்ல... சக்கரையும் இல்ல” என்றவள் சொல்ல அவளை முறைத்துப் பார்த்துவிட்டு எழுந்து கரத்தை அலம்பிக் கொண்டு வந்தவன்,

“நான் வெளிய போறேன்... நீ நிம்மதியா படுத்து தூங்கும்மா” என்றான்.

“எங்க வெளிய ?”

“ஓ! எங்க போனாலும் நான் மேடம்கிட்ட சொல்லிட்டுதான் போகணுமோ?” என்றவன் மேலும்,

“ஹ்ம்ம்... டிரிங்க் பண்ண பாருக்கு போறேன்... நீ வேணா கூட வர்றியா?” என்றவன் கேட்க, அவனை எரிச்சலாய் பார்த்தாள்.

அவனும் பதிலுக்கு அவளை உச்சபட்ச கடுப்போடு பார்த்துவிட்டு வெளியேறிவிட, அவளோ அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தபடி தனியே யோசனையோடு புலம்பியபடி  படுத்துக் கொண்டாள்.

‘இவன் எப்பவும் ரூமுக்கே வரவைச்சுதானே குடிப்பான்... இன்னைக்கு எதுக்கு வெளிய போறான்... ஓ! நாம ரூம்ல இருக்கோம்... ஹ்ம்ம்... அந்தளவுக்காச்சும் இங்கிதம் தெரிஞ்சிருக்கே... ப்ச் இவனை கெட்டவன்னும் சொல்ல முடியல நல்லவன்னும் ஏத்துக்க முடியல” என்று குழம்பிக் கொண்டிருந்தவளின் விழிகளை உறக்கம் தழுவ,

விடிந்து சில கணங்களில் அறையின் தொலைப்பேசியின் ரீங்கார ஒலி அவள் உறக்கத்தைக் களைத்துவிட்டது. எழுந்து அதனைத் தூக்க கலக்கத்தோடு காதில் வைக்க,

 “கொஞ்சம் சீக்கிரம் ரெடியாகு... நான் ஆபீஸ் கிளம்பணும்... என் பேக் ரூம்ல இருக்கு பாரு... அத பக்கத்துல ரூம் நம்பர் 7க்கு எடுத்துட்டு வா” என்று சாரதி பேசிக் கொண்டே போக,.

பார்வையை தேய்த்துக் கொண்டு அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் புரியாமல் “எங்கிருந்து பேசுற... ஏன் அந்த ரூமுக்கு எடுத்துட்டு வரணும்?” என்று வினவினாள்.

“ப்ச்.. நான் நைட் ரொம்ப ட்ரங்க் பண்ணிட்டேன்... அதான்  பக்கத்துல ரூம் எடுத்து ஸ்டே பண்ணிட்டேன்” என்றவன் சொல்லி முடித்து மீண்டும் அவளைத் தன் அறைக்கு பேகோடு வர சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட,

 வியப்படங்கமால் அப்படியே சில நொடிகள் சிலையாய் சமைந்துவிட்டாள். குடிபோதையில் தன்னிலை மறந்து எத்தகைய இழிவான செயலையும் செய்யத் துணிபவர்களுக்கிடையில் இவன் நல்லவன்தான். அதுவும் பல்லாயிரம் மடங்கு நல்லவன்! இவ்வாறு தனக்குள்ளேயே சொல்லி வியந்து கொண்டாள்.

அந்த நொடி சாரதி அவள் மனதில் ரொம்பவும் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்திருந்தான். அதுவும் யாரும் அசைத்திட முடியாத இடத்தை!

சாரதி தன் அறையில் வீரா பேகை எடுத்து வருவாள் என்று காத்திருந்து காத்திருந்து நேரம் கடந்து செல்ல பொறுமையிழந்தவன் அவள் இருந்த அறை நோக்கி வேகமாய் சென்று கதவைச் சீற்றமாய் தட்டி அவளை அழைக்க,

அவள் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

“எங்க என் பேக்?...அத எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?” என்றவன் குதிக்க, சங்கடமாய் அவனைப் பார்த்து, “சார்” என்று விழித்தாள்.

“ப்ச் போ... போய் எடுத்துட்டு வா” அவள் அவனை தயக்கமாய் பார்த்து, “எடுத்து தர்றேன்... ஆனா ஒரு சின்ன மேட்டர்” என்க,

“என்னது? சீக்கிரமா சொல்லு... லேட்டாகுது” என்று அழுத்தமாய் உரைக்க, “அது... வர்ற அவசரத்துல... பேடை மறந்துட்டு வண்டேன்” என்று அவள் சொல்லி தரையைப் பார்க்க,

 சாரதி அவளை உற்றுப் பார்த்து நெற்றியைத் தேய்த்துக் கொண்டான். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

“உன்னை” என்று கடுப்படித்துப் பல்லை கடித்துக் கொண்டவன் வேறுவழியின்றி,

“சரி சரி... நான் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று உரைத்துவிட்டுச் சென்றான்.

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content